கம்பன்: தரையில் கீறினால் தச்சரும் காய்வரோ?

(#kamban52 post due on Friday, published on Saturday!)

கம்பன் எத்தனையோ கவிதைகள் யாத்துள்ளான்!
பத்தாயிரக் கவிகள், பத்தாது பத்தாது என, உள்ளம் பத்திக் கொள்ளும் கவிதைகள்!

ஆனால், அத்தனை கம்ப ரசங்களிலும்…
இந்த “அவையடக்கக்” கவிதையே என்னை மிகவும் ஈர்த்தது; ஏன்?

* வாசித்துப் பாருங்கள், தெரியும்!
* உள்ளே ஒன்று… இறங்கி, இரங்கும்!


கடவுள் வாழ்த்துக்கு அடுத்த அவையடக்கம்

ஓசை பெற்று,உயர் பாற்கடல் உற்று, ஒரு
பூசை முற்றவும், நக்குபு, புக்கு என
ஆசை பற்றி அறையல் உற்றேன்; மற்று இக்
காசு இல் கொற்றத்து இராமன் கதை அரோ (4)

முத்தமிழ்த் துறையின் முறை போகிய
உத்தமக் கவிகட்கு ஒன்று உணர்த்துவன்;
பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும்
பத்தர் சொன்னவும் பன்னப் பெறுபவோ? (8)

அறையும் ஆடு அரங்கு மடப் பிள்ளைகள்
தறையில் கீறிடில் தச்சரும் காய்வரோ?
இறையும் ஞானம் இலாத என் புன் கவி
முறையின் நூல் உணர்ந்தாரும் முனிவரோ? (9)


சூழல்:
கம்ப ராமாயண அரங்கேற்றம் = அத்தனை எளிதில் நிகழவில்லை!
ரொம்பவே அல்லாட விட்டாங்க என்பது வரலாறு!

சோழன் முகம்-பாராமையால், சோர்வுற்று விடுமா தமிழ்?
= உன்னை அறிந்தோ தமிழை ஓதினேன்?
பெரும் குலோத்துங்கன் செய்ய முடியாததைச், சிறு சடையப்ப வள்ளல் செய்து காட்டினான்!

* ஒருத்தன், தமிழை, “டுமீல்” ன்னு  பேசி-ஏசினால், அவனை நெருக்க மாட்டோம்;
* ஆனா, யாரையும் ஏசாது, “கொள்கை”யை மட்டுமே இயம்புறவன் – அவனைப் பிடிச்சி நெருக்குவோம் – நியாயமா?

உங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக, உங்கள் பிடிப்புக்கு ஏற்றபடி, கொள்கையை ஒத்திசைக்க முடியாது!
அரங்கேற்றமே ஆனாது போனாலும் பரவாயில்லை;
கம்பனின் “வீறு” கொண்ட உள்ளம் – அதை நெருக்கி விட முடியாது!

இன்று… மேடை தோறும் முழங்கும் கம்பனை,
அன்று… அரங்கேறவும் விடாமல் ஆட்டம் காட்டினர் தில்லைத் தீட்சிதர்கள்; இது வரலாறு!

கடைசியில், திருவரங்கத்தில் அரங்கேறியது கம்பன் கவி!
(இன்றும் அரங்க நாச்சியார் சன்னிதிக்கு எதிரே…
மேட்டழகியசிங்கம் பக்கலிலே, கம்பன் மண்டபம் உண்டு)

இத்தனை அல்லாடலுக்குப் பின் அரங்கேற்றம்; அப்போ, கம்பன் என்ன சொல்லி ஆரம்பிக்கிறான்?
= இது “அறிவால்” செய்த கவிதை அல்ல!

என்னாது? கம்பன் கவியிலே அறிவு இல்லையா..??
அட, நான் சொல்லலீங்க, கம்பனே சொல்லுறான்!
கம்பரசம்! அடா அடா! என்னவொரு கற்பனை, என்னவொரு வர்ணனை! = இதானே நாம ரசிப்பது?
ஆனா கம்பன் எதை ரசித்தான் தெரியுமா? அவனே சொல்லுறான்!


திருவெண்ணெய் நல்லூர் – கம்பன் கோயில்

கடைசீல, “ஆதி-காவ்யம்” இராமாயணத்திலும் கை வைச்சாச்சா?
இப்படித் தரம் இறங்கி விட்டாயே கம்பா?? -ன்னு கேக்க முடியுமா?
வால்மீகி இராமாயணத்தை, உன் இ’ஷ்’டப்படி மாத்திச் செஞ்சீட்ட-ல்ல? Too Low Kamba, Sorry!

கம்பன், தமிழ் நிலத்துக்கு ஒத்த நெறிகளே, ஒரு பிரபலமான காப்பியத்தில் இருக்க விரும்பியவன்!
= இது “அறிவால்” செய்த கவிதை அல்ல!
= இது “ஆசையால்” செய்த கவிதை! தமிழ்-ஆசையால் செய்த கவிதை!
கம்பனே சொல்வது: “நான் தமிழ்ப் பாவினால் இது உணர்த்திய ***பண்பு*** அரோ”

அதான்…
* கும்பகருணன் போரில், இராமனுக்கே கை நடுங்கியது -ன்னு எழுத முடிந்தது;
* தாடகை, அழகற்ற அரக்கி அல்ல, அழகுள்ள கைம்பெண்!  = குல முதல்வி!
* காட்டை விரித்து நாடாக்கியது பிடிக்காத அகஸ்தியர், அவள் கணவனைச் சாம்பலாக்கினார் -ன்னும் எழுத முடிந்தது!

ஆனா, மூலக் கதையில், மூலமானவர்களைத் தானே அதிகம் பேச முடியும்? அவர்களை விரித்துப் பேசும் கம்பன்.., ஊடால வரும் கட்டங்களில், உண்மை நிலையினையும், ஒளிக்காது பேசுகின்றான்!

கம்பன் = யாரையும் வில்லன்/வில்லி ஆக்குவதில்லை!
யோசித்துப் பாருங்கள்:  சங்க இலக்கியம், சிலம்பு/மேகலையில் = வில்லன்கள் உண்டா?
= தமிழ் நெறி! அதே வழியில் #kamban52 podcasts will continue!


காபி உறிஞ்சல்:
(குறிப்பு:  இந்தப் பகுதி முழுக்கவும் “ஓ & ஏ” ன்னு தான் முடியும்;
இவை அடித்துச் சொல்லும் அசைச் சொற்கள்;
கம்பனின் உறுதி காட்டும் தேற்றேகாரம்-தேற்றோகாரம்)

ஓசை பெற்று, உயர் பாற்கடல் உற்று, ஒரு
பூசை முற்றவும், நக்குபு புக்கு என

பாற்கடல் = ஓசை மிக்கது, ரொம்ப உயர்வானது!
(பூசை = பூனை);  பூனைக்கு ஓசை-ன்னாலே பயம்; ஓரமா ஒண்டிக்கும்!
ஆனாலும், கம்பன் (எ) பூனை ஆகிய நான்…
திருப்பாற்கடலையே, நக்கி நக்கிக் காலி ஆக்க முனைகிறேன் போலும்! = எதனால்?

ஆசை பற்றி அறையல் உற்றேன்; மற்று இக்
காசு இல் கொற்றத்து இராமன் கதை அரோ.

திருவெண்ணய் நல்லூர் – கம்பன் கோயில்

எதனால்? = ஆசையால்; தமிழ் எனும் ஆசையால்!
கொற்றம் கொண்டுள்ள கதை! ஏற்கனவே பிரபலமாகி விட்ட கதை = இராமன் கதை!
அதை, ஆசை பற்றி அறையல் உற்றேன்!

என்ன ஆசை? = கம்ப ரச ஆசையா? வர்ணனை ஆசையா? அறிவு ஆசையா? அல்ல!!!
“பண்பு” ஆசை! தமிழ்ப் பண்பு ஆசை
= “நான் தமிழ்ப் பாவினால் இது, உணர்த்திய ***பண்பு*** அரோ”

முத்தமிழ்த் துறையின் முறை போகிய
உத்தமக் கவிகட்கு ஒன்று உணர்த்துவன்;

Ph. D பெற்றவர்களே, இலக்கியப் பீடாதிபதிகளே, ஆன்மீக Expert-களே…
ஒங்களுக்கு ஒன்னு சொல்லிக்க விரும்புறேன்!

பித்தர் சொன்னவும், பேதையர் சொன்னவும்,
பத்தர் சொன்னவும்,  பன்னப் பெறுபவோ?

பித்தர் – பேதைகள் சொல்வதை யாரேனும் பொருட்படுத்துவார்களா?
அதே போல் பக்தன் (எ) நான்; இந்தக் கம்பனை நீங்கள் பொருட்படுத்தலாமா?

அறையும் ஆடு அரங்கு மடப் பிள்ளைகள்
தறையில் கீறிடில், தச்சரும் காய்வரோ?

அறையில் ஆடும் மடப் பிள்ளைகள்; தரையில் கோடு போட்டது போல் நானும் போட்டுள்ளேன்!
“டேய், தரையில் கோடு கிறுக்கினா, கோயில் எழும்பீருமா?” -ன்னு சிற்பிகள், பிள்ளையைக் காய்வரோ?

இறையும் ஞானம் இலாத என் புன் கவி
முறையின் நூல் உணர்ந்தாரும் முனிவரோ?

இறை + ஞானம் -ன்னு பெரிய பெரிய விடயமெல்லாம் இல்லை, என் கவிதையில்!
* ஞான-கர்மம் இல்லாக் கவிதை
வெறுமனே ஆசை! – தமிழ்ப் பண்பு ஆசை!

அதைப், பெரும் பெரும் படிச்சவங்களே, பொருட்படுத்தாதீங்க! பொருட்படுத்தாதீங்க!
தமிழ்நாட்டுக்கு இசைந்த மரபில், தமிழ் மரபில் சொல்லப் புகுந்தேன்!
என்னை – இந்தக் கம்பனைப் பொருட்படுத்தாதீங்க! பொருட்படுத்தாதீங்க!

dosa 65/365 kamban 10/52

Comments
9 Responses to “கம்பன்: தரையில் கீறினால் தச்சரும் காய்வரோ?”
  1. நல்ல விளக்கங்கள்… அருமை…

    மிக்க நன்றி…

    Like

  2. amas32 says:

    அடக்கம் அமரருள் உய்க்கும் என்ற குறளுக்கு எடுத்துக் காட்டாக கம்பர் உள்ளார். எப்பேற்பட்ட மகா காவியத்தை இயற்றி விட்டு இப்படி ஒரு அவை அடக்கத்தோடு பாடலை அரங்கேற்றம் பண்ணுகிறார்! கம்பராழ்வார் திருவடிகளை பணிகிறேன்.

    இந்தப் பாடலில் கம்பரின் அதீத இறை அன்பும் ஆசையும் தான் என் கண்ணுக்கு தெரிகிறது.

    //அறையும் ஆடு அரங்கு மடப் பிள்ளைகள்
    தறையில் கீறிடில், தச்சரும் காய்வரோ?
    அறையில் ஆடும் மடப் பிள்ளைகள்; தரையில் கோடு போட்டது போல் நானும் போட்டுள்ளேன்!
    “டேய், தரையில் கோடு கிறுக்கினா, கோயில் எழும்பீருமா?” -ன்னு சிற்பிகள், பிள்ளையைக் காய்வரோ?//

    தன்னை தாழ்த்தி காலத்தின் முன்னே தானே உயர்வை தேடிக் கொள்கிறார்! ஒன்றுமே அறியாதவர் கூட தலை கால் புரியாமல் ஆடும் காலம் இது. மகா ஞானி, இராமபிரானின் அருளை பெற்றவர், தமிழ் தாயின் தலை மகன், நான் சொல்ல வந்ததை பொருட் படுத்தாதீர்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறார்.

    அவர் அரங்கேற்றம் பண்ணுவதற்கு எப்பொழுதும் போல “அறிஞர்கள்” ஒத்துக் கொள்ளவில்லை. அது எக்காலதிலேயும் எல்லா நாட்டிலேயும் நடக்கும் ஒரு கொடுமை. அசூயை தான் காரணமோ? இன்னொருவன் பேரறிஞன் என்று பெயர் பெற்றுவிடக் கூடாது என்ற நல்லெண்ணமோ? அந்த இறைவனுக்கு தான் வெளிச்சம்!

    கம்ப இராமாயணத்தின் முதல் பாடலையே இன்று தோசாவில் அரங்கேற்றியுள்ளீர்கள். But where is the podcast Mr. KRS? :-)

    amas32

    Like

    • amas32 says:

      Just listening to your pod cast now. For some reason it did not appear when I first opened this page. Sorry :-)

      amas32

      Like

    • //கம்பராழ்வார்//
      அப்படி மரபில் வராதும்மா; கம்ப நாட்டாழ்வார் என்றே வழக்கம்:)

      //அவர் அரங்கேற்றம் பண்ணுவதற்கு எப்பொழுதும் போல “அறிஞர்கள்” ஒத்துக் கொள்ளவில்லை. அசூயை தான் காரணமோ?//
      :)
      சமய அரசியல் ஒரு பக்கம்; அசூயை மறு பக்கம்!

      Kambar is NOT an adjusting guy when it comes to கருத்து;
      உண்மைக் கருத்தில் உறுதி = அதுவே அவருக்கு எதிரிகளைக் கூட்டிற்று:(
      தன்னளவில்-தன் எழுத்தளவில் மட்டுமே உறுதி; அவர் யாரிடமும் சென்று மாறச் சொல்லவில்லை;
      ஆனால் அவர் மாற வேண்டும் என்ற “எதிர்பார்ப்பு”; அது நடவாததால் = அசூயை!

      தில்லைத் தீட்சிதர்கள், பெரிய புராணம் அரங்கேற்ற இசைந்தது போல், கம்ப ராமாயணம் அரங்கேற்ற இசையவில்லை!
      சேக்கிழாருக்கு மன்னன் ஆதரவு; கம்பருக்கு அப்படி இல்லை!
      திருவரங்கத்தில் கூட, வைதீக வைணவர்கள் சிலர் எதிர்ப்பு காட்டினர்;

      ஆனால் நாதமுனிகள் காலம்; அவர் மூலமாய், அப்போது தான் ஆழ்வார் தமிழ், கருவறைக்குள் நுழைந்த காலம்!
      அந்த நாதமுனி தடுத்தாட்கொண்டு, அரங்கேற உதவி புரிந்தார்;
      கம்பரும், நம்மாழ்வார் மேல் அந்தாதியும் பாடினார்!
      கம்பரைச் சடையப்ப வள்ளல் தாங்கினான்; குறைந்தபட்சம் பசி இன்றி இருந்தார்; இது பற்றி, அடுத்த ஒலிப்பதிவாய் இடுகிறேன்;

      Like

  3. amas32 says:

    Very nice podcast KRS as always :-)

    amas32

    Like

  4. திருவரங்குத்துல தில்லை தீட்சிதர்களா? ‘தில்லை’ ‘ன்றது generic term-ஆ?

    ஒரே உள்ளுரையாவே இருக்கு . எல்லாம் சரியாகி ராசியானா நல்லாயிருக்கும் :-|

    கமெண்ட்ல எனக்குப் பிடிச்ச ஒரு பாட்டு எழுதறேன். Context-சார்ந்த அர்த்தத்துக்கு நானோ, கம்பனோ பொறுப்பு அல்ல :-)

    வையம் எனை இகழவும் மாசு எனக்கு எய்தவும் இது இயம்புவது யாதனெனின்
    பொய்யில் கேள்வி புலமையினோர் புகல் தெய்வமாக்கவி மாட்சி தெரிக்கவே

    Like

    • வாங்க தல!
      தில்லை is not Generic! அன்றும்/என்றும் ஒரே தில்லை = ஈசன், அம்பலவாணரின் தில்லையே!

      கம்பன், தன் நூலை, முதலில் தில்லையில் தான் அரங்கேற்ற விரும்பினானாம்; Two Reasons:
      1. தில்லை = சோழர்களின் மணிமகுடம் தாங்கும் ஊர்; பட்டமேற்ற பின்பு, அம்பலவாணரான, ஈசன் சன்னிதியில் சம்பிரதாயமாக முடி தாங்கிக் கொள்வது வழக்கம்!
      2. தில்லை = “திருச்சித்திர கூடம்” என்னும் தலமும் கூட! பெருமாள் கோயிலும் அருகிலேயே உண்டு!
      வடச் சித்திரகூடம், இராமயணத்தில் வரும் அல்லவா?
      அதான் கம்பன், இராம-அயணத்தை, தென் திருச்சித்திர கூடத்தில் அரங்கேற்ற விரும்பினான் போலும்!

      ஆனா, தீட்சிதர்கள் அதிகாரத்தால், அந்த ஆசை நடக்கலை;
      சற்றுப் பிற்காலத்தில், மன்னவன், அக்கோயில் சிலையும் கடலில் மூழ்கடித்த சேதியும் உண்டு – ஒட்டக் கூத்தர் உலாவில்!
      திருவரங்கத்திலாச்சும் அரங்கேற்றலாம் -ன்னு போனான்; ஆனா அங்கேயும் சோழ அதிகாரம்!

      போதாக் குறைக்குச் சில வைதீக வைணவர்களும் எதிர்ப்பு காட்டினர்; வடமொழி வால்மீகியை மீறி வருவது பிடிக்கவில்லை போலும்!
      சோழ மன்னனின் ஆஸ்தான குருமார்கள், தில்லைத் தீட்சிதர்களிடம், உத்தரவு பெற்று வருமாறு சொல்லி விடுகின்றனர்; அதான் அத்தனை அல்லாடல், கம்பனுக்கு!:(
      —————–

      ஆனா, அந்தக் காலகட்டம், நாதமுனிகள் காலகட்டம்; திருவரங்கத்தில், தமிழ் உள்ளே நுழையும் கட்டம்;
      ஆழ்வார் பாசுரங்கள், அரையர் சேவை -ன்னு உள்ளாறப் “புகுந்த” காலகட்டம்!
      நாதமுனிகள், பல வைதீக அந்தணர்களை அடக்கி, தமிழ் அரங்கேற உதவி புரிந்தார்; கம்பனுக்கும் அவரே உறுதுணையாய் நின்றார்; அரங்கேறியது!
      வால்மீகியில் இல்லாத இரணிய வதைப் படலம், இதில் இருப்பது சரியே -ன்னும் சொல்லி அமைதியாக்கினார்

      நம்மாழ்வார் மேல் கம்பன், சடகோபர் அந்தாதி பாடிய காலகட்டமும் இதுவே -ன்னு சொல்லுவாய்ங்க!
      மேலே சொன்ன தகவல்கள் பலவும்: அபிதான சிந்தாமணி என்னும் அக்காலக்கட்ட நூலில் வருபவை!

      Like

    • //ஒரே உள்ளுரையாவே இருக்கு . எல்லாம் சரியாகி ராசியானா நல்லாயிருக்கும் :-|//

      :)))
      யாரையும் ஏச்சு/ டுமீல் -ன்னு இளக்காரம் பேசும் சுபாவம் இல்லை-ண்ணே!
      இது போன்ற அபிதான சிந்தாமணி தகவல்களைத் தான் சொல்லுறேன்!
      ஆனா, அதுக்கே, “ஒரு சாராரைத் திட்டுறேன்” -ன்னு கோவப்பட்டா, நான் என்ன செய்ய முடியும்?:(

      I know the person, who is instigating this, & trying to turn against:(
      தரவை உரசிப் பார்த்து ஏற்றுக் கொள்வதும்/கொள்ளாததும் அவரவர் விருப்பம்; ஆனா நூலைக் கூடச் சொல்லவே கூடாது-ன்னா எப்படி?
      ——————

      //வையம் எனை இகழவும் மாசு எனக்கு எய்தவும் இது இயம்புவது யாதனெனின்//
      Sooperu:)

      //தெய்வமாக்கவி மாட்சி தெரிக்கவே//
      என்னவொரு “தெரிப்பு”!
      கம்பன், தான் பட்ட அல்லாடல்களின் பின்னணியில், அவையடக்கப் பாடலை அப்படியே எதிரொலிக்கிறான் -ன்னு தோனுது!

      Like

Leave a reply to amas32 Cancel reply