நன்று ஆற்றல், தவறு உண்டு!

நன்று ஆற்றல் உள்ளும் தவுறுண்டு அவரவர்
பண்பு அறிந்து ஆற்றாக் கடை
(பொருள்: தெரிந்துசெயல்வகை: 469)

காபி உறிஞ்சல்:

நல்லது செய்வதிலும் தவறு உண்டு!
ஒருவரின் பண்பைப் புரிந்து கொண்டே நல்லதைக் கூடச் செய்ய வேண்டும்.
இல்லாவிட்டால் அதுவே தீமையாகத் திருப்பித் தாக்கும்!

dosa 64/365

Comments
3 Responses to “நன்று ஆற்றல், தவறு உண்டு!”
  1. பாத்திரம் அறிந்து பிச்சையிடு! பாம்பிற்கு பால் வார்க்காதே!

    திருவள்ளுவரின் இன்னொரு குறளை இங்கே நாம் இந்த குறளை விளக்குவதற்கு எடுத்துக் கொள்ளலாம்.
    குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
    மிகைநாடி மிக்க கொளல்

    ஒருவனின் நல்ல குணத்தையும் ஆராய்ந்து கேட்ட குணத்தையும் ஆராய்ந்து எது அதிகமாக உள்ளதோ அதை வைத்து நாம் அவரை எடை போட வேண்டும்.

    ரொம்ப சிம்பிளாக சொல்ல வேண்டும் என்றால் ஒருவருக்கு கடன் கொடுத்தால் அவருக்கு திருப்பிக் கொடுக்கும் குணமே இல்லாவிட்டால் அவருக்கு கடன் கொடுத்து உதவுவது நமக்கு நட்டத்தில் தான் முடியும். அதற்கு பதிலாக நம்மால் இயன்ற அளவு அவருக்கு தானமாகவே கொடுத்து விடலாம். கடன் அன்பை முறிக்கும்!

    ஒரு குடிகாரனின் மகனுக்கு பள்ளியில் படிக்க பணம் கொடுத்து உதவ நினைத்தால் நேராக பள்ளிக்கு சென்று பள்ளிக் கட்டணத்தை நாமே செலுத்தி விட்டு வரவேண்டும். அதற்கு பதில் அவனிடம் கொடுத்தால் பணம் டாஸ்மாக்கில் தான் செலவழியும்.

    சில சமயம் surety கையெழுத்து போட்டுவிட்டு அவன் நம்மை ஏமாற்றி பின் நாமே அதை கட்ட வேண்டிய நிலை மாதிரியும் வரலாம்.

    amas32

    Like

    • //அதற்கு பதிலாக நம்மால் இயன்ற அளவு அவருக்கு தானமாகவே கொடுத்து விடலாம். கடன் அன்பை முறிக்கும்!//
      Well said, kudos!

      Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: