பெருக்கத்து, சுருக்கத்து

பெருக்கத்து வேண்டும் பணிதல் – சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு
(அறம்: மானம் 963)

காபி உறிஞ்சல்:

உயர்ந்த நிலையில் அடக்க உணர்வும்,
சிறிய சுருங்கி விட்ட நிலையில்…
யாருக்கும் அடிமையாக அடங்கி நடக்காத மான உணர்வும் வேண்டும்

dosa 63/365

Advertisements
Comments
9 Responses to “பெருக்கத்து, சுருக்கத்து”
 1. Siva Ananthan says:

   ஐயா – ஒன்னும் புரியல்லையே?

   

  ________________________________

  Like

  • என்னடா இது, பெரிய பதிவெல்லாம் புரியும் சிவாவுக்கா, இத்துனூண்டு சின்னப் பதிவு புரியல?:)
   #dosa365 -இல் இது வரை வந்ததிலேயே, இதான் ரொம்ப சிறுசு சிவா:)

   Like

 2. Beautiful drawing KRS! :-)

  Infosys நாராயனமுர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி கழுத்தில் ஒரு மெல்லிய சங்கிலியோடு தான் எப்பவும் காணப்படுவார். பெரும் செல்வந்தர் ஆனால் ரொம்ப எளிமை. நிறைய தொண்டு நிறுவனங்களை மேற்பார்வை பார்த்து வருகிறார்.
  சுதா ரகுநாதன் போல சிலர் தகதகவென இருப்பார்கள். அது அவர்கள் ஸ்டைல். அது நம் கண்ணை கொஞ்சம் உறுத்தும். அவர்களுடன் சகஜமாகப் போய் பேச கூட தயக்கம் ஏற்படும்.

  MicroSoft டின் பில் கேட்ஸ் விமானத்தில் சாதா வகுப்பில் தான் எப்பொழுதும் பயணம் செய்வார் என்று கேள்விப் பட்டிருக்கேன். அவர் உலகில் உள்ள அனைத்து செல்வந்தர்களுக்கும் முன் உதாரணம். அவர் செய்யும் தர்மங்களுக்கு அளவே இல்லை. அது மட்டுமல்ல அவர் கொடுக்கும் பணம் சரியான ஆராய்ச்சிகளுக்கும் சேர வேண்டிய கடை நிலை ஆட்களுக்கும் போய் சேருகிறதா என்று உன்னிப்பாகக் கவனித்து வருபவர்.

  செல்வந்தனுக்கு பெருமை சேர்ப்பது அவன் எளிமைக்குக் கொடுக்கும் முக்கியத்துவமே!

  அதே வறியவன் எளிமையாக இருத்தல் என்பது அவனால் தடுக்க முடியாத ஒன்று. அவனது தேவை அது. அவனுக்கு வேறு வழி கிடையாது. ஆனால் அந்த சமயத்தில் அவன் தன்மானத்தை விட்டுக் கொடுக்கக் கூடாது. நிமிர்ந்து நிற்க வேண்டிய நேரம் அது. மகா கவி சுப்பிரமணிய பாரதியார் அவர் இருந்த ஏழ்மை நிலையிலும் பரிசில் பெரும் ஒரு சமயத்தில் என் கை என்றுமே தாழ்ந்து இருக்கக் கூடாது. தட்டில் பணமுடிப்பை வையுங்கள் நான் எடுத்துக் கொள்கிறேன் என்று சொன்னதாகக் கேள்வி.

  எளியவனுக்கு தன்மானமே செல்வம்!

  amas32

  Like

  • Not my drawing ma!

   Thanks for telling abt Sudha Murthy & Gates!
   பாரதியார் பற்றிச் சொன்னமைக்கு மிக்க நன்றி; அவரே இதுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு!

   பாரதி, இதனால், சிலரின் பகையைச் சம்பாதித்துக் கொண்டாலும், அவன் கருத்து உறுதி=உறுதியே! எக்காரணம் கொண்டும், அதைச் சமன் செய்து கொள்ளவில்லை அவன்!
   அதான்… அல்லல் பட்டான்! So what? Bharathi is Bharathi!

   Like

 3. அன்பின் கேயாரெஸ் – அருமையான் குறள் விளக்கம் – உயர்ந்த நிலையில் பணிவும் – தாழ்ந்த நிலையில் மானமும் கொண்டு வாழ வேண்டும் – அருமையான கருத்து – நல்வாழ்த்துகள் கேயாரெஸ் – நட்புடன் சீனா

  Like

  • உலகத்தில் ஒன்னை விட பெரியவன் யாருமில்ல, அதனால் யாருக்கும் தலை வணங்காதே;
   ஒன்னை விடச் சிறியவன் யாருமில்ல, அதனால் யாரையும் தாழ்வா நினைக்காதே!
   – தில்லு முல்லு படத்தில்…

   Like

 4. msathia says:

  நம்மாளு சொன்ன பேச்சு கேக்கலைன்னா என்னாகும்னு தெளிவா சொல்லி இருக்காரு..

  அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
  ஆரிருள் உய்த்து விடும்.

  அணு அறிவியல்ல ஒன்று உண்டு. எனர்ஜி ஏறின எதுவும் உடனே கீழ வர முயற்சி செய்யும். அதிலிருந்து வெளிப்படும் வீச்சு தான் கதிர்வீச்சு.

  ‘பொடன்ஷியல் எனர்ஜி’யும் அப்படித்தான். நாமளே மாடிப்படி ஏறும் போது மூச்சு முட்டிக்கிட்டே ஏறுவோம். குடுகுடுன்னு கீழ வந்தவுடனே சமநிலைக்கு வருவோம்.

  அணுவிலிருந்து மனிதன் வரை எல்லாத்துக்குமே இயல்பான நிலை சமநிலை. மாறினா ஆரிருள் தான்.

  Like

 5. அந்த மன திடத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்…

  நன்றி…

  Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: