தொட்டாச் சிணுங்கி, தோட்டத்துல முள்ளங்கி!

“தொட்டாச் சிணுங்கி” பாத்து இருக்கீங்களா?
= ஈங்கை -ன்னு தமிழ்ப் பேரு, அதுக்கு!

எங்கூரு வாழைப்பந்தல்-ல்ல இல்ல! ஆனா பக்கத்தூரு திருவண்ணாமலை-ல பாத்து இருக்கேன்;
அந்தூரு Girls High School பொண்ணுங்க அப்படித் தான் = தொட்டாச் சிணுங்கி:))
School Trip-ல்ல, பசங்க வேணும்-ன்னே போய்ச் சீண்டுவானுங்க; இலைகள் கூம்பிக் கொள்ளும்!:)

“சிணுங்கு” = என்ன பொருள்?
சிலுக்கு = சில சமயம் சினிமாவில் செஞ்சிக் காட்டுவாங்க! “பாவா.. உஹும் உஹும் உஹும்”:)

“சிணுங்கு” = இதுக்கு நேரான English Word சொல்ல முடியுமா ஒங்களால?
Can be “translated”; But you never get the “feel”;
ஒவ்வொரு மொழிக்கும் தனித்தன்மைச் சொல்லுண்டு!
So never ever say: “ஆங்கிலச் சொல்லில் உள்ள effect, தமிழாக்கத்தில் வருவதில்லை”!


இலை தொட்டாச் சுருங்கும்! = Even plants have Senses!
சுருங்கிப் போன இலையை, ஆடு-மாடு திங்காது;  இயற்கை/இறைவன் குடுத்த காப்பு!

Pl correct me, if I am wrong in Science – TouchMeNot Plant;
அசைவை உணர்ந்து, இலையில் இருக்கும் நீர், தண்டிற்குள் சென்று விடும்; இதனால் இலைச் செல்கள் சுருங்கி, இலைகள் ஒட்டிக் கொள்ளும்; கொஞ்ச நேரத்துக்குப் பின் தானே சரியாகி, செல்களில் நீர்மை பாய, இலைகள் மறுபடி விரிந்து விடும்;

தொட்டாச் சிணுங்கி இலைகள் = வரிசை-வரிசையான அழகு!
பூ = அதை விட அழகு! Whitish Pink!
காற்றில் மேகம் போல பறந்து வரும்; ஊதி ஊதி விளையாடுவோம்!

இதுக்குச் சங்கத் தமிழ்ப் பேரு = ஈங்கை
இங்கு->ஈங்கு->ஈங்கை = இங்கு கை வைத்துச் சுருங்குதலால் = ஈங்கை
தமிழ் வேர்ச்சொற்கள்; அதே போல் கோங்கை, வேங்கை!


பாடல்: குறுந்தொகை – 110
கவிஞர்: கிள்ளி மங்கலங் கிழார்
திணை: முல்லை
துறை: தோழி, தலைவனைக் குறை சொல்லி, தலைவியை “வற்புறீஇ” செய்வது

வாரார் ஆயினும், வரினும், அவர் நமக்கு
யார் ஆகியரோ தோழி? நீர
நீலப் பைம் போது உளரி, புதல
பீலி ஒண் பொறிக் கருவிளை ஆட்டி,
நுண் முள் ஈங்கைச் செவ் அரும்பு ஊழ்த்த
வண்ணத் துய்ம் மலர் உதிர, தண் என்று
இன்னாது எறிதரும் வாடையொடு
என் ஆயினள் கொல் என்னாதோரே?

சூழல்:
தலைவன், கார் காலம் தொடங்கும் முன் வந்துருவேன்; உன்னைக் கைப்பிடிப்பேன் -ன்னு சொல்லிட்டுப் போனான்!
ஆனா வரவே இல்ல! கார் காலமே முடியப் போகுது;

அவனோடு போனவனுங்க எல்லாம் வந்துட்டாங்க; பலரும் காதல் கைகூடி இன்பம் துய்க்க ஆரம்பிச்சிட்டாங்க! அவ பாத்து பாத்து ஏங்குறா; She should also settle in life naa?

அவனுக்கு, வேற்றூரில், வேறு சகவாசம் ஏற்பட்டுருச்சோ? உடன் சென்றோர் பேசிக்குறாங்களே! – தோழி, தலைவனைத் திட்டுறா! தலைவியை வற்புறுத்துறா…
“ஏன்டீ காத்துக் கெடக்குற? ஒனக்கு-ன்னு ஒரு வாழ்க்கை வேணாமா”? = தலைவி என்ன பண்ணப் போறா?


காபி உறிஞ்சல்:

வாரார் ஆயினும், வரினும், அவர் நமக்கு
யார் ஆகியரோ தோழி?

இனிமே, வரலீன்னாத் தான் என்ன? வந்தாத் தான் என்ன?
அதான் தெரிஞ்சிருச்சே; இனி, அவன் நமக்கு என்ன உறவு தோழீ?

நீர நீலப் பைம் போது உளரி, புதல
பீலி ஒண் பொறிக் கருவிளை ஆட்டி

நீரில் பூக்கும் நீலப் பூ! = அதன் பசும் மொட்டு அவுந்துருச்சி!
புதர் ஓரமாக் கருவிளம் பூ = மயில் தோகைக் கண்ணு போல இருக்கும்; வீழ்ந்துருச்சி!

நுண் முள் ஈங்கைச் செவ் அரும்பு ஊழ்த்த
வண்ணத் துய்ம் மலர் உதிர

நுண் முள் = Fine Fibers! ஈங்கை = தொட்டாச் சிணுங்கிப் பூ
செவ்வரும்பு ஊழ்த்த = அதன் சிவந்த அரும்பெல்லாம் உலர
வண்ணத் துய்ம் மலர் உதிர = துய்க்க வேண்டிய வண்ண மலரு உதிர்ந்துருச்சோ?

தண் என்று, இன்னாது எறிதரும் வாடையொடு
என் ஆயினள்கொல் என்னாதோரே?

குளிர்ந்த வாடைக் காத்து  வீசி வீசி, உதிரச் செய்து விட்டது!
இந்தக் கொடுங் குளிரில், “அவ என்ன ஆனாளோ?” -ன்னு கூட, அவனுக்குத் தோனலை பாத்தியா?

முருகா,
குளிர் மாலையின் கண், அணி மாலை தந்து…
குறை தீர வந்து – குறுகாயோ?

dosa 61/365

Advertisements
Comments
5 Responses to “தொட்டாச் சிணுங்கி, தோட்டத்துல முள்ளங்கி!”
 1. ranjani135 says:

  அன்புள்ள ரவி,
  இன்று வலைசரத்தில் உங்கள் இடுகைகளைப் பற்றி சொல்லியிருக்கிறேன்.
  வருகை தருக!

  http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_9.html

  Like

 2. //She should also settle in life naa?// Marrying only is settling in life aa? Just asking :-))))

  //வாரார் ஆயினும், வரினும், அவர் நமக்கு
  யார் ஆகியரோ தோழி?//
  இந்த வரிகள் ரொம்ப நல்லாருக்கு. இந்த ஆளு இனி வந்தா என்ன வராட்டா என்ன, நமக்கும் அந்த ஆளுக்கும் ஒரு சம்மந்தமும் இல்லைன்னு கோபமா தோழி சொல்ல வருவது புரிகிறது.

  பூக்கள் எல்லாம் வாடி வதங்கி விடுகின்றன. குளிர் காலம் துவங்கி விட்டதற்கான அறிகுறி அது. மேலும் அந்தக் குளிரில் காதலி துன்பப் படுவாளே என்ற கவலை சிறிதும் இல்லாமல் ஒரு தகவலும் அனுப்பாமல் தலைவன் பாட்டுக்கு வேரூரில் இருக்கிறான். எவ்வளவு நாட்கள் தான் அவன் திரும்பி வருவான் என்ற நம்பிக்கையோடு தலைவி காத்திருக்க முடியும்? தோழியின் வேதனையும் ஆற்றாமையும் தான் இந்த கோபத்தில் தெரிகிறது :(

  குழந்தைகளுக்கு தாவரத்தில் ஈர்ப்பு வர தொட்டா சுருங்கி இலைகள் ஒரு வரப்பிரசாதம். என் மகனுக்கு நாலு வயதாக இருக்கும் பொழுது அந்த செடியினை காண்பித்துக் கொடுத்தேன். அதிலிருந்து செடிகளை கவனிப்பதில் அதிகம் கவனம் செலுத்துவான். இயற்கையில் விளைந்த அதிசயம் தான் தொட்டாச் சிணுங்கி இலைகள்!

  amas32

  Like

  • //வாரார் ஆயினும், வரினும், அவர் நமக்கு
   யார் ஆகியரோ தோழி?
   இந்த வரிகள் ரொம்ப நல்லாருக்கு//

   மறவேன் மறவேன் என்றார் உடனே
   மறந்து விட்டார் தோழி ஆஆஆஆஆ
   மாலைப் பொழுதின் மயக்கத்திலே
   நான் கனவு கண்டேன் தோழி
   :))

   Like

  • //Marrying only is settling in life aa? Just asking :-))))//
   இந்தக் கேள்வியை என்னைப் பாத்து கேக்குறதல, ஒங்களுக்குத் தான் எம்புட்டு ஆனந்தம்:))

   //இந்த ஆளு இனி வந்தா என்ன வராட்டா என்ன//
   ஒருநாளும் இப்படிப் பேச மாட்டா தலைவி; ஆனா இன்னிக்கி பேசுறா-ன்னா, வேற என்னமோ ஒன்னு நடந்திருக்கு! அதான்!
   Shez also hearing something from the folks who went with him!

   //குளிரில் காதலி துன்பப் படுவாளே என்ற கவலை சிறிதும் இல்லாமல்//
   சில சமயங்களில், உயிர் போகும் கட்டத்தில் கூட, சிலருக்கு பதபதைப்பு வருவதில்லை:(

   //என் மகனுக்கு நாலு வயதாக இருக்கும் பொழுது அந்த செடியினை காண்பித்துக் கொடுத்தேன்//
   Yes, Most of city children grow up, without even feeling, what other living beings are like…
   நாய் வளர்க்கக் கூட வேணாம், ஆனா… கண்டிப்பா, தொட்டியிலாச்சும் செடி வளர்க்கணும்!

   Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: