12345 சொல்லிக் குடுக்கும் குறள்!

Sunday dosa is late; Sorry:)
அலுவலக நண்பர்(பி), மிகவும் வற்புறுத்தி அழைத்ததால்… ரொம்ப நாள் கழிச்சித் திரைப்படம் செல்ல வேண்டிய சூழல்;
இரவு நேரமாகி விட்டதால், அவள் வீட்டிலேயே தங்கும் நிலைமையும்! அதான் வீடு வந்து வேகமா எழுதுறேன்:)

இது போன்ற சமயங்களில், கைகுடுக்கும் ஒரே நண்பன்
= ஐயன் வள்ளுவன்!:))
வாங்க, எல்லாருக்கும் தெரிஞ்ச குறள் தான்; கொஞ்சமே கொஞ்சம், மாறுபட்ட பார்வையாப் பார்ப்போமா?

திருக்குறளில் = 12345 சொல்லிக் குடுக்கும் குறட்பாக்கள் தெரியுமா ஒங்களுக்கு?:)


1. கொன்றன்ன இன்னா செயினும் – அவர்செய்த
ஒன்று“நன்று உள்ளக் கெடும்.

2. தானம் தவம்”இரண்டும்” தங்கா – வியன்உலகம்
வானம் வழங்கா(து) எனின்

3. தூங்காமை கல்வி துணிவுடைமை – இம்”மூன்றும்
நீங்கா நிலனாள் பவர்க்கு

4. அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் – “நான்கும்
இழுக்கா இயன்றது அறம்

5. வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் – பூதங்கள்
ஐந்தும்” அகத்தே நகும்


காபி உறிஞ்சல்:

1
கொன்றன்ன இன்னா செயினும் – அவர்செய்த
ஒன்று“நன்று உள்ளக் கெடும் 
(அறம்: செய்ந்நன்றி அறிதல் 109)

முன்பு நல்லபடியாத் தான் இருந்தாரு; ஆனா அப்பறமாக் கொலையினும் பெரும் துன்பம் தந்தாரு! ஆனாலும், அவர் முன்பு செஞ்ச
= ஒரேயொரு நன்மை
அதை நினைச்சாலும், அவர் தந்த துன்பம் போய்விடும்!

2
தானம் தவம்”இரண்டும்” தங்கா – வியன்உலகம்
வானம் வழங்கா(து) எனின் 
(அறம்: வான்சிறப்பு 19)

மழை பெய்யவில்லையானால், இந்தப் பெரிய உலகத்தில்…
* பிறர் பொருட்டு செய்யும் தானம்,
* தம் பொருட்டு செய்யும் தவம்
= இரண்டுக்கும் தடங்கல் ஆகிவிடும்.

3
தூங்காமை கல்வி துணிவுடைமை – இம்”மூன்றும்
நீங்கா நிலனாள் பவர்க்கு 
(பொருள்: இறைமாட்சி 383)

காலம் தாழ்த்தாமை, கல்வி, துணிவு
= இந்த மூன்று பண்புகளும்…
நிலத்தை ஆளும் அரசனுக்கு நீங்காமல் இருக்க வேண்டியவை!

4
அழுக்காறு அவாவெகுளி இன்னாச் – சொல்”நான்கும்
இழுக்கா இயன்றது அறம் 
(அறம்: அறன்வலியுறுத்தல் 35)

பொறாமை, பேராசை, பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல்
= இந்த நான்கும்
அறவழிக்குப் பொருத்தம் இல்லாதவை!

5
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் – பூதங்கள்
ஐந்தும்” அகத்தே நகும் 
(அறம்: கூடா ஒழுக்கம் 271)

பேச்சொன்று செயலொன்று என்னும் வஞ்ச மனம் உள்ளவரைப் பார்த்து…அவரது உடலில் உள்ள
= ஐம் பூதங்களும்
(நிலம், நீர், தீ, காற்று, வெளி) தமக்குள் சிரித்துக் கொள்ளும்!

Did u like it?
Now, You tell me the remaining = 6789 from kuRaL?:)))

dosa 60/365

Comments
9 Responses to “12345 சொல்லிக் குடுக்கும் குறள்!”
  1. msathia says:

    ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர்
    காவலன் காவான் எனி

    \\இதுதானய்யா இன்று எல்லா நாட்டிலும் நடப்பது. அறுதொழிலோர்; \\விவரணையாக தேட வேண்டிய ஒன்று.

    எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
    பண்புடை மக்கட் பெறின்.

    கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
    தாளை வணங்காத் தலை

    \\எண்குணத்தான் என்பது ஒரு மிகப்பெரிய ஜைன குறிப்பு என்பது பாடம்.

    Like

  2. படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
    உடையான் அரசருள் ஏறு 381
    சங்கதனை அறிந்து கீர் கீரென புலவர் பெருந்தகையினை உடையான் துவிட்டரில் ஏறு

    ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
    எழுமையும் ஏமாப் புடைத்து 398
    ஒருதடவை படிச்ச குறள் ஏழேழு வருடம் ஞாபகம் இருக்கும்

    எண்குணத்தான் சொல்லியாகி‘விட்டது, ஒன்பது நீங்களே சொல்லிடுங்க

    Like

  3. படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
    உடையான் அரசருள் ஏறு – 381
    சங்கதனை அறிந்து கீர் கீரென புலவர் பெருந்தகையினை உடையான் துவிட்டரில் ஏறு

    ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
    எழுமையும் ஏமாப் புடைத்து – 398
    ஒருதடவை படிச்ச குறள் ஏழேழு வருடம் ஞாபகம் இருக்கும்

    எண்குணத்தான் சொல்லியாகி‘விட்டது, ஒன்பது நீங்களே சொல்லிடுங்க :)

    Like

    • sooper vijay!
      அதென்ன திருக்குறள் கூடவே இன்னொரு விஜய்க்குறள்?:))

      எழுமையும் = பொதுவா ஏழ் பிறப்பு -ன்னு கொள்வாங்க!
      ஆனா, எழும்போதும் எழும்போதும்!

      ஒன்பதுக்கு = குறள் இருக்கா? நல்லாத் தெரியுமா?
      மும்மூன்றும், நான்கும் ஐந்தும் -ன்னு எல்லாம் தேடிப் பாத்தீங்களா?:))
      My friend @mvmuthu ‘s searchable kuRaL site = http://kural.muthu.org

      Like

      • கூடவே எழுதியது உங்களை நினைத்து தான் :)

        நான் தேடிய வரையில் ஒன்பு (ஒன்பது) குறள் கிடைக்கவில்லை.
        திருக்குறளை தேட “ஐபோன் அப் ” உள்ளது.
        சொல் தொடங்கும் குறள், சொல் முடியும் குறள் மற்றும் சொல் உள்ள குறள்
        மிக மிக எளிதாக பிரித்தெடுக்க முடியும்

        ஆனால் நான் பிட் அடிக்கலை
        சுட்டி இதோ
        http://itunes.apple.com/in/app/ithirukkural/id414160301?mt=8

        Like

        • You are right boss; There is no “direct” reference for nine:)
          Dank u for the link!

          //கூடவே எழுதியது உங்களை நினைத்து தான் :)//
          யோவ் – கலாய்ச்சிfying me?:))

          Like

  4. இந்த அஞ்சு திருக்குறளும் வெவ்வேறு வகுப்புகளில் எனக்கு மனப்பாடப் பகுதியில் வந்தவை. ஆனா அப்போ இந்த ஒண்ணு ரெண்ட மூணு எல்லாம் கவனிச்சதில்லை :-)
    உண்மையாகவே ஒருவர் செய்த நன்மை உயிருள்ள வரை மறக்கமுடியாது, பின்னர் அவரே நமக்கு தீங்கிழைத்திருந்தாலும்! என் வாழ்க்கையில் அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. ஆனால் இன்றும் அவர்கள் செய்த உதவியை நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.

    வான் பொய்த்துவிட்டால் அப்புறம் வாழ்வேது? வளமான வாழ்வு இருந்தால் மட்டுமே தானம் செய்ய இயலும். மேலும் நம்முள் நோக்கி ஆன்மீக வளர்ச்சி அடைய வறுமையில் முடியுமா?

    காலம் தாழ்த்தாமை, கல்வி, துணிவு இவை எவையும் இன்றைய அரசியல் தலைவர் எவரிடம் காணவில்லையே! :(

    பிறர் மகிழ்ந்து இருப்பதைப் பார்த்து நாமும் மகிழும் தருணம் நமக்கு ஆனந்தம். போதும் என்ற மனமும் அதே ஆனந்தத்தைத் தரும். கொபமின்மையும், இனிய சொற்களும் பிறருக்கு ஆனந்தத்தைத் தரும் :-) அது மறுபடி நமக்கே திரும்பி வரும்.

    உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும். அப்படி பேசுபவர்களைப் பார்த்து பஞ்ச பூதங்களுமே நகைக்கின்றனவே!

    amas32

    Like

    • //ஆனா அப்போ இந்த ஒண்ணு ரெண்ட மூணு எல்லாம் கவனிச்சதில்லை :-)//
      அதான் இப்போ கவனிச்சிட்டீங்களே-ம்மா:)

      Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)