புரட்டாசி விஷ்ணு? or திருமால்?

புரட்டாசி மாசமாம்! சிக்கன் பிரியாணி வேற சாப்பிட்டுத் தொலைச்சிட்டேன்:)
அதனாலென்ன? ஒரு பதிவைப் போட்டு ஈடு கட்டீருவோம்:))
“சிக்கன் சாப்பிட முடியலைய்ய்யே, எப்படா இந்தப் புரட்டாசி முடியும்?”-ன்னு விரதங் காட்டிலும் பாவம் பெருமாள் மனசு! என்ன சொல்றீக? = அகம் எனப்பட்டதே இறை!

புறத்தொய்யை என்பதே புரட்டாசி ஆனது!
(காண்க: இராம.கி. ஐயா கட்டுரை)
புரட்டாசிக்கும், பெருமாளுக்கும் = சங்கத்தமிழில் யாதொரு சம்பந்தமும் இல்லா:)


சங்கத் தமிழில் = திருமால், இயற்கை வடிவினன்;
நடுகல், இயற்கையே = அவன் வழிபாடு! முல்லைத் தொன்மம்!

“தங்கள் கண்ணுக்கு, பச்சைப்பசேல் எனக் காட்சி வழங்கிய காட்டின் இயற்கை அழகை, “மால்” என்று பண்டைத் தமிழர்கள் வழுத்தினர்” = திரு.வி.க!
“மாயோன் வழிபாடு தமிழ் நாட்டின் பூர்வீக வழிபாடுகளில் ஒன்றானதாகும். மாயோன் என்பது கருமை நிறமுடையவன், திருமால் எனப் பொருள்படும்” = ஈழத்து அறிஞர் கா.சிவத்தம்பி!

நடுகல்-குடக்கூத்து

சங்கத் தமிழில்,
* திருமால் = விஷ்ணு அல்ல!
* முருகன் = ஸ்கந்தன் அல்ல!

சைவம்/ வைணவம்/ ஹிந்து போன்ற “மத” அமைப்புகளே சங்கத் தமிழில் கிடையாது;

புராணக் குறிப்புக்கள் எல்லாம் கடைச்சங்க நூல்களில் தான்… கலப்புக்குப் பின், மெல்ல மெல்லத் தலை தூக்குகின்றன! முதல் – இடைச் சங்கங்களில் இவை கிடையாது!
= தச-அவதாரங்களும் கிடையாது;  நூறு முகம் – நூறு கையும் கிடையாது!

* சமணம், பெளத்தம் கூட வடக்கில் இருந்து வந்த நெறிகள் தான்! ஆனா, தமிழ்த் தொன்மத்தைச் சிதைக்கவில்லை; “புது நெறி” என்றே அறிமுகம் செய்தார்கள்!
* ஆனா, இந்தச் சம்ஸ்கிருத நெறி தான், தமிழ்த் தொன்மம் மேலேயே, தங்கள் புராணங்களையும் ஏற்றி… எது இருந்தது? / எது வந்தது? -ன்னே தெரியாதபடி சிதைப்பு!

வைணவர்கள் யாரேனும் வாசித்தால், கோவிக்காமல் கவனிக்க:
இன்றைய நிலை வேறு, தொன்மம் வேறு!
இன்று இன்றாக இருக்கட்டும்; தொன்மம் தொன்மமாக இருக்கட்டும்! – இந்தப் புரிதலே போதும்!
(Disclaimer: என் ராசி அப்படி; ஒன்னு ஒருசாராருக்குப் பிடிக்காது, இன்னொன்னு இன்னொரு சாராருக்குப் பிடிக்காது;
இதுக்கு நடுவால, தமிழ் உண்மையைக் கூடப் பயந்து பயந்து பேசணும்; முருகன் எனக்கு-ன்னு எழுதிவச்ச விதி:)


எட்டுத் தொகை நூல்களுள் ஒன்று = பரிபாடல்
* பரி + பாடல் = பரிந்து வருவது (Melody)
* கலித் + தொகை = ஒலித்து வருவது (Rock)

முன்பே சொன்னது போல், பரிபாடல் = கடைச்சங்க காலம்;
“புராணக் குறிப்பு”  நடுநடுவே “கலந்து” வரும்!
ஆனாலும், தமிழ் நிலத்தின் பெரும் தொன்மங்கள் = நான்கை மட்டுமே பாடும்

1. திருமால் 2. முருகன்
3. மதுரை  4. வையை

மற்றவை = இயற்பா ; கலி/பரிபாடல் = இசைப்பா
பரிபாடல் ஒவ்வொன்னுத்துக்கும்…
* Lyricist ஒருத்தர் இருப்பாரு!
* Tune போட்டவர் ஒருத்தர் இருப்பாரு!

பல பரிபாடல்கள் கைக்குக் கிடைப்பதில்லை; சில திரட்டி எடுக்கப்பட்ட incomplete திரட்டுகள்!
மொத்தம் 22 பாடல்களே கிடைக்கின்றன;
அதிலும், முருகனுக்கே அதிக பாடல்கள் என்பது வெள்ளிடை மலை!


பாடல்: கடுவன் இள எயினன் (எண் 3)
இசை: பெட்டனாகனார்
பண்: பண்ணுப் பாலையாழ்

இட வல! குட வல! கோவல! காவல!
காணா மரப! நீயா நினைவ!
மாயா மன்ன! உலகு ஆள் மன்னவ!
தொல் இயல் புலவ! நல் யாழ்ப் பாண!

மாலைச் செல்வ! தோலாக் கோட்ட!
பொலம் புரி ஆடை! வலம்புரி வண்ண!
பருதி வலவ! பொரு திறல் மல்ல!
திருவின் கணவ! பெரு விறல் மள்ள!

மா நிலம் இயலா, முதல்முறை அமையத்து,
நாம வெள்ளத்து, நடுவண் தோன்றிய
வாய்மொழி மகனொடு மலர்ந்த
தாமரைப் பொகுட்டு நின் நேமி நிழலே!


காபி உறிஞ்சல்:

இட வல! குட வல! கோவல! காவல!
காணா மரப! நீயா நினைவ!

முல்லை நில ஆயர்-ஆய்ச்சி –  குரவைக் கூத்து & குடக் கூத்து
= அதில் இடமும் வலமும், ஆடுபவனே!

* கோவலன் = கோ(பசு மாடுகள்; ஆ நிரை) + வலன்(காப்பவன்)
* கோவலன், கோனார் = முல்லை நிலச் சங்கச் சொற்கள்

கோவலா, எங்கள் காவலா!
* காணா மரப = காணக் கிடைக்காத காட்சி -ன்னு சொல்றோம்-ல்ல? அது போல காணக் கிடைக்காத மரபு!
* தமிழ் மரபு = அம் மரபின் மரபனே, திருமாலே! நீயா நினைவ = நீங்காத நினைவோனே!

மாயா மன்ன! உலகு ஆள் மன்னவ!
தொல் இயல் புலவ! நல் யாழ்ப் பாண!

மாயா மன்ன = அழியாத மன்னவா, உலகு ஆள் மன்னவா!
தொன்மை மிக்க புலவனே! இசை மிக்க யாழ்ப் பாணனே!

யாழ்ப்பாணம் என்ற சொல் வருவது மிக்க மகிழ்ச்சி; ஊரைக் குறிக்காவிட்டாலும், ஈழம் எனக்கு நினைவு உந்துகிறது!
ஈழம் சென்ற போது, கதிர்காம முருகனிடம் முடிந்தது;
ஆனா வள்ளிபுர ஆழ்வார் தொன்மையான திருமால் தலம்; முடியல:( காலம் கைகூடுமோ?

மாலைச் செல்வ! தோலாக் கோட்ட!
பொலம் புரி ஆடை! வலம்புரி வண்ண!

மாலை = முல்லை நிலச் சிறு பொழுது! அதன் செல்வனே!
மாலை அணிந்த செல்வனே -ன்னும் எடுத்துக்கலாம்!
தோல்வியே இல்லாத கோட்டங்கள் உடையவனே! (கந்த கோட்டம் = கந்த ஆலயம்)

பொலம் = பொன்;
பொன்னிற ஆடை (மஞ்சள்) அணிந்தவனே; வலம்புரிச் சங்கை உடையவனே!

பருதி வலவ! பொரு திறல் மல்ல!
திருவின் கணவ! பெரு விறல் மள்ள!

பருதி = வட்டத் தகடு (Boomerang/சக்கரம்)
அந்த ஆழி ஏந்தியவனே! மற்போர் செய்யும் முல்லை நில நம்பி!

மள்ள = மறவன்; பெருந் திறல் மள்ளா!
திருவின் கணவ = நப்பின்னை நங்காய் திருவே – திருவின் உருவே;

மா நிலம் இயலா, முதல்முறை அமையத்து,
நாம வெள்ளத்து, நடுவண் தோன்றிய

மா + நிலம் = பெரிய இந்தப் பூமித் தோன்றாக் காலத்தே,
முதல் முறை தோன்றிய போது… அந்த ஊழி வெள்ளத்து நடுவில் இறைவனே!

வாய்மொழி மகனொடு மலர்ந்த
தாமரைப் பொகுட்டு நின் நேமி நிழலே!

வாய்மொழி = உன் வாய்ச்சொற்கள்
திரு-வாய்மொழி மகனே!  உன்னோடு மலரும் இவ்வுலகம்!

தாமரை பொகுட்டு = பொகுள்தல் -ன்னா உயர்தல்; தாமரை போல் உயர்தல்
உலகத் தண்ணியில் சிக்காமல், அதே சமயம் தண்ணியிலும் இருந்து… நீர் உசர உசர, உசரும் தாமரை! = அது போல் நீ!
உன் நேமி நிழல் = சக்கர நிழலிலே, உலகம் இளைப்பாறட்டும்! வாழி!


பாடல், அப்படியே ஒரு தமிழ் அர்ச்சனை போலவே இருக்குதா?… in between Oms & Namahas?:)

* ஓம் திருவின் கணவ நம:
* ஓம் மாலைச் செல்வ நம:
* ஓம் வலம்புரி வண்ண நம:
* ஓம் கோவலா காவலா நம:
* ஓம் காணா மரபா நம:
* ஓம் நீயா நினைவா நம:

:)))))

பேசாம, பரிபாடல் அர்ச்சனை பண்ணீறலாம் கோயிலில்; எல்லாருக்கும் புரியும்!
* அரும்பெறல் மரபின் பெரும்பெயர் முருக = முருகன்!
* முன்னை மரபின் முதுமொழி முதல்வ = திருமால்!

தமிழ் மரபு வாழி!!

dosa 59/365

Advertisements
Comments
11 Responses to “புரட்டாசி விஷ்ணு? or திருமால்?”
 1. கொன்னா பாவம் தின்னா போச்சு :-) ஒரு பதிவை போட்டு ஈடு கட்டிடறீங்க :-) Very Smart!

  சங்கத் தமிழில் மாயோன் இயற்கை வடிவினன் என்று தரவோடு நீங்கள் முன் வைத்திருக்கும் கருத்து ஏற்கத்தக்கது தான். முதலில் எல்லாமே இயற்கை வழிபாடாகத் தானே இருந்தது.

  ஒரு சந்தேகம்.//கோவலன்// is pronounced Kovalan or govalan? ஏனென்றால் வடமொழியிலும் கோ என்றால் பசுக்கள் தானே.

  இரண்டு இரண்டு வரியா உறிஞ்ச சொல்றீங்க, முதல் இரண்டு வரியை அனுபவிக்கவே நேரம் போதவில்லை. காணக் கிடைக்காத மரபு தமிழ் மரபு தான், அதன் தலைவன் திருமாலைப் பற்றி சொல்லவும் வேண்டுமோ?

  இலங்கையில் தான் எத்தனை எத்தனை அழகான தமிழ் பெயர்களில் ஊர்கள் இருக்கின்றன! பெயர்கள் கூட மாற்றப் படுகின்றன என்று கேள்விப் படுகிறேன் :(

  மாலைச் செல்வ – சொல்வதற்கே தித்திக்கிறது நா! கரிய திருமால் வெள்ளை சங்கோடு மஞ்சள் பட்டில் எடுப்பாகத் தெரிவார் :-)

  திருவின் கணவ! வேறு என்ன பேரு வேண்டும் இலக்குமிக்கு. நம்மூரில் கணவன் பெயரை சொல்லாமல் இருப்பதற்கு குழந்தையின் பெயரை சொல்லி அவனின் அப்பா என்று விளிப்பது வழக்கம் (ரமேஷப்பா) இங்கே தாயாரின் கணவன் என்ற identification திருமாலுக்கு!

  //வாய்மொழி மகனொடு மலர்ந்த// //உன்னோடு மலரும் இவ்வுலகம்!//

  ஒவ்வொரு வரியும் எவ்வளவு பொருள் செறிந்ததாக உள்ளது. ரொம்ப நல்லா விளக்கியிருக்கீங்க. இதுவரை நீங்க போட்ட சங்கப பாடல்களில் என்னை மிகவும் கவர்ந்த பாடல் இது. ரொம்பப் பிடிச்சிருக்கு.

  //* அரும்பெயர் மரபின் பெரும்பெயர் முருக = முருகன்!
  * முன்னை மரபின் முதுமொழி முதல்வ = திருமால்!// இந்த இரண்டு வரிகள் பரிபாடலா? எதில் வருகிறது? ரொம்ப ignorant ஆ கேட்பதாக நினைத்தால் கூட பரவாயில்லை, சொல்லுங்கள் :-)

  amas32

  Like

  • //சங்கத் தமிழில் மாயோன் இயற்கை வடிவினன் என்று தரவோடு நீங்கள் முன் வைத்திருக்கும் கருத்து ஏற்கத்தக்கது தான்//

   Dank u for the understanding ma:)
   If u have a different viewpoint also, pl feel free to express! You know me:)

   தமிழில் ko-வலன் என்பதே சரி!
   ko = அரசன்/தலைவன், ஆநிரை ன்னு குறிக்கும்!

   வடமொழியில் Go! Go-கர்ப்பம், Go-மதி
   Go = பூமி, பசுக்கள்
   Itz just a co-incidence, that both words sound a bit same
   ————

   //இலங்கையில் தான் எத்தனை எத்தனை அழகான தமிழ் பெயர்களில் ஊர்கள் இருக்கின்றன! பெயர்கள் கூட மாற்றப் படுகின்றன என்று கேள்விப் படுகிறேன் :(//

   யானை இறவு, முல்லைத் தீவு, கிளி நொச்சி
   கதிர் காமம், வள்ளிபுர ஆழ்வார், கந்தர் ஓடை
   When I went few months back, I saw them renaming the town, after the Name of the Barracks; “Easy Administration” is the reason:((
   ————

   //இதுவரை நீங்க போட்ட சங்கப் பாடல்களில் என்னை மிகவும் கவர்ந்த பாடல் இது. ரொம்பப் பிடிச்சிருக்கு//

   அடங்கொப்புரானே!:)
   I put Sangam Cinemas, பரத்தன்-பரத்தை, Spare Tyre/Backup Mgmt, Direct Deduction in Salary
   முருகாற்றுப்படை, மடையா முருகா பாட்டு…
   இவ்ளோத்தலயும், ஒங்க பெருமாளு வர பாட்டு தான் ஒங்களுக்குப் புடிச்சிருக்கா?:))

   The reason I put this bcoz: paripaadal & kalithogai – I havent put so far!
   This will make it full circle, of ettu-thogai! If u see the tag/சிட்டை on the left!
   ————

   Like

  • //* அரும்பெயர் மரபின் பெரும்பெயர் முருக = முருகன்!
   * முன்னை மரபின் முதுமொழி முதல்வ = திருமால்!//
   இந்த இரண்டு வரிகள் பரிபாடலா? எதில் வருகிறது?
   ரொம்ப ignorant ஆ கேட்பதாக நினைத்தால் கூட பரவாயில்லை, சொல்லுங்கள் :-)

   Ha ha ha! I am as ignorant as you are!
   ஒன்றை அறியும் போதே, இன்னொரு அறியாமை சூழ்ந்து விடும்:)
   So, I always tell myself: “Seeking is better than Knowledge; Keep Seeking & Seeking”
   ————-

   * அரும்பெறல் மரபின் பெரும்பெயர் முருக = முருகன் = நக்கீரர், திருமுருகாற்றுப்படை
   * முன்னை மரபின் முதுமொழி முதல்வ = திருமால் = கடுவன் இளஎயினன், பரிபாடல்
   * மிக்குபுகழ் எய்தும் பெரும்பெயர் பேரூர் = மதுரை = மாங்குடி மருதன், மதுரைக் காஞ்சி

   The beauty abt கடுவன் இளஎயினன் is:
   He sings like this, both on திருமால் & முருகன்
   * முன்னை மரபின் முதுமொழி முதல்வ = திருமால்
   * பெரும் பெயர் முருக! நிற் பயந்த ஞான்றே = முருகன்
   ————-

   எயினன் = Highway Robber; பாலை நிலக் கள்வர் குடி
   இள எயினன் = Young chap; But hez really great to learn & compose, even though from uneducated கள்வர் குடி
   He shares a deep friendship with நல் அந்துவன், who resides in param kundram & sings on murugan
   I really like this guy = இள எயினன்:))

   Like

 2. msathia says:

  இந்த திருமால் பயல் வந்தாலே தாமரை எட்டிப்பாக்க ஆரம்பிச்சிருது கவிதைகளிலாகட்டும், விளக்கங்களில் ஆகட்டும். தாமரை வேற வேற வடிவுல படிச்சிருக்கேன். இங்கே வித்தியாசமா மலர்நீட்டம் பாணில பொகுட்டி வருது.
  **************
  ‘திண்தோள் மணிவண்ண… பெரு விறல் மள்ள..’ பெருவிரல் மல்லர்கிட்டேந்து தமிழைக்காப்பாத்தி பெரிய fontல உண்மையைச்சொல்ற காலத்தைக்கொண்டுவாடா..

  Like

  • ஆமாம் சத்யா!
   பொகுளும் தாமரை = பேரே அழகா இருக்கு-ல்ல?:)

   //இந்த திருமால் பயல் வந்தாலே தாமரை எட்டிப்பாக்க ஆரம்பிச்சிருது//
   he he! no comments:)

   //பெரிய fontல உண்மையைச்சொல்ற காலத்தைக்கொண்டுவாடா..//
   ஆசி குடுக்குறீங்களா? நன்றி நன்றி:)

   Like

 3. Rajesh says:

  //புறத்தொய்யை என்பதே புரட்டாசி ஆனது!//

  புறத்தொய்யை Means??

  Like

 4. Rajesh says:

  //புரட்டாசி மாசமாம்! சிக்கன் பிரியாணி வேற சாப்பிட்டுத் தொலைச்சிட்டேன்:)//

  ஆன்மீக சூப்பர் ஸ்டாரே சிக்கன் பிரியாணி சாப்டா!!!!!!!!!!!!
  நாங்கெல்லாம் என்ன சாப்புடுறது :))

  Like

  • :))

   தொய்வு = குறைவு
   அதிலிருந்து வரும் சொல் = “தொய்யம்”

   ஒளி குறைந்து, இருள் அடர்ந்து இருக்கும் காலம் = பருவ மழை/ குளிர்க் காலம்
   கார் காலம்/ கூதிர் காலம்
   தமிழகத்துக்கு இது = ஐப்பசி மாசம்! = தொய்யம் (அக்காலத்தில்)

   புறத் தொய்யம் = தொய்யத்துக்குச் சற்று முன்
   அதாச்சும் ஐப்பசிக்கு முன் = புரட்டாசி
   புறத்தொய்யை -> புறத்தோயை ->புறத்தோசி -> புரட்டாசி ஆனது!

   இந்தத் தொய்யம் (குறைவு) = இருளுக்கு முந்தைய மாலை நேரத்துக்கும் சொல்வதுண்டு!

   Like

Trackbacks
Check out what others are saying...
 1. Quora says:

  When was Vedic Hinduism and Brahminism introduced to the Tamil society?

  I will add few more points: Looks like Lord Ganapathi was brought in to TamilNadu by Pallavas and only after 11th century (not sure of the period)he was made a brother of Murugan. And in Sangam literature Pillaiyar has always referred to Murugan.. And…

  LikeLeave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: