முதல்-பெண்கொலை-ஆளி! (தாடகை Appraisal)

கம்ப ராமாயணத்தில் அதிகம் அறிந்திராத/ தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட பாத்திரங்கள் = kamban52 series ;
இன்னிக்கு மிக முக்கியமான ஒரு பெண்ணைப் பாக்கப் போறோம்;

இராகவன் வரலாற்றைச் சொல்ல வந்த கம்பன்,
இவ வரலாற்றையே மொதல்ல சொல்லுறான்!
இராம அயணம், தாடகை அயணமாகத் தான் துவங்குது!

= The 1st Woman Assassin!
= தாடகை: முதல் பெண் கொலையாளி
= இராகவன்: முதல் பெண்கொலை ஆளி!


தாடகை-ன்னா என்ன? தடாகம் = தாடகை!
நீர் நிலையின் கரை = தடாகம்! அசுரக் கடலுக்கே கரை போன்றவள்!

அசிங்கமானவ; கர்ண கொடூரம்; -ன்னு தானே தொலைக்காட்சி இராமாயணத்தில் காட்டுறாங்க?
ஆனா, உண்மை அதுவல்ல! = அழகி! பேரழகி!
வென்றவன் எழுதிய கதையில் தோற்றவன் குற்றவாளியோ?

தாடகை = சிவ பக்தி நிரம்பியவள்!
இவளுக்காகச் சிவலிங்கமே தலையைத் தாழ்த்தியது! மாலை வாங்கிக் கொண்டது!
தாடகையீச்வரம் = திருப்பனந்தாள் என்னும் கோயில், தமிழகத்தில் இன்னிக்கும் இருக்கு!


* தாடகை = இராவணனுக்குப் பாட்டி!
* இராவணனின் அம்மாவுக்கு அம்மா!

இது ஒரு பெண் வழிச் சமூகம்!
இராவணன் அப்பா விச்ரவரு! ஆனா அவரு குலத் தோன்றல் பத்திச் சேதி இருக்காது!
அம்மா வழி பத்திய சேதி தான் அதிகம் இருக்கும்!

இராவணன் குடும்பப் படம் (family tree) செய்யணும் -ன்னு ரொம்ப நாளா ஆசை!
எழுத்தாளர் என். சொக்கன், முன்பொரு முறை பேசும் போது.. நாம இராமன் Family Tree போடலாமா-ன்னு கேட்டாரு! தகவல்களும் சேகரித்தோம்; நானோ, இராவணன் Family Tree போட்டு விட்டேன்:) இந்தாங்க!

No Issues; இராமன் – சீதை = இருவர் Family Tree-யும் பின்பு போட்டுத் தருகிறேன்; இப்போ Podcast க்குச் செல்வோம்!


பால காண்டம் – தாடகை வதைப் படலம் (413)

சொல் ஒக்கும் கடிய வேகச்
– சுடு சரம், கரிய செம்மல்,
அல் ஒக்கும் நிறத்தினாள் மேல்
– விடுதலும், வயிரக் குன்றக்
கல் ஒக்கும் நெஞ்சில் தங்காது
– அப்புறம் கழன்று, கல்லாப்
புல்லர்க்கு நல்லோர் சொன்ன
– பொருள் எனப் போயிற்று அன்றே.

என்ன சொல்லினும்… தாடகை = குல முதல்வி! பெண் வழிச் சமூகம்!
வில்லி என்று ஒட்டுமொத்தமாய் முத்திரை குத்தி விடாமல்…
மீண்டும் மீண்டும் சபிக்கப்பட்ட அந்த அரசியின் இதயத்தையும் கொஞ்சம் எண்ணிப் பார்ப்போம்!

கை வண்ணம் அங்கு கண்டேன்!
கால் வண்ணம் இங்கு கண்டேன்!!

dosa 58/365 kamban 9/52
(click the image to open in a full window – Ravana Family Tree)

Comments
31 Responses to “முதல்-பெண்கொலை-ஆளி! (தாடகை Appraisal)”
  1. பொதுவாக புராணங்களும், இதிகாசங்களும், ஆங்காங்கே நிகழ்ந்த சிற்சில காதைகளை, பாடல்களை திரட்டி தொகுத்து முழு சித்திரமாக வழங்கப்படும் முயற்சி எனக் கொள்ளலாம். புராணத்தில் வரும் எல்லா அரசர் குலங்களுக்கும் ஒரு ரிஷி மூலவராகவும் அவருக்கு தந்தையாக பிரம்மனும் இருப்பதை காணலாம். இதையெல்லாம் சிரத்தையோடு ஆராயப் புகுந்தால் சற்றுக் கடினம்தான். நீங்கள் உருவாக்கிய சார்ட்டை பார்த்ததும் எனக்கு சதுர்சிங் சாஸ்திரியின் ‘வயம் ரக்ஷாமஹ’ என்னும் புத்தகம்தான் நினைவுக்கு வந்தது. அவர் இராவணன் வம்சத்தைப் பற்றி மிக அகலமாகவும், ஆழமாகவும் ஆராய்ச்சி செய்து எழுதியிருந்த புத்தகம்தான் அது. என் மனைவி தன்னுட்டைய ஆராய்ச்சி படிப்பில் அந்த புத்தகத்தை ஒரு பாடமாக எடுத்திருந்ததால் பரிச்சயம். இராவணன் பரம்பரை பற்றி நிறைய தகவல்கள் புத்தகம் முழுவதும் வருகின்றன. ஏகப்பட்ட பாத்திரங்கள் கொண்ட பெரிய சார்ட்டே பார்க்கலாம்.

    பிரம்மா -> புலஸ்த்ய மகரிஷி -> விஷ்ரவஸ் -> இராவணன் -என்றும் ஒரு வம்சாவழி சொல்வார்கள். இங்கே ‘சுமாலி’ புலஸ்தயரின் மாமனாராக சொல்லப்படுவார்.

    விஷ்ரவஸ்ஸை – வேச முனி என்றும் அவர் வேசபுரம் (தற்போதைய அநுராதபுரம்) என்னும் நாட்டை ஆண்டுவந்தார் என்றும் ஒரு புராணம் இருக்கிறது. இதே விஷ்ரவஸ் பௌத்த, சமண மத புராணங்களிலும் ‘வைஷ்ரவாணா’ என்று வருகிறது. சமண மத புராணங்களில் இராவணனே ஒரு எதிர்கால தீர்த்தங்கரர்தான்.

    தாய்வழி சமூகம் என்று இரண்டு மூன்று இடங்களில் நீங்கள் குறிப்பிட்டதும்தான் சந்தேகம் எழுந்தது. தாய்வழி சமூகம் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். மருமகன்களுக்குதான் சொத்தில் பாத்யதை. அப்புறம் எப்படி இராவணனுக்கு பட்டம்? ஒருவேளை மண்டோதரி வழியாக வந்த மஞ்சக்காணிதான் இலங்கையா? இப்படியெல்லாம் சிந்தனை போய்விட்டது.

    நிச்சயமாக இராமாய்ணம், மகாபாரத தொன்மங்களில் தாய்வழி சமூகங்கள், polyandry traditions போன்றவற்றின் தடயங்கள் இருக்கின்றன. அவற்றை மறைத்தும், மாற்றியும், புனிதபடுத்தியும் (பிற்காலத்தில் வந்த மாற்றங்களுக்கேற்ப) நமக்கு இன்றைய கதைகள் கிடைக்கின்றன. உங்கள் பதிவு தூண்டிவிட்ட விஷயங்களை அசைபோட்டபடி இன்றைய பொழுது போகிறது. நன்றி!

    Like

    • நீங்கள் கூறியிருப்பது போல எல்லா அரசர்களுக்கும் ஒரு ரிஷி பாட்டனாராகவோ தந்தைகாவோ இருந்திருக்கிறார். இன்னும் மேலே போனால் பிரம்மாவிடம் இருந்து அந்த வம்சம் ஆரம்பிப்பதும் தெரிய வருகிறது. அது தான் பின்னாளில் கோத்ரமாக மாறியது.

      amas32

      Like

      • In any history, there are 2 parts = Hagiography & Real History!
        * Hagiography = பிரம்மா மூலமாய், எழும் கதைகள்
        * History = அண்மையில் அறியப்படும் வாழ்க்கை நிகழ்வுகள்

        முழுக்கவே “கதை”யாக இருப்பதில்லை; வாழ்க்கை நிகழ்வுகள் பல இருக்கும்;
        பின்னோக்கிப் போகப்போக, Antiquityக்குக் கதை சொல்லப்படும்!
        அப்படி எடுத்துக் கொள்ள வேண்டியது தான், இது போன்றவைகளை!

        Like

    • //இதையெல்லாம் சிரத்தையோடு ஆராயப் புகுந்தால் சற்றுக் கடினம்தான்//
      ஆமாம்-ண்ணே! நதிமூலம்-ரிஷிமூலம் பாக்கக் கூடாது/முடியாது -ன்னு சொல்றதும் இதைத் தான்!:)

      //என் மனைவி தன்னுட்டைய ஆராய்ச்சி படிப்பில் அந்த புத்தகத்தை ஒரு பாடமாக எடுத்திருந்ததால் பரிச்சயம்//
      Sooper Anni!:) I like this Woman educating the Man:)

      //விஷ்ரவஸ் பௌத்த, சமண மத புராணங்களிலும் ‘வைஷ்ரவாணா’ என்று வருகிறது//
      குபேராய வைஸ்ரவணாய மகாராஜாய நமஹ: Remember the slokam?:)

      //சமண மத புராணங்களில் இராவணனே ஒரு எதிர்கால தீர்த்தங்கரர்தான்//
      ஆமாம்! சமண ராமாயணம், சீதையை = இராவணன் அறியா மகளாகவே காட்டும்!
      இராமன் சொர்க்கம் செல்ல, இலக்குவனும்/இராவணனும் நரகம் சென்று திருந்துவர்; இராவணன் = அடுத்த தீர்த்தங்கரர்
      ————–

      பொதுவா, இப்படிப் பல Versions of Ramayanam இருந்தாலும்…
      நாம், புலஸ்தியர்/பிரம்மா வரை போய் நுணுக்குவதில்லை! Itz a more & more additive story telling!

      நம் தேவை என்னவோ = அது வரை மட்டுமே வாசிப்பும்!
      உண்மை என்னும் கிணற்றில், நீர் எத்தனை ஆழம் என்று தெரியாது!
      நம் தேவை நீர் = முப்பதடித் துவக்கத்திலேயே கிடைக்கிறது; அது வரையே நம் தாகம்!

      இங்கே நம் தேவை = இராவணன்-இராமன் & அவனைச் சுற்றிய தலைமுறை!
      அது எப்படி இயங்குகிறது/முரண்படுகிறது என்பதே!
      அதுவே நமக்குப் படிப்பினைகளையோ/ புதிய திறப்புகளையோ, அகத்தில் நிகழ்த்துகிறது!

      Like

    • //தாய்வழி சமூகம் என்று இரண்டு மூன்று இடங்களில் நீங்கள் குறிப்பிட்டதும் தான் சந்தேகம் எழுந்தது.
      மருமகன்களுக்குத் தான் சொத்தில் பாத்யதை//

      மகள்கள் வழியாக மருமகன்களுக்கு-ன்னு சரியாச் சொல்லுங்க:))

      //அப்புறம் எப்படி இராவணனுக்கு பட்டம்?//

      தாடகை-கைகசி -ன்னு வந்த Family Tree
      அடுத்து சூர்ப்பநகை தானே முன்னிற்கணும்? ஆனா இல்ல பாத்தீங்களா?
      அதான் இராவணன் ஆண்மைத் திறல்! அவனால் பெண்வழிச் சமூகம் உடைபடுகிறது என்பதே, இங்கு பார்வை!

      இலங்கை = மால்யவான் & தாடகை-சுமாலி காலத்தில்… கைநழுவிக் குபேரன் கைக்குச் செல்கிறது
      குபேரன் = விச்ரவரின் இன்னொரு மகன் (via another wife)
      பெண்வழிச் சமூகக் கைகசியால், மாற்றாள் மகன் கைக்குச் செல்வதை வேடிக்கை பார்க்க முடிந்ததே அன்றி, போரிட முடியவில்லை!

      இராவணனே மீட்கிறான்!
      இப்படி, ஆண் திறலால், பெண்வழிச் சமூகம் உடைபடுகிறது!
      வெறுமனே, தலைமுறை தலைமுறையாச் சொத்துப் பரிமாற்றம் என்றால் = அப்போ பெண்வழிச் சமூகங்கள் இயங்க முடிகின்றது!
      ஆனா போரிட்டுக் காக்கும் நிலை வரும் போது, ஆண்களால், அது உடைபட்டுப் போகிறது என்பதே உண்மை!
      ———————

      //தாய்வழி சமூகங்கள், polyandry traditions போன்றவற்றின் தடயங்கள் இருக்கின்றன.
      அவற்றை மறைத்தும், மாற்றியும், புனிதபடுத்தியும்//

      Yessu! Very True:)

      //உங்கள் பதிவு தூண்டிவிட்ட விஷயங்களை அசைபோட்டபடி இன்றைய பொழுது போகிறது. நன்றி!//

      Glad, that my post evoked thoughts in சிந்தனைச் சிற்பி ஸ்ரீதர்:)

      Like

  2. Nice family tree of Ravanan, KRS. ரிஷி சம்மந்தம் இருந்தும் அரக்கக் குழந்தைகள் பிறக்கிறார்கள். அரக்கர்கள் ஆயினும் பெரும் இறை பக்தர்களாக இருக்கிறார்கள். இறைவனிடம் பிரார்த்தித்து வேண்டும் வரத்தைப் பெற்றுக் கொண்டு பின் அட்டூழியம் செய்கிறார்கள். பின் வரம் கொடுத்த அதே இறைவனால் அழிக்கப் படுகிறார்கள். One vicious circle only!

    இவர்களை நினைத்துப் பார்க்கும் பொழுது வருத்தமாகவும் உள்ளது. பெண்,பெண்ணுடைய பொறுப்புகள் உள்ளவள்.ஆனால் சமூகத்தில் அவர்களின் தீய செயல்களால் நல்ல பெயர் கிடையாது.இது மகிழ்ச்சியே இல்லாத வாழ்க்கை தானே!

    சமயத்தில் யார் நல்லவர் யார் தீயவர் என்று கூட சரியாகப் பிடிபடுவதில்லை.முனிவர்களும் சந்தர்ப்பவாதிகள் தான்.

    //புல்லர்க்கு நல்லோர் சொன்ன
    பொருள் எனப் போயிற்று அன்றே.// ரொம்ப அருமையான வரிகள்.

    நல்லா கதை சொல்கிறீர்கள் :-))

    amas32

    Like

    • Hope u liked the family tree -ma:) Ready Reckoner:))

      //ரிஷி சம்மந்தம் இருந்தும் அரக்கக் குழந்தைகள் பிறக்கிறார்கள்//

      There is no correlation between Rishi Sambantham & Asuras!
      There are very bad Rishis, But good Asuras too! Ex: பிரகலாதன்

      தேவர்களும், தேவேந்திரனும் செய்யாத அட்டூழியமா?
      இருப்பினும், தேவர்கள் = ஹோம-யக்ஞ தேவதைகள் என்பதால், அவர்கள் தவறுகள் மறக்க/மறைக்கப் படுகின்றன;
      அசுரர்களின் தவறுகள், ஊதிக் காட்டப்படுகின்றன!
      ——————

      //சமயத்தில் யார் நல்லவர் யார் தீயவர் என்று கூட சரியாகப் பிடிபடுவதில்லை.முனிவர்களும் சந்தர்ப்பவாதிகள் தான்//

      Glad u told this ma! Yes!
      Most Munivars Penance is out of Selfishness or Siddhic/Yogic Powers, Not for his unbounded love!

      அதான், ஆழ்வார்கள்-இயக்கத்தில் மட்டும், தேவ-அசுர பேதங்கள் கொண்டாடப்படுவதில்லை!
      * அசுரன் = ஆனாலும் பிரகலாத ஆழ்வான்
      * தேவன் = இந்திரன் மகன் (ஜெயந்தன்); ஆனா அவனைக் காகாசுரன்-ன்னே சொல்லுவார்கள்!
      கருமமே கட்டளைக் கல்! பிறப்பு அல்ல!

      ஆழ்வார்கள் = கும்பகருணனை = Gentleman/கோமகன் என்றே குறிப்பிடுவார்கள்!
      பிரகலாதன் = அசுரனே ஆனாலும் = அவன் தான் பக்த குல முதல்வன்!
      அவனுக்கு அப்பறம் தான் நாரத, வியாச முதலான மற்ற முனிவர்கள் -ன்னு வரிசைப்படுத்துவார்கள்!

      தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே
      யாவரும் வந்துன்னை வணங்க, அரங்கநகர் துயின்றவனே
      – குலசேகராழ்வார் பாசுரம்

      Like

      • devarajan97 says:

        >>> தேவர்களும், தேவேந்திரனும் செய்யாத அட்டூழியமா?
        இருப்பினும், தேவர்கள் = ஹோம-யக்ஞ தேவதைகள்
        என்பதால், அவர்கள் தவறுகள் மறக்க/மறைக்கப் படுகின்றன; <<<

        ’அஹல்யா ஜார, கௌதம ப்ருவாண’

        இந்திரனின் ஒழுக்கக் கேட்டையும்,
        கௌதமரிடம் அவன் தலை குனிந்து
        நின்றதையும் மறை கேலி செய்கிறது;
        பதவியில் உள்ளோர் தவறு செய்தாலும்
        காலம் முடியும்வரை பொறுத்துத்தான்
        ஆக வேண்டியுள்ளது

        Like

        • //பதவியில் உள்ளோர் தவறு செய்தாலும், காலம் முடியும்வரை பொறுத்துத் தான் ஆக வேண்டியுள்ளது//

          தேவர்களுக்குக் காலம் முடிவதே இல்லை போலும்!
          இதே, அசுரர்களுக்கு மட்டும் காலம் முடிந்து, சம்ஹாரம் கிடைத்து விடுகிறது அல்லவா?:))
          வாழ்க தேவர்கள், வாழ்க இந்திரன்:)

          Like

          • devarajan97 says:

            அமரர் என்றாலும் கால எல்லை உண்டு;
            அவர்கள் முனிவரின் சாபத்துக்காளாவதுண்டு;
            அவர்கள் ஆற்றல் மிக்க மானுடரின் உதவியை
            நாடியுள்ளனர். நஹுஷன் சிறிது காலம்
            இந்திர பதவியில் இருந்துள்ளான்.
            யாராயினும் செருக்கைக் காட்டியதும்
            அடங்கியதும் பதிவாகியுள்ளது.
            செருக்கு அடங்காவிட்டால்
            ஸம்ஹாரம்தான் மாற்று.
            மருந்து, மாத்திரக்கு அடங்காத நோய்க்கு
            அறுவைப் பண்டுவம்.

            இராவணனின் ஆற்றலை உத்தர காண்டத்தில்
            முனிவர்கள் கூறியுள்ளனர். விருத்திரன்,
            பிரகலாதனையும் புராணங்கள் வாயிலாகத்தானே
            அறிகிறோம் :))

            Like

            • Exactly!
              மருந்து மாத்திரை = தேவர்களுக்கு மட்டுமே (90%)
              சம்ஹாரம் = அசுரர்களுக்கு மட்டுமே (90%)
              Hope u got it now:)

              இந்திரன் மகன் ஜயந்தனுக்கு = சீதா பிராட்டியாரின் மார்பைத் தடவிப் பார்த்தாலும், மன்னிப்பு!
              இந்திரன் மகன் ஜயந்தனுக்கு = முருகன், தனித் தூதுவன் வீரபாஹூவை அனுப்பி, “அன்பே கவலைப்படாதே” ன்னு ஆறுதல் சொல்லுவான்:))

              Like

  3. rajandr says:

    Two things.

    1. Usage of the term History while speaking about Kamba Ramayanam. Till I finished my studies in University no history course spoke about any Historical figure called Ram or Ravan. Please to clarify if this holds good even in the context of this post and references to tracing family tree vis-a-vis this piece of work being treated as an epic- a work of fiction.

    2. Your sound cloud podcast had a comment about scolding Brahmins using Kamba Ramayanam by one Mr Chokkan. Since I couldn’t post the comment there adding my 2 cents here

    I remember/studied Annadurai writing a book Kambarasam where he picks the “vulgarity” of the Aryan race as depictied in this KambaRamayanam and dismisses the work to be best let to be fed for fire(TheeParavattum). The underlying theme which he points out in this book is nothing but glorification of Aryan god Ram shown to be defeating the dark skinned Arakan Ravanan who is the objectification of Dravidian.

    Though the literary credentials of this work is noteworthy and no second thoughts about richness of Kamban’s imagination and his mastery over the language the undertone of this book keeps haunting and reminding one of the cultural oppression handed over to the natives in their own language and for ages upheld and cheerleaded by the community who want to perpetuate the prejudice.

    Anyways appreciate your work. Sorry couldn’t write this in Tamil which I wished I could have.

    Like

    • நன்றி ராஜன்!
      நான், பிராமணர்களை, எந்த இழிச்சொல்லோ, பழிச்சோல்லோ பேசவில்லை! ஏச்சு = என் இயல்பிலேயே இல்லை!
      சொல்ல வந்தது: தாடகையின் இடத்தில், அவள் அனுமதி வாங்கக் கூசி, அவளையே முனிவர்கள் முறிக்கின்றனர் என்பதே;

      முனிவர்கள் செய்யும் ஹோமத்தில் = தேவர்களுக்கு மட்டுமே அவிர்ப்பாகம்;
      அதனால், அந்தணர் வேள்வியில், தேவர்களின் அனுமதி (அனுக்ஞை) பெறுவது, வாடிக்கை தானே! அனுக்ஞா மந்திரங்களும் உண்டு!
      இதை ஒரு புராண-சமூகவியல் குறிப்பாய்த் தான் காட்டினேன்; யாரையும் வசைபாடவில்லை! திராவிடம் பக்கம் நின்று, கம்பன் அடிவருடி-ன்னும் சொல்லலை!

      ஆனால் என்ன காரணமோ தெரியலை, சொக்கன் வலிய வந்து, அப்படிப் பின்னூட்டி, என்னை மிகவும் காயப்படுத்தி விட்டார்:(
      தமிழை, டுமீல் என்றெல்லாம் இழித்துள்ளார்கள்; அப்போதெல்லாம் ஒன்னும் சொல்லாதவர், நாம் ஒன்றுமே சொல்லாத போதும், இப்படியொரு குறிப்பு:((

      அவர் மேலுள்ள மதிப்பால், எதிர்வினையேதும் ஆற்றாமல், அடக்கங் கொண்டேன்!
      உங்கள் கருத்தில் உள்ள உண்மைக் கூறுகளைக் கண்டதால், இந்தப் பதில்மொழி! நன்றி!

      Like

      • devarajan97 says:

        >>>> தாடகை = சிவ பக்தி நிரம்பியவள்!
        இவளுக்காகச் சிவலிங்கமே தலையைத் தாழ்த்தியது! மாலை வாங்கிக் கொண்டது! தாடகையீச்வரம் = திருப்பனந்தாள் என்னும் கோயில், தமிழகத்தில் இன்னிக்கும் இருக்கு! <<<

        திருப்பனந்தாள் தலத்தில் இறைவழிபாடு செய்தவள்
        அரக்கியான தாடகை இல்லை; அப்பெயர் கொண்ட
        சிறுமி

        Like

        • devarajan97 says:

          >>> தாடகை-ன்னா என்ன? தடாகம் = தாடகை!
          நீர் நிலையின் கரை = தடாகம்! அசுரக் கடலுக்கே கரை போன்றவள்!
          அசிங்கமானவ; கர்ண கொடூரம்; -ன்னு தானே தொலைக்காட்சி இராமாயணத்தில் காட்டுறாங்க?
          ஆனா, உண்மை அதுவல்ல! = அழகி! பேரழகி!
          வென்றவன் எழுதிய கதையில் தோற்றவன் குற்றவாளியோ? <<<

          நீங்க சொல்றாப்பிடியெல்லாம் இல்லீங்களே
          கேயாரெசு , அள்ளி உடுறீகளே :))

          தாடகா
          tADakA

          ताडका – f. the large dark-green pumpkin

          Like

        • சிறுமி என்றால் சேலை கட்டினாளா?
          உயரம் குறைந்த சிறுமியின் சேலை கழன்று விழும் போது, எப்படி லிங்கம் தலை சாய்க்க முடியும்?
          = லிங்கம் சிறுமியை விடச் சிறிதா என்ன?
          = அப்படித் தெரியவில்லையே திருப்பனந்தாள் கோயிலில்?

          இது போன்ற Logic எல்லாம் பார்க்காது போய் விட்டால் பிரச்சனை இல்லை!:)
          ஆனால் “அரக்கி அல்ல” என்று உடனே சொல்லி விடுகிறார்கள், தரவே இல்லாமல்!

          மாணிக்கவாசகர் மண்டோடரியை வைத்துப் பாடுவது போல்
          தாடகையை வைத்து, இத்தலத்தின் கதை எழாதா? என்றால் விடையில்லை, “அரக்கியைப்” பிடிக்காதவர்களிடம்:)

          Like

          • devarajan97 says:

            தாடகை எனும் பெயர் தடாகத்தோடு
            எப்படிப் பொருந்தும் ?

            மேலாடை இணைந்த சிற்றாடை அணிந்த இளம் பெண்களை
            அண்மைக்காலம் வரை பார்த்து வந்துள்ளோம்.
            தல புராணம் அவ்வாறுதான் கூறுகிறது.

            கம்ஸன் வழிபட்ட ஊர் உள்ளது [கஞ்சனூர்];
            சிவபூசையின் இறுதியில் பாண –
            ராவணர்களை நினைக்கும் வழக்கமும்
            இருந்துள்ளது. ராவணன் செய்த சோதிட
            நூல் வடபுலத்தில் உள்ளது.
            அரக்கரைப் பிடிக்காது என்பதால்
            ஒழித்துக்கட்டவில்லை, இரவி.

            Like

            • How do u “assume” தல புராணம் as an authentic source?:)

              //தாடகை எப்படி தடாகத்தோடு பொருந்தும்//

              அட, சம்ஸ்கிருத காவ்யா தான் -> தொல்”காப்பியம்” ஆகும்போது…
              தாடகம் -> தடாகை ஆகாதா என்ன? :)))))))))))))))

              Like

          • devarajan97 says:

            ப்ரதோஷ பூஜையின் முடிவில்
            சண்டேசர், நந்தி, ப்ருங்கி இவர்களுக்கும்
            முன்பாக வாணனும், இராவணனும் சொல்லப்
            படுகின்றனர் –

            பா₃ண ராவண சண்டே₃ஶ நந்தி₃ ப்₃ரிங்கி₃ரிடாத₃ய​::|
            மஹாதே₃வ ப்ரஸாதோ₃யம் ஸர்வே க்₃ருண்ஹந்து ஶம்ப₃வ​:||

            இராவணன் வழிபட்ட தலம் கோகர்ணம்.
            இரணியன் வழிபட்ட இரணியேசுவரர் ஆலயம்
            காஞ்சியில் உள்ளது.

            அரக்கர் வழிபாட்டுக்கும் அங்கீகாரம்
            கிடைத்துள்ளது

            Like

            • நன்றி தேவ் சார்
              நீங்க என்ன தான் ஒத்த வரியைக் குடுத்தாலும்.. ஒங்க மனசாட்சிக்கே தெரியும்!
              *அசுரர்கள் = எப்பமே குணக் கேடர்கள் (with few exceptions)
              *தேவர்கள் = அவங்க குணம் பத்தி..Forget it; அவர்கள் ரக்ஷிக்கப்பட வேண்டியவர்கள்!
              இது தான் “சித்தரிப்பு”

              முருகன், சூரனைக் கொல்லலை! மறக் கருணை; மயிலா மாத்திக்கிட்டான் என்பதெல்லாம் பம்மாத்து:)
              ஒரு சூரனை மயிலா மாத்திக்கிட்டு…
              சூரனின் மொத்த ஊரையும், பொது மக்களையும், கடலில் மூழ்கடித்தது தான் = “கருணையா”?

              தக்கனின் வேள்வியில் கலந்துக்கிட்ட “பாவத்துக்கு” = அசுரர்களை வளர்த்து விட்டு, தேவர்கள் கர்வத்தைக் குட்டுவது
              அப்பாலிக்கா, அசுரர்களையே கை கழுவீறது..
              இந்திரா அம்மையார் வளர்த்து விட்ட தீவிரவாதிகள் கதை போலவே இல்ல? Simple Politics:)

              தன் கெளரவத்துக்குப் பங்கம்! அதனால் தக்கன் வேள்வியில் யாரும் கலந்துக்கக் கூடாது;
              கலந்துக்கிட்ட தேவர்களுக்கு Teach a Lesson!
              After that, Wash off Asuras = இப்படியெல்லாமா தெய்வத்தின் குணம்? இறைவன் கருணையே உருவானவன் அல்லவா?

              //அரக்கர் வழிபாட்டுக்கும் அங்கீகாரம் கிடைத்துள்ளது//
              * இதை “அங்கீகாரம்” என்று ஒப்புக் கொள்ள மாட்டேன்; நந்தியின் கர்வ பங்கம் ஒழித்த ஈசனே-ன்னா வருது? ஆனா இராவண கர்வ பங்கம் ஒழித்த ஈசன்-ன்னு மட்டும் வரும்!
              * இப்படி, சுலோகம் போல் சொல்லி, தலையில் தட்டுவது = அங்கீகாரம் அன்று! அடிச்சிட்டு அஞ்சு ரூவா கொடுக்குறாப் போல:)

              Like

            • Letz not digress Dev Sir
              Tell me exactly why தாடகை needs to be killed? After all, itz her place! She was the queen
              1. Why rishis cursed her to go “ugly woman”, when she asked justice for her husband’s death?
              2. Why cant rishis take permission from the owners of the land, if they want to do pooja in someone else’s property?
              Simple questions!

              Like

  4. devarajan97 says:

    வேள்வி அழிய வேண்டும் என்பது தக்கனின் மகளே கொடுத்த சாபம்.
    அரனார் ஒதுங்கியே இருந்தார்; மனையாளையும் ஒதுங்கி இருக்க
    அறிவுறுத்தினார்.

    தாடகை முனிவர்களைத் துன்புறுத்தியதால் அழிந்தாள்;
    சுபாகு விசுவாமித்திரர் வேள்வியில் இடைப்படாதிருந்தால்
    மாண்டிருக்க மாட்டான்.

    நான்முகனார் தவம் செய்தோர் யாராயினும் வரமளித்தவர்தானே;
    அரக்கருக்குக் கிடையாதென்று சொல்லவில்லையே.

    ராவணனும் சீதை, இராமன் உள்ளிட்ட பலரது எச்சரிக்கையை
    மதிக்காததால்தானே மாண்டான்.

    பரசுராமரால் மாண்ட கார்த்த வீரியனின் புகழையும் விஷ்ணு புராணம்
    கூறுகிறது; அவனது மரபினர், அவனை வழிபடுவோர் இன்றும்
    உள்ளனர். பின்னால் பரசுராமர் செருக்கடங்கிய விவரமும் உள்ளது.
    பாணாசுரன் என்றாலும் அவன் கண்ணபிரானுக்கு சம்பந்தி.
    அடிச்சுப்போட்டு அஞ்சு ரூவா குடுக்கறாப்ல இல்லை :))
    கண்ணபிரான் பிறந்த யாதவ இனம் செருக்கால் அழிந்ததும்
    பதிவாகியுள்ளது.

    ஸ்கந்தர் அருளியது ’காதந்த்ர’ எனும் வடமொழி இலக்கணம்;
    தமிழ்க் கடவுள் கந்தன் வடபுலத்தோர் வழிபட்டால் அருள்
    புரிய மாட்டாரா :)) அவர் வடநூலும் அளித்துள்ளார்.
    இயேசுபிரான் இஸ்ரேலியருக்கு மட்டுமே மீட்பர்
    எனும் கருத்தியல் உண்டு; அதுபோல் கந்தன்
    தமிழருக்கு மட்டுமே கடவுள் எனும் வரையறை
    உள்ளதா ?

    பிரித்துப்பேசி மகிழ்வது ஒரு பொழுதுபோக்கு.
    ம்ம்… நடக்கட்டும்

    Like

    • devarajan97 says:

      >>> நந்தியின் கர்வ பங்கம் ஒழித்த ஈசனே-ன்னா வருது?
      …ஆனா இராவண கர்வ பங்கம் ஒழித்த ஈசன்-ன்னு மட்டும் வரும்! <<<

      நந்தி கயிலையைப் பெயர்த்தெடுக்க முயன்றிருந்தால்
      நந்தி கர்வ பங்கம் ஒழித்த ஈசன்-ன்னு வரும்.

      பரசுராம கர்வ பங்கம் இருக்கு
      சதுர்முக கர்வ பங்கம் இருக்கு
      இந்த்ர கர்வ பங்கம், ரிஷி கர்வ பங்கம்,
      நாரத கர்வ பங்கம், தர்மபுத்ர கர்வ பங்கம்
      எல்லாமே உண்டு.

      ’கருமமே கட்டளைக் கல்!’னு நீங்களே
      எழுதியிருக்கீங்க

      Like

      • இந்திரக் காம பங்கம் = இல்லாதது ஏனோ?
        கேவலம் செய்தார்க்கு, (தேவ) சேனாபதி ஆவது ஏனோ?

        ஒரு ஊரையே/ அப்பாவி மக்களையே, கடலுள் மூழ்கடிக்கலாமா?
        = இதுக்கு மட்டும் நீங்க பதில் சொல்லவே இல்ல பாத்தீங்களா?:)

        அசுரர் “குடி கெடுத்த” ஐயா வருக!
        என் முருகன், யார் குடியும் கெடுக்க மாட்டான்!:(

        Like

    • ஒதுங்கி இருக்க அறிவுறுத்தியது: அவங்க குடும்ப விவகாரம்

      ஆனா, மற்றவர்களையும், தன்னை மதிக்காத இடத்துக்குப் போகக் கூடாது-ன்னா எப்படி?
      அப்படிப் போனதன் விளைவு தானே= அசுரர் வீர்யம் பெற்று, அமராள் வாடியது?:)

      சுயநலத்துக்கு: தீவிரவாதிகளை வளர்த்து விட்டு
      பின்பு, அவர்களையே அழிக்கும் “அரசியல்” = இதையா இறை செய்யும்?

      இதுக்கெல்லாம் பதில் சொல்லாம esc ஆயிடறீங்க!:)
      ஆனா, பிரித்துப் பேசி மகிழ்வது பொழுதுபோக்கு -ன்னு “ஞானவுரை” மட்டும் குடுக்குறீக:)))

      Like

    • தாடகை முனிவர்களைத் துன்புறுத்தியதால் அழிக்கப்பட்டாளா?
      முனிவர்கள், முதற்கண், இன்னொருத்தருக்குச் சொந்தமான இடத்தில், எப்படித் தங்கள் தவத்தை மேற்கொள்ளலாம்?
      அதைத் தடுத்தால் = அழிச்சிருவீங்களா?:)
      அரசாங்கப் பொது இடத்தில், இன்னிக்கி அழிச்சாட்டியம் பண்ணுற மதவாத சக்திகளுக்கு Inspiration எங்கிருந்து வருது? -ன்னு இப்பத் தானே புரியுது!
      ———-

      முருகன் = அனைவருக்கும் சொந்தமானவன் தான்!
      கடவுள் = மொழியையும் கடந்து உள்ளவர்;
      ஆனா முருகன் = தமிழ்த் தொன்மமும் கூட!

      அந்தத் தொன்மத்தையே அழிச்சி, சம்ஸ்கிருத மயமா ஆக்கிட்டீங்களே, அதை மட்டும் தான் குறிப்பிட்டேன்!
      ஆறுபடை வீடும் = “ஸ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமி தேவஸ்தானம்” தான்:))

      Like

  5. திரு உத்தரகோச மங்கைத் தல புராணம் இறைவன் இருடியர்க்கொப்ப
    வாணனுக்கும் அருளியதைச் சொல்கிறது; மண்டோதரியின் தவமும் தலபுராணத்தில் சிறப்பிக்கப் படுகிறது. அரக்கர் இனம் சேர்ந்தவர்
    என ஒதுக்கவில்லை

    Like

    • தேவ் says:

      >>>> இந்திரன் மகன் ஜயந்தனுக்கு = சீதா பிராட்டியாரின் மார்பைத் தடவிப் பார்த்தாலும், மன்னிப்பு! <<<<<

      காக்கை வடிவுகொண்ட ஜயந்தன் காலில் விழுந்தான்.
      இராவணனுக்கும் மன்னிப்பு தயாராக இருந்தது.
      பலரும் அறிவுறுத்தினர், பிராட்டியார் உள்பட.
      ஆனால் அவனது நோக்கம் வேறாக இருந்தது.

      Like

  6. தேவ் says:

    Ravana authored Ravana Sanhita, a powerful book on the Hindu astrology. Ravana possessed a thorough knowledge of Ayurveda and political science also.

    Ravana Samhita –

    http://www.gobookeee.com/ravana-samhita-vedic-astrology/

    Like

    • devarajan97 says:

      >>>> தாடகை முனிவர்களைத் துன்புறுத்தியதால் அழிக்கப்பட்டாளா? <<<<

      தாடகை யக்ஷி. அகத்தியரின் சினத்தால் அரக்கியானாள்.
      விஸ்வாமித்திர முனிவர் இராமனிடம் தாடகையின் வரலாற்றைக் கூறி வருகிறார். மேற்கண்ட பாடலில் கம்பன் கூற்று: "உன்னை கண்களால் காண்கின்ற ஆண்கள் கூட, தாங்களும் பெண்ணாகப் பிறந்திருக்கலாமே என்று உன் அழகில் மயங்கும்வார்களே! இராமா, சூலத்தைக் கையில் ஏந்திக் கொண்டு இந்தக் காட்டில் திரியும் அந்தக் கொடியவள் பெயர்தான் தாடகை என்பதாகும் என்றார். வான்மீகத்தில் வரும் சொற்றொடர் "பும்ஸாம் த்ருஷ்டி
      சித்தாபஹாரிணம்" என்பது ஆடவரின் கண், மனம் ஆகியவற்றைக் கவரும்படியான எழில் படைத்தவன் என்று கூறுகிறது. இந்த அரக்கிதான் வளமிக்க இந்த பூமியை இப்படிப் பாலைவனமாக ஆக்கி விட்டாள். இவள் அங்க நாடு எங்கும் உள்ள உயிர்களை அழித்தலோடு எனது வேள்விகளையும் இராவணன் ஏவலால் கெடுத்துக் கொண்டிருக்கிறாள் என்று முனிவர் கூறுகிறார்.

      http://kambaramayanam-thanjavooraan.blogspot.ae/

      மக்களின் வாழ்விடங்களைக் வனமாக்கியவள் என வால்மீகி கூறுகிறார்.

      மற்றுமொரு செய்தி. கர்க்கடி எனும் அரக்கி தவம் செய்ததையும் பின்னர்
      பிரமஞானியாகத் திகழ்ந்ததையும் யோகவாசிட்டம் கூறுகிறது. அரக்கரின்
      தவறுகள்தான் ஊதிக்காட்டப்படுகின்றன என்பது தாங்கள் வாசகர்களுக்குத்
      தெரிவிக்கும் தவறான தகவல்

      Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)