Sangam Cinemas: மாம்பழக் கொலை!

இன்னிக்கி Sangam Cinemas! = மாம்பழக் கொலை!
காட்சிகள் மிக்க விறுவிறுப்பானவை!
மாங் கொல்லை இல்லீங்க; மாங் கொலை! எழுத்துப் பிழை -ன்னு நினைச்சிக்காதீங்க!

சங்கப் புலவர்கள்-ன்னாலே பரிசிலுக்குப் பாடுறவங்க; ஆகா-ஓகோ -ன்னு புகழறவங்க -ன்னு சிலருக்கு நினைப்பு!
அப்படி அல்ல!
கோடி குடுத்தாலும், ஒரு மன்னனை, மொத்தக் கவிஞர் கூட்டமே பாட மறுக்குது!
ஏன்? = பெண் கொலை புரிந்த மன்னன்!

சங்கக் கவிஞர்கள் எல்லாருமே, மன்னனை ஒட்டி வாழ்ந்தவர்கள் அல்லர்! தனியே வாழ்ந்து, சமூகத்தை எதிர்த்து, துணிந்து கருத்து சொன்னவங்க பலப் பலரு!
பாணன்-விறலி & சில கவிஞர்கள் மட்டுமே, மன்னனை அண்டி, தங்கள் கலைகளைக் காத்துக் கொண்டனர்; ஒட்டமொத்த கவிஞர் கூட்டமே பரிசில் கூட்டம் அல்ல!:)


திரைக் கதை:

நன்னன் = பூழி நாட்டை ஆண்ட சிற்றரசன்;
அவன் தோட்டத்து மாமரம்; காவல் மரமும் கூட; பாண்டியர்க்கு வேப்ப மரம் போல-ன்னு வச்சிக்குங்களேன்!
அந்த மாங்கனி ஒன்று, அருகே ஓடிய வாய்க்காலில் வீழ்ந்து மிதந்து வந்தது…

குளிக்க வந்த இளம் பெண்! கோசர் குடியினள்!
வாய்க்காலில் நீந்தி விளையாடிய பொண்ணு, தண்ணியில் அடிச்சிக்கிட்டு வரும் மாம்பழத்தை எடுத்து உண்டாள்!
= இது ஒரு குற்றமா?
= தனக்குப் பிடிக்காததால்… பெருங் குற்றமாக்கி அடிக்கும் பழக்கம்!

காவல் மரம், வேந்தின் அடையாளமாம்! தேசியக் கொடி போல மரியாதை குடுக்கணுமாம்!
பழம், அந்த மரத்தில் இருந்து வருது-ன்னு, பாவம் அவ எப்படி அறிவாள்?
அவ எதுவும் திருடலை; தண்ணியில் மிதந்து வரும் பழம்!
கன்னிக்-கனியும், மாங்-கனியும் = காவலர்கள், பிடித்து விட்டனர்;

நன்னன் மரண தண்டனை விதித்தான்!!! சான்றோர் தடுத்தும் கேக்கலை;


அப்பா – பொண்ணு பாசம் பாருங்க, அந்த நாளில்!
விவசாயத் தந்தை… மகள் செய்த “தவறுக்காக”
* 81 ஆண் யானைகள்
* மகள் எடைக்கு எடை தங்கம்; பொற் பாவை
பிணைத் தொகை = தலையை அடகு வச்சி, தண்டம் கட்டுவதாச் சொல்லியும் நன்னன் உடன்படலை;

“மரபு” முக்கியமாம்; மரண தண்டனையை நிறைவேற்றினான்!
ஒன்னுமில்லா விடயத்துக்கு = ஒரு உயிர் போனது!
சினம்… செல்லும் இடத்திலே தானே, அடிச்சி ஏறி மிதிப்பாங்க?

ஆனா, பரணர் முதலான கவிஞர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?
“தமிழ்த் தீர்ப்பு” எழுதினார்கள்!
= அவனையும், அவன் குடித் தோன்றல்களையும், தமிழால் இனிப் பாடவே மாட்டோம்!
= “பெண் கொலை புரிந்த நன்னன்” -ன்னு பதித்தும் வைத்து விட்டார்கள்!

பின்னாளில், கோசர்கள், நன்னனிடம் பரிசல் நாடுவது போல் நாடகம் ஆடி…
அவன் தந்த யானைப் பரிசை, அதே மரத்தில் கட்டி,
அந்த சா மரம் = மா மரத்தை முறிய வைத்தார்கள்!
வெகுண்ட நன்னன், போரிலே தோற்றுப் போய், கொல்லப் பட்டான்!

தமிழ்க் கவிஞர்களின் கொள்கை உறுதி காட்டும் சங்கக் கவிதை!


பாடல்: குறுந்தொகை 292
கவிஞர்: பரணர்
திணை: குறிஞ்சி
துறை: வரைவு கடாதல் (திருமணம் தூண்டல்)

மண்ணிய சென்ற ஒள் நுதல் அரிவை
புனல் தரு பசுங் காய் தின்றதன் தப்பற்கு
ஒன்பதிற்று-ஒன்பது களிற்றொடு, அவள் நிறை
பொன் செய் பாவை கொடுப்பவும், கொள்ளான்,

பெண் கொலை புரிந்த நன்னன் போல,
வரையா நிரையத்துச் செலீஇயரோ, அன்னை!-
ஒரு நாள், நகை முக விருந்தினன் வந்தென,
பகை முக ஊரின், துஞ்சலோ இலளே


காபி உறிஞ்சல்:

மண்ணிய சென்ற ஒள் நுதல் அரிவை
புனல் தரு பசுங் காய் தின்றதன் தப்பற்கு

நீராடச் சென்ற பெண்; மின்னும் நெற்றி உடையவள்!
புனலில் அடிச்சிட்டு வரும் மாம் பழம் (மாங்காய்) தின்றதன் “குற்றத்துக்கு”

ஒன்பதிற்று-ஒன்பது களிற்றொடு, அவள் நிறை
பொன் செய் பாவை கொடுப்பவும், கொள்ளான்,

ஒன்பதிற்று-ஒன்பது = 9×9 =81 களிறு
அவள் எடை கொண்ட பொற்பாவை… கொடுக்க முனைந்தும், கொள்ளான்!

பெண் கொலை புரிந்த நன்னன் போல,
வரையா நிரையத்துச் செலீஇயரோ, அன்னை!

பெண் கொலை செய்தான் நன்னன்!
அது போல, என் தலைவியும் கொன்னுறாதீங்க! ஒங்களுக்குத் தீராப் பழி சூழ்ந்துரும்!

ஒரு நாள், நகை முக விருந்தினன் வந்தென,
பகை முக ஊரின், துஞ்சலோ இலளே

எங்க அம்மாவுக்கு, உறவோடு உறவாக, அன்று சிரிச்சிக்கிட்டே விருந்துண்ண வந்தீங்களே, அது தெரிஞ்சி போச்சி!
பகைவர்கள் உள்ள ஊரில், மறவர்கள் தூங்குவாங்களா? அது போலக் காவல் காக்குறா தலைவியை!

தயவு செஞ்சிப் புரிஞ்சிக்கோ… இனி ரொம்ப பாக்க முடியாது…
அவளை உன் கூடச் சேத்துக்கும் வழியைப் பாரு;
அவளை ஒன் நினைப்புலயே கொன்னுறாத! = பெண் கொலை புரிந்த பாவி -ன்னு பேரு வாங்கிக்காத!

dosa 57/365

Advertisements
Comments
3 Responses to “Sangam Cinemas: மாம்பழக் கொலை!”
 1. அன்பின் கேயாரெஸ் – அக்கால்த்திலேயே – பரணர் போன்ற கவிஞர்கள் தீர்ப்பு எழுதி இருக்கிறார்கள் – இனிமேல் இம்ம்ன்னனை – நன்னனை – தமிழால் இனிப் பாடவே மாட்டோமென சபதம் எடுத்தார்கள் . அது மட்டுமல்ல – பெண் கொலை புரிந்த நன்னன் என் ஆவணப்படுத்தி விட்டார்கள். அருமை அருமை – சங்க காலப் புலவர்கள் வீரமுள்ளவர்கள்.

  செல்இடத்துக் காப்பான் சினம்காப்பான் – ஆனால் நன்னன் காக்க வில்லையே – அவன் காபப்வன் அல்ல

  நல்லதொரு உரை – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

  Like

 2. நீங்களே தோசா ஆரம்பித்து சில நாட்களிலேயே மகள் தந்தையின் இறப்பிற்கு அரசனை பழி வாங்கும் பரணர் எழுதிய ஆகநானூற்று பாடலை பதிந்திருன்தீர்கள். அது தான் நினைவுக்கு வருகிறது. https://dosa365.wordpress.com/2012/08/12/04/

  இங்கே ரிவர்ஸ். ஆனால் அதே பரணர் தானே?

  பெண் என்றால் பெயும் இறங்கும் என்பார்கள், அனால் இந்த அரசன் பேயை விடக் கொடியவன் போல!

  சங்க காலத்தில் ஒட்டு மொத்தக் கவிஞர் கூட்டமும் பரிசில் கூட்டம் அல்ல என்று அறிந்து மகிழ்ச்சி. ஒரு பெண்ணை நியாயமில்லாமல் கொன்றதற்கு புலவர்கள் அனைவரும் சேர்ந்து நன்னனுக்கு எதிராக இனி அவனையும் அவன் குலத் தோன்றல்களையும் புகழ்ந்து பாடுவதில்லை என்று தீர்மானம் இயற்றியது உண்மையிலேயே போற்றத்தக்கது. இன்றைய அரசியலில் பல்லாயிரம் பெண்கள் மற்றும் குழந்தைகளை கொன்ற அரசுக்கு எதிராக ஒரு தீர்மானம் இயற்றக் கூட திராணி இல்லாமல் இருக்கிறோம்:(

  இந்தப் பாடலில் நன்னனை குறிப்பிட்டு அவனை போல நீங்களும் பெண் கொலை செய்து விடாதீர்கள் என்று தோழி இறைஞ்சுகிறாள், தலைவனைப் பார்த்து.
  ஆனால் இதில் வரும் கொலை எப்படி ஏற்படும் என்றால், அவன் பாராமுகமாக இருந்து, மேலும் அவள் வீட்டில் வந்து பெண் கேட்காவிடில் அந்த சோகத்திலேயே காதலி உயிரை விட்டு விடுவாள் என்று காதலனுக்கு உணர்த்துகிறாள் தோழி.

  பெண் பாவம் பொல்லாதது! ஆண் பாவமும் பாவம் தான்.

  amas32

  Like

  • ஆமாம்-ம்மா; அதே பரணர் தான்!
   அங்கு மகள் பழிவாங்குறா, இங்கே மகள் தூக்கில் இடப்படுறா
   பரணர் is a great poet, who records many historical incidents, apart from his usual love poems!

   //இன்றைய அரசியலில் பல்லாயிரம் பெண்கள் மற்றும் குழந்தைகளை கொன்ற அரசுக்கு எதிராக
   ஒரு தீர்மானம் இயற்றக் கூட திராணி இல்லாமல் இருக்கிறோம்:(//
   போய், “கலை நிகழ்ச்சியும்” நடத்திட்டு வரோம் – யதுகுல காம்போதி/ கபோதி -ன்னு ராகம் பாடிட்டு:((

   //பெண் பாவம் பொல்லாதது! ஆண் பாவமும் பாவம் தான்//
   Yes, Paavam is paavam, Man or Woman!

   Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: