நடந்தாய் வாழி காவேரி!

“காவிரி, வா விரி” -ன்னு வருந்தி அழைக்கும் காலம் இன்று!
ஆனா, வருந்தாமலேயே வந்த காவிரியும் உண்டு!
எப்படியெல்லாம் வந்தாளாம்? பாக்கலாமா இன்னிக்கி? = சந்தப் பாட்டு! அவ ஓடி வரும் சந்தம்!

காவிரி = கா + விரி
கா -ன்னா சோலை; சோலைகளினூடே விரிந்து பாய்வதால் = காவிரி
காக்கா விரிச்சி விட்ட ஆறு என்பதெல்லாம் புராணக் கதைகளே:)

மக்கள் வழக்கு, அந்தக் காலத்திலேயே “காவேரி” என்றும் ஆகி விட்டது!
காவிரி, காவேரி = இரண்டும் சரியே! இளங்கோ அடிகளும் பயன்படுத்துகிறார்;

பொதுவா, நீட்டி முழக்கும் போது, குறில் -> நெடில் ஆவது வழக்கம்!
மக்கள் சந்தமாப் பேச… கா + விரி = கா + வேரி என்று விரிந்து விடுகிறது!
சந்தப் பாட்டு-ல்ல? அதான் இளங்கோவும் “கா-வேரி” ஆக்குறாரு! நீட்டி நீட்டிப் பேசும் பொண்ணு – ஆண்டாளும் இப்படித் தான் செய்யுறா:)

விரி மயிர் என்பதே வழக்கம்; விரியும் மயிர்!
ஆனா வேரி மயிர் என்கிறாள் ஆண்டாள், சிங்கம் பிடரி உதறும் போது!

மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவு உற்றுத் தீவிழித்து
வேரி மயிர் பொங்க, எப்பாடும் பேர்ந்து உதறி…
(திருப்பாவை – 23)

எப்படி விரி + மயிர் = வேரி மயிர் ஆகிறதோ, அப்படியே கா + விரி = காவேரி ஆகிறது!


நூல்: சிலப்பதிகாரம் (புகார்க் காண்டம் – கானல் வரி)
கவிஞர்: இளங்கோவடிகள்

உழவர் ஓதை, மதகு ஓதை,
உடை நீர் ஓதை, தண்பதம் கொள்
விழவர் ஓதை, சிறந்து ஆர்ப்ப,
நடந்தாய்; வாழி, காவேரி!
விழவர் ஓதை சிறந்து ஆர்ப்ப
நடந்த எல்லாம் வாய் காவா
மழவர் ஓதை வளவன்-தன்
வளனே; வாழி, காவேரி!

இதைச் சுசீலாம்மா, தன் தேன் குரலில் பாடுகிறார்;
சிலப்பதிகாரம் in Susheelamma’s Voice, Wow! அபூர்வமான பாட்டு; கேட்டுக்கிட்டே படிங்க:)
படம்: கரும்பு
இசை: சலீல் செளத்திரி
குரல்: பி.சுசீலா


காபி உறிஞ்சல்:

உழவர் ஓதை, மதகு ஓதை,
உடை நீர் ஓதை, தண்பதம் கொள்

ஓதை = ஓசை;
உழவர்களின் ஓசையான பாட்டும், (நாட்டுப் பாடல் = பள்ளு)
மதகில் தண்ணி பாயும் ஓசையும், கரை உடைத்துப் பாயும் ஓசையும்

விழவர் ஓதை, சிறந்து ஆர்ப்ப,
நடந்தாய்; வாழி, காவேரி!

புதுப்புனல் = புதுத் தண்ணி வந்ததால் கொண்டாடும் விழா ஓசையும்
இப்படிப் பல ஓசைகளோடு, காவேரிக்கே உரிய ஓசை…
அந்தத் துள்ளல் ஓசையோடு நடக்கும் காவிரிப் பெண்ணே! நடந்தாய் வாழி காவேரி!

விழவர் ஓதை சிறந்து ஆர்ப்ப
நடந்த எல்லாம் வாய் காவா

இப்படி விழா ஓசையோடு சிறப்பா ஓடுறியே… அதுக்கு யாரு காரணம்?
வாய் காவா; வாய் = இடம்! (அணை) இந்த இடத்தைக் காப்பவன் யாரு?

மழவர் ஓதை வளவன்-தன்
வளனே; வாழி, காவேரி!

வளவன் = சோழன்! கரிகால் வளவன் -ன்னு சொல்வோம்-ல்ல?
சோழனே உன்னை வழி நெடுகும் காக்கின்றான்!
மழவர் = மறவர்! வீர ஓசையும் பொங்க ஓடும் காவிரியே!
வளவனின் வளமே! வாழி காவேரி, வாழி காவேரி!


நாட்டுப்புறப் பாட்டுக்கும் அழகியல் கூறுகள் உண்டு!
ஏதோ கர்நாடக சங்கீதம் தான் முறையா, இலக்கணம் -ன்னு நினைச்சிறாதீங்க:)
பல்லவி, அனுபல்லவி, சரணம்
= முக வரி , முகமில் வரி, முரி வரி -ன்னு நாட்டுப்புறப் பாட்டுக்கும் இருக்கு!

“வாழி காவேரி” ன்னு முடியுது-ல்ல?
= இதுவே முகம்; இந்த ஈற்றடியை மீண்டும் மீண்டும் பாடணும்! (ஒவ்வொரு சரணத்தின் முடிவிலும், பல்லவியை மீண்டும் பாடுறாப் போல)
= வரிப்பாட்டுக்கு முகமாக நிற்றலால் முகம் எனப்படும்!
= ஆரம்பத்திலேயே வராமல், இடையில் வருவதால் = இடை மடக்கு-ன்னும் சொல்லுவாய்ங்க!

முக – வரி!
கடைசி அடி, முதலிலும் வச்சி வச்சிப் பாடுதல்
Address: முகவரியும் – இப்படி எழுதும் வழக்கம் சில நாடுகளில் உண்டு:)
முதலில் மாநிலம், மாவட்டம், தெரு, வீடு, ஆள் பெயர் -ன்னு Reverse -இல் எழுதும் பழக்கம்!
கடைசி அடியின் பேரை, முதலில் வைத்தல் = முக வரி!:)

dosa 56/365

Advertisements
Comments
8 Responses to “நடந்தாய் வாழி காவேரி!”
 1. ranjani135 says:

  பாடல் மிக இனிமை! இசையும், சுசீலாவின் குரலும் இணைந்து, இழைந்து, குழைந்து….மறுபடி மறுபடி கேட்டுக்கொண்டே எழுதிக் கொண்டிருக்கிறேன்.

  கூடவே உங்கள் விளக்கமும் awesome!

  சின்ன வயதில் கொள்ளிடத்தில் கோடைவிடுமுறையில் ஸ்ரீரங்கம் போகும்போதெல்லாம் விழுந்து புரண்டு குளித்த நினைவு வருகிறது!

  காவேரி பிரச்சினை என்று சொல்லும்போது, காவேரி எப்படி பிரச்சினை ஆகும், நாமல்லவா அவளை பிரச்சினை ஆக்கிவிட்டோம் என்று தோன்றும்!

  பழைய நினைவுகளுடன், நிறைய மழை பெய்து காவிரியில் எப்போதும் நீர் பெருக்கெடுத்து ஓடவேண்டும் என்ற பிரார்த்தனையுடன்,

  ரஞ்ஜனி

  Like

  • rAguC says:

   வெகு நாளைக்கு பிறகு இங்கு எட்டி பார்க்கிறேன். என் மின்னனஞ்சலில் மொத்தம் பதினான்கு அஞ்சல்கள் பிரிக்கப்படாமல், படிக்கப்படாமல் ஏங்கி என் சோம்பலை எனக்கு எடுத்துரைக்கிறது தினமும். அத்தனையும் dosa365 . காவிரில குளிச்சிட்டு எல்லாத்தையும் ஒன்னொன்னா படிச்சு முடிச்சிடுறேன்.

   காவேரி – காவிரி ரெண்டும் ஒண்ணா? வெறும் சந்த சத்தத்துக்காகத்தான் இப்படி Vary ஆகுதா?

   சுசீலாம்மா குரல் அருமையோ அருமை! தெவிட்டாத தீஞ்சுவை. காவரி நீர் போல.

   உழவர் ஓதை – உழவர்கள் ஓசை _- பொங்கி வரும் காவிரி கண்டு, விளைந்தது நெல் என்று மனம் நம்பி, பொங்கி வரும் இன்பத்தை ஓசை எழுப்பி வெளியிடுகிறார்கள்- பெண்களின் குலவைச்சத்தம்

   மதகு ஒதை – நான் காவிரி, மரப்பலகையால் ஆன மதகே, என்னை நீயா தடுப்பது, திற திற ..என தட்டுகிராளோ காவிரி

   உடை நீர் ஒதை – அதென்ன நீர்-உடையும் ? solid தான் உடையும் – liquid எப்படி உடையும்? நீர்/ திரவம் எல்லாமே தான் சேருகிற கலன்களின் வடிவத்தை எடுத்து கொள்ளும். இப்போ மண்ணுமேல ஓடுரா இந்த காவேரி, அதாவது நீளமான தகடு மாதிரி இவ ஓடுறது எப்படி தெரியும், எங்கையாவது பள்ளம் மேட்டுல விழும் போது தான், அப்படி விழும் போது, இத நீர்தகடு உடையுமோ? ஆது உடைகையில் ஒரு ஓசை வெளிவருமோ?

   விழவர் ஒதை சிறந்து ஆர்ப்ப – விழா எடுத்து கொண்டாடுறாங்களாம், அதுவும் ரொம்ப சிறப்பா, இந்த புதுப்பொண்ணு வருவதை பார்த்து. அக்கால விழாக்கள் எல்லாம் இப்படி இயற்கை நிகழ்வை ஒட்டி எழுந்தன,காரணம் – சுழற்சியான இயற்கை நிகழ்வுகள் நினைவில் இருக்கும், இயற்கை மீது நன்றியும் இருக்கும், நாமும் இன்பமாய் இருக்கலாம். ஆடி பதினெட்டாம் பெறுக்கு – GOTTCHAA

   நடந்தாய்! வாழி காவிரி – அதென்ன நடந்தாய்? ஏன் ஓட மாட்டாளா? பாவி மக? ஒடமாட்டளாம், மெதுவா நடந்து தலை மடை பகுதில இருந்து கடை மடை பகுதி வரை நடந்து தான் போவாளாம்? ஏனாம் எல்லாருக்கும் தண்ணி இருக்கு, கலங்காம விவசாயம் பண்ணுங்கன்னு சொல்லுவாளாம். அதான் வாழி காவிரின்னு சொல்றாங்க. வாழிய வாழிய !

   Like

   • Missed you here Raghu :-)

    amas32

    Like

   • //வெகு நாளைக்கு பிறகு இங்கு எட்டி பார்க்கிறேன்//
    மாப்பிள்ளை-ன்னா அப்பிடித் தான்:)

    //சுசீலாம்மா குரல் அருமையோ அருமை! தெவிட்டாத தீஞ்சுவை. காவரி நீர் போல//
    Yessu, Who can match Susheelamma in Classics?
    She sang Thevaram, Aazhwar songs!
    I wish she cud have sung – Changa Tamizh & Chilambu – atleast in private albums

    //உடை நீர் ஒதை – அதென்ன நீர்-உடையும் ? solid தான் உடையும் – liquid எப்படி உடையும்?//
    அதானே!

    //இப்போ மண்ணுமேல ஓடுரா இந்த காவேரி, அதாவது நீளமான தகடு மாதிரி
    எங்கையாவது பள்ளம் மேட்டுல விழும் போது தான், அப்படி விழும் போது,
    இத நீர்தகடு உடையுமோ? ஆது உடைகையில் ஒரு ஓசை வெளிவருமோ?//

    Beautiful da, Ragu!
    ச்சே, என்னவொரு இயற்கை சார்ந்த சிந்தனை!

    Like

 2. சென்னை பெண்! நான் காவிரியை கண்ணால் தான் பார்த்திருக்கிறேன் :-) உங்களை போல முங்கி குளித்து விளையாடியது எல்லாம் இல்லை. காவிரியில் குளித்தால் புண்ணியம் என்று ஒரு ஐப்பசி மாதம் என் அம்மாவின் விருப்பத்தை பூர்த்தி பண்ண அவருக்கு துணையாக சென்று ஒரு முறை குளித்திருக்கிறேன். அது ஒரு சிலிர்ப்பான அனுபவம். என் தாய் ஏன் காவிரி மேல் அத்தனை பாசம் வைத்திருந்தாள் என்று புரிந்து கொண்டேன். காவிரிக் கரையில் வளர்ந்தவர்கள் எல்லோரும் கொடுத்து வைத்தவர்கள்.

  சோழ நாடு சோறுடைத்து என்பார்கள். அதற்குக் காரணம் காவிரி அன்னை தான். காவிரியில் தண்ணீர் கரை புரண்டு ஓடும பொழுது எழும் சத்தம் அனைவர் காதுக்கும் தேன் தான். ஏனென்றால் நல்ல தண்ணீர் வரத்து வளமைக்கு வழி காட்டுகிறதெ! நல்ல மகசூல் என்றால் மகிழ்ச்சி, மகிழ்ச்சி என்றால் விவசாயின் வாயில் இருந்து இன்பமான பாட்டு தான் வரும் :-)

  சோழ அரசனின் புகழும் காவிரியால் ஓங்குகிறது, காவிரியின் புகழும் சோழ அரசனால் ஓங்குகிறது!

  நல்ல மழை பெய்து கர்நாடாகவுக்கும் தமிழ்நாட்டிற்கும் விவசாயத்திற்குக் காவிரி மூலம் வேண்டுமளவு தண்ணீர் வருவதற்கு காவிரித் தாயை போற்றுவோம். பல்லாண்டு பாடுவோம்.

  amas32

  Like

  • //காவிரியில் குளித்தால் புண்ணியம் என்று ஒரு ஐப்பசி மாதம்//
   துலா ஸ்நானமோ?:))

   //காவிரிக் கரையில் வளர்ந்தவர்கள் எல்லோரும் கொடுத்து வைத்தவர்கள்//
   Yessu, Even a non-cauvery guy like me, love its sound & flow! so elegant;
   Appa’s transfer in Thanjavur & Trichy – made this possible for the kid ravi to ensoy cauvery:)

   திருவையாறு, பழமர்நேரி, திருக்காட்டுப்பள்ளி, பூண்டி வழியா, ஆத்தோரமாச் செல்லும் சாலை – திருச்சிக்கு!
   சுத்திக்கிட்டு அந்த வழியா போகவே பிடிக்கும்!
   ஆறு ஓடும் ஓசையும், பெளர்ணம் நாளில் அவ மின்னுற மின்னும், காரை நிறுத்திட்டு, ஏறிப் பார்ப்பேன்; பாத்துக்கிட்டே இருப்பேன், அப்பா டேய் சொல்லும் வரை:)

   Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: