காந்திக் கணக்கு!

காந்தியண்ணல் பிறந்தநாள்;
எளிமையாக, வேகமாக… அதற்கொத்த குறட்பாக்களை இன்று காண்போம்!


வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
(இல்வாழ்க்கை – 50)

உலகத்தில் வாழவேண்டிய நெறியில் வாழ்கிறவன், வானுலகில் உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப்படுவான்.

உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ணது உணர்வார்ப் பெறின்.
(புலால் மறுத்தல் – 257)

புலால் என்பது வேறோர் உயிரின் உடற்புண் என்பதை உணர்ந்தோர் அதனை உண்ணாமல் இருக்கவேண்டும்.

நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி.
(கொல்லாமை – 324)

நல்ல வழி என்று அறநூல்களால் சொல்லப்படுவது எது என்றால், எந்த உயிரையும் கொல்லாத நெறியாகும்.

ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்
(தெரிந்து செயல்வகை – 468)

தக்கவழியில் செய்யப்படாத முயற்சி பலர் துணையாக நின்று (அதை முடிக்குமாறு) காத்த போதிலும் குறையாகிவிடும்.

மேலே உள்ள நான்கு குறட்பாக்களும், காந்தியின் சில கொள்கைக்குப் பொருந்தும்!
என்னென்ன கொள்கை-ன்னு தெரிகிறதா?:))

dosa 55/365

Advertisements
Comments
4 Responses to “காந்திக் கணக்கு!”
 1. மகாத்மா காந்தியின் அறிவுரைகள் இன்று பலருக்கு ஏற்புடையதாக இல்லை. திருவள்ளுவர் ரொம்பப் பழமையானவர். அவர் கருத்துக்கள் இன்றும் விரும்பப்பட்டு ஏற்கப்பட்டு வருவது மகிழ்ச்சியே! அதையே தான் காந்தியடிகளும் பாலோ பண்ணினார். சொன்ன விதம் வேறு!

  காலத்திற்கு ஏற்ப எண்ணங்கள் மாறுகின்றன. ஆனாலும் மாறாமல் இருப்பது அறமும், தர்மமும் அதனை அடையும் வழிமுறைகளும்.

  நல்ல நெறிகளை கடைப் பிடித்து வாழ்கின்றவன் தெய்வ நிலையை அடைகின்றான். மனிதருள் மாணிக்கம்!

  சீழும் இரத்தமும் உடைய உயிரை தான் நாம் கொன்று புசிக்கிறோம் என்ற எண்ணம் நம் மனதில் தோன்றி விட்டால் நாம் புலால் உண்ணுவதை நிறுத்தி விடுவோம்.

  மேலும் அந்த உயிரினம் உயிரை விடும்போது அதற்கு ஏற்படும் வலியை நாம் உணர்ந்தோம் என்றால் மிருக வதை குறையும்.

  இன்னொரு உயிரை எடுக்கும் உரிமை நமக்கு இல்லையென்பதை உணர்வதும் நன்னெறியே.

  வடிவேலு சொல்கிறா மாதிரி எதையும் plan பண்ணி பண்ணணம்! அப்படி செய்யாவிட்டால் எத்தனை பேர்களுடைய உதவி இருந்தும் செயல் முற்றுப் பெறாது.

  amas32

  Like

  • //மகாத்மா காந்தியின் அறிவுரைகள் இன்று பலருக்கு ஏற்புடையதாக இல்லை//
   ஐயையோ…ட்விட்டரை வச்சிக்கிட்டு முடிவுக்கு வந்துறாதீக-ம்மா:))

   காந்தியின் பேர் overdose ஆக்கப்பட்டு, வெற்று ஆக்கப்பட்டதால் வந்த விளைவு இது!
   அதனால், காந்தியின் வாழ்விற்கும் சென்று, ஒவ்வொரு கட்டத்தையும் தோய்ச்சித் தொங்கப் போட்டால், எதுவும் மிஞ்சாது தான்:)
   தேசத் தந்தை -ன்னு நேதாஜி ஒப்புக்கு எல்லாம் சொல்லமாட்டாரு; முகத்துதி நேதாஜி அறியாத ஒன்று!

   Thanks for mapping the kuRaLs to Vegeterianism, Non Violence & Means Justifying Ends!:)

   Like

 2. rAguC says:

  இல்வாழ்க்கை – இல்வாழ்க்கையில் காந்தியே நொந்த கொண்ட விடயம் “இத்துணை மக்களை என் வழி படுத்திய என்னால் என் மூத்த மகனை நல் வழி படுத்த முடியலே” என்பது.

  புலால் மறுத்தல் – புலால் மறுப்பை அவர் தன இனம் சார்ந்த வேண்டாத செயலாக வரித்து பின்னர் கொல்லமையோடு தொடர்பு கொண்டு எதிர்த்தார்.

  கொல்லாமை – கொல்லாமையில் காந்தியிடம் இடத்துக்கு தக்க வேறுபாடு இருந்துள்ளது. பிறரை கொல்லக்கூடாது என்றவர் தன்னை கொல்லும் சத்தியாகிரகம் கண்டுபிடித்தார். ஹிட்லருக்கு எதிராக யூதர்கள் என்ன செய்ய வேண்டும் எனும் கேள்விக்கு “கூட்டங்கூட்டமாக தற்கொலை செய்து கொள்ள வேண்டும்” என்றார்

  தெரிந்து செயல்வகை – செயலும் அதனால் வரும் விளைவும் தான் முக்கியம் என்று கருதியிருந்தால் ஒரே ஒரு இடத்தில் அத்து மீறி நடந்த கலவரத்துக்கு ஒட்டுமொத்த தேசத்தின் தியாகத்தை அடகு வைத்து இருக்க மாட்டார்.

  தன் கொள்கைகளில் இத்தனை குறைகள் / ஓட்டைகள் இருந்தாலும் ஒப்புமையில் அவரை விட சிறந்த தன் லெட்சியத்திக்கு வெகு அருகில் நின்ற மனிதர் எவருமில்லை. அதன்னாலே தான் அவர் மகாத்மா எனப்பட்டார். நவகாளியில் ஒற்றை மனிதராய் இவர் செய்து காட்டிய அதிசியம் இனி யாராலும் கூடாத ஒன்று.

  கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே, சங்கு சுட்டாலும் வெண்மை தரும்.

  Like

  • Nice to read your opposite points on Gandhi:)

   //ஹிட்லருக்கு எதிராக யூதர்கள் என்ன செய்ய வேண்டும் எனும் கேள்விக்கு
   “கூட்டங்கூட்டமாக தற்கொலை செய்து கொள்ள வேண்டும்” என்றார்//
   So stupid!

   //நவகாளியில் ஒற்றை மனிதராய் இவர் செய்து காட்டிய அதிசியம் இனி யாராலும் கூடாத ஒன்று//
   Yes, even though his ideals were sometimes stupid
   He had the Truthful Guts to stand behind it; Not like our current hypocrite bagooth-aRivu leaders:(

   Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: