சங்கத் தமிழில் Direct Deduction!

இப்பல்லாம் Direct Deduction, சம்பளத்தில் சர்வ சாதாரணமாகி விட்டது; ஆனா சங்கத் தமிழில்?:)

LIC யா? காப்பீடா? வைப்புத் தொகையா?
= உங்க கிட்ட பணம் வந்து, அப்பாலிக்கா செலுத்தறதெல்லாம் out of fashion!
= நீங்க என்னா செலுத்தறது? ஒங்க சம்பளத்தில் இருந்து நானே எடுத்துக்கிட்டு, அப்பறம் தான் ஒங்களுக்கே தருவேன்:)

இது போல் Direct Deduction சங்கத் தமிழிலும் உண்டு!
* புலவர்கள், பரிசு வாங்கும் இடத்தில், கடன் குடுத்தவர்கள் காத்துக்கிட்டு இருப்பாங்களாம்:)
* கடனை அடைச்சிட்டுத் தான், பரிசிலை வீட்டுக்கே கொண்ட போக முடியும் போல!:)


கொங்கண நாடு = இன்றைக்கு, கோவை-சேலம், கீழ்ப்பகுதி!
“ஆ கெழு கொங்கர்” -ன்னு சங்க இலக்கியம் சிறப்பாகப் பேசும்;
அடிப்படையில் இது சேர நாடு அல்ல; தனி நாடு! பல அரசுகளால் இணைத்து ஆளப்பட்டது;

கொங்கு = தேன்;  கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி ஞாபகம் வருமே?:)
மலைத் தேன் உள்ள நாடு = கொங்கு நாடு!
கொங்கு தமிழும் = தேன் தமிழே! அது ஒரு தனி…தமிழ் வழக்கு!

மேற்குத் தொடர்ச்சி மலை, பாலக்காட்டுக் கணவாயில், போக்குவரத்துக்கு இயைந்து அமைந்துள்ளதால்…
= இதைக் கைப்பற்ற,  சங்க கால அரசர்கள் போட்டா போட்டி!
= அம்புட்டு இயற்கை வளம் + வணிக வளம்!

கொங்கு மன்னவன் = கொண்கானக் கிழான்!
இவன் மூவேந்தர்கள் போல் பெருஞ் செல்வன் இல்ல!
இருப்பினும் பெரிய வள்ளல்! இவனை மோசி கீரனார் பாடும் பாட்டு!

மோசி கீரனார் ஞாபகம் இருக்கா?
அசதியில் முரசு கட்டிலில் தூங்கீருவாரே? அவரைத் தண்டிக்காமல், சேரமான் விசிறி வீசுவானே?:)
அவரே தான்!  அன்று சேரனைப் பாடியது போல், இன்று கொங்கனையும் பாடுறாரு;


பாடல்: புறநானூறு 156
கவிஞர்: மோசிகீரனார்
மன்னன்: கொண்கானங் கிழான்

திணை: பாடாண்
துறை: இயன்மொழி

ஒன்று நன்கு உடைய பிறர் குன்றம்; என்றும்
இரண்டு நன்கு உடைத்தே கொண் பெருங் கானம்;
நச்சிச் சென்ற இரவலர்ச் சுட்டித்
தொடுத்து உணக் கிடப்பினும் கிடக்கும்; அஃதான்று
நிறை அருந் தானை வேந்தரைத்
திறை கொண்டு பெயர்க்கும் செம்மலும் உடைத்தே


காபி உறிஞ்சல்:

ஒன்று நன்கு உடைய பிறர் குன்றம்; என்றும்
இரண்டு நன்கு உடைத்தே கொண் பெருங் கானம்;

மற்ற அரசர்கள் மலையெல்லாம் ஒன்னே ஒன்னு தான்!
ஆனால், உன் மலையோ ரெண்டு! கொங்கு நாட்டு மன்னவா!

நச்சிச் சென்ற இரவலர்ச் சுட்டித்
தொடுத்து உணக் கிடப்பினும் கிடக்கும்; அஃதான்று

ஒரு மலை:
கடன் கொடுத்தவர்களால், முன்பே சென்று… சூழப்பட்டிருக்கும்!
(அவ்வளவு நம்பிக்கை! இந்த வேந்தனிடம் செல்பவன், கட்டாயம் பரிசில் பெறுவான்,
குடுத்த கடனை, பரிசில் பெறும் போதே வாங்கீறலாம்-ன்னு… Direct Deduction:))

நிறை அருந் தானை வேந்தரைத்
திறை கொண்டு பெயர்க்கும் செம்மலும் உடைத்தே

இன்னொரு மலை:
உனக்குத் திறை செலுத்த வரும் சிற்றரசர்களால் சூழப்பட்டு இருக்கும்!
பல படை கொண்ட வேந்தர்கள், அங்கே செல்வத்தோடு சூழ்ந்து இருப்பர்!

* ஒரு பக்கம் = மன்னனின் திறை வந்து கொண்டே இருக்க…
* இன்னொரு பக்கம் = மக்களின் கடன் அடைந்து கொண்டே இருக்கு!

dosa 53/365

Advertisements
Comments
5 Responses to “சங்கத் தமிழில் Direct Deduction!”
 1. வாழ்த்துகள் . :) நான் வெறும் வாசகனே ! தொடர்ந்து எழுதுங்கள் :)

  Like

 2. எங்கேந்து தான் இப்படி படம் பிடித்துப் போடறீங்களோ? :)

  வரவுக்கு வழி இருக்கும் வரை செலவைப் பற்றி கவலை இல்லை. வரிசெலுத்தும் குறுநில மன்னர்கள் அரசனின் பண வரவுக்கு வழி செய்கிறார்கள்.அதன் மூலம் அந்த நாட்டு மக்களுக்கு அதை அளித்து அவர்களின் கடன் சுமையை தீர்ப்பதாக மோசிகீரனார் கூறுகிறார். ஏன் அந்நாட்டு மக்களுக்குக் கடன் சுமை வருகிறது?

  மற்ற அரசர்களுக்கு எல்லாம் ஒரு மலை தான். உமக்கு மட்டும் இரண்டு மலைகள் என்கிறாரே புலவர். அப்படியானால் மற்ற அரசர்களின் செலவுக்கு மக்களிடம் இருந்தே வரி வசூலிக்கப் படுமா? அந்நாட்டு மக்களின் கடன் தீராதா?

  புலவர்கள் என்றாலே அந்த காலத்தில் அரசர்களைப் புகழ்ந்து (இன்று CM) பரிசில் பெறுவதற்கு கொஞ்சம் அதிகப்படி புகழ்ச்சி இருக்கும். அவ்வாறு இவர் சொல்வதாகவும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இவர் கூறுவதில் உண்மைக்கு புறம்பாக எதுவுமில்லை.

  amas32

  Like

  • I like pictures:) & draw too:)

   இங்கே இரு மலைகள் என்பது சும்மா ஒரு உருவகம் தாம்மா!
   இரண்டு வெவ்வேறு நிலைகளைக் காட்ட!

   அரசர்கள் எப்படி திறை செலுத்துவாங்க? = அவங்க நாட்டு மக்களின் வரிப் பணத்தில் தான்!
   Though sad, Itz the harsh truth, like food cycle in a forest!
   அதான் அரசன் நல்லவனாக மட்டும் இல்லாமல், வல்லவனாகவும் இருக்கணும்-ங்கிறது!
   தர்ம நெறிகள் கொண்ட இந்தியா = நல்லரசு மட்டுமில்லாமல், வல்லரசு என்று அப்துல் கலாம் சொன்னதும் இதை ஒட்டியே!

   Like

 3. அன்பின் கேயாரெஸ் – ஒரு பக்கம் கப்பம் கட்டும் குறு நில மன்னரகள் – மறு பக்கம் கடனை வசூல் செய்ய வந்திருப்பவர்கள். இம்மன்னனைக் காண வரும் புலவர்களை வெறும் கையோடு அனுப்பமாட்டான் என்பதனால் – அப்புலவர்களூம் நம்பி இவனிடம் வருகிறார்கள். அப்புலவர்களுக்குக் கடன் கொடுத்தவ்ர்களும் நிச்சயம் அப்புலவர்கள் பரிசு பெறுவார்கள் என நம்பி – கடன் வசூலிக்க வருகிறார்கள். நன்று நன்று – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

  Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: