அயிரை இட்டு வரால் வாங்கு!

வாங்க, இன்னிக்கு Sooper பழமொழி ஒன்னு சுருக்கமாப் பாக்கலாம்!
அயிரை இட்டு வரால் வாங்கு!

என்னய்யா? கோயில் அய்யிரு – அவரை என்ன பண்ணச் சொல்லுறாங்க?:)
* அயிரை = அயிரை மீன்
* வரால் = வரால் மீன்
அயிரை மீன் கொழம்பு, செம ருசி:) புரட்டாசி மாசம் அதுவுமா, இப்பிடியொரு பதிவு தேவையா?:))


அயிரை = குறு மீன்; வரால்= பெரு மீன்!
ரெண்டுமே நன்னீர் மீன் தான்; உப்புத் தண்ணி இல்ல!

அயிரை:
ஆற்று மீன்! குளத்து மீன் = ரொம்பப் பொடிசு!
மூர்த்தி சிறிதானாலும், கீர்த்தி பெரிது:)

ரொம்ப மெனக்கெட வேணாம்; மேலாக்க உப்பு போட்டு ஒரே தேய்ப்புல சுத்தம் பண்ணீறலாம்!
அயிரை மீன் = தமிழ் இலக்கியத்தில் Most Favorite மீன்;
கபிலர், பரணர், பிசிராந்தையார் -ன்னு பலர் பாடியிருக்காங்க இந்த மீனை! கோதை, ஆண்டாளும் பாடி இருக்கா:)

வரால்:
இதுவும் ஆறு-குளம் தான்! (Freshwater, Not sea fish)
விரால் மீன்-ன்னும் செல்லுவாங்க; நல்லாக் கொழு கொழு-ன்னு இருக்கும்:)

கெண்டை மீன் போலத் தான், ஆனா முள்ளு கம்மி!
அம்மா, இதை அரியும் போது தான், எனக்குக் கோவம் வந்து, சைவமா மாறத் தோனுச்சோ?:)

கிராமத்தில், மீன் ஆய-ன்னே தனி அரிவாள்மனை உண்டு!
வரால் மீன், பிடி குடுக்காது, துள்ளி நழுவும்
= ஓங்கு பெரும் செந்நெல் ஊடு கயல் “உகள” ன்னு திருப்பாவை!
“உகளுதல்” = இந்த மீனை ஆயும் போது பாக்கணுமே! யம்மா! அப்படியொரு துள்ளல்!
வண்ணமா, காய்கறி மாதிரி ஆய முடியாது; கால் நீட்டிக்கிட்டு ஆய்வாங்க அம்மா!

இந்த மீன் உகளுறதைப் பாத்துத் தான், என் நெஞ்சுக்குள்ள “சைவம்” வந்து உக்காந்துக்கிச்சோ?
பிற்பாடு சென்னை வந்ததும், Jain Vidyalaya;
சமணப் பள்ளிக்கூடம்; டீச்சரால் மொத்தமே மாறிப் போனேன்!
= பதினெட்டு வருசத் தவம்!
உயிர் நண்பன் Paris-ல வச்சி என்னைக் கெடுத்தான்:) மீண்டும் அசைவமா ஆயாச்சு:) முருகா!


பாடல்: பழமொழி நானூறு  (பதினெண் கீழ்க் கணக்கு)
கவிஞர்: முன்றுரை அரையனார் (முன் துறை; துறை = தண்ணித் துறை)

சிறியபொருள் கொடுத்துச் செய்த வினையால்,
பெரியபொருள் கருதுவாரே -விரி பூ
விராஅம் புனல் ஊர, வேண்டு அயிரை இட்டு,
வராஅஅல் வாங்குபவர்
= அதிகாரம்: ஈகை, பாடல்: 372

பழமொழி: அயிரை இட்டு வரால் வாங்கு!
(சின்ன மீனைப் போட்டு, பெரிய மீனைப் பிடி)


காபி உறிஞ்சல்:

சிறியபொருள் கொடுத்துச் செய்த வினையால்,
பெரியபொருள் கருதுவாரே

சின்ன பொருளை ஒருவர்க்கு கொடுத்தாலும், அந்த நல்வினையால்
பெரிய பொருள் நம்மை… தானே தேடி வரும்!
இம்மையில் = சிறு பொருள் கொடுத்தல்; மறுமையில் = பெரும் பொருள் கிடைத்தல்!

பொருள் = காசு/பணமே இல்ல!
கல்வி, செல்வம், வீரம், குணம், உடல் நலம் = எல்லாமே பொருள் தான்!
அருளும் = பொருளே! முருகப் பொருள்!

அருஞ் சொற் பொருள்  = அருஞ் சொல் காசா?:)
* சொல்லை விளங்கச் செய்வது = சொற் பொருள்!
* வாழ்வை விளங்கச் செய்வது = பொருள்
பொருள் அல்லவரைப் பொருளாகச் செய்யும், பொருள் அல்லது இல்லை, பொருள்!

விரி பூ, விராஅம் புனல் ஊர,
வேண்டு அயிரை இட்டு, வராஅஅல் வாங்குபவர்

விரிந்த பூக்கள், விராவிப் பரந்திருக்கும் புனல் ஊரனே = குள நாடனே!
* சிறிய – அயிரை மீனைத் தூண்டிலில் இட்டு
* பெரிய – வரால் மீனை இழுப்பாங்களே, உன் குளத்தில்…

அது போல… அல்லல் படுவார்க்குச், சிறு பொருளாச்சும் ஈகை செய்தால்
= அருள் என்னும் பெரும் பொருள் கிட்டும்!

காசு தான் -ன்னு இல்ல!
மனசால் அழும் ஒரு உள்ளத்துக்கு = என்ன-மா? ன்னு பரிவை ஈவதும், ஈகையே!

dosa 52/365

Advertisements
Comments
9 Responses to “அயிரை இட்டு வரால் வாங்கு!”
 1. மைக்கேல் மதன காம ராஜன் படத்தில் கமல், டெல்லி கணேஷ், குண்டு கல்யாணம் ஆகியோருடன் திருமண விருந்து காட்சியில் வந்த ஒரு மீன் ஜோக் தான் நினைவுக்கு வருகிறது. அதிலும் சின்ன மீனை போட்டு தாங்காணும் பெரிய மீனை பிடிக்கணம் என்று குண்டு கல்யாணம் தன் நண்பரிடம் சொல்வார். பொதுவாக அந்த பொருளில் தான் இந்த பழமொழி வழக்கில் இருந்து வருகிறது.

  எது சிறிய, எது பெரிய என்ற உங்கள் விளக்கம் நன்றாக உள்ளது. மீன் வீட்டிற்கு வாங்கி வந்த பிறகும் துள்ளுமா?

  என் தந்தை அசக்தமாக படுத்த படுக்கையாக இருந்த போதிலும் மற்றவர்களின் பிரச்சினைகளுக்காக பிரார்த்தனை பண்ணுவார். அவரால் முடிந்த ஒன்று அது. பணம் காசினாலோ அல்லது உடல் உழைப்பாலோ செய்த உதவி இல்லை. மனதால் இருந்த இடத்தில் இருந்து செய்த ஒரு சிறிய நற்செயல். சில சமயம் ஒரு புன் சிரிப்பு போதும் ஒருவரை ஆறுதல் படுத்த. சிறிய செய்கைகளுக்குப் பெரிய தாக்கத்தை உண்டு பண்ணக் கூடிய சக்தி உள்ளது.

  அந்த சிறிய செய்கைக்கு மூலம் அன்பு! அன்புடன் செய்யப்படும் எந்த செயலும் நமக்கு அருளை பெரும் அளவில் தேடித் தரும் :-)

  amas32

  Like

  • //மைக்கேல் மதன காம ராஜன் படத்தில் – சின்ன மீனை போட்டு தாங்காணும் பெரிய மீனை பிடிக்கணம்//
   Sooper Comedy; Sooper Dialogues;
   Dank u for reminding it here!:)

   //மீன் வீட்டிற்கு வாங்கி வந்த பிறகும் துள்ளுமா?//
   பெரிய மீன்கள், உடனே சாவதில்லை…
   சந்தையில் தண்ணி/Ice-இல் வச்சிருப்பாங்க, for freshness! அதனால் வீடு வரை தாளும்! அப்போ துள்ளும்! Sorry ma, bit embarrassing for few hearts:)

   //என் தந்தை அசக்தமாக படுத்த படுக்கையாக இருந்த போதிலும் மற்றவர்களின் பிரச்சினைகளுக்காக பிரார்த்தனை பண்ணுவார். அவரால் முடிந்த ஒன்று அது//
   Wow!
   நம் பிரச்சனைகளுக்கு இடையே, பிறர்க்கும் மனசைக் குடுப்பது… அதுவும் அந்த வயதில் = நன்று, நன்று, நன்று!

   Like

 2. அன்பின் கேயாரெஸ் – அயிரை – வரால் – பற்றிய பாடலுக்கு விளக்கம் அருமை . எல்லாத்துக்கும் படம் தேடிப் பிடிச்சுப் போடறது நன்று. நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

  Like

 3. psankar says:

  தீமை என்று தெரிந்த பின்னும் ஏன் தொடர வேண்டும் ? ஊன் சாப்பிடுவதை விட்டு விடலாமே ?

  Like

  • “தீமை” is a big word yaa:)
   வள்ளுவரும்/ வள்ளலாரும் அப்படித் தான் சொல்லுவாங்க:) But I dont think so:)
   Agreed itz உயிர்க் கருணை, but non conformance is not a big sin!

   நடுவால பல வருசம் சாப்புடாமத் தானே இருந்தேன்;
   எப்படியோ, மீண்டும் பழக்கம் ஏற்பட்டுப் போச்சு:) Lemme contribute to food cycle on the planet:))

   Like

   • psankar says:

    Usually for others I won’t advice vegetarianism (or any of my policies). But I will take an exception in your case ;-)

    It is a big big big big big theemai. It is bigger than theendaamai imho. It is bigger than sathi. It is bigger than drug mafia. [Big = Big in terms of theemai]

    Unless you are buying from a small farmer who grows the animals for meat, with sufficient space for them, it is an unpardonable sin. You do not contribute to the food cycle on the planet but you are unnecessarily making few lives suffer in unhospitable conditions.

    http://www.meat.org/index-1.asp?c=mymbagnn0708 see this video.

    You can eat meat for any reason you like, but do not justify it as not a big sin, because it is, at least in the west , where meat is made as an industrial product and not as a life. I bet that you will agree to me if you see that video.

    Like

    • முருகா,
     I will not see this video:) I will change, if I see “suffering” in any form!

     ஆனாலும், இனி திங்குறேன்-ன்னு செஞ்சு குடுத்த சத்தியம் இருக்கே:)
     அதனால் வரும் பழி பாவங்கள் எல்லாம் என்னையே சேரட்டும்:))
     என் தலை வைத்து, உன் இணையடி காக்க! என்னுயிர்க்கு உயிராம் இறைவன் காக்க!:)

     Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: