DBA கனவுக் கன்னி (திரிசடை Appraisal)

கம்ப இராமாயணத்தில் அதிகம் தெரியாத / தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட பாத்திரங்களைப் பார்த்தபடி வருகிறோம்!
#kamban52 series – கைகேயி, கும்பகருணன், மண்டோதரி…
அந்த வழியில் இன்னிக்கி = திரிசடை! (நண்பர் @MGRavikumar வேண்டுகோளின் படி)

திரிசடை = வீடணன் &  சரமைக்குப் பிறந்த மகள்!
இவள் காவியத்தில் வருவது = சொற்ப இடங்களில் தான்!
ஆனால் அவையெல்லாம், மிக முக்கியமான கட்டங்கள்! = உயிரளிக்கும் கட்டங்கள்!

* திரிசடை = வில்வம் -ன்னு பொருள்! (வடமொழியில்);
* தமிழில்   = கூவிளம்!
வில்வக் கொத்து, எப்பமே மூனு மூனாத் தான் இருக்கும் = திரி + சடை!

வில்வம் = ஈசன் சிவபெருமானுக்கு மிகவும் உரியது!
அவர் திரி-சூலமே, திரி-சடை ஆனது -ன்னு கதை சொல்வோர் உண்டு!
அன்னை திருமகளுக்கும் மிகவும் உரியது = வில்வம்!
“ஓம் வில்வ தள வாசின்யை நம” -ன்னு வில்வ அர்ச்சனையே பெருமாள் கோயில் தாயார் சன்னிதியில் உண்டு!

வீடணன், இராவணனைப் போலவே, பெரும் சிவபக்தன்!
அதான், தன் ஒரே பெண்ணுக்கும்…
ஈசனுக்குப் பிரியமானதையே பேராக வைத்தான் போலும்! Letz goto the Appraisal!:)


பாரு உன் அத்தானை…

இராகவனைப் பாத்த அவளுக்கு…
இராகவனைப் பாத்த அவளுக்கு…
அவ்ளோ தான், நெஞ்சே வெடித்து விட்டது அவளுக்கு!

அடித்தாள் முலைமேல்; வயிறு அலைத்தாள்;
அழுதாள்; தொழுதாள்; அனல் வீழ்ந்த
கொடித்தான் என்ன, மெய் சுருண்டாள்;
கொதித்தாள்; பதைத்தாள்; குலைவுற்றாள்;
துடித்தாள்; மின்போல்; உயிர் கரப்பச்
சோர்ந்தாள், சுழன்றாள்; துள்ளினாள்
குடித்தாள் துயரை, உயிரோடும்
குழைத்தாள்; உழைத்தாள் குயில் அன்னாள்
யுத்த காண்டம் – சீதை களம் காண் படலம் (8811)

துயரைக் குடிச்சாளாம்!
துன்பத்தில், உயிரைக் குழைச்சிக் குழைச்சிக் குடிச்சாளாம்! ஆகா! டேய் கம்பா!:)

கொடியாய் விதியே விளையா டுதியோ?
முடியாய் நமனே! முறையோ? முறையோ?
விடியா இருள்வாய் எனை வீசினையே!
அடியேன் உயிரே அருள் நாயகனே…(8815)

அப்படியே அருணகிரி பாடும் கந்தர் அனுபூதி போலவே இல்ல? = குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!
அவ அனுபூதி! = இராகவனை அடைவது தானே!
விமானத்தில் இருந்து குதிக்க முயலும் போது, திரிசடையே தடுக்கிறாள்!


வெளியாட்களுக்கு, Data குடுப்பது = Data Fraud, அல்லவா?
ஆமாம்!  தப்பு தான்;
ஆனாலும், தன் பெரியப்பாவை, எங்கும் இழித்தோ, பழித்தோ பேசாதவள் திரிசடை!

இராவணன் உயிர் போன்ற Critical Data-வைக் கொடுக்காமல்,
சீதை உயிர் காக்க, எவ்வளவு Information தேவையோ..
அதை மட்டுமே where clause போட்டுச் சொல்லும் Lady Database Admin = திரிசடை!:)

உயிர் காப்பான் தோழன் – உயிர் காப்பாள் தோழி;
தற்கொலையிலும், கூடவே இருந்து காப்பாற்றியதால் தான்…

அன்னை நீ உரைத்தது ஒன்றும் அழிந்திலது, ஆதலானே
உன்னையே தெய்வமாக் கொண்டு, இத்தனைக் காலம் உய்ந்தேன்

என்று உலக அன்னையே, இன்னொரு பொண்ணைப் பார்த்து, “அன்னையே” என்கிறாள்!

இலங்கையில் இருந்து Flight Pushpak அயோத்திக்குக் கிளம்புகிறது…..
அப்போ மறக்காம திரிசடையை அழைத்து… சீதை சொல்கிறாள்:

வணங்கு நுண் இடைத் திரிசடை வணங்க, வான் கற்பிற்கு
இணங்கர் இன்மையாள் நோக்கி, ‘ஓர் இடர் இன்றி இலங்கைக்கு
அணங்கு தான் என இருத்தி‘ என்று, ஐயன் மாட்டு அணைந்தாள்!
(மீட்சிப் படலம்: 10243)

“இலங்கைக்குக் காவல் பெண் தெய்வமாய், என்றும் இரு!”
= இவளே திரிசடை!
ஈசன் சிவபெருமானின் வில்வ தள வாசினி = திரிசடை, வாழி!

dosa 51/365 kamban 8/52

Advertisements
Comments
3 Responses to “DBA கனவுக் கன்னி (திரிசடை Appraisal)”
 1. அன்பின் கேயாரெஸ் – திரிசடையைப் பற்றிய அழகான அறிமுகம் – அதிகம் பேசப்படாத பாத்திரமானாலும் – திரிசடையின் செயல்கள் பாராட்டத் தக்கவை. சீதைக்குத் தோழியாக இருந்தவர். இலங்கையின் காவல் தெய்வமாய் இரு என் சீதையால் வாழ்த்தப் பட்டவள் – நல்லதொரு பாத்திரப் படைப்பு. நல்வாழ்த்துக்ள் கேயாரெஸ் – நட்புடன் சீனா.

  Like

 2. கொடிய அரக்கியர் சூழ மருண்ட மான் போல அசோக வனத்தில் இருந்த சீதைக்கு, உற்ற தோழி திரிசடை. இராவணன் வைத்த காவலாளி தான் ஆனால் அவள் அதற்கு மேலும்! She was like an invisible shield giving Seetha the required protection.

  திரிசடை மட்டும் இல்லை என்றால் சீதை அசோக வனத்தில் உயிருடன் இருந்திருக்கமாட்டாள். தற்கொலையில் இருந்து ஒரு முறை காக்கிறாள் ஆனால் பலமுறை அவளுக்கு மன தைரியம் அளித்து இராமன் வந்து அவளை மீட்டுச் செல்லும் வரையில் எந்த வகையிலும் மனம் தளர்ந்து விடாமல் பாதுக்காகிறாள்.

  //அன்னை நீ உரைத்தது ஒன்றும் அழிந்திலது, ஆதலானே
  உன்னையே தெய்வமாக் கொண்டு, இத்தனைக் காலம் உய்ந்தேன்//

  தாயாருக்கே தாயாராக இருக்கும் பெருமை திரிசடைக்கு, அதனால் தான் சீதை இலங்கையை விட்டு கிளம்பும் பொழுது அவளை இலங்கையின் காதல் தெய்வமாக இருத்தி விட்டுப் போகிறாள்.

  வீடணன் போல நன்நெஞ்சை உடையவள் திரிசடை. இராவணன் அவளுக்கு உரிய மரியாதையை அளிக்காவிட்டாலும் சீதாராமன் அருளால் அவள் தந்தை அரியணை ஏறி முடிவில் அவள் official அரசகுமாரியும் ஆகிறாள்.

  இலக்குமியின் அவதாரமே சீதை. அவளுக்கு உகந்த வில்வமே திரிசடையாக, அசோகவனத்தில் அவளுக்குத் துணையாகவும் இருந்திருக்கிறாள்!

  amas32

  Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: