மலை-படு-கடாம்-கச்சேரி

வாங்க, இன்னிக்கி, 10 இசைக் கருவிகளை வேகமாப் பார்ப்போம்! இளையராஜா கச்சேரியில், வெறும் keyboardஆ இல்லாம, பலப்பல இசைக் கருவிகளைப் பார்ப்போம்-ல்ல? அது போல ஒரு மகிழ்வு!:)

பத்துப் பாட்டுள், “மலைபடுகடாம்” என்னும் நூல் மிக்க அழகு!
இதுவும் ஆற்றுப்படை நூல் தான்! = கூத்தர் ஆற்றுப்படை -ன்னு சொல்லுவாய்ங்க!

நாம் முன்பே முருகாற்றில் பார்த்தது போல…
“இந்த வழியில் சென்று, இன்னாரிடம் திறமை காட்டினால், இன்னின்னது பெறலாம் -ன்னு ஆற்றுப்படுத்தல்”; ஆற்றுப்படை = Referral;

ஆறு = வழி! eg: எவ்வாறு வந்தாய்? = எவ்வழியில் வந்தாய்?
கூத்தர்களை ஆற்றுப்படுத்தல் = கூத்தர் ஆற்றுப்படை!

* பாட்டை இயற்றுபவர் = கவிஞர்; (eg: கண்ணதாசன்)
* பாட்டுக்கு இசை கூட்டி/பாடுபவர் = பாணர்/பாடினி (எம்.எஸ்.வி/ Susheelamma)
* ஆடுபவர் = விறலி (பத்மினி/சிவாஜி)
* பாடிக்கிட்டே ஆடுபவர் = கூத்தர் (Drama போல) eg: என்.எஸ்.கே

“மலை படு கடாம் மாதிரத்து இயம்ப” என்ற வரிகள், ஊடால வருவதால், நூலுக்கும் “மலைபடுகடாம்” என்ற சொல்லாட்சியே பிரபலம் ஆகி விட்டது!

* மலை படு கடாம் = மலையில் எழும் ஓசைகள்!
* கடாம் = யானையின் மதநீரும் கூட!
* அது மலையில் அருவி போல் கொட்டுதாம்; அந்த ஓசையும் இன்ன பிற ஓசைகளும் = மலை + படு + கடாம்!

மலை-படு-கடாம் = “ப்” வராது
மலையில் படும் கடாம் = 5ஆம் வேற்றுமைத் தொகை; வலி மிகாது!

இந்த மலை = நவிர மலை!
மன்னன் = நன்னன் = வேளிர் குடி!
பல்குன்றக் கோட்டம் -ன்னு சொல்லுவாங்க; இன்றைய திருப்பதியும் இதுல அடங்கும்!
இவனோட நகர், செங்கண்மா = இன்னிக்கி “செங்கம்” -ன்னு வழக்கு; எங்கூரு திருவண்ணாமலை பக்கம்!

கூத்தர்கள் கெளம்பிட்டாய்ங்க;
வாத்தியக் கருவிகளை பொட்டி கட்டுறாங்க! வாங்க, பொட்டிக்குள்ளாற எட்டிப் பார்ப்போம்!


நூல்: மலைபடுகடாம்
கவிஞர்: பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார்

திருமழை தலைஇய, இருள் நிற விசும்பின்
விண் அதிர் இமிழ் இசை கடுப்பப், பண் அமைத்துத்
திண்வார் விசித்த முழவோடு ஆகுளி
நுண் உருக்கு உற்ற விளங்கு அடர்ப் பாண்டில்

மின்னிரும் பீலி, அணித்தழைக் கோட்டொடு
கண்ணிடை விடுத்த, களிற்று உயிர்த் தூம்பின்
இளிப்பயிர் இமிரும் குறும்பரந் தூம்பொடு
விளிப்பது கவரும் தீங்குழல் துதைஇ

நடுவு நின்று இசைக்கும் அரிக்குரல் தட்டை
கடிகவர் பொலிக்கும் வல்வாய் எல்லரி
நொடிதரு பாணிய பதலையும் பிறவும் (1 – 11)


காபி உறிஞ்சல்:

திருமழை தலைஇய, இருள் நிற விசும்பின்
விண்ணதிர் இமிழ் இசை கடுப்பப், பண் அமைத்துத்

மழை முட்டிக்கிட்டு இருக்கும், இருட்டான வானம்!
வானமே அதிரும் இயற்கை இசை; அந்த இசை போதாது -ன்னு இவர்களும் பண் அமைத்துக் கிளம்பிட்டாங்க!
(முன்னாடியே home work செஞ்சிக்கிறாங்க பாருங்க; என்ன பண், என்ன பாடலாம்-ன்னு)

திண்வார் விசித்த முழவோடு ஆகுளி
நுண் உருக்கு உற்ற விளங்கு அடர்ப் பாண்டில்

* வார் இழுத்து நல்லாக் கட்டிய = முழவு & ஆகுளி = தோல் கருவி!
* நல்லா உருக்கிச் செஞ்ச பளபள = பாண்டில் = தாளம்!

மின் இரும் பீலி அணித்தழைக் கோட்டொடு
கண்ணிடை விடுத்த, களிற்று உயிர்த் தூம்பின்

* ஒளிமிக்கது + பறவை இறகு கட்டிய = கோடு = கொம்புக் கருவி!
* துளை/கண்ணு இடையிடையே விட்ட = தூம்பு
யானைத் துதிக்கை போல் இருக்காம் (கேரளா வாத்தியமோ?:)

இளிப்பு அயிர் இமிரும், குறும் பரந் தூம்பொடு
விளிப்பது கவரும், தீங்குழல் துதைஇ

இளிப்பு = இனிமை; அயிர் = நுண்ணிய
* குறும் தூம்பு =Trumpet
* நம்மை அழைப்பது போல் இனிய = புல்லாங்குழல்

புல் + அம் + குழல் = மூங்கில் இனம் ஒரு வகைப் புல் தான்! (weed-grass)
புல்லில், அழகிய, ஒலி = புல் + அம் + குழல்

நடுவு நின்று இசைக்கும் அரிக்குரல் தட்டை
கடிகவர் பொலிக்கும் வல்வாய் எல்லரி
நொடிதரு பாணிய பதலையும் பிறவும்

* நடுவால நின்னு வாசிக்கும் அரி & தட்டை = Percussion Beat
* மிக்க ஓசை (வல்வாய்…, நாதசுரம் போல) = எல்லரி
* நொடிப்பொழுதும் விலகாத Constant background beat (தம்பூரா போல) = பதலை 
இத்தனை கருவிகளையும் மூட்டை கட்டிக்கிட்டு, நன்னனைப் பாக்க கிளம்பிட்டாங்க டோய்!


For easy summary:

1. முழவு = Big Drum
2. ஆகுளி = Small Drum
3. பாண்டில் = thaaLam
4. கோடு = pipe
5. தூம்பு = curved pipe

6. குறுந் தூம்பு = mini trumpet
7. குழல் = flute
8. தட்டை = beat
9. எல்லரி = big pipe
10. பதலை = const beat mini drum

dosa 49/365

Advertisements
Comments
15 Responses to “மலை-படு-கடாம்-கச்சேரி”
 1. cheenakay says:

  அன்பின் கேயாரெஸ் – மலைபடுகடாம் அருமை – பகிர்வினிற்கு நன்றி -தேடிப்பிடித்து – பாடல்களூம் – பொருளும் – படஙகளும் நகைச்சுவையோடு தருவது நன்று. நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

  Like

 2. Siva Ananthan says:

  Dear KRS,

  I would just like to let you know that I have started following your blog and enjoy it immensely. However, I am not making any comments because I am unable to keep up with your daily posts! The additional benefit of this is that I am able to read the comments of others as well. I am taking my own time and reading from the begining – still have not finished August yet!.

  Once again, many thanks for your services to Tamil. I like your impartiality towards religions. Your blog will benefit scores of people in years to come.

  Best wishes, Ananthan.

  ________________________________

  Like

  • சொ.வினைதீர்த்தான் says:

   திருவாளர்கள் சீனா,ஆனந்தன் கருத்துக்கள் எனது எண்ணமும் ஆகும்.
   தெளிவான பதிவுகள்.
   அன்புடன்
   சொ.வினைதீர்த்தான்.

   Like

  • Welcome back, Siva:)
   பயணம் எப்படி இருந்துச்சி?

   //The additional benefit of this is that I am able to read the comments of others as well//
   தோடா, இப்படிச் சொல்லிட்டு esc ஆயீறலாம்-ன்னு பாத்தீகளா?:)
   Others also have to say the same naa? So take turns for this:)

   //I like your impartiality towards religions//
   :)) முருகா!

   What is your like, is somebody else’s dislike on me:)
   Thatz ok; முருகனே ஆனாலும், தமிழ் என்று வந்தால், அவன் பின்னுக்குத் தள்ளப்படுவான்:) மனிதமும்-தமிழுமே முந்தி இருக்கும்!

   நன்றி சிவா, உங்கள் புரிதலுக்கு!
   இந்தத் தளமும், தமிழுக்கு இசைபட இருக்குமாறு நடந்து கொள்ள, இயன்றவரை முயல்கிறேன்; உங்கள் ஆலோசனைகளையும் தயங்காது தாருங்கள்!

   Like

 3. ranjani135 says:

  அன்புள்ள ரவி,
  இன்றைய பதிவில் உங்கள் எழுத்துடன் இசை வாத்தியங்களும் முழங்கியது அசத்தல்!
  பாராட்டுக்கள்!

  Like

 4. கீச்சர்க்களுக்காக தெரிவு செய்து ஆக்கமும் பெற்ற இந்த பதிவுகள், பொதுவாக்கப்பட்டவை போல அனைத்து தரப்பு மக்களையும், தமிழ் ஆர்வலர்களையும் தம் பக்கம் கவர்ந்திழுத்திகொண்டிருக்கிறது

  நீரும் எழுதிக்கொண்டிரும்.

  நல்ல செய்தி வரும்.

  Like

 5. //திருமழை தலைஇய, இருள் நிற விசும்பின்
  விண்ணதிர் இமிழ் இசை கடுப்பப் //
  இது ஒரு நல்ல ரம்மியமான சூழல் :-) இந்த சமயத்தில் ஒரு orchestra கிளம்புகிறது வேறு ஒரு இடத்துக்கு சென்று இன்னிசை முழங்க.

  percussion instruments களுக்கு இவ்வளவு பெயர்களா? முழவு, ஆகுளி, பாண்டில், தட்டை, பதலை…. ஒன்றோன்றும் வெவ்வேறு விதமான தாளக் கருவிகள்! வித விதமான ஒலிகளை எழுப்ப வல்லவை.

  கோடு, தூம்பு, குறுந் தூம்பு, குழல், இவை எல்லாம் காற்றுக் கருவிகள். இனிமையான இசையை செவி குளிர கேட்டு மகிழலாம்.

  எல்லரி என்பது mouth organ மாதிரியா?

  இந்த இசைக் கருவிகளின் பெயர் பட்டியலை இந்தப் பாடலில் படிக்கும் பொழுது ஒவ்வொரு கருவியும் ஒரு சிறிய கார்ட்டூனை நினைவு படுத்துகிறது. கை கால் முளைத்த இசைக் கருவிகள் அணிவகுத்து நின்று இசை உண்டாக்கி மகிழ்விவிப்பது போல் என் மனக் கண்ணில் தெரிகிறது :-)

  இந்த இசைக் கருவிகளை எடுத்து அதற்கேற்ற பெட்டகத்தில் வைத்து கிளம்ப ஆயத்தம் ஆவதும் ஒரு அழகே! அரசனுக்கு முன் வாசித்து அவனை மகிழ்வித்து பின் அவன் இந்த இசை வல்லுனர்களை மகிழ்விப்பானாக!

  amas32

  Like

  • //ஒவ்வொரு கருவியும் ஒரு சிறிய கார்ட்டூனை நினைவு படுத்துகிறது. கை கால் முளைத்த இசைக் கருவிகள்//
   I like this imagination ma! Kudos to you!
   Musical Instruments have life; They aren’t just non living objects;
   உயிருள்ள வீணையே, உயிருள்ள இசை தரும்!

   Like

 6. devarajan97 says:

  கடினமான நுட்பமான பகுதியையும்
  சுவைபட விவரித்துள்ளீர்கள்,
  வாழ்க

  Like

  • நன்றி தேவ் ஐயா!
   இந்த வலைப்பூவைப் பாதியிலேயே நிறுத்தி விட்டேன் – தமிழின் தனித்தன்மையை விரும்பாத சிலரின் கும்மியால்!:(

   Like

   • தேவ் says:

    ஒரு சிலர் கும்மியடிப்பதால் ஒரு மொழியின் தனித்தன்மை
    பாழ்படுமா ! சங்க இலக்கியமும், நெஞ்சையள்ளும் சிலம்பும்
    மட்டுமே போதுமானவை தமிழ் வளம் கூறுவதற்கு. சில
    எளிய நுடிகளின் தொடர்ச்சியான பயன்பாடு வியப்பூட்டுகிறது

    Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: