காதல் நெல்லிக்காய்

அஞ்சாம் வகுப்பில்…
எப்படா, Interval வரும், வெளியே தள்ளு வண்டியில் வாங்கித் திங்கலாம் போல் இருக்கும்!

உப்பும் காரமும் தூவிய மாங்காய்க் கூர்த் துண்டு, வெள்ளரிக்கா, கொடுக்கலிக்கா,
நெல்லிக்காய், வள்ளிக் கிழங்கு, எலந்தைப் பழம், தேன் மிட்டாய், சவ்வு மிட்டாய்….
haiyo, இப்போ இந்த இயற்கைத் தீனிகள் போய், kurkure விக்குறானுங்களோ? Damn that FDI:)

நெல்லிக்காய் ஒங்களுக்குப் புடிக்குமா?
= அதுவும் அரை நெல்லிக்காய் ? (அருநெல்லி)

* வாங்கித் தின்ற நெல்லி, Lunch வரை, நாக்குலயே பட்டுப் பட்டுப் புளிக்கும்;
* கொஞ்சம் போல Water Bottle தண்ணி குடிச்சா, அந்தப் புளிப்பே, தொண்டைல இனிப்பாய் எறங்கும்:)
* இந்தச் சுவைமிகு அனுபவம் உங்களுக்கு ஏற்பட்டு இருக்கா?

= அப்படீன்னா நீங்க காதலில் விழுந்தவர்:))
காதலுக்கும் நெல்லிக்காய்க்கும் என்னய்யா சம்மந்தம்? பார்க்கலாமா?


நூல்: குறுந்தொகை (317)
கவிஞர்: மதுரைக் கண்டரதத்தன்
திணை: குறிஞ்சி
துறை: பிரிவிடை, தலைவியைத் தோழி வற்புறுத்தியது

புரி மட மரையான், கருநரை நல் ஏறு
தீம் புளி நெல்லி மாந்தி, அயலது
தேம் பாய் மா மலர் நடுங்க, வெய்து உயிர்த்து,
ஓங்கு மலைப் பைஞ் சுனை, பருகும் நாடன்

நம்மை விட்டு அமையுமோ? மற்றே-கைம்மிக
வட புல வாடைக்கு அழி மழை
தென் புலம் படரும் தண் பனி நாளே?


காபி உறிஞ்சல்:

புரி மட மரையான், கருநரை நல் ஏறு
தீம் புளி நெல்லி மாந்தி, அயலது

மரை ஆன் = மலை ஆடு
சற்றே நாணம் உள்ளது; கருப்பும்-நரையும் கலந்த ஆண் ஆடு!
அது, செடியில், தீம்+புளி (இனிப்பு + புளிப்பு) நெல்லிக்காயைத் தின்று…

தேம் பாய் மா மலர் நடுங்க, வெய்து உயிர்த்து,
ஓங்கு மலைப் பைஞ் சுனை, பருகும் நாடன்

தின்ற புளிச் சுவை தொண்டைக்குள்; முடியாம வெப்ப மூச்சு விடுது!
அருகில், தேனுள்ள மலர்கள் எல்லாம் நடுங்குகின்றன!
சுனையில், இலை-தழையெல்லாம் மூச்சுக் காற்று பட்டு விலக, தண்ணி குடிக்குது;
குடிச்ச பிறகோ, நெல்லியின் புளிப்பே இனிப்பாய் மாறும் இன்பம்!

நம்மை விட்டு அமையுமோ மற்றே? கைம்மிக
வட புல வாடைக்கு, அழி மழை
தென் புலம் படரும், தண் பனி நாளே?

இந்த மலை நாடன் = நம்ம தலைவன்!
அவன் உன்னைக் கைவிடுவானோ? மாட்டான்!
அவனுக்கு உன் நினைப்பு = கொள்ளவும் முடியாம.. தள்ளவும் முடியாம.. இன்பம்டீ

ஆனா “நெல்லிக்காய் போல”-ன்னு பாடலில் நேரடியா இல்லை!
ஏதோ ஆடு தின்னுறாப் போலக் காட்டி, அந்த மலை நாடா என்பதால் = உள்ளுறை உவமை!

பாதி முழுங்கும் போதே, புளிப்பு -ன்னு துப்பவும் மாட்டான்;
மீதி உள்ளே இறங்கும் போது, இனிப்பு -ன்னும் மகிழ்வான்!
இப்படி இரண்டும் கலந்த, விடமுடியாத நிலைமை = காதல்!
= நெல்லிக்காயைப் போலே!

வடக்கில் இருந்து வரும் வாடைக் காற்று = ஈரமே இருக்காது;
ஆனா, அதான் மேகத்தைத் தெற்கால தள்ளி விடும்! தென்றல் ஈரம் மிகும்!
அது போல், உன் பிரிவு தான், அவனை, உன் கூடலுக்கும் தள்ளி விடும்; ரொம்ப நினைச்சி ஏங்குறியா?:)

dosa 48/365

Advertisements
Comments
11 Responses to “காதல் நெல்லிக்காய்”
 1. cheenakay says:

  அன்பின் கேயாரெஸ் – 1963-66 பள்ளியில் படிக்கும் போது வாங்கித் திண்ண ஐடம்ஸ் – உப்பும் காரமும் தூவிய மாங்காய், வெள்ளரிக்கா, கொடுக்காப்புளி,
  நெல்லிக்கா, வள்ளிக் கிழங்கு, எலந்தைப் பழம், தேன் மிட்டாய், சவ்வு மிட்டாய், ஐஸ் ஃப்ரூட், எட்செட்ரா எட்செட்ரா …….. மலரும் நினைவுகளைத் தூண்டியதற்கு நன்றி – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

  Like

 2. cheenakay says:

  அன்பின் கேயாரெஸ் – நான் காதலிக்காமலேயே புளிப்பு இனிப்பா தொண்டைலே எறங்கிருக்கே ……. நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

  Like

 3. cheenakay says:

  ஆகா ஆகா கேயாரெஸ் – பிரிவு கூடலுக்கு உதவுகிறதா ….. ம்ம்ம்ம்ம் – உண்மை தான் – சங்க காலத்துல எல்லாத்துக்கும் பாடல்கள் இருக்கு போல …… நன்று நன்று – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

  Like

 4. நெல்லிக்காய் வேறு; அருநெல்லிக்காய் வேறு. நீங்கள் இங்கு படத்திற் காட்டியிருப்பது அருநெல்லிக்காய். இவற்றின் புதலியற் பெயர்களை நான் தேடி இங்கு குறிப்பிடவில்லை. நெல்லிக்காய் கோளவடிவில் இருக்கும். அருநெல்லிக்காய் 6/7 முகங்கள் கொண்டிருக்கும். மேலே குறிப்பிட்ட பா நெல்லிக்காயை (தீம் புளி நெல்லி. இது புளித்தன்மை கொண்டது. அருநெல்லி அவ்வளவு புளித்தன்மை காட்டாது. கொட்டையில் இருந்து நெல்லியின் தசையை எளிதிற் பிரிக்கலாம். அருநெல்லியின் தசை கொச கொச என்று பிஞ்சுஞ் சிதறுலுமாய்ப் பிரியும்.

  அன்புடன்,
  இராம.கி.

  Like

  • வாங்க இராம.கி ஐயா, நலமா? மிக்க மகிழ்ச்சி:)

   ஆம், அருநெல்லியில் அவ்வளவு புளிப்பு இல்லை; இனிப்பு தூக்கலா இருக்கும்! அதான் எனக்கு ரொம்பப் பிடிக்கும் பள்ளியில்!:)
   முழுநெல்லி (அ) பெருநெல்லி = ஊறுகாய் போடும் போது, எடுத்து எடுத்துச் சாப்பிடுவோம்!
   நீங்க சொன்னதுக்கு அப்பறம், இப்போ அருநெல்லி திங்கணும் போல இருக்கு!:)

   Like

 5. காதல் ஒரு துன்பமும் இன்பமும் கலந்த நிலை. நெல்லிக்காயோடு உவமை அருமை. நீங்கள் சொல்லியிருப்பது போல புளிப்பும் இனிப்பும் கலந்த நிலையை தான் இந்தப் பாடலில் குறிப்பிட்டு வருகிறதே தவிர நெல்லிக்காயின் நேரடி reference வரவில்லை. காதலர்கள் சேர்ந்து இருக்கும் பொழுது இன்பம், பிரிந்தால் துன்பம். காதலி/காதலன் நினைப்பு அவரவர் நெஞ்சாங்கூட்டில் சிக்கியிருக்கும் ஒரு உருண்டை போல. முழுங்கவும் முடியாமல் வெளியே கொண்டு வரவும் முடியாமல் ஒரு அவஸ்தை நிலை. தலைவன் அந்த நிலையில் உள்ளான். உன்னை கைவிடமாட்டான் என்கிறாள் தோழி. எப்பொழுதும் காதலிக்கு உற்ற துணை தோழி தானே!

  உன்னி கிருஷ்ணன் பாடும் என்னவளே பாடலில் வரும் ஒரு வரி “வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டையும் உருளுதடி” என்று வரும். ஒவ்வொரு கவிஞருக்கு ஒரு கற்பனை, ஆனால் மொத்தத்தில் நிலை கொள்ளாது ஒரு தவிப்பு!

  நெல்லிக்காய் உண்ட பிறகு தண்ணீர் குடித்தால் அதன் சுவையே தனி. இந்த தலைமுறை குழந்தைகள் இதை அனுபவித்துள்ளார்களா என்று தெரியவில்லை.

  amas32

  Like

  • //வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டையும் உருளுதடி//
   sema, reference to the context ma!
   are u a compere/ commentator or what?:)

   இக்காலக் குழந்தைகள் நெல்லிக்காய் சாப்பிட்டா, தொண்டை கட்டும், Cold yaa -ன்னு பெற்றோர்களே தடுத்துடறாங்க:(
   ஆனா Dabur Amla Hair Oil அது இது-ன்னு நெல்லிக்காயைச் செயற்கையாக்கிட்டாங்க:))

   Like

 6. //தேம் பாய் மா மலர் நடுங்க//
  Brilliant!

  Like

  • yessu:)
   thatz how cattle drink in village ponds!
   ஒரு மூச்சு உஸ்ஸ் ன்னு விடும்; இலை தழையெல்லாம் விலகிரும், தண்ணி லபக் லபக்-ன்னு சத்தம் போட்டுக் குடிக்குங்க:))

   இங்கே, “தேம் பாய் மா மலரே நடுங்குது” மூச்சுக் காத்தால!:)

   Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: