சங்கத் தமிழில் “ஆண்” பரத்தை!

சங்கத் தமிழில் “பரத்தை” பற்றிய நிறைய பேச்சு இருக்கே?
“தமிழாளே இப்பிடித் தானோ? பலான விஷயத்தில் ஜம்-ன்னு இருந்திருக்கா ஓய்”
-ன்னு சிலர் ட்விட்டரில் ஏகடியம் பேசுவது வழக்கம்!

சங்கத் தமிழ் அப்படியா? தரவுகளோடு பார்ப்போமா?
இவர்களுக்குத் தரவு தர “திராணி” இல்லீன்னாலும்…
“தரவு” என்பதையே கேலி பேசிட்டா? அமுங்கிரும் பாருங்க!

– சில சிகாமணிகளின் குயுக்தி!
– இவனுங்க “இந்திர” புராணங்களை விடவா, சங்கத் தமிழ் “ஜம்ஜம்”?:( பார்ப்போமா?


உலகின் ஆதித் தொழில்கள் = வேளாண்மை & பரத்தை!
ஒன்று பசி; இன்னொன்று கிசி;

மொழி, இனம், நாடு -ன்னு கடந்து, இது ஒரு “சர்வ தேசத் தொழில்”, பல்லாயிரம் ஆண்டுகளாய்!
= கொடுமை தான்!
ஆணாதிக்கம், பெண்மைக்குச் செய்த பெருங்கொடுமைளில், இதுவே முதன்மை!:(

தமிழ்ச் சமூகமும் இக்கொடுமைக்குத் தப்பவில்லை! ஆனால், ஆனால்… இக்கொடுமையைக் “கொடுமை” என்று அறிந்தே இருந்தது!

* இக்கொடுமைக்கு = “தேவதாசி” என்று பட்டம் குடுத்து, பரம்பரை ஆக்கவில்லை!
* பெண் குழந்தைகளையும் = “தேxxx” என்ற பேரால் சிறப்பிக்கவில்லை!:(

கடவுளின் பேரால் Institutionalize! “மத-மரபு”;
இறைவன் / கலையின் பேரால், ஒரு சிலர் கொட்டமடிக்க உருவான முறை
= சங்கத் தமிழில் கிடையவே கிடையாது!
இது அவரவர் தனிப்பட்ட தேர்வு! பரம்பரை வழக்கமும் இல்லை!

* சங்கத் தமிழ், இந்த “மனப் போக்கை” = மனப் போக்காய் மட்டுமே பார்த்தது!
* எந்தத் தீர்வையும் திணிக்காமல், அவரவர் தீர்வுக்கு உதவி செய்தது!


மருதத் திணை = ஊடலும் ஊடல் நிமித்தமும்!

மருதம் -ன்னாலே பரத்தைமை இல்லை!
தலைவன் – தலைவி ஊடலுக்குப் பல காரணங்கள்! அதில் பரத்தைமையும் ஒன்று!

இந்த உறவின் ஆழத்தையே பதித்து வைப்பார், ஓரம்போகியார்!
ஓரம் போதல் = “அங்கு” போதல்; குறிப்பு மொழி!
அதைப் பாடிய இவர் பேரும் = “ஓரம் போகியார்” என்றே ஆனது!

* குறிஞ்சி/முல்லையில் இல்லை; மருதத்தில் மட்டும் ஏன்?
* தலைவன்-தலைவியே களிக்கும் போது, ஏன் பரத்தையரை நாட வேண்டும்?
* பரத்தை தானே உருவாகிறாளா? (அ) உருவாக்கப் படுகிறாளா?
* பரத்தை = குடும்பத்தைப் பிரிப்பவளா? (அ) விதியால் ஒடுங்கி வாழ்பவளா?

பல கேள்விகள்!:)
இற் பரத்தை/ நயப்புப் பரத்தை என இரு வகை உண்டு!
* இற் பரத்தை = ஒருவனே-தலைவனே என்று வாழ்பவள்!
* நயப்புப் பரத்தை = பலரையும் நயப்பவள் (தொழில்)!

இரண்டாம் வகைக்குச் சான்றோர் ஆதரவு இல்லை!
முதல் வகை, காதல் கைகூடாது, வேறு இடத்தில் மணமாகி, பின்னும் தொடர்வது!
* ஒரு பொண்ணு, மனம் வெறுத்துப் போய், பரத்தையாய்ப் போன கதைகள் உண்டு!
* பரத்தை, அதீத காதலால், குலப்பெண்ணாய் மாறின கதையும் உண்டு!


சங்கத் தமிழ்…, “ஒழுக்கம்” என்பதைப் பெண்ணின் மேல் “மட்டும்” ஏற்றி வைக்கலை!

அவன் ஒரு பரத்தையிடம் சென்றால்…
இவள் ஒரு பரத்தையிடம் செல்ல வேண்டியது தானே???

“ஆண் பரத்தைகள்” சங்க காலத்தில் இல்லையா?
= உண்டு! இன்னிக்கி, அதான் பார்க்கப் போறோம்!:)

வள்ளுவர், கற்பு என்பதைப் பெண்ணின் மேல் மட்டும் ஏத்தி வச்சிட்டாரு -ன்னு நினைச்சிக்கிட்டு இருக்கோம்!
ஆனா, “வரைவின் மகளிர்” பாடிய அவரு தான் “பரத்தன் = ஆண் பரத்தை“-யும் காட்டுவது:)

பரத்தன் = பேரே வியப்பா இருக்கா?:)

பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் – பொதுஉண்பர்
நண்ணேன் “பரத்தனின்” மார்பு (1311)

பெண்ணியல் = பெண்ணியம்; பரத்தன் = ஆண்! What Mr. Valluvar?:)

* கற்பு = பரிமேலழகர் போன்றவா, குறளுக்குத் தப்புத் தப்பா, மனு மனுவா, உரை எழுதிப் பூசிய சாயம்!

நம்மவரே அப்படி நம்பத் தலைப்பட்டு விட்டார்கள்! ஆனா வள்ளுவர் அப்படி அல்ல!
தற்காத்து, தற்கொண்டான் பேணி -ன்னு…
முதலில் தன்னைத் தான் காத்துக் கொள்ளச் சொல்றாரு பெண்ணை;
அப்பறம் தான் கணவன்! = இவரா ஆணாதிக்கம்?:)

வள்ளுவருக்குப் பிற்காலம், சிலப்பதிகார இளங்கோவும் பரத்தனைக் காட்டுகிறார்!
வறுமொழி யாளரொடு வம்பப் பரத்தனொடு
குறுமொழிக் கோட்டி நெடுநகை புக்குப -(கொலைக்களக் காதை)

* இவர்கள் அத்தனை பேருக்கும் Inspiration = சங்கத் தமிழ்!
* சங்கத் தமிழில் “ஆண்” பரத்தை = பரத்தன்! இன்றைய பதிவு; பார்க்கலாமா?


பாடல்: அகநானூறு (146)
கவிஞர்: உவர்க் கண்ணூர்ப் புல்லங்கீரனார்
திணை: மருதம்
துறை: வாயில் மறுத்தல்

வலி மிகு முன்பின் அண்ணல் ஏஎறு
பனி மலர்ப் பொய்கைப் பகல் செல மறுகி,
மடக் கண் எருமை மாண் நாகு தழீஇ,
படப்பை நண்ணி, பழனத்து அல்கும்

கலி மகிழ் ஊரன் ஒலி மணி நெடுந் தேர்,
ஒள் இழை மகளிர் சேரி, பல் நாள்
இயங்கல் ஆனாதுஆயின்; வயங்கிழை
யார்கொல் அளியள்தானே எம் போல்

மாயப் பரத்தன் வாய்மொழி நம்பி,
வளி பொரத் துயல்வரும் தளி பொழி மலரின்
கண்பனி ஆகத்து உறைப்ப, கண் பசந்து,
ஆயமும் அயலும் மருள,
தாய் ஓம்பு ஆய்நலம் வேண்டாதோளே?


காபி உறிஞ்சல்:

வலி மிகு முன்பின், அண்ணல் ஏஎறு
பனி மலர்ப் பொய்கைப், பகல் செல மறுகி,

வலிமை மிக்க ஆண் மாடு; அண்ணல் ஏறு = எருமைக் கடா
பொய்கையில், பகல் வேளையெல்லாம் ஊறி ஊறி
பொய்கை = இயற்கையான நீர் நிலை; குளம் = செயற்கை
(சரவணப் பொய்கை)

மடக் கண் எருமை, மாண் நாகு தழீஇ,
படப்பை நண்ணி, பழனத்து அல்கும்

பின்பு, மென்மையான பெண் எருமையைத் தழுவி..
பெண் எருமை = நாகு vs ஆண் எருமை = கண்டி
“ஏய் நாகு” -ன்னு ஒங்கள யாரு-ன்னா செல்லமாக் கூப்பிட்டா, என்ன சொல்றாங்க, புரியுதா?:))

படப்பை = தோட்டம்; பழனம் = வயல்!
முதல்ல தோட்டத்தில் உரசி விளையாடி… அப்படியே வயல் பக்கமா ஒதுங்குதுங்க!

கலி மகிழ் ஊரன், ஒலி மணி நெடுந் தேர்,
ஒள் இழை மகளிர் சேரி, பல் நாள்

அது போல், எங்கள் ஊரனின் (தலைவனின்) ஒலி மிக்க தேர்..
மகளிர் சேரியில், பல நாள் ஒதுங்கி இருக்காமே! கேள்விப்பட்டேன்

இயங்கல் ஆனாதுஆயின்; வயங்கிழை
யார்கொல் அளியள்தானே, எம் போல்

இப்படி அவன் தேரு, இயக்கமே இல்லாம, அங்கேயே நின்னு போச்சு!
அதைப் பாத்து, எனக்கும் தான் ஆசை! நானும் இழையாள் – மெல்லியலாள் தானே!
ஆனா என்னைப் போல “லூசு” யார் கொல்? வேற யாருமில்லை!

மாயப் பரத்தன் வாய்மொழி நம்பி,
வளி பொரத் துயல் வரும், தளி பொழி மலரின்

மாயப் பரத்தன் = பல மாயங்கள் செய்து, இன்பமூட்டும் “பரத்தன்”!
அவன் இன்ப மொழிகளை நம்பி, நானும் போகலாம் தான்! ஆனா… ஆனா…
காற்றில் ஆடி, மழையில் நனைந்த புது மலர் போல இருக்கேனே! நானொரு “லூசு”!

என்னவொரு இயற்கை உவமை!
காற்றில் அலைபாயும், மழையில் மருண்டொழுகும் மலர்! ஆனாலும் அதன் நலம் கெடுவதில்லை!
அது போல், பரத்தையே ஆனாலும்… எந்தப் பெண்ணுள்ளும் = ஒரு கற்புண்டு! நலமுண்டு!

கண்பனி ஆகத்து உறைப்ப, கண் பசந்து,
ஆயமும் அயலும் மருள,
தாய் ஓம்பு ஆய்நலம் வேண்டாதோளே?

என் சூடான கண்ணீர், குளிர் மார்பில் குவிந்து… உறைஞ்சி போச்சி!
என் தாய், என்னை வளர்த்த நலம்! அதை வேண்டாம் -ன்னு தள்ளி…
ஆயமும் அயலும் = உற்றார் உறவினர் பயப்பட…

நானும் பரத்தனிடம் போக எனக்கு மனசு வரலையே!
யார் கொல் அளியள்?
= நானே நானா? யாரோ தானோ? மெல்ல மெல்ல மாறீனேனா?

dosa 47/365

Advertisements
Comments
16 Responses to “சங்கத் தமிழில் “ஆண்” பரத்தை!”
 1. cheenakay says:

  அன்பின் கேயாரெஸ் – பரத்தன் – இப்பொழுது தான் கேள்விப்படுகிறேன். சங்க காலம் தொட்டு இக்காலம் வரை இருக்கும் இத்தொழில் செய்பவனை பரத்தன் எனக் கூறுவது எனக்குப் புதிதாக இருக்கிறது. ந்ல்வாழ்த்துகள் கேயாரெஸ் – நட்புடன் சீனா

  Like

  • பரத்தன் = ரொம்ப பேர் அறிய மாட்டாங்க சீனா சார்; அதான் பதிவாய் இட்டேன்!:)
   இந்த முறை, நீங்கள் சொன்ன வண்ணம், படங்களின் வீரியம் குறைத்துக் கொண்டேன்:) OK-vaa?:))

   Like

 2. //முதல் வகை, காதல் கைகூடாது, வேறு இடத்தில் மணமாகி, பின்னும் தொடர்வது!// அப்போ அது கள்ள தொடர்பா? நான் இதுவரை கல்யாணம் ஆகாது வெறும் தொடர்பு என்று நினைத்திருந்தேன்.சமூகத்தில் மட்டும் அங்கீகாரம் இல்லை,ஆனால் ஒருவனுடன் மட்டும் தொடர்பு இற் பரத்தை என்று நினைத்திருந்தேன். ஆனால் நீங்கள் திருமணம் வேறு இடத்தில் நடந்து பின் பழைய தொடர்பும் தொடர்வது போல சொல்லியுள்ளீர்கள்.

  //* ஒரு பொண்ணு, மனம் வெறுத்துப் போய், பரத்தையாய்ப் போன கதைகள் உண்டு!// நிறைய துன்பங்களை அனுபவித்து ஆத்திகன் நாத்திகன் ஆவது போல :(

  Gigolo = பரத்தன்

  //கண்பனி ஆகத்து உறைப்ப, கண் பசந்து,
  ஆயமும் அயலும் மருள,
  தாய் ஓம்பு ஆய்நலம் வேண்டாதோளே?//
  இந்த வரிகள் அருமை! கவி நயத்துடன் உள்ளது. பொருளும் அற்புதம்:-)

  பெண்ணிற்கு அலைபாயும் மனதும் வேட்கையும் அதிகமாக இருந்தாலும் அச்சம் என்கிற குணத்தை அவளுக்கு கடவுள் கொஞ்சம் அதிகமாக வைத்திருப்பதால் பிழைக்கிறது சமூகம். இல்லாவிட்டால் உணர்ச்சி வசப்பட்ட பெண் தவறான பாதைக்கு செல்வது எளிது.

  ஒருவனுக்கு ஒருத்தி என்பதே சரியான தர்மம். ஆனால் தற்போது இரு பாலாருக்கும் திருமணங்கள் தள்ளிப் போவது சமூக அமைப்பிற்கு நல்லதல்ல. “பரத்தை”,”பரத்தன்” பெறுக வாய்ப்பு அதிகமாகிறது. வேட்கை தணிவிக்க அவர்கள் வடிகாலாக இருக்கிறார்கள். அதனால் சமுதாய குற்றங்கள் குறைகிறது என்று ஒரு சாரார் கூறக் கேட்டிருக்கிறேன். தொழில் பரத்தையர்கள் வாழ்வு கொடுமை, வலி மிகுந்தது.

  பாலியல்/பரத்தையர் தொழில் தான் உலகிலேயே மிகவும் பழமையான தொழில்களில் ஒன்று. நீங்கள் இந்தப் பாடல் மூலம் விலை மாதர்கள் மட்டும் அல்ல விலை புருஷர்களும் தொன்று தொட்டு இருந்து வந்தனர் என்று சுட்டிக் காட்டியுள்ளீர்கள்! Equal opportunity employee!

  amas32

  Like

  • சொ.வினைதீர்த்தான் says:

   பெண்ணிற்கு அலைபாயும் மனதும் வேட்கையும் அதிகமாக இருந்தாலும் அச்சம் என்கிற குணத்தை அவளுக்கு கடவுள் கொஞ்சம் அதிகமாக வைத்திருப்பதால் பிழைக்கிறது சமூகம். இல்லாவிட்டால் உணர்ச்சி வசப்பட்ட பெண் தவறான பாதைக்கு செல்வது எளிது. amas32…

   பெண்ணின் அச்ச உணர்வால் இச்ச்மூகம் காப்பாற்றப்படவில்லை அம்மா. அவள் உறுதிப்பாட்டாலேதான் நெறிமுறையில் செல்கிறது. அச்ச உணர்வோ காவலோ அவளைக்கட்டுப்படுத்துவதில்லை. அவள் கொண்ட உறுதிப்பாடே முக்கியம். சிறை காக்கும் காப்பு என் செய்யும்?
   கீழ்க்கண்ட இரண்டு குறட்பாக்களும் எண்ணிப் பார்க்கத்தக்கன.

   பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
   திண்மைஉண் டாகப் பெறின்?

   இல்வாழ்க்கையில் கற்பு என்னும் உறுதிநிலை இருக்கப் பெற்றால், பெண்ணைவிடப் பெருமையுடையவை வேறு என்ன இருக்கின்றன? 54
   7. கடல்அன்ன காமம் உழந்தும் மடல்ஏறாப்
   பெண்ணின் பெருந்தக்கது இல்.

   கடல்போன்ற காமநோயால் வருந்தியும், மடலேறாமல் துன்பத்தைப் பொறுத்துக்கொண்டிருக்கும் பெண் பிறப்பைப் போல் பெருமையுடைய பிறவி இல்லை.
   அன்புடன்
   சொ.வினைதீர்த்தான்.

   Like

   • நிச்சயமாக நீங்கள் சொல்வது சரி சொ.வி. பெண்ணின் மன உறுதியே அவளை பெரும் சஞ்சலத்தில் இருந்து காப்பாற்றுகிறது. மேலும் அவ்வளவு எளிதாக தன்னை சுற்றியுள்ள தற்காப்பு வேலியைத் தாண்ட அவள் முற்படுவதில்லை. பெண்ணின் பெருமை அதில் தான் அடங்கியுள்ளது. பெண்ணுக்கு பல பலங்கள் உள்ளன, பல பலவீனங்களும் உள்ளன. அதை அடக்கியாளும் திறனை உடையவள் பெண்மைக்கு பெருமை சேர்க்கிறாள் :-)

    amas32

    Like

    • சொ.வி சொல்வது முற்றிலும் சரி!
     சிறைகாக்கும் காப்பு என் செய்யும்?

     ஆனா பெண்ணின் பெருமையை இப்படிப் பாடிப்பாடியே, அவளைப் பீடத்தில் ஏற்றி விட்டோமோ?-ன்னு எனக்கொரு எண்ணம்!
     ஆணின் நிறை காக்கும் காப்பே, தலை! என்னே ஆணின் பெருமை -ன்னு பாடிப்பாடி, அவன் மேலயும் peer pressure ஏற்றணும்; அப்போ தான் திருந்துவான்!:))
     அதனால், பெண்ணை அதிகம் பீடத்தில் ஏற்றாமல், அவ “சுதந்தர” உணர்வுகளையே அதிகம் பேசப் பழகிக் கெண்டேன்:)

     Like

  • /அப்போ அது கள்ள தொடர்பா? நான் இதுவரை கல்யாணம் ஆகாது வெறும் தொடர்பு என்று நினைத்திருந்தேன்//
   :))
   கள்ளத் தொடர்பு-ன்னு சொல்ல மாட்டேன்-ம்மா!

   அவனுக்கு வேற இடத்தில் கல்யாணம் ஆயிருச்சி; ஆனா இவளோ முன்னமேயே இருக்குறவ; எங்கே போவா?
   அவ வேறு ஒரு மணம் செய்துக்கலை
   அவனே-ன்னு ஆயுசுக்கும் ஒடுங்கிட்டா! = இல் பரத்தை -ன்னு பேரு வச்சிருச்சி சமூகம்;

   //அச்சம் என்கிற குணத்தை அவளுக்கு கடவுள் கொஞ்சம் அதிகமாக வைத்திருப்பதால் பிழைக்கிறது சமூகம்.
   இல்லாவிட்டால் உணர்ச்சி வசப்பட்ட பெண் தவறான பாதைக்கு செல்வது எளிது//

   :))
   இந்தப் பாட்டில் அஞ்சுகிறாள்; முடிவெடுக்கத் திணறுகிறாள்!
   அஞ்சாத பெண்களும் சங்கத் தமிழில் உண்டு; பெண்ணுரிமை:)
   இது அவரவர் மனப் போக்கே! சங்கத் தமிழ் திணிக்காது
   ——————————–

   //தற்போது இரு பாலாருக்கும் திருமணங்கள் தள்ளிப் போவது சமூக அமைப்பிற்கு நல்லதல்ல.
   “பரத்தை”,”பரத்தன்” பெறுக வாய்ப்பு அதிகமாகிறது. வேட்கை தணிவிக்க அவர்கள் வடிகாலாக இருக்கிறார்கள்//

   ha ha ha!
   u seem to know all our crooked ways:)))

   //நீங்கள் இந்தப் பாடல் மூலம் விலை மாதர்கள் மட்டும் அல்ல
   விலை புருஷர்களும் தொன்று தொட்டு இருந்து வந்தனர் என்று சுட்டிக் காட்டியுள்ளீர்கள்! Equal opportunity employee!//

   Yep!
   ஆண்கள் தான் “அந்த” வீட்டுக்குப் போக முடியும்!
   பெண் அப்படியெல்லாம் விபரீதமாப் போகாம, வீட்டிலேயே அழ வேண்டியது தான் = என்ற நிலை சங்கத் தமிழில் இல்லை!

   Like

   • நான் அவள் கோணத்தில் இருந்து பார்த்தேன். அவனுக்கு வேறு இடத்தில் திருமணமாகி இவளுடன் இன்னும் தொடர்பில் இருக்கிறான் என்று இப்போ புரிந்து கொண்டேன். நான் நினைத்தது, அவளுக்கு திருமணம் ஆகி ஆயினும் தன் பழைய காதலனுடன் இன்னும் தொடர்பில் இருப்பதாக :-)

    amas32

    Like

 3. சொ.வினைதீர்த்தான் says:

  பரத்தன் என்ற சொல்லாட்சியை அருமையாக விளக்கியுள்ளீர்கள் திரு கண்ணபிரான் ரவி சங்கர். ஆயின் பரத்தமை ஆண்களைக் குறிப்பதாக திருக்குறள் குறிப்பும் அகநானூறு பாடலும் கொள்ள இயலவில்லை. தனக்கு உரியவனைச் செல்லமாகக் கள்வன் என்று குறிப்பது போன்று பரத்தன் என்று பாடல்கள் குறிப்பதாகத் தோன்றுகிறது.
  சிலப்பதிகார வம்பப்பரத்தன் என்ற சொல்லும் பரத்தமையை நேரடியாகக் குறிப்பதாகக் கொள்வதாக இல்லை. வேறு பாடல் குறிப்பு ஆண்பரத்தமைக்கு உள்ளதா என்று இயன்றபோது எழுதுங்கள்.
  அன்புடன்
  சொ.வினைதீர்த்தான்.

  Like

  • இன்னும் பரத்தன் குறிப்புக்களைத் தேடிச் சொல்கிறேன் சொ.வி!

   //செல்லமாகக் கள்வன் என்று குறிப்பது போன்று பரத்தன்//

   ஐய்யய்யோ! அல்லவே அல்ல!

   பெண்களும் பரத்தனிடம் போனார்கள் -ன்னு இருந்தா, Moral Policing என்ன ஆகும்?
   அதனால் சில-பல உரையாசிரியர்கள் அப்படிக் “கட்டி” விட்டார்கள்!
   ஆனா பரத்தன் = செல்லமான சொல் அல்ல!

   கள்ளி -ன்னு கொஞ்சலாய்ச் சொல்லும் போது, “உள்ளத்தைக் கவர்” கள்வன் -ன்னு எடுத்துப்போம்! அது பொது வழக்கு!
   ஆனா, பரத்தை -ன்னு யாரு-ன்னா செல்லமாக் கொஞ்சிப் பார்த்ததுண்டா?
   இல்லவே இல்லை! என் செல்லப் பரத்தையே -ன்னு சொன்னா என்ன ஆகும் தெரியுமா?:))

   அதே போல் தான் பரத்தனும்! அது செல்லச் சொல் அன்று!
   அது தன் காதலனைக் குறித்த சொல் அன்று! அன்றைய சமூகத்தில், ஆண்-பெண் பேதமில்லா ஆண் பரத்தையே!

   Like

   • சொ.வினைதீர்த்தான் says:

    கள்ளி -ன்னு கொஞ்சலாய்ச் சொல்லும் போது, “உள்ளத்தைக் கவர்” கள்வன் -ன்னு எடுத்துப்போம்! அது பொது வழக்கு!
    ஆனா, பரத்தை -ன்னு யாரு-ன்னா செல்லமாக் கொஞ்சிப் பார்த்ததுண்டா?
    இல்லவே இல்லை! என் செல்லப் பரத்தையே -ன்னு சொன்னா என்ன ஆகும் தெரியுமா?:))

    அருமையான வாதம்!
    ஆணுக்கொன்று பெண்ணுக்கென வேறு என விதிகளை வைத்துள்ளோமே.
    பல கோபிகளுடன் கூடிய கண்ணனைக் கொண்டாடுகிறோம்!
    பரத்தையர் இல்லம் போன தலைவன் சேர்த்துக்கொள்ளப்படுகிறான். தலைவியர் நிலை அதுவன்று.
    நண்ணேன் நின் மார்பு என்றவள் கூடி மகிழத்தானே போகிறாள்!
    அன்புடன்
    சொ.வினைதீர்த்தான்.

    Like

    • இந்த விடயத்தில் மட்டும் கண்ணனைப் பிடிக்கும்:)
     பாஞ்சாலி என்பவளுக்குச் சமூக இசைவு; அதுக்கு வழி வகுத்தவன் அவனே அல்லவா?
     அந்த ஆணாதிக்கக் காலத்தில், ஐந்து கணவர்கள் என்பது சாதாரண விடயம் அல்லவே!
     = கண்ணன் சொன்னதால் ஏத்துக்கிட்டாங்க போல! (இந்திர பூசையை நிறுத்துமாறு சொன்னதும் ஏத்துக்கிட்டது போல)

     அப்பவும், கர்ணன் முதலான எதிர்ப் பக்கத்தவர்கள்… பாஞ்சாலியை, இதைச் சொல்லித் தானே இழிவு செய்வது வழக்கம்?:(
     = என்னடா, நம் பக்கம் நிறைய மனைவிகள் வைச்சிக்கும் போது, நம்மை யாரும் இழிக்கலையே…
     = ஆனா, பெண், ஐந்து கணவர்-ன்னா மட்டும் இழிக்கிறோமே -ன்னு மனசாட்சி குத்தவே இல்லை பாருங்க!

     Like

    • சொ.வி
     நீங்க கேட்டமையால், இன்னும் தேடினேன் – பரத்தன் பத்தி; இதோ:

     பரத்தன் = ஆண் பரத்தை!
     சில நேரங்களில், தலைவனே = பரத்தன் ஆவதுண்டு! ஆனா செல்லமா அல்ல! அவன் பல பேருடன் கூடியதால்!

     * எப்படி, பெண், பலரைக் கூடினால் = பரத்தையோ
     * ஆண், பலரைக் கூடினால் = பரத்தனே!
     = இரு கட்சிக்கும் அஃதைப் பொதுவில் வைத்தது சங்கத்தமிழ்!
     —————

     சிலம்பு காட்டுவது:
     வறுமொழி யாளரொடு வம்பப் பரத்தரொடு
     குறுமொழிக்கு ஓட்டி நெடுநகை புக்குப
     பொச்சாப்பு உண்டு பொருளுரை யாளர்
     நச்சுக் கொன்று ஏற்கும் நன்னெறி யுண்டோ?

     Here Ilango talks in plural, not a single “chella thalaivan”:)
     * வறு மொழியாளர்கள் (பயனில சொல்வார்)
     * வம்பப் பரத்தர்கள் (ஆண் பரத்தன்கள்)
     * குறு மொழியாளர்கள் (சிறு சொல், cheap words பேசுவோர்)
     இவனுங்க தொடர்பெல்லாம் ஏற்பட்டு வாழ்ந்தேனே -ன்னு கோவலன் feelings!

     Also in இந்திர விழா எடுத்த காதை…
     காமக் களிமகிழ்வு எய்திக் காமர்
     நகையாடு ஆயத்து நன்மொழி திளைத்துக்
     குரல்வாய்ப் பாணரொடு நகரப் “பரத்தரொடு”
     He distinctly says: ஆயத்தில் உலாவரும் பாணர்கள் & பரத்தர்கள்

     இதே போல் கலித்தொகையிலும் சில இடங்களில், பரத்தமைத் தொழில் எனக் கொண்ட பரத்தன் வருகிறது!

     Like

     • devarajan97 says:

      குரல் வாய்ப் பாணரொடு, நகரப் பரத்தரொடு
      திரிதரு மரபின் கோவலன் போல…

      பரத்தரோடு சேர்ந்துகொண்டு திரிந்தான் என்பதால்
      கோவலனும் விலைமகனா ?

      சிலம்பு பொன் விலை மகளிர், பூ விலை மகளிர்
      என இருவகை விலைமகளிரைக் கூறுகிறது;
      அதுபோல் பொன் விலைமகன், பூ விலைமகன்
      இருந்தனரா ?

      தேவ்

      Like

     • இன்றே இதைக் கவனித்தேன்! தேவ் சார், மன்னிக்க!

      //பரத்தரோடு சேர்ந்துகொண்டு திரிந்தான் என்பதால்
      கோவலனும் விலைமகனா ?//

      கோவலனைக் “காப்பாற்றணும்” -ன்னு எனக்குக் கட்டாயம்-ல்லாம் இல்ல:)
      தமிழ் = உண்மையின் பாற்பட்டது; அதுவே அறம்!

      நகரப் பரத்தர்களோடு திரிந்தான்-ன்னு சிலம்பு சொல்லுதே!
      = திரிஞ்சான் தான்!

      திரிஞ்சதால் அவன் “விலைமகன்” அல்லன்;
      “குணத்தால் விலைமகன்” -ன்னு வேணும்-ன்னா தாரளமாச் சொல்லலாம்!
      If u call a female, why not the corresponding male too?
      விலை குடுத்து ஆரம் வாங்கித் தானே, கணிகை வீட்டுக்குச் செல்கிறான்?

      But, கோவலன், வியாபாரம் செய்ய..
      *தனக்கு விலை பேசிக் கொண்டு, படுக்கவில்லை!
      *தான் இன்னொருத்தருக்கு விலை குடுத்தே, படுத்தான்

      இதான் வேறுபாடு!
      அவன் வியாபாரப் பரத்தன் அல்லன்!
      மற்றபடி குணப் பரத்தனே!!!

      Like

 4. Willswords M says:

  [தமிழர் உணர்வு விலகிய சாதி (உ)ரோகிகள் அப்பா/
  அன்னையர்களுக்கு மகள்/கள்; உங்கள்…
  நினைவாக!]

  நீஎன்அன்னை; வேசி!எனல் நியாயமோ? சூத்திரச்சி… 
  நோய்நாய் பார்ப்பான் ஓதுநெய்பொய் சாக்கடைநொய் …
  தோய்ந்தசாதி தாய்தே வடிமதம் ஒழி!தமிழ்தேன் பூநான்;
  பாய்ந்தஅன்பு உள்இன்று பாசகாதல னால்தலித் ராணி!

  தெளித்த விந்துள் சாதி துளிர்த்தது எவ்வாறு ?
  பழித்துஓதும் வந்தேரி பார்ப்பான் அதனால்…
  சுளித்தான் என்தாயை சூத்திரட்சி என்றான்! 
  இளித்து விட்டானா? சூத்திரனாம்நீ பறைந்தான்! 

  விரும்புதலித் காதல்நீங்கி… வேறுசூத்ர ஆணை*
  திரும்பாது தீண்ட…ஓது தேவடிப்பாப் பாத்தி…
  கரும்பு வணிகமோ… உன் கன்னிமகள் தேகம்?
  துருஇரும்பு தொற்றுசாதி நோயே!

  சலித்து இரத்தத்தில் ஓடிசுரணை சூடுஉலுக்கி… 
  விழித்து நெளித்துவிலகி துயர்…சாதி யேஎன… 
  சிலிர்த்து மனஉலையில் சூளுற காதலனாகி… 
  தலித்…தானும் சூத்திரட்சி என்உள் உலாவி,தேன்;
  துளிர்த்து நான்காம் அடிமைநிலை ஒழித்தான்! 

  களித்துஇகழ சூத்திர! காமபித்து இல்லைஎன்
  தலித்அன்பை எனக்கு அளித்து; காதலால்…
  ஒழித்துசாதி ஆரிய சூத்திரச்சி… இழிவை;
  கிழித்து… ‘பஞ்சமி இளவரசி’ ஆக்கிட்டான்!

  விழித்து அவனுக்கு என்னைஅளித் ததுமுதல் 
  உழுத்த பேதம் இருவரிடை யேயும் இல்லை; 
  பிழைத்தேன்… எனும்படிக் குதலித் மாற்றிட்டான் ; 
  இழைத்தேன் பாசஉணர்ச்சி யைத்தூய காதலால்; 
  தெளித்தேன் தேசஒற்று மைஅதனுள் நானும்தான்! 

  *[வேறுசூத்ர ஆணை – தேவடியாள் பிள்ளையை!]

  நேற்றோடு மாய்ந்த நினைவாக்கி, சூத்திர… 
  பாட்டில் மகிழ்கின்ற பார்பன வந்தேறி… 
  கூத்தாட்டம் தேவடியாள் குத்தாட்டம் விட்டுமத… 
  தப்பாட்டம் சாதி விரட்டு!

  எல்லாம்ஆ… ரியனுக்கே எனஆகம விதித்திருட்டு…
  சொல்லால் சூத்திர இழிவுகளை உன்மேல் சுமத்தி;
  தொல்லைதீட்டு தலித்என ஓதிஏய்த்து உன்முன்னே…

  நல்லவன்போல் பார்ப்பான்; கருவறை உரிமைக்கு…
  பிள்ளைநீ வாரிசு; அருகதை இல்லைஎன்றான்!
  கல்மலை கோயில்சிலை உம்முன்னோர் அடையாளம்;
  செல்லாத சாதிஉழல, பஞ்சமரை உறிஞ்சி கெட்டாய்!

  கெளசல்யா அனிதா வகுப்புவாரி மாநிலம்
  அரசமைப்பு விடிவெள்ளி!: மீனவ SC/ST MBC/BC வகுப்புவாரி மாநிலங்கள் அரசமைப்பு… http://willsindiaswiords.blogspot.com/2018/06/scst-mbcbc.html?spref=tw

  Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: