நண்பர்கள் “புணரலாமா”?:)

Sorry Folks! மண்டோதரி பதிவால்…
சற்று தனிப்பட்ட அளவில் அயர்ந்து விட்டேன்… ஏதேதோ ஞாபகம் வந்து கலங்கிருச்சி…
அதான் New York 7:00 am பதிவுகள், தள்ளித் தள்ளி…
Fri Post Saturday, Sat Post Sunday -ன்னு நாள் கடந்து வருது; மன்னிக்க:) = “ஞாயிறு அன்று இரண்டு”!

நண்பர்கள் “புணரலாமா”?
= ஐய்யய்யோ!:))
உணர உணரும்! புணரப் புணரும்!

புணர்ச்சி -ன்னாலே =  “அந்த”ச் செய்கை -ன்னு பேச்சு வழக்கில் ஆக்கீட்டோம்;
ஆனா, புணர்ச்சி = சேர்தல் என்பதே பொருள்!
புணர்ச்சி விதிகள் -ன்னு இலக்கணத்தில் படிக்கிறோம்-ல்ல?
அது என்ன வாத்ஸ்யாயனர் எழுதியதா?:) தொல்காப்பியர் எழுதியது-ய்யா:))

* சொற்கள் சேர்வது = மொழிப் புணர்ச்சி (நிலைமொழி-வருமொழி)
* நண்பர்கள் சேர்வது = நட்புப் புணர்ச்சி (புணர்ச்சி தான் நட்பாம் கிழமை தரும்)
* உடல்கள் சேர்வது = காதற் புணர்ச்சி (ஈருடல் – ஓருயிர்)

எதுக்கு இத்தினி Build-Up ன்னு பாக்குறீங்களா?
வாங்க, பாட்டுக்குப் போவோம்! = நாலடியாரில், மிக அழகான பாட்டு!


உணர உணரும் உணர்வுடை யாரைப்
புணரில் புணருமாம் இன்பம் – புணரின்;
தெரியத் தெரியும் தெரிவிலா தாரைப்
பிரியப் பிரியுமாம் நோய்

நூல்: நாலடியார்
கவிஞர்: சமண முனிவர்கள்
பொருட் பால் – அறிவுடைமை (247)


காபி உறிஞ்சல்:

உணர உணரும் உணர்வுடை யாரைப்
புணரில் புணருமாம் இன்பம்

* உணர உணரும் உணர்வுடையார் = நாம் உணர்ந்ததை, அவர்களும் உணரும் போது
* புணரில் புணருமாம் இன்பம் = அவர்களோடு பழகப் பழக இன்பம்

நாம் உள்ளத்தால் நினைக்கும் போதே,
அவர்களும் அதைக் குறிப்பால் உணரும் போது, அத்தகைய நட்பு = கொள்ளக் கொள்ள இன்பம்!

So, எப்பமே நம்ம கருத்து = அவங்க கருத்து! அதானே?
= அல்ல!
= “உணர உணரும்” -ன்னு தான் சொல்றாரு! “உணர உடன்படும்” ன்னு சொல்லலை பாருங்க

என் உணர்ச்சிகளை அறிபவர்கள் அல்ல! “உணர்பவர்கள்”…
= உள்ளபடியே உணர்பவர்கள்
= எள்ளாமல் உணர்பவர்கள்

என்னையா மறுத்துப் பேசின? இன்றோடு முடிஞ்சுது பார் -ன்னு எகிற மாட்டாங்க!
கருத்துக்காக மனிதம் விட்டுவிடாமல்…
என் உள்ளத்தில் ஏன் அப்படித் தோனிச்சு? -ன்னு “உணர்பவர்கள்”!

இவர்கள் உடன்படலீன்னாலும், உடன்-“படு”வார்!
* நம் கருத்தோடு உடன்படலீன்னாலும்
* நம் துன்பத்தில், உடன்-படுவார்
“உணர்வு” உடையார் = அவர்களோடு பழகப் பழக இன்பம்

தெரியத் தெரியும் தெரிவிலா தாரைப்
பிரியப் பிரியுமாம் நோய்

நோய் = நோவுதல் = துன்பம்; துன்பம் எப்போ போகும்?
நம்மைப் பற்றித் தெரியும் – தெரிந்தே தீங்கு செய்பவர்கள் = அவர்களைப் பிரிந்தால் போகும்!
அவர்கள் நம்மை = தெரிந்தவர்கள்; “உணர்ந்தவர்கள்” அல்லர்!

எதுக்குத் தெரிஞ்சிக்கிட்டாங்க? = தெரிந்து கொண்ட நம் சங்கதிகளை எள்ளியும், இழித்தும் பேச!
தெரியத் தெரியும் தெரிவு இலாதார்
= நம் துன்பத்திலும் “தெரிஞ்சி”ப்பாங்க! உடன்-“பட” மாட்டாங்க!

தெரியத் தெரியும்; பிரியப் பிரியும்!
உணர உணரும்; புணரப் புணரும்!!
தமிழ் நல்லா இருந்துச்சா? வர்ட்டா? From tomorrow, again, at 7:00 am New York time:)

dosa 46/365

Advertisements
Comments
4 Responses to “நண்பர்கள் “புணரலாமா”?:)”
 1. cheenakay says:

  அன்பின் கேயாரெஸ் – நட்பு என்பதின் இலக்கணம் அருமை. – சங்கத் தமிழ் படிக்கப் படிக்க இன்பம் – கேயாரெஸ்ஸின் விளக்கமுடன் படிப்பது சுகமே – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

  Like

 2. // உணர உணரும் உணர்வுடையார் = நாம் உணர்ந்ததை, அவர்களும் உணரும் போது
  * புணரில் புணருமாம் இன்பம் = அவர்களோடு பழகப் பழக இன்பம்//
  இதற்கு சூப்பர் உதாரணம் ட்விட்டரில் சஞ்சரிக்கும் ராஜா ரசிகர்கள் கூட்டம் :-) அவர்களுக்குள்ளே அப்படியொரு புரிதல், அன்னியோனியம்.

  Aside from this, நல்ல நண்பர்கள் இடையே இந்த புரிதலை காணலாம். நாம் சொல்வதை அவர்கள் ஒத்துக் கொள்ள வேண்டாம், புரிந்து கொண்டாலே போதும். The requirement here is empathy.

  நம்மை தெரிந்தவர்கள் நமக்கு தீங்கு இழைக்கும் போது விலகிவிட வேண்டும். அறிவில்லாத்தனமாக சேர்ந்து இருந்தால் மனக் கசப்பும் துன்பமும் பெருகும்.
  இங்கு நம்மை “தெரிந்தவர்கள்” என்போர் நம் பலவீனத்தை அறிந்தவர்கள் என்று கொள்ள வேண்டும், and they are those who hit below the belt!

  நாலடியில் நச்சென்று நம் வாழ்க்கைக்குத் தேயையான படிப்பினையை சொல்லிவிடுகின்றனர் சமண முனிவர்கள்.

  amas32

  Like

  • //The requirement here is empathy//
   ஆமாம்-ம்மா! Well said:)

   //இதற்கு சூப்பர் உதாரணம் ட்விட்டரில் சஞ்சரிக்கும் ராஜா ரசிகர்கள் கூட்டம்//
   Yep; Itz a cult; No other music director has such “crazy” fans:)

   //நம்மை தெரிந்தவர்கள் நமக்கு தீங்கு இழைக்கும் போது விலகிவிட வேண்டும்//
   I was about to differ with u:) but u added this, so very apt:))

   //இங்கு நம்மை “தெரிந்தவர்கள்” என்போர் நம் பலவீனத்தை அறிந்தவர்கள் என்று கொள்ள வேண்டும், and they are those who hit below the belt//

   Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: