சிலுக்குறள்!

இன்று சிலுக்கு ஸ்மிதா நினைவு நாள்…
தனிப் படர் மிகுதி!

* முருகனுக்கு “வேல்” ஆயுதம்! சிலுக்குக்கோ “விழி” ஆயுதம்!
* வேல் நீங்கித் தான் அழிக்கும்! விழி நீங்காமலேயே அழிக்கும்!
வேலினும், விழியே பெரிது!:))

கண்ணும் கண்ணும் கலந்து, சொந்தம் கொண்டாடுதே
எண்ணும் போதே உள்ளம் பந்தாடுதே!
“கண்” என்று தோன்றும் சில குறள், உங்கள் முன்னே!


நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் – தாக்கணங்கு
தானைக்கொண்டு அன்னது உடைத்து.
(தகை அணங்கு உறுத்தல் 1082)

அவள் வீசிடும் விழிவேல்; நானும் அவளை நோக்கினேன்..
வெட்கப்படுவாளோ? -ன்னு பார்த்தா, அவளும் என்னைத் திரும்ப நோக்கினாள்…
* முதல் பார்வையில் = தானொருத்தி மட்டும் தாக்கினாள்
* மறு பார்வையிலோ = ஒரு படையுடன் வந்து என்னைத் தாக்குறாளே!

தாக்கணங்கு = தாக்கு அணங்கு = வினைத் தொகை
தாக்கிய அணங்கு, தாக்குகின்ற அணங்கு, தாக்கப் போகும் அணங்கு; முக்காலமும் தாக்குதல்:))

வள்ளுவரின் இதே சொல்லைக் கம்பனும் அப்படியே பயன்படுத்துவான்:
சீதை = தாக்கு அணங்கு அனையவள் தனத்தில் தைத்தவே!

அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்…
நோக்கிய நோக்கெனும் நுதிகொள் வேல் விழி
தாக்கு அணங்கு அனையவள் தனத்தில் தைத்தவே!

இருநோக்கு இவள் உண் கண் உள்ளது – ஒருநோக்கு
நோய்நோக்கு; ஒன்று அந்நோய் மருந்து!
(குறிப்பறிதல் 1091)

இவள் கண்களில் இரண்டு வகையான பார்வைகள் இருக்கின்றன;
* ஒரு பார்வை = நோயைத் தரும் பார்வை;
* ஒரு பார்வை = அதே நோய்க்கு மருந்து அளிக்கும் பார்வை

கண்ணொடு கண்இணை நோக்கு ஒக்கின் – வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல.
(குறிப்பறிதல் 1100)

கண்களோடு கண்கள் கலந்து ஒன்றுபட்டு விடுமானால்,
வாய்ச்சொற்கள் தேவையற்றுப் போகின்றன.
(நல்லாக் கவனிங்க:
வாய்ச் “சொற்கள்” தான் தேவையற்றுப் போகின்றன; வாய் “முத்தம்” தேவையற்று-ன்னு சொல்லலை பாருங்க:))

வீட்டுப்பாடம்:
முதல் குறளில் = எதுகை என்ன எதுகை? அணி என்ன அணி? – சொல்லுங்க பார்ப்போம்:)
#பழையவகுப்பு-கவனித்தல்-கணக்கெடுப்பு:))

dosa 45/365

Advertisements
Comments
6 Responses to “சிலுக்குறள்!”
 1. சிலுக்கு போட்டோவ டி.பில வச்சிருக்கும்போதே சுதாரிச்சிருக்கணும் :-)

  Like

 2. //நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் – தாக்கணங்கு
  தானைக்கொண்டு அன்னது உடைத்து.//

  முற்று எதுகை – முதல் வரி முழுக்கவே க், க் ன்னு வருவதால். சரியா?

  //* ஒரே சொல், திரும்பத் திரும்ப வந்தா = சொல் பின்வரு நிலையணி
  * ஒரே பொருள், திரும்பத் திரும்ப வந்தா = பொருள் பின்வரு நிலையணி//

  நோக்கு என்ற சொல் நோக்கினால், நோக்கெதிர், நோக்குதல் என்று மூன்று சொற்களாக வருகிறதே, அந்த சொல் மறுபடியும் மறுபடியும் வருகிறது, பொருளும் “பார்க்கும்” என்ற அதே பொருள்.அப்படியானால் சொற்பொருள் பின்வரு நிலையணி
  சரியா?

  amas32

  Like

 3. cheenakay says:

  அட சிலுக்கு பிறந்த நாள் எல்லாம் நினைவு வைத்து சங்கத் தமிழில் தோசை ஒண்ணு சுட்டாச்சா ? பலே பலே – நல்வாழ்த்துகள் கேயாரெஸ் – நட்புடன் சீனா

  Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: