கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் (Mandodari Appraisal)

மண்டோதரி = இராவணின் சீதை!

அதென்ன மண்டோதரி? பேரே வித்தியாசமா இருக்கு-ல்ல?
மண்டோதரி, குண்டோதரி  என்பதெல்லாம் எள்ளல் பேர்வழிகள் Rhyming-ஆ உருவாக்கிய கும்மி!

மண்டோதரி = மந்த + உதரி
= மெல்லிய இடையாள்!
36-24-36 ன்னு சொல்லுவாங்களே; Hourglass! அதே காலக் குடுவை இடுப்பு:)

இப்பேர்ப்பட்ட அழகி = அசுரச் சிற்பி மயனின் மகள்!
வெறும் முக அழகி தானா? அக அழகியும் கூட! இவளையா இராவணன் உதாசீனம் செய்தான்?
வாங்க போவோம் மண்டோதரி appraisal-க்கு! No Read; Hear the Appraisal:)


மண்டோதரியின் இறுதிக் கட்டம்! = இராவணன் உடம்பு தரையில்!

அவ நிலைமை எப்படி இருக்கு? = ஓ-ன்னோ அழுவறாளா?
இல்லை! = நினைந்ததும் மறந்ததும் இலாத நெஞ்சினாள்!
= நினைப்பும் இல்ல, மறப்பும் இல்ல! ஒடம்பால அடி வாங்கினாத் தான் ஓ-ன்னு அழுகை! மனசால அடி வாங்கி வாங்கி…?

அவனைத் தழுவியதும், மண்டோதரி உயிர் விடும் கட்டம் = கம்பனின் உச்ச கட்டக் கவிதை அழகு!

வெள் எருக்கஞ் சடைமுடியான் – வெற்பு எடுத்த திருமேனி –  மேலும் கீழும்
எள் இருக்கும் இடனின்றி – உயிர் இருக்கும் இடம் நாடி – இழைத்தவாறோ?

“கள் இருக்கும் மலர்க்கூந்தல் – சானகியை மனச் சிறையில் – கரந்த காதல்
உள்ளிருக்கும்?‘‘ எனக் கருதி – உடல் புகுந்து தடவியதோ – ஒருவன் வாளி?

(யுத்த காண்டம் – இராவணன் வதைப் படலம்: 10082)

எருக்கம் பூவைச் சூடிய எங்கள் ஈசன் சிவபெருமான் – அவரு மலையே மலைக்க வைச்சான் இராவணன்!
வெற்பெடுத்த வெறும் மேனி, இப்போ “திருமேனி”யாக் கிடக்குது!

எள்ளைப் போல் சிறுசிறு துளையாத் துளைச்சிருக்கு-ன்னு சிலர் பொருள் கொள்ளுவார்கள்! ஆனால் அதையும் தாண்டிய இலக்கியச் சுவை உண்டு!

இறந்தவனுக்கு நீத்தார் கடனாக எள்ளு இறைப்பது வழக்கம்!
அந்த எள்ளும் நீரும் தூவும் போது, அதை ஏற்கக் கூட முடியாத அளவுக்கு, உடம்பில் துளை போட்டிருக்கு!

எள் இருக்க இடம் இன்றி = தூவுற எள், மேனியிலே தங்க முடியாத அளவுக்கு, துளைகளில் போய் சிக்கிக் கொள்கிறதே!
எத்தனை துளைகளைத் தான் நிரப்புவது?
மொத்த உடலையும் எள்ளால் முக்கினால் தான் உண்டு! பாவி இராமா! இப்படியா துளைப்ப்ப்ப்பாய்?


காமம் = இராவணனுக்கா? இராகவனுக்கா?

கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகியை மனச்சிறையில் – கரந்த காதல்
உள்ளிருக்கும் எனக்கருதி உடல்புகுந்து தடவியதோ – ஒருவன் வாளி?

இவன்… எங்கெங்கெல்லாம் என் மனைவியை ஆசைப்பட்டானோ?
அந்த ஒவ்வொரு இடமாகத் தேடி…
அதில் தேங்கியுள்ள சீதையாசை என்னும் காமத்தை அழிக்கிறேன் பார்…
என்று உடல் முழுதும் தடவியதாம் ஒருவன் அம்பு! (வாளி=அம்பு)

இப்படியுமா எண்ணுவான் ஒரு ஆண் மகன்?
= காமம் இராவணனுக்கா? இராகவனுக்கா?

தன்னுடைய போகப் பொருளை இன்னொருத்தன் வைச்சிருந்தான் -ன்னா, சுத்தம் செய்து எடுத்துக் கொள்வதைக் கேள்விப் பட்டிருக்கோம்!
ஆனால் வைச்சிருந்தவனின் உடம்பை…”டேய், இங்கேயா ஆசைப்பட்டாய்? இந்த உறுப்பா காமத்தை விரும்பியது?”-ன்னு
அணுஅணுவா யாரேனும் நுணுக்குவார்களா? = உள்ளிருக்கும் எனக்கருதி உடல் முழுதும் தடவியதோ ஒருவன் வாளி?

சரிஈஈஈ…கள்ளிருக்கும் மலர்க் கூந்தல்?
மலரில், தேன் தானே இருக்கும்? கள் எப்படி இருக்கும்? = புளிச்சி ஊற வச்சா தானே கள்ளு?

இங்கும் கம்பன் தமிழால் விளையாடுகிறான்! = கள்ளிருக்கும் + மலர்கூந்தல் + சானகி!
* கள் இருக்கும் மலரைச், சூடிய சானகியா?
* மலரைச் சூடிய, கள் இருக்கும் சானகியா? :)

கள்ளை எங்கே கொண்டு போய் வைப்பீங்க? = மலரிலா? சானகியிலா?:)

வாடிப் போன சம்பங்கிப் பூ; ஒழுகி வாடை அடிக்கும்!
காட்டிலே அன்று, இராகவன் தன் கையால் வைத்துவிட்ட மலர்;
வதங்கிப் போய், இன்றும் தலையில் தான் இருக்கு! எடுக்கக் கூட அவளுக்குத் தோனலை!
வாடி, ஊறி, தேனே கசந்து கள்ளாய் மாறிடுச்சி! = கள் இருக்கும் மலரை + சூடிய சானகி!

இராவணனுக்கு அவ உடம்பு மேல அப்படியொரு ஆசை! காமக் கடும்புனல்!
* அவ கண்ணு மேல் தன் கண், அவ இதழ் மேல் தன் இதழ்,
* அவள் முலை மேல் தன் மாரு, அவ “அதன்” மேல் தன் “இது”!

அவனுக்குச் சீதை உடம்பிலே வடியும் கள் = மலர் சூடிய + கள்ளிருக்கும் சானகி!

இப்போ புரியுதா கம்பன் கள்? கம்பன் தமிழ்?
இது கம்பன் தமிழ் மட்டுமல்ல! மண்டோதரியின் ஈரத் தமிழ்!
என்னவன், இன்னொரு உடம்பிலே, கள்ளைத் தேடியதை நினைச்சி ஏங்கும் உள்ளம்!

தன் தழைக் கைகளால் – தழுவித் தனி
நின்று அழைத்து உயிர்த்தாள் – உயிர் நீங்கினாள்!

புதிய அரசன் வீடணனை மணந்தாளா? அல்ல!
வடமொழியில் இது சர்வ சாதாரணம் தான்! ஆனா, வால்மீகி கூட அப்படிக் காட்ட அஞ்சுகிறான்!
* வால்மீகியின் மண்டோதரி = இறக்கவில்லை;
* கம்பன் மண்டோதரி = இறக்கிறாள்; இறந்தும் இறவாமல் வாழ்கிறாள், நம் உள்ளங்களில்!

அன்னை மண்டோதரி திருவடிகளே தஞ்சம்!

dosa 44/365 ; kamban 7/52

Advertisements
Comments
4 Responses to “கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் (Mandodari Appraisal)”
 1. ஏன் கம்பன் பாட்காஸ்ட் லேட்டாக வந்தது என்று புரிகிறது.

  சமண இராமாயணம் ஒன்று இருப்பது இன்று தான் அறிந்து கொண்டேன்.

  அன்பில்லாத திருமண வாழ்க்கை கொடிது கொடிது! மண்டோதரியும் இராவணனும் ஒரே அறையை பகிர்ந்து கொள்ளவில்லை. சீதையின் துன்பத்தை நாம் பலமுறை வருத்ததுடன் நினைத்துக் கொள்கிறோம். அதை விட துன்பத்தை அனுபவித்து உள்ளாள் மண்டோதரி என்கிற பத்தினி தெய்வம். மாயன் வடித்த அழகான பெண்! மனசால அடி வாங்கி வாங்கி என்று நீங்கள் சொல்வது சத்திய வாக்கு. கணவன் அவள் சொற் பேச்சை கேட்கவில்லை. இன்னொருவன் மனைவியை அவள் விருப்பத்திற்கு மாறாக கவர்ந்து வந்து கொடுமை படுத்துகிறான். எல்லா வகையிலும் சிறந்த தன்னை ஒதுக்கி இன்னொரு பெண்ணை நாடுகிறான் என்பது முதல் வருத்தம். தவறான பாதையில் சென்று இலங்கைக்கே அழிவைத் தேடி தந்து விடுவானோ என்பது மற்றொரு அச்சம்.

  பிள்ளைகள் அனைவரையும் கண் முன்னே பறிகொடுக்கிறாள். அதிலும் இந்த்ரஜித்தின் தலையில்லா உடலை பார்க்க வேண்டிய மகா துர்பாக்கிய நிலை.
  எத்தனை துன்பங்களை தாங்கி நிற்கிறாள்! கடைசியில் கணவனையும் இழக்கிறாள் கொடுமையான போரில். பொத்தலாகிப் போன அவன் உடலைத் தழுவி உயிர் நீக்கிறாள் இந்த பெண் தெய்வம். இன்றும் war widows சிலரிடம் பேசும் பொழுது கணவனை இழந்த துக்கத்தோடு போரில் துன்பப்பட்டு அவர்கள் மாண்ட துக்கம் தான் அவர்கள் மனதில் ஆழ பதிந்து மனதை உருக்குவதைப் பார்த்திருக்கிறேன்.

  இலக்கியச் சுவையோடு காவியத் தலைவி மண்டோதரிக்கு ஒரு சிறந்த முடிவைக் கொடுத்திருக்கிறான் கம்பன். கற்புக்கரசியும் கணவன் மேல் பேரன்பும் கொண்ட அவள் முடிவு இவ்வாறு தான் இருந்திருக்கும். கணவனும் குழந்தைகளும் போய் மைத்துணன் அரசாளுமையில் அவள் வாழ வேண்டிய நிர்பந்தம் அவளுக்கு தேவை இல்லை.

  amas32

  Like

  • //ஏன் கம்பன் பாட்காஸ்ட் லேட்டாக வந்தது என்று புரிகிறது//
   Sorry ma!
   Is there a way, we can cut portion of the speech, instead of re-recording the whole podcast again & again?

   //சமண இராமாயணம் ஒன்று இருப்பது இன்று தான் அறிந்து கொண்டேன்//
   உண்டு!
   அதில் இராவணன், அடுத்த பிறவியில் தீர்த்தங்கரராகத் தோன்றி, கழுவாயும் தேடிக் கொள்வான்!

   //அன்பில்லாத திருமண வாழ்க்கை கொடிது கொடிது! மண்டோதரியும் இராவணனும் ஒரே அறையை பகிர்ந்து கொள்ளவில்லை//

   இளமையில் இராவணன் அப்படி-இப்படி -ன்னா கூட, மன்னிச்சிறலாம்!
   ஆனா நன்கு வளர்ந்து விட்ட பிள்ளைகளின் முன்பு… மண்டோதரி எங்கே மூஞ்சை வச்சிப்பா?
   வயது கூடக் கூடத் தானே, அரவணைக்கும் பாதுகாப்பு உணர்வு கூடணும்?
   அப்போவும் தனி அறையில் மண்டோதரி; இதுவா இராவண சிவ-பக்தி?:(

   //சீதையின் துன்பத்தை நாம் பலமுறை வருத்ததுடன் நினைத்துக் கொள்கிறோம்.
   அதை விட துன்பத்தை அனுபவித்து உள்ளாள் மண்டோதரி//

   Sita’s Husband Never “Ignored” her!
   Even “Suspicion” – It came only after she 1st suspected Lakshmana
   Till such time, she was enjoying only!
   What Ragavan did was “public bashing”, which he cud have avoided:(

   But Mandodari? Right from the beginning, she was just use & throw!:(
   She never suspected her machinans – Veedanan or Kumban;
   She even takes care of veedanan’s daughter, Thirisadai, when Ravanan tries to disown that family;
   Poor soul, All she had was = immaculate love

   //பத்தினி தெய்வம்//
   Yes!
   She deserves the place in temples, more than Sita!

   Like

 2. cheenakay says:

  அன்பின் கேயாரெஸ் – அருமையான விளக்கம் – ஒலி வடிவம் அதனை விட அருமை. யாரின் குரல் அது ? கேயாரெஸுடையதா ? மண்டோதரி எங்கு அறிமுகப் படுத்தப் படுகிறாள் ? அனுமன் சீதையினைத் தேடி வரும் போது அறிமுகப் படுத்தப் படுகிறாள். . மண்டோதரியினைக் கண்டு இவள் தான் சீதையோ என அனுமனே நினைக்கும் அளவிற்கு மண்டோதரியின் கற்பு நிலையும் அங்கு கூறப்பட்டிருகிறது. இருப்பினும் கணவனைப் பிரிந்த சீதாப் பிராட்டி இவ்வளவு அலங்காரம் செய்து கோண்டு மகிழ்ச்சிட்யுடன் இருக்க இயலாதே என்ற ஐயத்தின் அடிப்படையில் – இவள் சீதையல்ல என முடிவுக்கு வருகிறான். கம்பன சீதையினை எவ்வளவு உயரத்தில் வைக்கிறானோ அதே உய்ரத்தில் மண்டோதரியையும் வைக்கிறான்.

  இரவணனை எங்கு கம்பன் அறிமுகப் படுத்துகிறான் ? – இராமன் குழந்தையாக இருந்த காலகட்டத்தில் கூனியை அறிமுகப் படுத்தும் போது இராவணனனையும் அறிமுக்ப்படுத்துகிறான். இருவரும் கெட்டவர்கள் என்பதனாலா இருவரும் ஒன்றாக அறிமுகப் படுத்தப் படுகிறார்கள் ? இல்லை – பிற்காலத்தில் இராவணனாலும் இப்பொழுது கூனியாலும் இராமனுக்குத் துன்பம் விளையும் என்பதனலா ?

  இராவணன்னும் மண்டோதரியும் தனித்த்னி வீட்டில் வசிக்கிறாரகள். இராவணனுக்குக் காமக் அதிக்ம – மண்டோதரியின் கற்பு அவளைத் தனியாக வசிக்க வைக்கிறான் கம்பன்.

  இராவணன இறந்த உடன் வீடணன் இராமனால் பட்டாபிஷேகம் செய்யப்பட்டு ஆட்சி செய்யும் போது – மண்டோதரி அக்கால வழக்கப் படி வீடணனுடன் வாழ்க்கை நடத்தி இருக்க்லாமே ? ஏன் நடத்த வில்லை ? கம்பன் மண்டோதரியின் கற்பினை சீதையின் கற்பினிற்கு ஈடாகக் கொண்டு செல்கிறான்.

  கம்பன் இராமாயணத்தில் மண்டோதரி இறுதியில் இறக்கிறாள். ஆனால் வால்மீகியோ மாறுபடுகிறான்.

  நல்லதொரு தோசை கேயாரெஸ்.

  ந்ல்வாழ்த்துகள்
  நட்புடன் சீனா

  Like

  • //யாரின் குரல் அது ?//
   :) my voice only!

   //கம்பன சீதையினை எவ்வளவு உயரத்தில் வைக்கிறானோ அதே உய்ரத்தில் மண்டோதரியையும் வைக்கிறான்//
   yes!

   //இல்லை – பிற்காலத்தில் இராவணனாலும் இப்பொழுது கூனியாலும் இராமனுக்குத் துன்பம் விளையும் என்பதனலா ?//
   அதே! சரியாகப் பிடித்துக் கொண்டீர்கள்!

   //கம்பன் இராமாயணத்தில் மண்டோதரி இறுதியில் இறக்கிறாள். ஆனால் வால்மீகியோ மாறுபடுகிறான்.
   நல்லதொரு தோசை கேயாரெஸ்//

   Dank u Cheena sir!
   Hope u liked the podcast, even though i made it late!

   Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: