பிச்சிப் பூ வைச்ச கிளி!

“பிச்சிப் பூ” பார்த்து இருக்கீங்களா?
சென்னை மக்களுக்கு இந்தப் பேரு தெரியாது; ஆனா பூவைப் பாத்திருக்காங்க!:)
மதுரை-தூத்துக்குடி, தெக்கத்திப் பக்கம் பலருக்கும் தெரியும்!

உச்சி வகுந்தெடுத்துப், “பிச்சிப் பூ” வைச்ச கிளி…
என்கிற காவியப் பாடலின் வாயிலாக, வடக்கத்தி மக்களுக்கும் அறிமுகம் செஞ்சி வைச்சாரு திரையிசைக் கவிஞர் புலமைப் பித்தன்!

“மெட்றாஸ்”-ல்ல, பூவுக்குக் கூட “ஜாதி” பார்ப்பாங்களோ?:))
கிட்டத்தட்ட, “ஜாதி”மல்லி -ன்னு நீங்க சொல்வதே = பிச்சிப்பூ; ஆனா அது இல்ல;
அதை விட செவப்பு  மிக்கது; ஒரு வித ஊதாச் செவப்பு ரேகை விரவி விரவி இருக்கும் ஒவ்வொரு இதழிலும்! ஒரு விதக் காட்டு வாசம்; விலையும் கம்மி;

கிராமத்தில், எனக்குப் பூ-ன்னாலே கொள்ளை ஆசை!
செடியிலும் பாத்து மகிழ்வேன்; தனியாவும் பாத்து மகிழ்வேன்; தொடுக்கவும் தெரியும்:)
சின்ன வயசில், இதை வச்சி என்னைக் கேலியும் பேசுவாங்க:) மாமா, என் பேரையே மாத்தி வச்சிக் கூப்புடுவாரு!:))

“அந்த மென்மை-வண்ணம்” = என்னமோ பண்ணும்!
குறிப்பா, எனக்குப் பிடிச்ச வண்ணங்கள்
= White & Violet; பிச்சிப் பூ & சங்குப் பூ

ஒன்னா வச்சிக் கட்டி, அதை முருகன் கழுத்துல போட்டா…
Bright White & Sexy Violet
= Color Combination on His Neck….. So Romantic:)

வாங்க, இன்னிக்கி, சங்கத்தமிழில் பிச்சிப் பூவைப் பார்க்கலாம்!


பாடல்: குறுந்தொகை 94
கவிஞர்: கந்தக் கண்ணனார்
(பேரே நல்லா இருக்கு-ல்ல?
கந்தன் + கண்ணன் = புகுந்த வீடு + பொறந்த வீடு; காதலனும் இருக்கான் + அப்பாவும் இருக்காரு:)))

திணை: முல்லை
துறை: பருவம் கண்டு ஆற்றாமை

பெருந் தண் மாரிப் பேதைப் பித்திகத்து
அரும்பே முன்னும் மிகச் சிவந்தனவே;
யானே மருள்வென்? தோழி! பானாள்
இன்னும் தமியர் கேட்பின், பெயர்த்தும்
என் ஆகுவர்கொல், பிரிந்திசினோரே?
அருவி மா மலைத் தத்தக்
கருவி மா மழைச் சிலைதரும் குரலே!

டபராவில் காபி:

மழைக் கால அறிகுறிகள் வந்து விட்டன, ஆனா அவன் இன்னும் வரலை;
அவனையே நினைச்சிக்கிட்டு இருந்தா, அங்கே, அவன் போன வேலை முடியாதோ?

அவன் வேலை முடியணுமே!
அதே சமயம், அவனை நினைக்காமலும் இருக்க முடியலையே -ன்னு ஏங்கி..
= இருத்தலும் இருத்தல் நிமித்தமும்!

ஏக்கத்துக்குப் பின் கூடல்; முல்லைக்குப் பின் குறிஞ்சி!


காபி உறிஞ்சல்:

பெருந் தண் மாரிப், பேதைப் பித்திகத்து
அரும்பே முன்னும், மிகச் சிவந்தனவே;

பித்திகம் = பிச்சிப் பூ!
அது என்ன பிச்சி? = பித்து பிடிக்கச் செய்வது;
பேர்த்தும் அவனுக்கே “பிச்சி” ஆனேன் = அப்பர் பெருமானின் அபூர்வ “நாயகி பாவம்” பாடல்!

பெரும் தண் மாரி = மிகுந்த குளிருள்ள மழை!
கார் காலம்; பிச்சிப் பூ அரும்பெல்லாம்… முன்னை விட இன்னும் சிவப்பாகி விட்டன!

யானே மருள்வென்? தோழி! பானாள்
இன்னும் தமியர் கேட்பின், பெயர்த்தும்
என் ஆகுவர்கொல், பிரிந்து இசினோரே?

தோழி, நான் மனசுக்குள் சிவப்பதால், பூ அரும்பு, இன்னும் சிவப்பாவுதோ?
பானாள் = பாழ் + நாள் = இரவு

இரவில், என் தலைவர் (தமியர்), என் நிலைமையை நினைச்சிப் பார்ப்பாரோ?
என்னை விட்டுப் பிரிந்து போன அவர்… தன் வேலையை முடிக்காமயே திரும்பி வந்துருவாரோ?
என்ன ஆவாரோ? = என் ஆகுவர் கொல்?

“கொல்” = தலைவனைக் கொல்லு -ன்னு அர்த்தம் பண்ணிக்காதீங்க; பாவம் தலைவன்:)
“கொல்” = இடைச்சொல்; வியப்பு குறித்து வந்த இடைச் சொல்!
(என் நோற்றான் கொல்! எனும் சொல்);  உங்களுக்குத் தெரிஞ்ச வேற இடைச் சொற்களைச் சொல்லுங்க பார்ப்போம்:)

அருவி மா மலைத் தத்தக்
கருவி மா மழைச் சிலை தரும் குரலே!

அருவித் தண்ணி, மலையில், தத்தித் தத்தி விழுது!
கருவி=மேகம்! மேகத் தண்ணி, தத்தித் தத்தி விழுது!
இந்த இரண்டு தத்தித் தத்தி ஓசைகளும்… என்னை என்னமோ பண்ணுதே!

dosa 39/365

Advertisements
Comments
5 Responses to “பிச்சிப் பூ வைச்ச கிளி!”
 1. அன்பின் கேயாரெஸ் – அதெப்படிப்பா உனக்கு செக்ஸி வயலெட்டெல்லாம் எழுத்துல வருது – சூப்பரா நகைச்சுவை கலந்த விளக்கங்களுடன் கூடிய சங்கத்தமிழ்ப் பாட்லகள் அலச்ல். வாழ்க வளமுடன் – நட்புடன் சீனா

  Like

  • chummaa cheena sir, violet is my most fave color:)
   நகைச்சுவையாச் சொன்னாத் தான், சங்கத் தமிழ் எளிமை, பசங்களைச் சென்றடையும்:)
   சில பல படங்களும் அதுக்கே:))

   Like

 2. கந்தக் கண்ணனார் ரொம்ப அருமையான பெயர் :-)

  பிச்சிப் பூவிற்கு மயக்கும் நறுமணம் உண்டு. பிச்சிப்பூவின் காம்பிற்கும் மலருக்கும் இடையில் ஒரு அழகிய இளஞ்சிவப்பு நிறம் இருக்கும். வெள்ளை, இளஞ்சிவப்பு , பச்சை காம்பு ஆகியவற்றின் நிறக் கோர்வை அருமை! இறைவன் செய்வித்த அதிசயங்களில் இது இன்னுமொரு அதிசயம் :-)

  எல்லா பெண்களுக்கும் தலைவனைப் பற்றியே எப்பொழுதும் கவலை! அதுவும் மழைக் காலம் வந்து விட்டாலே மனதில் பயம் குடிகொள்ளும். சங்கப் பாடல்களில் இருந்து ஒன்று நன்றாகத் தெரிகிறது. அன்றும், இன்றும் பெண் ஆண் இவர்களின் உறவும், பிரிவும், இன்பமும், துன்பமும்,அதனின் காரணிகளிலும் மாற்றமில்லை.

  //அருவி மா மலைத் தத்தக்// இந்த வரி மிகவும் அழகாக உள்ளது :-) பொதுவில் இந்தப் பாடல் புரிந்து கொள்ள சிறிது கடினமாக உள்ளது.

  amas32

  Like

 3. கந்தக் கண்ணனார் ரொம்ப அருமையான பெயர் :-)

  பிச்சிப் பூவிற்கு மயக்கும் நறுமணம் உண்டு. பிச்சிப்பூவின் காம்பிற்கும் மலருக்கும் இடையில் ஒரு அழகிய இளஞ்சிவப்பு நிறம் இருக்கும். வெள்ளை, இளஞ்சிவப்பு , பச்சை காம்பு ஆகியவற்றின் நிறக் கோர்வை அருமை! இறைவன் செய்வித்து இருக்கும் அதிசயங்களில் இது இன்னுமொரு அதிசயம் :-)

  எல்லா பெண்களுக்கும் தலைவனைப் பற்றியே எப்பொழுதும் கவலை! அதுவும் மழைக் காலம் வந்து விட்டாலே மனதில் பயம் குடிகொள்ளும். சங்கப் பாடல்களில் இருந்து ஒன்று நன்றாகத் தெரிகிறது. அன்றும், இன்றும் பெண் ஆண் இவர்களின் உறவும், பிரிவும், இன்பமும், துன்பமும்,அதனின் காரணிகளிலும் மாற்றமில்லை.

  //அருவி மா மலைத் தத்தக்// இந்த வரி மிகவும் அழகாக உள்ளது :-) பொதுவில் இந்தப் பாடல் புரிந்து கொள்ள சிறிது கடினமாக உள்ளது.

  amas32

  Like

  • ஆமாம்-ம்மா! கந்தக் கண்ணன் = I instantly liked it, even though this song is a bit tough:)

   //பிச்சிப்பூவின் காம்பிற்கும் மலருக்கும் இடையில் ஒரு அழகிய இளஞ்சிவப்பு நிறம் இருக்கும்
   வெள்ளை, இளஞ்சிவப்பு , பச்சை காம்பு ஆகியவற்றின் நிறக் கோர்வை //
   haiyo, i enjoy this observation, yessu, itz very color intensive

   //அன்றும், இன்றும் பெண் ஆண் இவர்களின் உறவும், பிரிவும், இன்பமும், துன்பமும்,அதனின் காரணிகளிலும் மாற்றமில்லை//
   No comments:))

   Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: