ஆண்மையுள்ள பெண்!

ஆண்மையுள்ள பெண்! பெண்மையுள்ள ஆண்!
= என்னய்யா அநியாயம் இது?

ஒரு பொண்ணு எப்பிடிய்யா ஆண்மையோடு இருக்கலாம்?
அதை விடக் கேவலம்! ஒரு ஆணு… பெண்மையா-மென்மையா இருப்பதா?
இதானா சங்கத் தமிழ் சொல்லுது? சேச்சே!:))

* ஆண்மை தவறேல் -ன்னு பாரதி சொன்னது = இரு பாலருக்கும் தான்!
* கற்பும் அப்படியே = இரு பாலருக்கும்!

ஆண்மை-பெண்மை = உடலுக்குத் தான்! உயிருக்கு அல்ல!
* ஆளுமை = ஆண்மை! (ஆள்)
* பேணுவது = பெண்மை! (பேண்)
ஒவ்வொரு ஆண்மையிலும், ஒரு பெண்மை ஒளிந்து கொண்டு தான் இருக்கு!

வாங்க பார்ப்போம், இன்றைய பாடல் = குறுந்தொகை; சொல்வது = ஒளவை!


பாடல்: குறுந்தொகை 43
கவிஞர்: ஒளவையார்
திணை: பாலை
துறை: பிரிவிடை மெலிந்த தலைவி சொல்லியது

“செல்வார் அல்லர்” என்று யான் இகழ்ந்தனனே;
“ஒல்வாள் அல்லள்” என்று அவர் இகழ்ந்தனரே;
ஆயிடை, இரு பேர் ஆண்மை செய்த பூசல்,
நல் அராக் கதுவி ஆங்கு, என்
அல்லல் நெஞ்சம் அலமலக்கு உறுமே!


காபி உறிஞ்சல்:
(சூழல்: தலைவன்-தலைவி பிரிவு; தற்காலிகமோ, கோவமோ, வெளியூர்ப் பயணமோ – யாம் அறியோம்! ஆனால் பிரிவு வாட்டுவது என்னவோ உண்மை)

‘செல்வார் அல்லர்’ என்று யான் இகழ்ந்தனனே;
‘ஒல்வாள் அல்லள்’ என்று அவர் இகழ்ந்தனரே;

* நான் = “அவர் எப்படியும், என்னை விட்டுவிட மாட்டாரு” -ன்னு சோர்ந்து இருந்தேன்!
* அவர் = “இவ கிட்டச் சொன்னாப் பிரியவே விட மாட்டா”  -ன்னு சோர்ந்து இருந்தாரு!

செல்வார் அல்லர்; ஒல்வாள் அல்லள்!
என்ன அழகான தமிழ்த் தொடர்மொழி!
ஒல்லுதல் = ஒப்புதல்; ஒல்வாள் அல்லள் = ஒப்புக்க மாட்டாள்;
இகழ்ந்தனன் = அசிங்க அசிங்கமாத் திட்டினான் -ன்னு literalஆ எடுத்துக்கப்பிடாது:) இகழ்ச்சி = சோர்வு-குறை!

ஆயிடை, இரு பேர் ஆண்மை செய்த பூசல்

இப்பிடி, நாங்க ரெண்டு பேரும், சோர்ந்து போய் இருந்த காலம்…
ஒருவருக்கொருவர் பேச்சில்லை!
எனக்கும் ஆண்மை! அவருக்கும் ஆண்மை!

என் ஆளுமை-திண்மை எனக்கு; அவர் ஆளுமை-திண்மை அவருக்கு!
எங்கள் ஆளுமைப் பூசல்!
இரு பேர் ஆளுமை செய்த பூசல்!

நல் அராக் கதுவி ஆங்கு, என்
அல்லல் நெஞ்சம் அலமலக்கு உறுமே!

இதனால் என் நெஞ்சு = பாம்பு பிடிச்சாப் போல ஆயிருச்சி!
நல் அரா = நல்ல பாம்பு; கதுவி = கடிச்சி
காய்ச்சல்-ன்னா = வலி இருக்கும்; ஆனா மற்றதிலும் லேசா ஈடுபடலாம்; வலி கொல்லாது!
ஆனா, பாம்பு கடிச்சா = கடைசி வரைக்கும் வலி; அதை இறக்கினாத் தான் மறு வேலையே!

அப்படி என் நெஞ்சம் = அலமலக்கு உறுமே!
அது என்ன அலமலக்கு? சிலுக்கு மாதிரி?:)

அலமலக்கு = அலம் + அலக்கு
* அலம் = நிறைவு;
* அலக்கு = குறைவு; வீழ்ச்சி (ஏன்டா புளியமரத்தை இந்த அலக்கு அலக்குற? -ன்னு கேப்பாய்ங்க)
அலம் + அலக்கு = நிறைவும்-குறைவும்
(அவ ஆண்மையால் நிறைவு/பெருமிதம், அவன் ஆண்மையால் குறைவு/விட்டுக்குடுத்தல்)

ஒவ்வொரு பேரும் எப்படி இருக்கு பாருங்க;
சங்கத் தமிழ்ச் சொல்லாட்சி! சங்கத் தமிழ்க் கருத்தாட்சி!
= செல்வார் அல்லர்! ஒல்வாள் அல்லள்!
= இரு பேர் ஆண்மை செய்த பூசல்!
முருகா – உன் தமிழ்!

dosa 38/365

Advertisements
Comments
5 Responses to “ஆண்மையுள்ள பெண்!”
 1. சொ.வினைதீர்த்தான் says:

  மிந்தமிழில் வந்த பதிவும் என் பின்னூட்டமும் நண்பர்கள் பார்வைக்கு.
  அன்புடன்
  சொ.வினைதீர்த்தான்.

  இது பாரதி பாஞ்சாலி சபத்தின் தொடக்கத்தில் சொல்லுன் வார்த்தைகள். எட்டயபுரத்திலும் மதுரையிலும் குறிக்கோளின்றித் தனிமை இரக்கம் பாடிக் கொண்டிருந்தவனை பத்திரிக்கையில் மொழிபெயர்ப்பவனாக அடியெடுத்துவைக்க உதவியது சுதேசமித்திரன் ஆசிரியரின் தொலை நோக்குப் பார்வை

  தமிழகத்தில் நூல் மற்றும் சஞ்சிகை படிப்போர்களின் எண்ணிக்கை மக்கள்தொகை அடிப்படையில் மிகவும் குறைவு. அந்தக் குறைவான எண்ணிக்கையிலும் ஆங்கிலத்தில் படிப்பவர்களே பெரும்பான்மையினர். தமிழில் படிக்கும் சொற்ப எண்ணிக்கையில் உள்ளவர்களுக்கு உலக நடப்பைதமிழில் கொணரவே சுதேசமித்திரனை ஆரம்பித்து அந்தச் செயல் வெற்றியடையப் பாரதியாரைப் பயன்படுத்தியது சுப்பிரமணியர்களின் மகத்தான வெற்றி

  பாரதி பரலி.சு நெல்லயப்பருக்கு எழிதைய கடிதத்தில் தம்பி தமிழகத்துக்கு வெளியே மற்றமொழிகளில் சஞ்சிகைகள் எவ்வாறு புதிய செய்திகளைத் தாங்கி வருகிறது என்பதை நீ அறிந்துகொள்ளவேண்டியது என்று எழுதினார்

  நூற்றாண்டுகளை அடையப்போகும் இந்த உள்ளூர் வயமாக்கல் கனவுச் சிந்தனை இன்று என்ன நிலையில் இருக்கிறது

  உலகிலேயே 100% ஆங்கிலம் தெரிந்த பட்டதாரிகள் வாழும்நாடு இந்தியா. 400 ஆண்டுகளாக ஆங்கிலம் பேசியும் 40 ஆண்டுகளாக ஆங்கிலம் பேசும் சீனர்களைச் சையான ஆங்கிலம் பேசும் தகுதி அடிப்படையில் வெற்றி பெற முடியாதவர்கள் என்ற பெருமையைப் பெற்றவர்கள்

  பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தமிழ் படிப்பது தேர்வில் வெற்றிபெற மட்டுமே.

  ஆங்கிலச் சாரளத்தின்வழியே வெளி உலகைப் பார்க்கும் அளவுக்குத் தமிழ் வாசலில் நின்றால் தெரிவதில்லை என்று குறை இருப்பது உண்மை

  படித்து அறிந்து புரிந்து உணர்ந்து மகிழ்ந்து வாழ வழியே இல்லாத சங்கப் பாடல்களையும் இலக்கியத்தையும் இந்த தமிழ் மாணவர்கள் பொதுமக்கள் என்ற இரண்டாண்டு நூலறிவோர்களுக்குக் கொண்டு செல்வது எப்படி

  அறிஞர்கள் அருள் கூர்ந்து விளக்க வேண்டும்

  நாகராசன்

  to mintamil, Nagarajan

  DOSA365.wordpress.com என்ற வலைத்தளம் பாருங்கள் சார்.
  அன்புடன்
  சொ.வினைதீர்த்தான்

  Like

  • நன்றி வினைதீர்த்தான்
   நீங்க மின்தமிழ்-ல சொன்னாலும் சொன்னீங்க; நா.கண்ணன் ஐயா கேக்கப் போறாரு – “என் கிட்ட கூட ஒரு வார்த்தை சொல்லாம, தோசை சுடத் துவங்கியாச்சா?”-ன்னு:))

   Like

 2. அன்பின் கேயாரெஸ் – சங்கத் தமிழில் அவ்வையின் அழகு தமிழில் – ஆணும் பெண்ணும் ஆண்மையுடன் இருப்பின் – அட்டா – எப்படி இருந்திருக்கும். கேயாரெஸ்ஸின் விள்க்கம் அருமை – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

  Like

 3. Equal partners! ஒருவருக்கு மற்றொருவர் சளைத்தவர் அல்லர். ஆனால் குடும்ப வாழ்க்கைக்கு இது ஒத்து வராது. ஒருவர் தணிந்து போக வேண்டும்.ஆண் தன்மை அதிகம் உடைய பெண்ணாக இருப்பின், அவள் துணைவன் சிறிது பெண் தன்மையுடை ஆணாக இருப்பது நலம். இல்லையென்றால் வீடு தினம் போர்க்களம் தான்.

  பரிவோடு தலை கோதி விட்டு, உடல் நலக் குறைவின் போது காபி போட்டு தரும் ஆண் ஒரு பெண்ணுக்குக் கிடைத்து விட்டால் இனி எல்லாம் சுகமே என்று அவளுக்கு பாடத் தோன்றும் :-) தாய்மை உணர்வு ஆணுக்கும் உண்டு. அதை வெளிப்படுத்த நிறைய பேருக்கு தயக்கம்.

  அதே போல ஒரு பெண்ணும் பல முறை ஆண் போல் செயல் பட வேண்டிய அவசியம் சங்க காலத்தில் இருந்து இன்று வரை தொடர்ந்து வந்து கொண்டு தான் இருக்கிறது. காடு கழனியில் ஆண் போல வேலை செய்து இன்றும் கிராமத்துப் பெண்கள் தங்கள் குழந்தைகளை காப்பாற்றுகின்றனர். சில தைரியமான முடிவுகளை தனித்து எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கும் ஆளாகின்றனர், அதை நன்றாகவும் முடிவெடுத்து செயல் படுகின்றனர்.

  ஆனால் இருவரும் ஆண் தன்மையுடன் செயல்பட்டால் ego clash வந்து மனச் சோர்வு ஏற்படுவது இயற்கையே!

  amas32

  Like

  • //ஆண் தன்மை அதிகம் உடைய பெண்ணாக இருப்பின், அவள் துணைவன் சிறிது பெண் தன்மையுடை ஆணாக இருப்பது நலம்//
   :))

   //பரிவோடு தலை கோதி விட்டு, உடல் நலக் குறைவின் போது காபி போட்டு தரும் ஆண் ஒரு பெண்ணுக்குக் கிடைத்து விட்டால் //
   lemme do this:)

   //காடு கழனியில் ஆண் போல வேலை செய்து இன்றும் கிராமத்துப் பெண்கள்//
   True ma! I am so glad u told this; My athai-s & periyammas toil like this in kazhani

   Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: