இராவணனின் தம்பியோ பரதன்! (Kumbakarnan Appraisal)

இன்று #dosa365 அல்ல; #kamban52 ; வெள்ளிக்கிழமையாச்சே!:)
வாங்க, கம்பன் செய்யும் – Performance Appraisal of கும்பகருணன்!

மொத்தம் 3 கருணன்கள் உண்டு; (கர்ணம் = காது)

* வள்ளல் கர்ணன் = குண்டலங்களோடு பிறந்த காது
* கும்ப கர்ணன் = பானை போன்று பெருங் காது
* சூர்ப்ப கர்ணன் = விநாயகர்; முறம் போன்று அகன்ற காது

பிள்ளையார் -ன்னா அழகு/ஞானம் -ன்னே புராணங்கள் பேசிப்பேசி, ஒரு பிம்பம்!
ஆனால் அதே காதுடைய கும்பகருணன்?
= ராட்சஸன், பார்க்கச் சகிக்காதவன், பாந்த்ரா சைசுக்கு இருப்பவன் -ன்னு பிம்பம்:( உண்மை அதுவல்ல!

வால்மீகி காட்ட மறுக்கும் கும்பனின் அழகும் குணமும், கம்பனே காட்டுகிறான்!

கும்பகருணன், தன் அழகிலே மிக்க நாட்டம் மிக்கவன்!
காதுகளே அவன் அழகு! = செவிச் செல்வம்:)

தன் அழகு கெடாமல், யாரும் தன் உடலைக் கூடப் பார்க்க வேணாம் -ன்னு, தனிமையில் இறக்க நினைக்கும் ஓர் அற்புத வீரன்!
வாங்க செல்வோம் Appraisalக்கு!
As usual, Other’s Appraisal is HR Confidential; So No See; Just Hear:)வால்மீகி காட்டாத, கம்பன் காட்டும் Yes – No உரையாடல்! = எது “தருமம்”?
(யுத்த காண்டம் – கும்பகருண வதைப் படலம்)

தீயவை செய்வர் ஆகின், சிறந்தவர், பிறந்த உற்றார்,
தாய்அவை, தந்தைமார் என்று உணர்வரோ, தருமம் பார்ப்பார்?
நீ அவை அறிதி அன்றே? நினக்கு நான் உரைப்பது என்னோ?
தூயவை துணிந்து போது, பழி வந்து தொடர்வது உண்டோ? (7540)

நீர்க் கோல வாழ்வை நச்சி, நெடிது நாள் வளர்த்துப் பின்னைப்
போர்க் கோலம் செய்து விட்டாற்கு உயிர் கொடாது அங்குப் போகேன்;
தார்க் கோல மேனி மைந்த! என் துயர் தவிர்த்தி ஆகின்,
கார்க் கோல மேனியானைக் கூடுதி, கடிதின் ஏகி (7553)

அன்பே சிவம்! அன்பே தருமம்!
= செஞ்சோற்றுக் கடன்? “சோறு துன்னுட்டோம்” -ன்னா? அல்ல!
= அன்பே இல்லாமல், மனசில் அய்யோ -ன்னு ஒருத்தன் போயீறக் கூடாது! அதனால்!
= நனி விரும்பிக் கொண்டாரை, அல்லார் எனினும் அடக்கிக் கொளல் வேண்டும் – அதனால்!


அன்பே சிவம் -ன்னு வாழ்ந்த தம்பிக்கு, எப்படிப்பட்ட அண்ணன் -ன்னும் பார்க்க வேணாமா?

* இராமனின் உடன்பிறப்புக்கள் = பரதன், இலக்குவன், சத்துருக்கனன்
* உடன் பிறவா உடன் பிறப்புக்கள் = குகன், சுக்கிரீவன், வீடணன்

இதில், இலக்குவனே, இராகவனுக்கு நெருங்கியவன் போலத் தோனும்!
ஆனால்  இராகவன் உள்ளத்தில் = பரதனே நெருக்கம்!
மனைவியின் முலை மேல் ஆட்டிய கணையாழி-யையே பரதனுக்குத் தரும் அளவுக்கு நெருக்கம்! காண்க இப்பதிவு!

* ஒருவருடன், கூடவே இருந்து அன்பு, சிறப்பு தான்; அது = இலக்குவன்!
* ஆனா ஒரு மூலையில்… ”அவன் இட்ட வழக்காய்”, அவனே -ன்னு = பரதன்!

இலக்குவன், இராகவனை எதிர்த்துப் பேசுவான், பிடிவாதம் பிடிப்பான், பரதனைக் கொல்லவும் துணிவான்! பரதன் அப்படியல்ல! மாற்றுக் கருத்தை “பணிவு” என்றே வைப்பான்!
ஏற்றுக் கொள்ளா விட்டால், “இராகவா” ன்னு அவன் இட்ட வழக்காய், வாழ்ந்து முடிவான்!

*  இராகவனுக்கு = பரதன்!
*  இராவணனுக்கு = கும்பன்!

அதான், பெற்ற மகன் இந்திரசித்துக்கும் கலங்கி அழாத இராவணன்…
தம்பி கும்பனுக்கு மட்டும், மாற்றாள் முன்னிலையில், மண்ணில் புரண்டு, அடித்து அழுகிறான்!
அத்தான் – என்னத்தான் மெட்டில்…கண்ணதாசன் எழுதினானா?
யார் சொன்னது? கம்பனே எழுதினான்!:)) கும்பனுக்குக் கலங்கி அழும் இராவணன்!

தன்னைத்தான், தம்பியைத்தான், தானைத் தலைவனைத்தான்,
மன்னைத்தான், மைந்தனைத்தான், மாருதத்தின் காதலைத்தான்,
பின்னைக் கரடிக்கு இறையைத்தான், பேர் மாய்த்தாய்
என்னத்தான் கேட்டிலேன்; என் ஆனவாறு இதுவே??? 

மாயா சனகப் படலம் – அசோக வனத்தில் இராவணன் அலறல்(7845)

கும்பகருணனின் இறுதியே = இராவணனை உறுதி ஆக்குகிறது!
கம்பன் வாழ்க! கும்பன் வாழ்க!!

dosa 37/365 #kamban 6/52

Advertisements
Comments
4 Responses to “இராவணனின் தம்பியோ பரதன்! (Kumbakarnan Appraisal)”
 1. ஒவ்வொரு கதா பாத்திரத்தையும் எப்படி ஆழ்ந்து சிந்தித்து உருவாகியிருக்கிறார் கம்பன்! ஆங்கில சிட்காம்களில் எனக்கு ரொம்பப் பிடித்தது பாத்திர படைப்பு தான். Each character will be defined in the pilot show itself and will remain the same even if the show runs for ten seasons. A lot of thought, research and understanding goes into defining the character much before the script writing begins.

  இங்கே இராமாயணம் உண்மை காவியம். அதில் வரும் அத்தனை பேரையும் கம்பன் கை வண்ணத்தால் நாம் நேசிக்க ஆரம்பிக்கிறோம். He first shows the good in each person. கெட்டதை சொல்லும் பொழுதும் நாசூக்காகச் சொல்கிறார். முழு வில்லனாக யாரையும் அவர் சித்தரிப்பதில்லை.

  கும்பகர்ணனை பொருத்த மட்டில் அவன் தன் அண்ணனுக்கு மிகவும் உண்மையானவனாக இருந்தான். அளவற்ற அன்பின் வெளிப்பாடே அவனின் விசுவாசமும் உயிர் தியாகமும்.

  KRS, நீங்கள் சுட்டிக் காட்டியிருப்பது போல செஞ்சோற்று கடனுக்காக கும்பன் இராவணன் பக்கம் நிற்கவில்லை. அன்பில்லாமல் தனித்து நின்றுவிடக் கூடாது அண்ணன் என்பதற்காக துணையாக நின்றான் என்னும் விளக்கம் அருமை.

  அந்த அன்பை உணர்ததாலே தான் கும்பகர்ணன் இறந்ததை கண்டு இராவணனும் கதறி அழுகிறான். நாம் எப்படி உலகத்தைப் பார்க்கிறோமோ அப்படியே தான் உலகமும் நம்மை திரும்பிப் பார்க்கும்!

  amas32

  Like

  • //defining the character much before the script writing begins//
   கம்பன் இதுல கில்லாடி!
   வால்மீகியிடம் இருந்து, எங்கெங்கே மாறுபடப் போறேன் -ன்னு முன்னாடியே Map போட்டு வச்சிட்டான்!
   அதான் ஒவ்வொரு பாத்திரமா, கவிச்சொல்லாத் தான் சொல்லாம, பாத்திரச்சொல்லா உரையாட வைக்கிறான்;

   //முழு வில்லனாக யாரையும் அவர் சித்தரிப்பதில்லை//
   Which is true, There is noone 100% good or 100% bad – Only thinking makes it so!

   //KRS, நீங்கள் சுட்டிக் காட்டியிருப்பது போல செஞ்சோற்று கடனுக்காக கும்பன் இராவணன் பக்கம் நிற்கவில்லை.
   அன்பில்லாமல் தனித்து நின்றுவிடக் கூடாது அண்ணன்//
   Which he himself says in his dialogues!
   Thatz the power of kamban dialogue!

   Like

 2. அன்பின் கேயாரெஸ் – அண்ணன் தம்பி பாசம் இராவணன் கும்பகர்ணனிடமும் இருந்தது – விள்க்கங்கல் அருமை கேயாரெஸ் – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

  Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: