தூக்கம் போச்சுடி யம்மா!

ரெண்டு வாரமாச் சரியாத் தூக்கமில்லை!

பொதுவாவே நான் ரொம்ப தூங்க மாட்டேன்; என்ன தான் தாமசமாப் படுத்தாலும், அடுத்தநாள் காலை, சைக்கிள் ஓட்ட எழுந்து கொள்வேன்:)

எங்க வீடு இருக்கும் முழுக் குடியிருப்பும், அதிகாலைச் “சில்”லில், சுற்றி வரும் தெம்பு = இதான் இப்பல்லாம் எனக்கு ஒரே துணை!
விடிவான வடிவான வண்ணங்கள், பறவை ஒலிகள், என் இ”ஷ்டத்துக்குப் பாடும் பாட்டு = ஒரே கச்சேரி தான்!:)

ஆனா, ரெண்டு மாசமாச் சைக்கிள் ஓட்ட முடிவதில்லை!
= கால்/கார் விபத்து காரணமாய்! (No Issues, Can walk now; But no run, no cycling etc etc:))
= அதுனாலத் தான் தூக்கமும் வரவில்லையோ?
= தூக்கம் வராமைக்கு என்ன காரணம்? சங்கத் தமிழ் சொல்லுது! பார்ப்போமா?


நூல்: நான் மணிக் கடிகை (9ஆம் பாடல்)
கவிஞர்: விளம்பி நாகனார்

கள்வம் என்பார்க்கும் துயில் இல்லை; காதலிமாட்டு
உள்ளம் வைப்பார்க்கும் துயில் இல்லை; ஒண்பொருள்
செய்வம் என்பார்க்கும் துயில் இல்லை; அப்பொருள்
காப்பார்க்கும் இல்லை துயில்!

டபராவில் காபி:
நான் மணிக் கடிகை = Four Stone Necklace:)
பதினெண் கீழ்க்கணக்கு நூல்!
4 அடிகளுக்கும் “கீழானது” = கீழ்க்கணக்கு; மேலானது = மேல்கணக்கு!
திருக்குறள் = கீழ்க்கணக்கு; புறநானூறு = மேல்கணக்கு

நான்கு மணியான கருத்துக்கள்!
நான்கு + மணிக் + கடிகை = நான்கு மணிகள் கோர்த்த மாலை!


காபி உறிஞ்சல்:
(பொருளே சொல்ல வேணாம்! அம்புட்டு எளிமை…)

யார் யாருக்கெல்லாம் தூக்கம் இல்லை?

1. திருடத் திட்டமிடும் திருடர்களுக்கு
= கள்வம் என்பார்க்கும் துயில் இல்லை;

2. காதலியிடம் “உள்ளம்” கொடுத்தவர்களுக்கு
= காதலி மாட்டு உள்ளம் வைப்பார்க்கும் துயில் இல்லை;

3. செல்வம் சேர்க்க உண்மையாவே துடிப்பவர்களுக்கு
= ஒண்பொருள் செய்வம் என்பார்க்கும் துயில் இல்லை;

4. சேர்த்த செல்வத்தைக் காப்பாற்றணுமே என்று சதா எண்ணுபவர்களுக்கு
= அப்பொருள் காப்பார்க்கும் இல்லை துயில்!

நாலு பேருக்கும் தூக்கம் போச்சுடி யம்மா! :)) எளிமையான சங்க இலக்கிய அழகே, அழகா இருக்குல்ல?
இப்போ தெரியுதா, எனக்கு ஏன் தூக்கம் வரமாட்டேங்குது -ன்னு?:) வர்ட்டா?:))

dosa 36/365

Advertisements
Comments
4 Responses to “தூக்கம் போச்சுடி யம்மா!”
 1. ranjani135 says:

  தினம் ஓர் பதிவு எழுத வேண்டும் என்பார்க்கும் தூக்கம் இல்லை, இல்லையா?

  Like

  • ha ha ha
   This is a #365project ma! So gotto do! But just half hour daily, It helps me to read more/re-visit my passion and share with you people too:)
   தமிழை – நவில்தொறும் நவில்தொறும் இன்பம்!

   Like

 2. So, உங்களுக்கு எதுனால தூக்கம் போச்சு, சொல்லுங்க :-) நீங்கள் கள்வருமில்லை, பொருளைச் சேர்க்க துடிப்பவரும் இல்லை. அதனால் சேர்த்த பொருளைக் காப்பற்ற வேண்டிய அவசியமும் இல்லை. மிச்சம் இருப்பது ஒண்ணு தான் :-)

  கடன் பட்டவர் நெஞ்சும் உறங்காது. சொந்தமாக நடத்தும் வியாபாரம் சரியாகப் போகா விட்டாலும் தூக்கம் வராது. வயதானவர்களுக்கும் தூக்கம் குறைந்துவிடும். உடல் நலக குறைவு உள்ளவர்கள் தூக்கமில்லாமல் அவஸ்தை படுவார்கள். நாளை டிஸ்னி லேண்ட் செல்லப் போகும் குழந்தையும் அதீத எதிர்பார்ப்பில் தூக்கத்தை இழக்கும் :-) பல காரணங்கள் உள்ளன தூக்கம் தொலைவதற்கு!

  amas32

  Like

  • அன்பின் எல்கே.

   திருடர்கள், காதலியிடம் உள்ளம் பறிகொடுத்தவ்ர்கள், செல்வம் சேர்க்கத் துடிப்பவர்கள், சேர்த்த செல்வத்தினைக் காப்பாற்றத் துடிப்பவர்கள் இவர்களுக்குத் தூக்கம் வராதென சங்கத் தமிழ் கூறுகிறது – கடன் பட்டார் நெஞ்சம் துடித்தாலும் தூக்க்ம வராது. ஆனால் சங்க காலத்தில் கடன் பட வேலையே இல்லை.அதனால் பயமில்லை. நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

   Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: