புணர்தல் நிமித்தம்! குருகே சாட்சி!

இன்றைய பாடல் = புணர்தலும், புணர்தல் நிமித்தமும்!
குறிஞ்சித் திணை! முருகன் திணை!
இன்பமோ இன்பம்-ன்னு நினைக்கிறீங்களா?

அல்ல! சாட்சியே இல்லை அவங்க அன்புக்கு!
அல்ல அல்ல! ஒரேயொரு சாட்சி இருக்கு!
= நாங்க கூடிய போது, கண்ணால் பார்த்த சாட்சி!
ஆனா அந்தச் சாட்சி, அந்தச் சாட்சி…..


பாடல்: குறுந்தொகை 25
கவிஞர்: கபிலர்
திணை: குறிஞ்சி
துறை: திருமணம் செய்து கொள்ளாத தலைவனை நினைத்துத், தலைவி சொல்லியது

யாரும் இல்லை; தானே கள்வன்;
தான் அது பொய்ப்பின், யான் எவன் செய்கோ?
தினை தாள் அன்ன சிறு பசுங் கால
ஒழுகு நீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டு, தான் மணந்த ஞான்றே


காபி உறிஞ்சல்:

யாரும் இல்லை; தானே கள்வன்;
தான் அது பொய்ப்பின், யான் எவன் செய்கோ?

அவன் முன்பு போல் அன்பு செய்வதில்லை!
தன் நெஞ்சிடம், தானே பொய் சொல்கிறான்; அவன் அப்படிச் சொன்னால், நான் என்ன செய்ய முடியும்?

யாரை நொந்து கொள்வேன்? = அவனையா?
என்னால் அது முடியாதே! எனவே, என் காதலன் கள்வனல்ல! என் காதலே கள்வன்!
நான் என்ன செய்வேன்? யாருமே இல்லையே சாட்சிக்கு…..

தினை தாள் அன்ன சிறு பசுங் கால
ஒழுகு நீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டு, தான் மணந்த ஞான்றே

இல்லையில்லை! ஒரேயொரு சாட்சி இருக்கு!
தினைச் செடியின் அடியைப் போல கால்கள்; சிறு பசுங் கால்கள்!
ஓடும் நீரில், ஆரல் மீனைப் பிடிக்கும் = குருகு எனும் பறவை!

நாங்கள் கூடிய போது = அது எங்களைப் பார்த்துச்சி!
அந்தக் குருகே சாட்சி, குருகே சாட்சி!


1. அது பொய்ப்பின், யான் எவன் செய்கோ?

= அவன் பொய்ப்பின், யான் என்ன செய்கோ? -ன்னு சொல்லு மாத்தி வரணும்!
= ஆனா அவனைக் குறை சொல்ல மனசு வரலை அவளுக்கு..

“அது” பொய்ப்பின் -ன்னு காதல் மேல் பழி போடுறா, காதலன் மேல் போடாமல்!
“எது” செய்கோ? -ன்னு சொல்லாமல், எவன் செய்கோ -ன்னு சொல்கிறாள்;
வேறு எவனையாச்சும் செய்கோ? செய்கேன்! செய்கேன்!! = அவனே!

2. நாரை வேற – குருகு வேற!

நாரை

குருகு

என்ன வேறுபாடு? ன்னு சொல்றீங்களா யாராச்சும்?
திருநாரையூர் – திருக்குருகூர் -ன்னு ஊரே இருக்கு!

குருகு = குட்டை! ரொம்பப் பறக்காது! ஆனா, சுலபத்துல பிடிபடாது!

ஆற்றங் கரைப் புதர்களில் பொத்திப் பொத்தி வாழும்!
குரலை வச்சியோ, மீன் பிடிக்கும் போதோ, பார்த்தாத் தான் உண்டு! = “மறை-பறவை”!

3. குருகும் உண்டு, தான் மணந்த ஞான்றே!

எங்கள் கூடலுக்கு = அந்தக் குருகுப் பறவையே சாட்சி!

* ஒரு விலங்கு/பறவை வந்து சாட்சி சொல்லுமா? அப்படியே சொன்னாலும், இந்தப் பறவை இருக்கே…
* யாரும் பாக்க முடியாப் பறவை! இருந்தும் இல்லாமல் போன சாட்சியா எனக்கு வாய்க்க வேண்டும்?:(

எங்கள் கடிதங்கள், பேச்சுக்கள், பரிசுகள், உறுதிமொழிகள்
= ஒன்னும் வெளிக்காட்ட முடியலையே! ஏய், குருகு போலாகிவிட்ட சாட்சிகளே!!

குருகே சாட்சி! முருகே சாட்சி!

dosa 34/365

Advertisements
Comments
3 Responses to “புணர்தல் நிமித்தம்! குருகே சாட்சி!”
 1. அரசர்கள் அந்த காலத்தில் பஞ்ச பூதங்கள் சாட்சியாக திருமணம் புரிவது வழக்கம். காந்தர்வ விவாகம் என்று பெயர். சகுந்தலை துஷ்யந்தன் திருமணம் அவ்வாறே நடந்தது. இதை உன்னித்து கவனித்தால் புணர்தலே விவாகமாகக் கொள்ளப் பட்டது.

  இந்த so called காந்தர்வ விவாகத்தில் என்ன ஒன்று, ஒரு சின்ன சிக்கல் உள்ளது. நிலம், நீர், ஆகாயம், நெருப்பு, காற்று எதுவும் வழக்காடு மன்றத்தில் வந்து சாட்சி சொல்லாது! அது குற்றம் செய்தவனுக்கு சாதகமாகி விடுகிறது. மகன் பரதனை அழைத்துக் கொண்டு அரச சபைக்குச் சென்ற சகுந்தலையைப் பார்த்து யார் நீ எனக் கேட்டான் துஷ்யந்தன். ஆடிப் போயிருப்பாள் அந்தப் பெண் அந்தத் தருணத்தில்! அவன் மறதிக்கு ஒரு பின் கதை சுருக்கம் ஒன்று உள்ளது. அதைத் தவிர்த்துப் பார்க்கும் பொழுது பெண் தன்னை ஒரு ஆடவனிடம் இழக்கும் முன் நன்றாக ஆராய்ந்து இவன் நாளை நம்மை கைவிட்டால் என்ன recourse இருக்கிறது என்று சிந்தித்து செயல் பட வேண்டும்.

  ஆனால் காதலுக்கு கண்ணும் இல்லை, காதலின் மயக்கத்தில் சிந்திக்கும் திறனும் மழுங்கி விடுகிறது.

  குருகு பறவையுடனான ஒப்பீடு கவிஞர் சொல்ல வருவதை துல்யமாகக் காட்டுகிறது.

  amas32

  Like

  • //காந்தர்வ விவாகம் என்று பெயர்//

   தமிழில் இதைக் “களவு மணம்” என்று சொல்வாங்க-ம்மா!
   “களவு வாழ்க்கை” வேறு = அது காதல்! = களவு & கற்பு வாழ்க்கை! thatz always there!
   களவில் காதல் மட்டும் நிகழும், பின்பு மணம், பின்பு கற்பு வாழ்க்கை!

   ஆனால் சில சமயம், களவிலேயே மணம் நடப்பதுண்டு; அந்த மணம் வெளியே தெரிவதில்லை! = “களவு மணம்”
   சமுதாயத்துக்கு அஞ்சியோ/ வேறு காரணங்களினாலோ = “களவு மணம்” நிகழ்வதுண்டு!
   ஆனால், அன்பின் பாற்பட்டு நடக்கும்; கடைசி வரை உண்மை இருக்கும்!

   நாட்பட நாட்பட, இதைத் தவறாகப் பயன்படுத்தத் துவங்கினர்; பெரும்பாலும் ஆண்கள் தான்:(
   அதனால் “கரணம்” என்பது சமூகக் கட்டாயம் ஆக்கப்பட்டது
   “பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
   ஐயர் யாத்தனர் கரணம் என்ப” – என்பது நூற்பா!
   ——————

   //இவன் நாளை நம்மை கைவிட்டால் என்ன recourse இருக்கிறது என்று சிந்தித்து செயல் பட வேண்டும்//

   நான் என்ன சொல்லுவேன் இதுக்கு?:(
   உங்களை மறுத்துப் பேச ஆசையாத் தான் இருக்கு! களவு மணமும் சிறப்பு தான்-ன்னு சொல்லத் துடிக்குது!
   ஆனா, உங்க வாக்கியத்தில் இருப்பதோ “உண்மை”!
   உண்மை சுடுது! முருகா என்று சொல்லி மெளனமாகிறேன்:(

   Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: