கூடங்குளம் போலீஸ்!

ஒரு நல்ல அரசு, தன் மக்களை எப்படிக் கையாள வேண்டும் என்று சொல்லும் புறநானூற்றுப் பாடல் இன்னிக்கி!

தன் சொந்த மக்களையே, பகைவர்களைப் போல், இன்றைய அரசு நடத்துவதை ஒப்பு நோக்கவும்!
கூடங்குளம் – இப்பாடலிலும் ஒரு குளம்!

பாடல்: புறநானூறு 94
கவிஞர்: ஒளவையார்
திணை: வாகைத் திணை
துறை: அரச வாகை

(அதியாமானை, ஒளவையார் பாடியது)

ஊர்க் குறு மாக்கள், வெண் கோடு கழாஅலின்
நீர்த் துறை படியும் பெருங் களிறு போல,
இனியை, பெரும எமக்கே! மற்றதன்
துன்னருங் கடாஅம் போல
இன்னாய் பெரும, நின் ஒன்னா தோர்க்கே!


காபி உறிஞ்சல்:

ஊர்க் குறு மாக்கள் வெண் கோடு கழாஅலின்,
நீர்த் துறை படியும் பெருங் களிறு போல

ஊர்க் குறு மாக்கள் = ஊரில் சிறு பிள்ளைகள்,
தங்கள் அழுக்கைக் களைந்து கொள்ள, குளத்தில் குளிக்கின்றனர்;
ஆனால், குளிப்பதோடு அன்றி, நீர்த் துறையில் குதித்து ஆரவாரமும் செய்கிறார்கள்;

வெண் கோடு கழாஅலின் = தன் வெள்ளைக் கொம்பைக் கழுவிக் கொள்ள,
அப்போது ஆண் யானையும் மெல்லக் குளத்தில் இறங்குகிறது!

இனியை, பெரும எமக்கே! மற்றதன்
துன்னருங் கடாஅம் போல
இன்னாய் பெரும, நின் ஒன்னா தோர்க்கே!

யானையைக் கண்ட மாத்திரத்தில், சிறார்களுக்குப் பயம் கலந்த இனிமை! தங்கள் ஆரவாரத்தோடு, யானைக்கும் அமைதியாகவே வழிவிடுகிறார்கள்!

ஏ, அதியமானே, மக்கள் தலைவா…
* இனியை, பெரும எமக்கே! = அந்த யானை போல் இனிமையாக நடந்து கொள்கிறாய் மக்களுக்கு!
* இன்னாய் பெரும, நின் ஒன்னா தோர்க்கே! = ஆனால், போரில் பகைவர்களுக்கோ, அதே யானைக்கு மதம் பிடித்தாற் போல், நடந்து கொள்கிறாய்!

பாட்டில், ஒரே யானை தான்; ஆனால் வேறு வேறு உவமைகள்!
இது என்ன உவமை அணி? -ன்னு சொல்லுங்க பார்ப்போம்!:)

dosa 33/365

Advertisements
Comments
8 Responses to “கூடங்குளம் போலீஸ்!”
 1. psankar says:

  ilporul uvamai ani ?

  Like

  • nopes:)
   இல்லாத பொருளை உவமை கூறுவது = இல் பொருள் உவமை! eg: பட்ட மரம் பூத்தாற் போல்

   இதில், யானை = சாந்தம் + கோபம் ; இரண்டு மாதிரியாவும் நடந்து கொள்வது common naa?
   ஒரே உவமை, இரண்டு வேறு மக்கள்/குணங்களுக்குப் பிரிவது… Split Simile:) தமிழில் என்ன?:))

   Like

   • psankar says:

    siruvargal kuliikum podhu yaanai vandhadho illaiyo aanal pulavare karpanai seidhu paadugirar adhaanal appadi irukkumo enru ninaiththen. sorry

    Like

    • அட, இதுக்கு எதுக்கு Sorry?:)

     What u refer, poet’s extension of imagination = தற்குறிப்பேற்ற அணி!
     Sometimes உவமை + தற்குறிப்பேற்றம் do combine!

     போர் உழந்து எடுத்த, ஆர் எயில் நெடுங் கொடி
     வாரல் என்பன “போல்” மறித்துக் கை காட்ட…
     Chilambu: Flags look like, as if saying, dont come, dont come! போல் = உவம உருபு!

     செய்யவள் இருந்தாள் என்று செழுமணிக் கொடிகள்…
     ஐயனை, ஒல்லை வா என்று அழைப்பது “போன்ற”தம்மா!
     Kamban: Flags look like, as if saying, come quick, come quick:)

     A small tip on உவமை lesson, here = http://goo.gl/WvR7b (at the end of post)

     Like

 2. மொத்தம் 20+ உவமை அணிகள் உண்டு:))

  1. விரி உவமை
  2. தொகை உவமை
  3. இல்பொருள் உவமை
  4. எடுத்துக் காட்டு உவமை

  5. பல்பொருள் உவமை = ?? :))
  6. கூடா உவமை
  7. ஐய உவமை
  8. தெரிதரு தேற்ற உவமை

  9. புகழ் உவமை
  10. நிந்தை உவமை
  11. உண்மை உவமை
  12. மறுபொருள் உவமை

  13. இன்சொல் உவமை
  14. இயம்புதல் வேட்கை உவமை
  15. பலவயிற் போலி உவமை
  16. ஒருவயிற் போலி உவமை

  17. பொது நீங்கு உவமை
  18. மாலை உவமை
  19. இதரவிதர உவமை
  20. விகார உவமை

  These imported from Sanskrit in latter day books & not much used
  21. நியம உவமை
  22. அநியம உவமை
  23. சமுச்சயம்
  24. விபரீத உவமை
  25. மோக உவமை
  26. அபூத உவமை

  This can be a good reference = http://ta.wikipedia.org/wiki/உவமையணி

  Like

 3. பல்பொருள் உவமையணி சரியா? You gave away the answer itself in your list of உவமை அணிகள் :-) ஆனா நான் திரும்ப போய் உங்க பழைய பதிவை படித்து, யோசித்து தான் பதிலை எழுதியிருக்கேன் :-) ஒரே யானை, குழந்தைகளுடன் விளையாடும் பொழுது சாதுவாகவும், போரில் சண்டையிடும் பொழுது அமர்க்களமாக சண்டையிடும் என்ற பொருளில் வருகிறது. இன்னுமொரு உவமையும் உள்ளது யானையை அதியமானுடன் ஒப்பிடுகிறார் புலவர். இந்த யானையைப் போல் மக்களிடம் அன்பாகவும் எதிரிகளிடம் கோபத்துடனும் நடந்து கொள்வதும் ஒரே அரசன் தான் என்கிறார்.

  இறைவன் கண்ணில் சூர்யா சந்திரரை வைத்திருப்பார் என்று போற்றுவது வழக்கம். பக்தர்கள் பால் நிலவைப் போல குளிர்ச்சியான பார்வை, அரக்கர்களை அழிக்கும் பொழுது கதிரவனைப் போல வெப்பமான பார்வை!

  நல்ல முறையில் ஆட்சி செய்வது அரசின் தலையாயக் கடமை. சொந்த மக்களையே அலைக்கழித்துக் கொள்வது அல்ல :(

  amas32

  Like

  • //பல்பொருள் உவமையணி சரியா?//

   Sooper ma, இந்தாங்க, பிடியும் 100/100 :)

   // You gave away the answer itself in your list of உவமை அணிகள் :-)//

   No, I didnt give, Me one appaavi payyan & strict teacher:))

   Like


  • ஒரே உவமை = பல பொருள்களுக்கு ஆகி வருவது
   (அ)
   பல உவமைகள் = ஒரே பொருளுக்கு ஆகி வருவது
   = பல்பொருள் உவமை அணி

   இங்கே ஒரே யானை = பல விதமான மக்களுக்கு (குடிமக்கள் – நாட்டு எதிரிகள்) ஆகி வருவதால், பல்பொருள் உவமை!

   Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: