சங்கத் தமிழில் ஊறுகாய் ’ஜா’டி

யார் வீட்டுலயாச்சும், இன்னும் ஊறுகாய் ’ஜா’டி இருக்கா? …இல்ல Bottle (எ) சிறையில் வாடும் ருசியில்லா-ருசி ஊறுகா தானா?:)

கிராம வாழ்க்கையின் சுவையே சுவை தானுங்கோ!

* உப்பு, புளி, ஊறுகாய் = மூனுமே, ’ஜா’டியில் தான் கொட்டி வைக்கணும்;
* இல்லீன்னா எங்க ஆயா வையும்:)
* ’ஜா’டி காலியானாலும், வாசம் காலியாவதே இல்லை!

உப்பிட்ட மாங்காய்… உலர்த்தும் போதே, பாதி காலியாக்கீருவோம்:)
Moral of the Story:
ரெண்டு மடங்கா ஒலர்த்தினாத் தான், ஒரு மடங்காச்சும் ஜாடியை அடையும்:))

என்ன தான் ஜாடிக்கேத்த மூடி-ன்னாலும்,
வெள்ளைத் துணி கட்டி, இறுக்க்க்கி மூடிய ஜாடியைக் காண்பது, சுகமோ சுகம்!

பெண்ணுரிமை எனக்கு ரொம்பப் பிடிக்கும் தான்;  ஆனா இந்த ஒரேயொரு விடயம் = ஜாடி ஊறுகாய்;
இதில் மட்டும் பெண்கள் பழமையைக் கடைப்பிடிக்க வேணும் என்பது என் அன்பான வேண்டுகோள்:)


சரிஈஈஈஈஈ, அதென்ன சங்கத் தமிழில் ஊறுகாய் ’ஜா’டி?

“பீங்கான்” (Porcelain) = சீனத்தில் இருந்து, தமிழகம் வந்த பொருள்!
சீனம் (China), யவனம் (Greece), கடாரம் (Malay)
= இந்த வணிகத் தொடர்புகள் எல்லாம் சங்கத் தமிழிலேயே உண்டு!

அதுக்காக, தமிழக மக்கள், ’ஜா’டியே பயன்படுத்தலை-ன்னு ஆயீறாது:)
இன்றைய “ஜா”டி = அன்றைய கல்சட்டி!

கிரந்தம் தவிர்க்க விரும்புவோர், கல்சட்டி -ன்னே சொல்லலாம்:)
எங்க வீட்டில் கல்சட்டி, சாடி – ரெண்டுமே உண்டு!
உள்பக்கம் அத்தனை வழவழப்பு; ஒட்டாது; தண்ணி ஊத்திக் கழுவினாலே அத்தனை கறையும் போயீரும்!

வாங்க…, சங்கத் தமிழில் ஊறுகாய்ச் சாடியைக் காண்போம் = பெரும்பாணாற்றுப் படை!


பாடல்: பெரும்பாணாற்றுப்படை (53 – 58)
கவிஞர்: கடியலூர் உருத்திரங் கண்ணனார்
திணை: பாடாண்

முளை எயிற்று இரும் பிடி, முழந்தாள் ஏய்க்கும்
துளை அரைச் சீறு உரல்,  தூங்கத் தூக்கி
நாடக மகளிர், ஆடுகளத்து எடுத்த
விசி வீங்கு இன்னியம் கடுப்பக், கயிறு பிணித்துக்
காடி வைத்த கலனுடை மூக்கின்
மகவுடை மகடூஉப் பகடு புறம் துரப்ப…

சூழல்:
யாழ் வாசிக்கும் பாணன் ஒருவன் வறுமையால் வாடுகிறான்; அவன் தோழன்…,
“டேய் மச்சி, மன்னர் தொண்டைமான் இளந்திரையன் கிட்ட போடா; அங்கே உன் வாசிப்பை நிகழ்த்து; அவர் சிறந்த வள்ளல்; கலைஞர்களை நோக விடார்” -ன்னு ஆற்றுப்படுத்துகிறான்!

ஆறு = வழி! 
எவ்வாறு வந்தாய்? = எந்த வழியில் வந்தாய்?
ஆற்றுப்படுத்தும் கவிதை=ஆற்றுப்படை;
இந்த வழியில் போ, இவரைப் பார், இன்னது கிடைக்கும் -ன்னு ஆற்றுப்படுத்தல்!

தமிழில், ஏழைகள் பேரில்  தான் ஆற்றுப்படை நூல் அமையும்! = சிறுபாண், பெரும்பாண், பொருநர், விறலி!
= பரிசு பெறுபவர்கள்!
= பரிசு குடுப்பவர் பேரில் அமைஞ்ச ஒரே நூல், முருகு ஆற்றுப்படை:)

ஆற்றுப்படை = “ஆறுபடை”-ன்னு ஆக்கீட்டாங்க, நம்ம மக்கள்!  = நல்ல மக்கள்!:)
முருகு ஆற்றுப்படையில், 6 இடங்கள்-தலங்கள் வருவதால்,
ஆறுபடைவீடு -ன்னு ஆயிருச்சி! ஆற்றுப்படை வீடு என்பதே சரி!


காபி உறிஞ்சல்:
(போகும் வழியில் ஒரு கிராமத்தில் தங்கச் சொல்கிறான் பாணன்;
அந்தக் கிராமத்துக் காட்சியே இவ்வரிகள்)

முளை எயிற்று இரும் பிடி, முழந்தாள் ஏய்க்கும்
துளை அரைச் சீறுரல், தூங்கத் தூக்கி

பிடி = பெண் யானை; எயிறு = பல்-தந்தம்!
யானையின் முழங்கால் போல இருக்காம், உரல்!  வீட்டின் முற்றத்தில் இருக்கு!
துளை அரைச் சீறு உரல் = சின்ன உரல், அரைப்பதற்கு!  துளை போட்டு இருக்கு!

நாடக மகளிர், ஆடுகளத்து எடுத்த
விசி வீங்கு இன்னியம் கடுப்பக், கயிறு பிணித்துக்

நாடக மகளிர், மேடையில் வாசிப்பாங்களே இன்னியம் = Small Drums!
அந்த Drum போல இருக்கும் ஊறுகாய் “ஜா”டி! கல் சட்டி!

விசி வீங்கு = வார்கள் கட்டி இணைச்சி இருக்கும், அந்த Drum-இல்!
அதே போல், “ஜா”டியில் கயிறு சுத்தி இருக்காங்க, வாயில் வெள்ளைத் துணி போர்த்தி…

காடி வைத்த, கலனுடை மூக்கின்
மகவுடை மகடூஉப்,  பகடு புறம் துரப்ப

காடி = அமிலம் (acidic) ; ஊறுகாய்!
சாடியில் காடி:)
காடி வச்ச ஜாடி, “மூக்கு”  வச்சி இருக்கு, மேல் மூடியில்! = காடி வைத்த கலனுடை மூக்கின்;

மிடா” ன்னு சொல்லுவோம் எங்கூருல;
கல்சட்டி, பானை, நாழி, உருளை, மிடா = இன்னும் என்னென்னமோ பாத்திரங்கள்!

மகவு உடை மகடூஊ = கைக்குழந்தை உள்ள பெண்
பகடு = மாடு, புறம் துரப்ப = வெளியே துரத்துறா!
மாடு, பச்சை மாங்காயைத் தின்ன வருது; அதான், அதை விரட்டுறா;

இப்பல்லாம் மாடு கிட்ட பொண்ணுங்க போவாங்களா?-ன்னே தெரியாது!
Zoo வில் பார்த்து, Hey, Cow yaar, See yaar ன்னு சொல்லாம இருந்தாச் சரி:)
ஒங்க வீட்டில் பீங்கான் – ஊறுகாய்ச் சாடி இருந்தா, படம் எடுத்துப் போடுங்களேன்!

dosa 32/365

Advertisements
Comments
5 Responses to “சங்கத் தமிழில் ஊறுகாய் ’ஜா’டி”
 1. கர்ணன் எத்தனையோ தான தர்மங்கள் பண்ணினான். ஆனால் அன்ன தானம் செய்ததில்ல்யாம். அதனால் அவன் சொர்க்கம் போன போது மற்றவர்களுக்கு பசி இல்லாத பொழுது இவனுக்கு மட்டும் பசி இருந்ததாம். அங்கோ உணவு இல்லை. அப்பொழுது அவனை உன் சுட்டு விரலை சப்பிக்கொள் பசி போய் விடும் என்று ஒரு முனிவர் கூறினாராம், ஏனென்றால் என்றோ ஒரு நாள் பசியாய் வந்தவனுக்கு அன்னதானம் நடக்கும் இடத்தை சுட்டு விரலால் சுட்டி வழிகாட்டினானாம்.
  //ஆற்றுப்படுத்தல்// சரியா? :-)

  நீங்கள் புகைப் படத்தில் காட்டியிருக்கும் ஜாடிகள் அனைத்தும் என் வீட்டில் உள்ளன. இரத்த அழுத்தம் இருப்பதால் ஜாடி காலி, நோ ஊறுகாய் :-)

  போன முறை திருவரங்கம் சென்ற பொழுது கல் சட்டி வாங்கி வர எண்ணினேன், முடியவில்லை. உங்கள் பாடல் அதை நினைவு படுத்தி விட்டது. கல் சட்டியில் செய்த கீரை மசியலும், பருப்பு உருண்டை குழம்பும் அவ்வளவு ருசியாக இருக்கும், ஈயச் சொம்பு ரசம் போல.

  கிராமத்துக் காட்சிகளை வர்ணிக்கும் இந்தப் பாடலில் சொல்லியிருக்கும் அனைத்தும் இன்று வெறும் காட்சி பொருளாகி விட்டது.

  amas32

  Like

  • //ஜாடிகள் அனைத்தும் என் வீட்டில் உள்ளன//

   wow, photos please:)

   //போன முறை திருவரங்கம் சென்ற பொழுது கல் சட்டி வாங்கி வர எண்ணினேன், முடியவில்லை//

   மேலச் சித்திரை வீதி (அ) ஆலிநாடன் மதில் கிட்ட கிடைக்குமே!

   //கல் சட்டியில் செய்த கீரை மசியலும், பருப்பு உருண்டை குழம்பும்//

   yessu; sema taste! it gives that stony, natural, forest cooking smell

   //ஈயச் சொம்பு ரசம் போல//

   haiyo, ippo i feel drinking this:)

   Like

 2. அன்பின் கேயாரெஸ் – அருமை அருமை – மலரும் நினைவுகள் – ஆசையுடன் அசை போட்டேன் – மகிழ்ந்தேன் – எங்க வூட்ல் அக்காலத்துல சாடி உண்டு கல் சட்டி உன்டு – ஊறுகாயும் புளஇயும் உப்பும் எல்லாம் உண்டு. புளியங்கொட்டை எடுத்து விளையாடியது நினைவில் இருக்கிறது. சூப்பர் பதிவு – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

  Like

 3. rAguC says:

  பீங்கான் ஊறுகாய் சாடி எங்க வீட்லயும் நிறைய இருந்துச்சு, இப்போ ஒன்னே ஒன்னு இருக்கதா நினைவு, அம்மா ‘கால’ திருமணங்களில் அது முக்கியமான சீதனப்பொருள். இப்போல்லாம் யாரும் சீதனமா குடுகுறாங்களா தெரில ? பாப்போம் என் மாமனார் குடுகிறாரா என்று. வாய் உடைந்த ஊறுகாய் சாடி பூச்சட்டியாக மாறுவது இயல்பு. இப்போது அம்மாச்சி ஊருக்கு போன நிறைய வீட்ல ஊறுகாய் சாடி பாக்கலாம்.

  மரமத்தில கடைஞ்ச மோரு, பெரிய அரிசி சோறு. சோறுல மோரா, மோருல சோறான்னு தெரியாத அளவுக்கு ஊத்தி, இந்த பீங்கான் சாடி ஊறுகாயை எடுத்து அப்பிடியே முழு கையும் கொண்டு பிசைஞ்சு சாப்பிட்டு, கடைசியா அந்த ஊறுகாய் சாறு கலந்த மோரை அப்பிடியே தட்டை தூக்கி வாயில வச்சு “ச்ஷ்ர்”ச்ஷ்ர்” சத்தம் வர உறிஞ்சி குடிக்கிற சோகம் இருக்கே? ம்ம்ம் போதும் அது ஒன்னே போதும்….

  கல் சட்டி அபற்றி அதிகம் கேள்வி பட்டதில்லை,

  Like

  • ஆமாம், சீதனப் பொருள் தான்:)
   வரிசையில், பண்ட பாத்திரங்களோடு, ரெண்டு நாளைக்கான கட்டுச்சோறு – அதிரசம் & இனிப்பு – சாடியில் ஊறுகாய், அத்தனையும் நிரப்பி, பொண்ணை மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்புவாங்க:)
   For a change, நீ குடு ரகு, பொண்ணு வீட்டுக்கு:)

   Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: