தீப் பறக்கும் முலை!

நாலடியார் = சமண முனிவர்கள் ஒன்று கூடி எழுதியது!
அதில் தீப் பறக்கும் முலையா?:)
ஐயோ! சமண முனிவர்கள், “காமத்துப் பால்” எல்லாம் எழுதுவாங்களா?:)


சமணம், என்ன தான் புலனடக்கத்தை வலியுறுத்தினாலும்…,
மக்கள் வாழ்விலே, “காமம் ஓர் அங்கம் தான்” என்பதை மறுக்கவுமில்லை! ஒறுக்கவுமில்லை!

சமணம், புலனைத் தான் அடக்கச் சொன்னது; பொறியை அல்ல!
பொறி வேறு, புலன் வேறு
* பொறி = உடல் உறுப்பு
* புலன் = அந்த உறுப்பால் பெறும் உணர்வு-அறிவு

புலன் அடக்கம் -ன்னு தான் சமணம் சொல்லும்! “பொறி அடக்கம்” ன்னு சொல்லாது
கண்ணைக் கட்டி, நாக்கைக் குத்தி, ஊசி மேல நின்னு தவம் etc etc = பொறி அடக்கம்:)
குண்டலினி -ன்னு சில பேரு பெங்களூரில் குதிச்சாங்களே, அது போல:))

பொறியை அடக்கி, ஒரு பயனும் இல்ல!
பொறியால் வரும் அறிவை (புலனை) அடக்கணும்! = Sense Management! அதுவே சமணம் போதித்தது!

வாங்க, சமணக் காமத்துப் பாலைப் பார்ப்போம் = தீப் பறக்கும் முலை:)


சாய்ப்பறிக்க நீர்திகழும் தண்வயல் ஊரன்மீது
ஈப்பறக்க நொந்தேனும் யானே மன் – தீப்பறக்கத்
தாக்கி முலைபொருத தண்சாந்து அணியகலம்
நோக்கி யிருந்தேனும் யான்!

பாடல்: நாலடியார் – கற்புடை மகளிர் (389)
கவிஞர்: சமண முனிவர்கள்

டபராவில் காபி:

அன்று ஈப் பறந்தது, இன்று தீப் பறந்தது!
* அன்றோ: என்னவன் மார்பில் ஈப் பறந்தாலும் பொறுக்காது எனக்கு!
* இன்றோ: என்னவன் & பரத்தை; அவங்க மார்போடு மார்பு உரசி…தீப்பறந்தாலும் பார்த்துக்கிட்டு இருக்கேனே!:(


காபி உறிஞ்சல்:

சாய்ப் பறிக்க, நீர் திகழும்
= கோரைப் புல் பறித்து விடுவதால், தேங்கியுள்ள தளதள நீர் கண்ணுக்கு விருந்தாகும்
= Another Adults-Only meaning; dont beat me, okay?:)

தண் வயல் ஊரன் மீது
= அப்படித் “தண்” -ன்னு குளிர்ச்சியான அவன் வயல்;
= அந்த வயலின் நாட்டாமை மீது எனக்கு ஆற்றாமை:)

Just For Fun: (not in the song)
வயல்+ஊரன் = கூட்டிப் படிச்சா, வயலூரன் = முருகன்:)
ராச கம்பீர நாடாளும் நாயக “வயலூரா” -ன்னு திருப்புகழ்! டாய், ஒன் மேல தான் எனக்கு ஆத்தாமை:))

ஈப்பறக்க நொந்தேனும் யானே
= முன்பெல்லாம், மாலை சூடிய அவன் மேல ஈப்பறக்கும்; அதைக் கூட என்னால் பொறுத்துக்க முடியாது!
= என் “அவனின்” மேனி = உவர்ப்பு வாச மேனி!
= அங்கு ஈக்கு என்ன வேலை? அதுக்கு வேற பூவா இல்ல?:)

மன் – தீப் பறக்கத் தாக்கி முலைபொருத
= ஆனா, இன்றோ… அவனும்-பரத்தையும், மார்பும்-முலையும்…
ஒன்னோடவொன்னு உரசி உரசி… தீப் பறக்குது! காமத்தீ பறக்குது!

தண் சாந்து அணி அகலம்
= எவ உடம்புச் சந்தனமோ, அவன் அகலமான மார்பில்??

நோக்கி யிருந்தேனும் யான்
= அதைப் பார்த்த பின்பும், “அவனே”-ன்னு இருப்பவளும் நானே தான்!:(((

dosa 31/365

Advertisements
Comments
12 Responses to “தீப் பறக்கும் முலை!”
 1. அன்பின் கேயாரெஸ் – இது என்ன குறளாசான் காமத்துப் பால் எழுதியது போல சமண முனிவர்களும் காமத்தினைத் தொட்டு விட்டார்களா ? நான் சின்னப் பையன் இதெல்லாம் படிக்க்லாமா ? ”சாய்ப்பறிக்க நீர்திகழும் தண்வயல் ” அய்யோ அய்யோ – இதற்கு விளககம் வேறு. ……..தீப்பறக்கத் தாக்குவதாவது சரி – பொறுப்போம். – இதுல வய்லூரான வேற வம்புக்கிழுத்து ………. இருந்தாலும் கேயாரெஸ் எழுதுனதுக்காகப் படித்தேன். நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

  Like

  • he he… u indirectly enjoying it cheena sir! wait & see, amma might smack your head at home:))

   வயலுரான் = என் அந்தரங்கம் மட்டுமே:)
   ஆனா, பாடலில் “அந்த” வாடை, தூக்கல் போலத் தெரிஞ்சாலும், அதன் ஊற்றில் இருப்பது என்னமோ பெருஞ்சோகம் தான்!

   Like

 2. இந்தப் பாடலில் என்ன சொல்ல வருகிறாள் தலைவி? கணவனின் மேனி மேல் ஒரு ஈ வந்து உட்காருவதைக் கூட தாங்க முடியாத அவள் பரத்தையுடனான தொடர்பை தெரிந்த பின்னும் கணவனை நேசிக்கிறாளா?

  இந்தப் பாடலில் தலைவியின் துன்பத்தைப் பற்றி சொன்னாலும் கவிஞர் காம உணர்வினை தான் தூக்கலாக வெளிப்படுத்தியுள்ளார். ஏனோ?

  amas32

  Like

  • //ஈ வந்து உட்காருவதைக் கூட தாங்க முடியாத அவள்
   பரத்தையுடனான தொடர்பை தெரிந்த பின்னும் கணவனை நேசிக்கிறாளா?//

   அதைக் கவிஞர் வெளிப்படையாச் சொல்லலை-ம்மா;
   அவளின் ஆற்றாமையை மட்டுமே வெளிப்படுத்துகிறார், இப்படி தீப்போல சொற்களைக் கொண்டு!

   She hasn’t made any decision or continue with him etc etc…
   But her love for him = too deeeeeeep!
   So she is just battling in the heart… & that battle = the poet potrays!
   ————

   “காரைக்கால் அம்மையார்” -ன்னு படிச்சிருக்கோம்; “வயசான அம்மா” ன்னு பலருக்கும் நினைப்பு!
   அல்ல!
   “சின்ன பொண்ணு” = புனிதா!
   எல்லாரும் கைவிட்டுவிட, சுடுகாட்டில் வசிக்கிறா! வாய்க்கரிசி பொறுக்கி உண்ணும் வாழ்க்கை! அவளே எழுதிய பாட்டு!
   பின்னாடி… சமயம் என்னும் போர்வையில், “அம்மையார்” ஆக்கிட்டாங்க! “பேயுரு” ஆக்கிட்டாங்க!

   But she was left to despair by a man, on the grounds that she was “aanmeegam” and so cant be used as a marital toy:(
   He elopes, marries a new girl, begets a kid & comes before her!
   The whole town is speaking in support of the man, bcoz he named his new kid = punitha!
   Such a “gentle”man, didnt even care to send her some food, when he was “enjoying” with the new girl for years!

   After so much wait, Imagine Punitha, when she saw the “new couple”
   Punitha, on seeing that kid, thinks:
   * நான் தழுவ வேண்டிய அவரை, யாரோ தழுவி வந்த சாட்சியோ?
   * என் முலை படரவேண்டிய அவர் மார்பில், யாரோ பூசி வந்த சாட்சியோ?
   etc etc…

   Now, What u call புனிதா aka காரைக்கால் “அம்மையார்”? = A Lust Maniac???
   அந்தக் கையறு நிலையே, இந்தப் பாட்டிலும்!
   Sorry, my hands not to able to write… whenever this punitha..

   Like

   • I can understand your feeling for Punitha.

    Like

   • ஏதோ ஆழ்ந்த எண்ணத்தில் முழுவதும் எழுதுவதற்கு முன் போஸ்ட் பட்டனை அழுத்தி விட்டேன். கௌதமர் கை விட்ட யசொதராவும், புனிதவதியும், மற்றும் நாம் தின வாழ்வில் பார்க்கும் பல காரணங்களால் கணவனால் புறக்கணிக்கப் பட்ட மாலதியும், ரேவதியும் படும் துன்பம் பெண் இனம் அறியாதது அல்ல. அதை நீங்களும் அதே அளவு உணர்வது உங்கள் தாயின் நல்ல வளர்ப்பையே காட்டுகிறது.

    உங்கள் கோணம் புரிகிறது.

    //சாய்ப்பறிக்க நீர்திகழும் தண்வயல் ஊரன்மீது
    ஈப்பறக்க நொந்தேனும் யானே மன் // My point is related to these two lines. I feel the poet takes liberty to take undue advantage of the heroine’s situation to express sexual feelings more than what is required. I don’t want a woman to be taken advantage of even in a song leave alone in real life.

    amas32

    Like

    • You are right ma!
     எழுதினது சமண “முனிவர்” அல்லவா? பெண்ணின் முழுவலியும் உணரவில்லை போலும்!
     சமண இலக்கியத்தைப் பொதுவாக் கேலி பேசுவது வழக்கம் = “காமம் -ன்னாலே என்னான்னு தெரியாது”
     அதை மறுத்துக் காட்டவென்றே, மனசுல வச்சிக்கிட்டுப் பாடினா, such transgression occurs!

     //I don’t want a woman to be taken advantage of even in a song leave alone in real life//
     Absolutely True!

     Like

    • //கௌதமர் கை விட்ட யசொதராவும், புனிதவதியும்//

     புத்தர் யசோதாவைக் கைவிட்டது உண்மையே!
     அவ துடிச்சதும் உண்மையே!

     ஆனா, புத்தர் இன்னொருத்தியைத் தேடிக்கொண்டு, சுகமா வாழலை!
     தவ வாழ்வில், பல நாள் அவதியே பட்டாரு!
     பின்னாளில், புத்தர் காலத்திலேயே, யசோதாவும் புத்த சங்கத்தில் சேர்ந்தாள்;
     அவளால் தான் திசை திரும்பிடுவோமா -ன்னு புத்தர் பயப்படலை; பெண்களுக்குத் தனி மடத்தில் வைத்தார்
     அவளும், பலர் மதிக்கும் உயர்ந்த பெண் துறவி ஆனாள், நூலும் எழுதினாள்!

     ஆனா, புனிதா வாழ்வில் அப்படியல்ல!
     கைவிட்டுப் போனவன் துறவில் வாழலை! இன்னொருத்தியோடு சுகித்து இருந்தான்…
     ஒப்புக்கு, புனிதா ன்னு புதுப் பிள்ளைக்குப் பேரு வச்சவன்,
     உண்மையான புனிதா, சாப்பாட்டுப் பசிக்கு என்ன பண்ணுவா? ன்னு கூடக் கண்டுக்கலை!
     பின்னாளில், புனிதாவை அவன் அங்கீகாரம் கூடச் செய்யவில்லை; சமயச் சமூகமும் அவன் பக்கமே பேசியது!:(

     இன்னிக்கும், காரைக்காலில், அவனுக்குப் பல்லக்கு விழா எடுக்குறாங்க!:(((
     புனிதாவை வெளிக் கொணர்ந்தவனாம்!
     அவன் சமயச் சமூகத்தில் பெரும் செல்வாக்கு உடையவன்!

     Like

     • இள வயதில், மண வாழ்வின் சுகத்தினை அனுபவிக்காமல் இருந்தாள் யசோதரா. கணவனிடம் பெண் வேண்டுவது காமம் மட்டும் அல்ல, தோழமையும் தான். அதெல்லாம் இல்லாமல் தனிமையில் விடப்பட்டாளே. அவளை விட்டுப் பிரிந்ததற்கு என்ன காரணம் வேண்டுமானாலும் இருக்கலாம். அவள் மகா ராணி தான், சாப்பாட்டுக்குக் சிரமம் இல்லை தான். பாதுகாப்பிற்கும் கஷ்டம் இல்லை. அனால கணவன் கொடுக்கும் சுகத்தை வெறு ஒருவனிடம் சென்று யாசிக்க முடியுமா? கௌதமர் தவத்தின் பயனால் புத்தரானார். ஏன், அவரை இன்று பௌத்தர்கள் தெய்வமாகவேக் கொண்டாடவில்லையா. அந்த நிலையை அடைவதற்கு பகுதி விலையை கொடுத்தவள் யசோதரா. ஏன் திருமணத்திற்கு முன் குடும்பத்தை விட்டுச் செல்ல வேண்டும் என்று உறைக்கவில்லை புத்தருக்கு?

      முதுமையில், அவளும் புத்த மதத்தில் சேர்ந்தாள். Very good!

      புனிதவதி பட்ட துன்பம் அதிகம் தான். நிராதரவாக விடப்ப் பட்டாள். ஆனாலும் அவளும் இன்று யசொதராவைவிட exalted positionல் இருக்கிறாள். பெண் தெய்வமாகக் கொண்டாடப் படுகிறாள். அதனால் காரணம் எதுவாகிலும் கை விடப் பட்ட பெண் படும் அவஸ்தை ஒன்று தான். கணவன் இறந்தால் அது வேறு ஒரு துக்கம்.உயிரோடு இருக்கும் பொழுது உதாசீனப் படுத்துவது கொடுமை.

      இராமக்ருஷ்ண பரமஹம்சரும் போற்றப் படுகிறார், புத்தரும் போற்றப் படுகிறார். காரைக்கால் அம்மையாரின் முன்னாள் கணவனும் போற்றப் படுகிறான்.

      அன்னை சாரதா தேவி, காரைக்கால் அம்மையார், யசோதரா அனைவரின் மன உறுதியை போற்றுகின்றேன், வணங்குகின்றேன்.

      amas32

      Like

      • //கணவனிடம் பெண் வேண்டுவது காமம் மட்டும் அல்ல, தோழமையும் தான்//

       True ma! Very Sad!
       Yasodhara begot a son from Buddha, named Rahul
       She attained Arahantship, and was declared as foremost among the nuns, bcoz of her own virtue!
       She died 2 yrs before Buddha!

       //அந்த நிலையை அடைவதற்கு பகுதி விலையை கொடுத்தவள் யசோதரா.
       ஏன் திருமணத்திற்கு முன் குடும்பத்தை விட்டுச் செல்ல வேண்டும் என்று உறைக்கவில்லை புத்தருக்கு?//

       Yes!:(
       The Only thing I can say is, the woman in such cases, if she is very loving in nature, she is devastated:((
       Some men like Buddha or Ragavendra, heal that wound later
       Some men like Parama Dhathan, hurt that wound still more; Poor Punitha – I hate this guy!

       மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா?:(
       ஆழ்வார்களின் நாயகி பாவம்??
       இவ்வளவு இருந்தும் = பெண்ணை விட்டு, என்ன so called “ஆன்மீகச்” சாதனைகளோ?:((

       Like

 3. rAguC says:

  பெண்ணுக்கு காமம் இல்லையென்பதை ஏற்க முடியவில்லை என்றாலும் அதுவே அவளுக்கு முதன்மையல்ல என்பது முழுக்க அறியக்கூடியதே. என்றாலும் பெண் தன் கணவன் மற்றொரு பெண்ணோடு காமுற்று கலவி கொள்வதை ஒரு பெண்ணால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. கணவன் மற்ற ஒரு பெண் மீது பாசமாயிருந்தால் மனைவி மனதளவில் ஒடிந்து போகிறாள், அதே கணவன் மற்றொரு பெண்ணோடு உடலின்பம் கொண்டால் அவள் மனதளவில் இறந்தே போகிறாள், தன்னிடம் என்ன இல்லை , இவன் இப்படி பரத்தையர் வீடு நோக்கி பயனிக்கிறானே என்று தன்னை, தன் எழிலை நொந்து கொள்கிறாள்.

  Like

  • //அதுவே அவளுக்கு முதன்மையல்ல என்பது முழுக்க அறியக்கூடியதே//

   No no no:) ஒப்புக்க மாட்டேன்:)))
   ஒரு பெண்ணுக்குக் காமம் முதன்மையா? முதன்மையல்லவா? ன்னு அந்தப் பொண்ணு தான் சொல்லணும்! நாம அல்ல!
   காமம் முதன்மையே -ன்னு சொன்னாலும் தப்பில்லை! அது அவள் தனிப்பட்ட நெறி; அது உலகத்தை ஏன் உறுத்த வேண்டும்?

   இப்படி, “முதன்மையல்ல” ன்னு தலைக்கட்டிக் கட்டியே, பெண்களைப் “புனித” பீடத்தில் ஏற்றுவது, பலி குடுக்க வசதியாகப் போய் விடுகிறது என்பது என் தாழ்மையான கருத்து! IMHO please:)

   Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: