“நாடக மயில்” (கைகேயி Appraisal)

பலரும் நினைப்பது:  ஒரு கொடியவள் தூண்டிவிட்ட கொடியவள்!
கைகேயி கொடியவளா?
ஆனா,  கம்பன் சொல்வதோ, கைகேயி = “நாடக மயில்“!

என்ன நாடகம்? என்ன மயில்?
மயில் எதுக்குங்க நாடகத்தில் நடிக்கணும்?
இலக்கியக் காவிரியில், கம்பனோடு ஒருசேரப் பரிசலில் பயணிப்போம், வாருங்கள்:)


இதே கம்பன், கைகேயியை…
* தீயவை யாவினும் “சிறந்த” தீயாள் ன்னு முன்பு சொல்லுறான்!
* அப்பறம் “நாடக மயில்” ன்னு மாத்திக்கறான்…
* கடேசீல, இராகவன் வாயாலேயே “என் தெய்வம்” என்றும் சொல்கிறான்!
ஏன் கம்பன் கிட்ட இத்தனை “முரண்பாடு”?:)

ஒரு பையன், 8th வரை நல்லாப் படிச்சிக்கிட்டு இருந்தவன்…
வாலிப வயசு… 10ஆம் வகுப்பில், தவறி விட்டான்; அப்பறம் +2வில் 70%, கல்லூரியில் 80%
அவனை, ஆயுசு முழுக்க, College, Oppiceன்னு…
பத்தாம் வகுப்பு மதிப்பெண்ணை வச்சே தான் முடிவு கட்டுவீங்களா? பெருங் கொடுமை அல்லவா!

குணம் நாடிக், குற்றமும் நாடி – அவற்றுள்
மிகை நாடி மிக்க கொளல்

– என்ற குறள் நெறியிலே நடக்கும் Manager கம்பன்; அவன் செய்யும் Kaigeyi Appraisal;

HR Confidential! இன்னொருத்தர் Appraisal ஐப் படிக்கக் கூடாது; கேளுங்க:))


வரம் வாங்கு பாடல்: அயோத்தியா காண்டம்

ஏய வரங்கள் இரண்டின் ஒன்றினால், “என்
சேய் அரசு ஆள்வது; சீதை கேள்வன் ஒன்றால்
போய் வனம் ஆள்வது” எனப் புகன்று, நின்றாள் –
தீயவை யாவினும் சிறந்த தீயாள்!

கவனிங்க: “சிறந்த” தீயாள்!  கொடுந் தீயாள் அல்ல!

நாடகமயில் பாடல்: அயோத்தியா காண்டம்

நவ்வி வீழ்ந்தென, “நாடக மயில்” துயின்றென்ன,
‘கவ்வை கூர்தரச் சானகியாம் கடிகமழ் கமலத்து
அவ்வை நீங்கும்’ என்று அயோத்தி வந்தடைந்த
தவ்வை ஆம் என, கிடந்தனள், கேகயன் தனையை!

கைகேயி தெய்வம்: யுத்த காண்டம்

தீயள் என்று, நீ துறந்த, என் தெய்வமும் மகனும்,
தாயும் தம்பியும் ஆம் வரம் தருக!


Appraisal -இன் இறுதியில்…
* இராகவன் வாயாலேயே = “என் தெய்வம்” என்று கைகேயி சொல்லப்படுகிறாள்
* கண்ணகி வாயாலேயே = “தென்னவன் தீதிலன்” என்பது போல்…

கணவனின் மானத்துக்காக, அன்று வாயை மூடிய கைகேயி…,
இறுதி வரை வாய் திறக்கவே இல்லை!
பரதன், “அம்மா” என்று அழைப்பதையே நிறுத்திக் கொண்டாலும்,
ஊஉம்… அவ வாய் திறக்கவே இல்லை!

* இராமனை மகனாகப் பெற்றும், தசரதன் மோட்சம் போகாமல், வெறும் சொர்க்கத்துக்கே போகிறான் = இந்த “உள்ளொன்று” வைத்து, ஊர் முன்னே வேறொன்று வைத்தமையால்!
* கடைசியில், அவன் ஆவி தோன்றும் போது, இராகவன்… இந்த வேண்டுகோளை வைக்கிறான் = இனியாவது, “என் தெய்வத்தை” மனைவி என்று கொள்!  என் தம்பியை மகன் என்று கொள்!

தசரதனும் அவ்வாறே ஏற்க…
கம்பனின் இலக்கியம் = “Untouchable” என்று ஒருவரை ஓரங்கட்ட அல்ல!  “உள்” கொள்ள!
Appraisal முடிகிறது! கைகேயி நாடகம் முடிகிறது!நாடக மயில்!

#dosa 30/365  #kamban  5/52

Advertisements
Comments
4 Responses to ““நாடக மயில்” (கைகேயி Appraisal)”
 1. அன்பின் கேயாரெஸ் – கைகேய்யி கொடியவளல்ல – சந்தர்ப்ப சூழ்நிலைகள் அவளை அப்படிக் காட்ட வைக்கிறது. இராமனைப் பொறுத்த வகையில் கைகேயி நல்லவள் தான். இறுதியில் க்ணவனின் மானம் காக்க கைகேயி கடைசி வரை பேசவே இல்லையே. நல்லதொரு பதிவு கேயாரெஸ் – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

  Like

  • நன்றி சீனா ஐயா,
   இராமனைப் பொருத்த வரை, கைகேயி ஒரு குணக்குன்று!
   இன்னொருவனும் அவளைச் சரியாகப் புரிந்து கொண்டவன் = அனுமன்!

   Like

 2. குதூகலமாக பேசியிருக்கிறீர்கள் :-)

  நாடக மயில்! அருமையான விளக்கம். கைகேயி மிகவும் உயர்ந்தவள், அதனால் தானே வன வாசத்தில் இருந்து திரும்பிய இராமன் முதலில் போய் வணங்குவது அன்னை கைகேயியை தானே!

  தாயின் அரவணைப்பு இல்லாமல் வளர்ந்தவளா கைகேயி? பின் காலத்தில் மகனின் வெறுப்பையும் தாங்கிக் கொண்டு வாழ்ந்திருக்கிறாள். சோகம் தான்.

  பாத்திரத்தின் தன்மை அறிந்து பிரமாதமாக தன் பங்கை செவ்வனே நடித்துக் கொடுத்து உள்ளார் கைகேயி. மிகவும் கடுமையான பாத்திர படைப்பு. ஆனாலும் அவளின் திறமையான செயலாற்றலுக்கு வில்லி என்று முதலில் தோற்றம் வந்தாலும் இராவண வதத்திற்கு அவளே காரணமாகிறாள் என்று அனைவரும் அறியும் பொழுது மன்னித்து ஏற்றுக் கொள்ளப் படுகிறாள். மேலும் மகன் அவளை உதாசீனப் படுத்துவதால் அவள் படும் துன்பத்தை பிள்ளை பெற்றவர்கள் அனைவராலுமே உணர முடியும். அதையும் பொறுமையோடு பல்லாண்டு காலம் தாங்கிக் கொள்கிறாள்.

  எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தார் போல இருப்பது இங்கே இன்று நீங்கள் கொடுத்திருக்கும் வரல்(ள்?) தட்சனை பற்றிய தகவல். இதை பற்றி அறியும் பொழுது அவளின் மன தைரியத்தை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. அதை விட சிறப்பு அவள், தான் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று துளியும் நினைக்காமல் தான் செய்த காரியத்துக்கு தன்னிலை விளக்கம் அளிக்காமல் அமைதி காத்தது தான்.

  இராம கதையில் அவளின் பெருமை கோசலையை விடவும் சுமித்திரையும் விடவும் அதிகமாக இருப்பது இந்த செயலால் தான்.

  Super KRS! Waiting to learn more :-)

  amas32

  Like

  • குதூகலமாகப் பின்னூட்டி இருக்கீங்க-ம்மா:)

   //பாத்திரத்தின் தன்மை அறிந்து பிரமாதமாக தன் பங்கை செவ்வனே நடித்துக் கொடுத்து உள்ளார் கைகேயி. மிகவும் கடுமையான பாத்திர படைப்பு//
   Yes:)

   தொடர்ந்து, ஒவ்வொரு வெள்ளியும், #kamban52-இல் இப்படி வில்லி/வில்லன்கள் வருவார்கள்!:)
   * சென்ற வாரம் = அகலிகை
   * இந்த வாரம் = கைகேயி
   * அடுத்த வாரம் = கும்பகருணன்

   //மேலும் மகன் அவளை உதாசீனப் படுத்துவதால் அவள் படும் துன்பத்தை பிள்ளை பெற்றவர்கள் அனைவராலுமே உணர முடியும்.
   அதையும் பொறுமையோடு பல்லாண்டு காலம் தாங்கிக் கொள்கிறாள்//

   பரதன், தன்னைப் பிறர் புரிந்து கொள்ளவில்லையே என ஏங்குபவன்! இராகவனிலும் நல்லான்!
   ஆனா, அவனே கைகேயியைப் புரிந்து கொள்ளவில்லையே!:(
   மனித உறவுகள் இப்படித் தான் உள்ளன; தன் புரிதலை வேண்டும் அளவுக்கு, பிறர் புரிதலைக் கொள்வதில்லை:((
   பரதனின் கோவம் நியாயமானதே; ஆனா கோவத்தையும் தாண்டி, ஒருவரைத் துடைத்தெடுத்து வறுத்தல், தகாதல்லவா?
   அதுவும், பாதிக்கப்பட்டவர் பக்கம் சோகமே உருவான நியாயங்கள் இருக்கும் போது?

   //தான் செய்த காரியத்துக்கு தன்னிலை விளக்கம் அளிக்காமல் அமைதி காத்தது தான்//
   perfect! u got the whole crux of my thinking & this post! i am glad!

   Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: