மண்புழு வள்ளுவர்!

இன்னிக்கி #dosaவில் ஒரு சின்ன புதிர்ப்போட்டி:)
மேலும், இந்தக் குறளின் பொருள் எனக்குச் சரியாப் பிடிபடலை;
எந்த உரையாசிரியர்களும் அத்தனை நுட்பமா விளக்கலை!
எனவே, வாசக உரையாசிரியர்கள் = உங்க கிட்டயே வந்துட்டேன்:) போட்டிக்குச் செல்வோமா?

என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்!

அறத்துப்பால், அன்புடைமை, குறள் 78
கவிஞர்: வள்ளுவர்

உரை:
எலும்பு இல்லாது வாழும் புழுவை, வெயில் காய்ந்து வருத்துவது போல்
அன்பு இல்லாத உயிரை அறம் வருத்தும்.


காபி உறிஞ்சல்:

என்பு இல் அதனை = வெயில் போலக் காயுமே
அன்பு இல் அதனை = அறம்!

1. அது என்ன உவமை? = எலும்பு இல்லாத உயிரைக் காய்தல்? (புழு/நத்தை)
எல்லாரையும் தான் வெயில் காயுது?
சிறப்பா “எலும்பு இல்லாத”-ன்னு ஏன் சொல்லணும்?
Isn’t Earthworm = Friend of the Soil?

2. அன்புக்கும் எலும்புக்கும் என்ன சம்பந்தம்? எதுக்கு இப்படியொரு “Biological உவமை”?
அவர் என்ன Veterinary Dr. வள்ளுவரா? I mean… படிச்சி வாங்குன பட்டமா?:)

எலும்பில்லாத உயிரின் தொடர்பு பற்றி,
வாசக-உரையாசிரியர்கள், வாசக-மருத்துவர்கள்… யாரேனும் ஐயம் களையவும்; நன்றி!:)

dosa 29/365

Comments
14 Responses to “மண்புழு வள்ளுவர்!”
  1. முதலில் வந்த எண்ணத்தை இங்கே பதிவு பண்ணுகிறேன். எலும்பு தான் உடலின் framework. It gives strength to the body. I have heard that bone cancer is extremely painful where the bone crumbles. Also bones have a cavity for the bone marrow which produces blood cells.The organs are also protected by the bones.

    எலும்பு வலிமையை தருகிறது. எதையும் எதிர்கொள்ளும் சக்தியை தருகிறது. எலும்பு இல்லாத உயிரனங்கள் நிச்சயமாக எலும்பு உள்ள ஜீவராசிகளை விட வலிமை குறைந்தவை. துன்பத்தைத் தாங்கும் சக்தி குறைவு. அதனால் வெப்பத்தால் அதிகம் அவதிப் படும்.

    அதே போல அன்பு இல்லாத உள்ளத்தை அறம் வருத்தும். அன்பே அனைத்து தர்ம செயல்களுக்கும் அச்சாணி, நாம் செய்யும் செயலுக்கு பலத்தை தரவல்லது. அன்பில்லாத உள்ளம் is a parched soul.

    amas32

    Like

  2. ஆன்றோர்கள் நிறைந்த இந்த வலைப்பக்கத்தில் என்னோட சிறு மூளைக்கு எட்டியத இங்கே பதிகிறேன். எலும்பு இல்லாது வாழும் புழுவை வெயில் காய்ந்து வருத்துவது போல்… எலும்பில்லா உயிரினம் ஊர்வன. பொதுவாய் ஊர்வன உயிர்கள் எல்லாம் உடல்முழுவதும் தரையில் கிடத்தியே நகரமுடியும். கொஞ்சம் யோசிச்சுப்பாருங்க. மத்த உயிரினங்களுக்கு கால் மட்டும்தான் தரையில்படும். ஆனா ஊர்வன உயிர்களின் உடல்முழுவதும் தரையில் கிடத்தியே காணப்படும். வெயில் நேரத்துல உடம்பு பூராம் மத்த உயிரினங்களைக் காட்டிலும் உஷ்ணம் அதிகமா தாக்குமே. அதத்தான் பொய்யாப்புலவன் உவமைப்படுத்துகிறார் என்பது என்னோட கருத்து.

    Like

    • Karuppiah,your explanation makes good sense. :-)

      amas32

      Like

    • Sorry Karups, a bit late!
      யாரும் “ஆன்றோர்” இல்ல, உன்னைப் “போன்றோர்” தான்:)

      //மத்த உயிரினங்களுக்கு கால் மட்டும்தான் தரையில்படும்.
      ஊர்வன = உடல்முழுவதும் தரையில் கிடத்தியே காணப்படும்.
      வெயில் நேரத்துல உடம்பு பூராம் மத்த உயிரினங்களைக் காட்டிலும் உஷ்ணம் அதிகமா தாக்குமே//

      Perfect!
      You almost almost neared the biological uvamai! Great!

      Like

  3. அன்பின் கேயாரெஸ் – குறள் எண் 77 ஆ 78 ஆ ? எனக்குத் தெரிந்த வரை அது 77.

    தெரிந்த ஒன்றைக் கொண்டு தெரியாத ஒன்றை விளக்குவது தான் உவமை. அதனால் தான் வள்ளுவர் எலுமபு புழு வெய்யில் என்பதைக் கொண்டு அன்பு அறம் துன்பம் என்பதை விளக்குகிறார். ஆசையால் எல்லாம் தனக்கு தனக்கு என்பவர்கள் பொது மக்கள். அன்பால் என் எலும்பு கூட பிறர்க்கு என்பவர்கள் அன்புன் அறமும் உடையவர்கள். இதுதான் அவரின் கருத்து. மனைத் மனத்தையே இரண்டடியால் அளந்த சிந்தனையாளர். நட்புடன் சீனா

    Like

    • Sethu says:

      //இரண்டடியால் அளந்த சிந்தனையாளர்/// என்ன ஒரு வாக்கியம்.

      சார் தமிழ்ல நான் படிக்க வேண்டிய சில நூல்களச் சொல்லுங்கன்னு ஒரு இக்கால புலவர் கிட்ட கேட்டேன்…போடா போய் வள்ளுவனையும், கம்பனையும் படி…வேற எதையும் படிச்சு கிழிக்க வேணாம்னு சொல்லிட்டார்

      Like

      • vaLLuvar talked in concepts
        iLango & kamban talked that concept in stories
        – Thatz the difference!

        iLango used story of the tamizh land
        kamban used story of the other land, which became popular in tamizh land
        – But both of them used concepts of vaLLuvam, to push it via stories!

        Like

    • ooops, sorry cheena sir, இதோ பார்த்துச் சொல்லுறேன், இருங்க!

      Like

    • Sorry Cheena Sir, bit late!
      #77 ன்னு தான் போட்டிருக்கு! வெவ்வேற பதிப்புகளில் வேற மாதிரி இருக்கோ?
      http://www.thirukkural.com/2009/01/blog-post_1048.html#77
      http://kural.muthu.org/kural.php?kid=77&eid=1

      //மனத்தையே இரண்டடியால் அளந்த சிந்தனையாளர்//
      உங்களின் இந்த வாசகத்துக்கு ஒரு இரசிகர் கிடைச்சிருக்காரு, பாருங்க!:)

      Like

  4. Sethu says:

    மண்ணவிட்டு புழு வெளிய வந்தா சூரிய வெப்பம் தாங்காது. நல்லா பாருங்க..ஈர மண்ணுல தான் மன் புழு இருக்கும். பேருக்காக செய்கிற அறம்.. மண்ணவிட்டு வெயில்ல வந்து துடிக்கும் புழுபோலதான் மனசுக்குள் இருக்கும்னு சொல்றாரோ???

    Like

  5. Sethu says:

    *மண் புழு—எழுத்துப்பிழைக்கு அபாலஜீஸ்

    Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)