மாணவன் முன் “திருத்திக்”கொண்ட ஆசிரியர்!

அனைவருக்கும் ஆசிரியர் நாள் வாழ்த்துக்கள்! (Sep 5)

* ஆசு + இரியர் = குற்றம் இல்லாமல் செய்பவர்;
* ஆசு + இரியர் = குற்றம் நீங்கியவர் + நீக்குபவர்;

மாணவன் சொன்ன திருத்தத்தை ஏற்றுத், 
தன்னைத்  திருத்திக் கொண்ட ஆசிரியர்!
 = அவரை இன்னிக்கிப் பார்ப்போமா?

அட, அப்படியொரு ஆசிரியரா? “எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம்” கிடையாதா?:)
“தமிழ்ப் படிப்பு” – அதைக் காட்டிலும், “தமிழ்ப் பிடிப்பு” கொண்ட ஆசிரியர்கள்!
அவர்களால் இது இயலும்!

தன்னைப் பின்னுக்குத் தள்ளித், தமிழை முன்னுக்குத் தள்ளும் ஆசிரியர்கள்!

இத்தகு ஆசிரியர்கள் = என்றும் மனதில் இடங் கொண்டவர்கள்!
என் பள்ளித் தமிழாசிரியர், தகை சால் கிறித்துவர்…ஆனால், ஆழ்வார் பாசுரங்களை வகுப்பிலே பாடுங்கால், அழுது பாடஞ் சொல்லி, “ஈரத் தமிழை” என்னுள் விதைத்தவர்;
திரு. தானியேல் ஐயா (Daniel)
அவர்களுக்கு வணக்கஞ் சொல்லி, இன்றைய பாடலைத் தலைக்கட்டுகிறேன்!


கதை:

திருத்தக்கதேவர் = இளம் சமணத் துறவி!
ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றான “சீவக சிந்தாமணி” பாடியவர்;

சமணர்கள் வெறுமனே துறவைத் தான் பாடுவானுங்க; நீதி நூல் செய்வானுங்க;
Sex -ன்னாலே என்னா -ன்னு தெரியாது:)

காதல் கலந்த “மக்கள் வாழ்வியல்” = காப்பியம் பாடவெல்லாம் முடியாது;
இப்படிக் “குத்திக்” காட்டி இன்புற்றனர் சில தமிழ்ப் பண்டிதர்கள்!:)

சமணம், என்ன தான் புலனடக்கத்தை வலியுறுத்தினாலும்…,
மக்கள் வாழ்விலே, “காமம் ஓர் அங்கம் தான்” என்பதை மறுக்கவுமில்லை! ஒறுக்கவுமில்லை!
நாலடியாரில் கூடக் காமத்துப்பால் உண்டு! ஆனால் கேலி ஒன்றையே பரக்கப் பேசினால்?

சமணம் பரவாது அழிந்தமைக்குக் காரணம் = “துறவைப் போதித்ததே”… என்பது சும்மா எழுதி வைக்கப்பட்ட பேச்சு;
சமணம் மறைந்ததற்குக் காரணம் = சமய அரசியலே!:(
————————-

இதனால் மிகவும் வருந்திய திருத்தக்கதேவர், தாமே ஒரு காப்பியம் செய்ய முனைந்தார் = சீவக சிந்தாமணி!
அதற்கு அணிந்துரை = கடவுள் வாழ்த்து!
அணிந்துரையை எழுதித் தருமாறு, தன் ஆசிரியரிடம் கேட்டார்;

ஆசிரியர் எழுதிக் குடுத்த பாட்டு = “செம்பொன் வரைமேல் பசும்பொன்“;
அழகா இருக்கு-ல்ல? = செம்பொன் உடம்பெனும் மலைமேல் பசும்பொன் சிகரம்!

அதன் பின்னர்… மாணவர் பாடத் துவங்கினார்!
மூவா முதலா உலகம்” -ன்னு பாட…
தான் பாடியதை விடத்,  தன் மாணவன் பாடிய கவிதை நல்லா இருக்கே!
மனசுக்குள் நினைச்சிட்டாரு ஆசிரியர்!

ஏன் -ன்னா, சங்கத் தமிழ் மரபு;  “உலகம்” ன்னு முதற்பாடலில் வருமாறு பாடியிருக்கான் பையன்:)

* ஆசிரியர் தன் பாடலைப் பின்னுக்குத் தள்ளினார் = செம்பொன் வரைமேல் பசும்பொன் (2)
* தன் மாணவன் பாடலை முன்னுக்குத் தள்ளினார் = மூவா முதலா உலகம் (1)

எப்படி இருக்கு? என்ன நினைக்கிறீங்க இந்த “ஆசு + இரியர்” பற்றி?:)
இத்தனைக்கும் ஆசிரியர் பாட்டில் = சமணத்தின் அருகதேவன் வணக்கம் நேரடியா இருக்கு!
மாணவன் பாட்டிலோ, பொதுவா இறைவன் -ன்னு இருக்கு!
ஆனாலும், சமயத்தைப் பின்னுக்குத் தள்ளித், தமிழை முன்னுக்குத் தள்ளத் தயங்கவில்லை!

* தன்னைப் பின்னுக்குத் தள்ளித், தமிழை முன்னுக்குத் தள்ளும் ஆசிரியர்கள்!
* அவர்கள் அத்தனை பேருக்கும்… நம் தலை தாழ்ந்த வணக்கம்!


பாடல்: சீவக சிந்தாமணி – கடவுள் வாழ்த்து (1 & 2)
கவிஞர்: திருத்தக்க தேவர் & அவரின் ஆசிரியர்

மாணாக்கன் பாட்டு முதலில்:
மூவா முதலா, உலகம் ஒரு மூன்றும் ஏத்தத்,
தாவாத இன்பம், தலை ஆயது தன்னின் எய்தி,
ஓவாது நின்ற குணத்து, ஒள் நிதிச் செல்வன் என்ப
தேவாதி தேவன், அவன் சேவடி சேர்தும் அன்றே!

ஆசிரியன் பாட்டு அடுத்து:
செம்பொன் வரை மேல், பசும் பொன் எழுத்து இட்டதே போல்,
அம் பொன் பிதிர்வின், மறு ஆயிரத்து எட்டு அணிந்து,
வெம்பும் சுடரின் சுடரும் திரு மூர்த்தி, விண்ணோர்
அம்பொன் முடிமேல், அடித்தாமரை, சென்னி வைப்பாம்!

குறிப்பு:
சீவக சிந்தாமணி = தமிழில் 3ஆம் காப்பியம்! ஆனால் மிகவும் பிற்காலம் 7-9th CE
இது “சங்கத் தமிழ்” என்ற எல்லைக்குள் வராது;
இருப்பினும், ஐம்பெருங் காப்பியம் என்பதாலும், விருத்தப்பாவில் கம்பனுக்கே முன்னோடி என்பதாலும் காண்போம்!


காபி உறிஞ்சல்:

மாணவர் பாடல்:

மூவா முதலா, உலகம் ஒரு மூன்றும் ஏத்தத்,
தாவாத இன்பம், தலை ஆயது தன்னின் எய்தி

மூவா முதலா = மூப்பும் இல்லை, முதலும் இல்லை!
தோற்றமும் இல்லை, முடிவும் இல்லை! Energy can neither be created nor be destroyed!

அவனை மூவுலகும் ஏத்த,
தாவாத இன்பம் = தாவிப் போய் விடாத இன்பம்; நிலைத்த இன்பம்! அதைக் கொடுப்பவனை…

ஓவாது நின்ற குணத்து, ஒள் நிதிச் செல்வன் என்ப
தேவாதி தேவன், அவன் சேவடி சேர்தும் அன்றே!

ஓவாது நின்ற குணம் = நீங்காத நற் குணங்கள்!
(ஓவுதல் = செல்லுதல்; ஓவற இமைக்கும் சேண்விளங்கு அவிர் ஒளி என்பது முருகாற்றுப்படை!)
நேத்து நல்லவனா இருந்து, இன்னிக்கி மாறிடும் குணம் அல்ல அவனுக்கு! நீங்கா நற்குணம்!

ஒள் நிதிச் செல்வன் = ஒளிமிக்க நிதிச் செல்வன்!
தேவாதி தேவன்!  அவன் சேவடிகளைச் சேர்வோம் வாருங்கள்!

மூவா முதலா உலகம் = எதிர்மறைப் பெயரெச்சம்!
நிதிச்செல்வன், தேவதேவன் = நடு-Center, Shop-கடை போல இருக்கா?:)
என்ன இலக்கணக் குறிப்பு, சொல்லுங்க பார்ப்போம்:)
————————————————

ஆசிரியர் பாடல்:

செம்பொன் வரை மேல், பசும் பொன் எழுத்து இட்டதே போல்,
அம் பொன் பிதிர்வின், மறு ஆயிரத்து எட்டு அணிந்து,

தகதகக்கும் செம்பொன் மலை = உடல்
அதன் உச்சியில், பசும்பொன்னால் எழுதி வைத்தாற் போல் = தலை
பிதிர்வு = குழல்
ஆங்கு, 1008 குழல்கள் பொலியக் காட்சி தரும் அருக தேவன்!

வெம்பும் சுடரின் சுடரும் திருமூர்த்தி, விண்ணோர்
அம் பொன் முடி மேல், அடித்தாமரை, சென்னி வைப்பாம்!

வெப்பம்-ஒளி இரண்டும் குடுக்கும் இளங்கதிரவன் = திருமூர்த்தி!
விண்ணோர்கள், தங்கள் பொன் முடி மேல், தாங்கிக் கொள்ளும் = அவன் திருவடிகள்!
அந்தத் திருவடிகளில்,  நம் சென்னி வைப்பாம்! தலை வைப்போம்,  வாருங்கள்!

dosa 28/365

Advertisements
Comments
6 Responses to “மாணவன் முன் “திருத்திக்”கொண்ட ஆசிரியர்!”
 1. அன்பின் கேயாரெஸ்

  ஆசிரியர் தினத்த்னறு – ஒரு பழம்பெரும் ஆசிரியரையும் அவரது குணத்தையும் பாராட்டும் முகமாக இன்றைய பதிவின் கதாசிரியராக – தனனைத் திருத்திக் கொண்ட ஆசு-இரியர் – திருத்தக்கத் தேவரின் ஆசிரியர் பற்றிய பதிவு நன்று.

  சமணம் துறவு பற்றிப் பேசுவதனால் தான் அழைத்தது என்னும்கருத்தினை மறுத்து – சம்ய அரசியலே காரணம் என்பதும் நன்று.

  தானியேல் ஐயா அவர்களுக்கு இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.

  நல்வாழ்த்துகள் கேயாரெஸ் – நட்புடன் சீனா

  Like

 2. எல்லா சமயங்களும் ஒரு சேர சொல்லுவது இறைவனே நிலைத்த இன்பத்தைத் தர வல்லவன் என்று.

  //மூவா முதலா// அருமையான ஆரம்பம்! ஆதியும் அந்தமும் இல்லாதவன்.

  இந்தப் பாடல்களில் பிரகாசமான சூரியனையும், தகதகக்கும் பொன்னையும் ஓவமைப் படுத்தியிருப்பதால், படிக்கும் பொழுதே ஒளி வெள்ளமாகிய இறைவனை நம் மனக் கண்ணால் பார்க்க முடிகிறது. ஆசிரியரும் மாணவரும் அத்தனை புலமையோடு எழுதியிருப்பது இருவருக்குமே பெருமை சேர்க்கிறது!

  தன் பாடலை பின்னுக்குத் தள்ளி மாணவனின் பாடலை முன்னிறுத்தி ஆசிரிய குலத்துக்கே புகழை சேர்த்திருக்கிறார் திருத்தக்க தேவரின் ஆசிரியர்.

  // நிதிச் செல்வன் // = Richie Rich?

  //அம் பொன் பிதிர்வின்// = is it a halo?

  // ஓவற இமைக்கும் சேண்விளங்கு அவிர் ஒளி // அது என்னமோ முருகனைப் பற்றி ஒரு வரி படித்தாலும் மனம் உடனே லேசாகி மகிழ்கிறது.

  நாராயணீயத்தை இயற்றிய மகா பண்டிதரான நாராயண பட்டத்ரி நாராயணியத்தின் முடிவுப் பகுதியில் தான் வாழ்வில் கற்றுக்கொண்ட பலரின் பெயர் பட்டியலை இட்டு அவர்களுக்கு நன்றி சொல்வார். அதில் தேனீ, வெட்டுக்கிளி, சிலந்தி, குழவி, ஒரு ஏழைப பெண், புறா, மலைப் பாம்பு ஆகியவையும் அடங்கும்.

  நாம் தினமும் எத்தனை பேர்களிடம் இருந்து பாடம் கற்கிறோம்.அவர்கள் அனைவருக்கும் நன்றி சொல்வது நம் கடமை இல்லையா? அப்படி பார்க்கும் பொழுது என் முதற்கண் நன்றியை KRSக்கும் மற்றும் இங்கு வந்து பின்னூட்டம் இடும் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன் :-)

  amas32

  Like

  • Richie Rich:)) I liked it ma!
   பொன் பிதிர்வு = குழல் கற்றை! Mahaveera is sometimes depicted with golden locks on the head;

   // ஓவற இமைக்கும் சேண்விளங்கு அவிர் ஒளி //
   அது என்னமோ முருகனைப் பற்றி ஒரு வரி படித்தாலும் மனம் உடனே லேசாகி மகிழ்கிறது//

   he he
   my darling is one thiruttu kottu:) thatz why even in chamaNa paadal, he made me write his lines as example:))

   //தேனீ, வெட்டுக்கிளி, சிலந்தி, குழவி, ஒரு ஏழைப பெண்//
   Whattay coincidence!
   இராமானுசர் சீடரான அனந்தான் பிள்ளையும், இப்படியே கொக்கு, கோழி, உப்பு = குருவாகச் சொல்லுவார்:)

   Like

   • devarajan97 says:

    மூவா முதலா உலகம் ஒரு மூன்றும் ஏத்த,
    தாவாத இன்பம் தலை ஆயது தன்னின் எய்தி,
    ஓவாது நின்ற குணத்து, ஒள் நிதிச் செல்வன் என்ப
    தேவாதி தேவன், அவன் சேவடி சேர்தும் அன்றே!

    இப்பாடல் முதன்மை பெறக்காரணம்
    உலகுக்கு அழிவோ , அதைப் படைத்தவனோ
    கிடையாது எனும் சமணக் கருத்து நன்கு
    பொருந்தும் வகையில் அமைந்ததால்.
    அருகர் வாழ்த்தோடு சமணக் கொள்கை
    நன்கு புலப்படுமாறு அமைந்ததால்
    உவமையணி மட்டுமே பொதிந்த மற்றொரு
    பாடலைவிட இது சிறந்ததாகிறது.

    சமயக் கருத்துக்கே முதலிடம் :))

    Like

 3. தேவ் says:

  வேட்டுவர் , பரதவர் வாழ்வியல் குறித்த சிந்தாமணியின்
  சித்திரிப்பு –

  வில்லின் மா கொன்று வெண்ணிணத் தடிவிளம்படுத்த
  பல்லினார்களும் படுகடற் பரதவர் முதலா
  எல்லை நீங்கிய இழி தொழில் இழி குலம் ஒருவி
  நல்ல தொல்குலம் பெறுதலும் நரபதி அரிதே.

  Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: