பிரிந்தவர் கூடினால்? = நலம் கேழ் முறுவல்!

புரிந்து கொள்ள “மறுக்கும்” ஆருயிர்
= அதுக்கு எப்படிப் புரிய வைப்பீங்க?

* கண் நீரெனும் தவம் = பல துளிகள் சிந்தியா?
* உடல் எனும் தவம் = வாடி வாடி வதங்கியா?
* எழுத்தெனும் தவம் = பல பக்கங்கள் எழுதியா?

ஆழமான பொண்ணு கண்ணகி; என்ன எழுதிப் புரிய வைச்சா? பார்ப்போமா?


கோவலன், கேவலன் ஆகி விட்டான் போலும்; மாதவியிடம் வீண் சண்டை = ஊழ்!
மீண்டும் கண்ணகியிடமே வருகிறான்;
பல நாள் கழித்துப் பார்த்துக் கொள்கிறார்கள் = மனம் முந்தியதோ, விழி முந்தியதோ, கரம் முந்தியதோ?
* கண்ணகி பேசினாளா? = ஒரே ஒரு வரி!
* இன்னிக்கி #dosaவில் = ஒரே ஒரு வரி!

நலம்கேழ் முறுவல், நகைமுகம் காட்டிச்
சிலம்புஉள கொண்ம் என…

கனாத் திறம் உரைத்த காதை (வரிகள்: 72-73)
கவிஞர்: இளங்கோ அடிகள்


காபி உறிஞ்சல்:

கண்ணகியின் பக்கத்து வீட்டு அந்தணத் தோழி = தேவந்தி!

கலப்பு ஓரளவு நிகழ்ந்தேறி விட்ட காலம்!
புராணம் புகுந்து விட்ட காலம்! சங்கத்தமிழின் இயற்கை வழிபாடு மறையத் துவங்கிய காலம்!
மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத் தீவலம் செய்து,
“பெரியவர்கள்” ஏற்பாட்டால் நடந்த கல்யாணம் தான்! But some youngsters still holding on?

தேவந்தி, கண்ணகியிடம் சொல்கிறாள்:
“காவிரிக்-கடல் சங்கமத்தில், சோம குண்டம் – சூர்ய குண்டம் -ன்னு தீர்த்தம் இருக்காம்டி!
அதுல குளிச்சிட்டு, மன்மதப் பரிகாரம் பண்ணோம்-ன்னா…
உன் புருசன் உன் கிட்ட வந்துருவான் கண்ணகீ!
அடுத்த பிறவியிலும் ரெண்டு பேரும் போகம் துய்ப்பீர்கள்!”

Ask ourselves: 21st Century மக்கள்:) என்ன பண்ணியிருப்போம்?:)
That too, So sentimental issue; When my love is staying away from me?

முருகா, நாள் என் செய்யும்? வினை தான் என் செய்யும்?
எனை நாடி வந்த கோள் என் செய்யும்?
என்பதோர் தமிழ் மரபு!

கண்ணகி சொல்கிறாள்:
“தேவந்தி, அங்ஙனம் துறை மூழ்கித் தெய்வந் தொழுதல் எங்கட்கு – பீடு அன்று!”


இப்படிச் சொல்லி முடிக்கலை… கோவலன் வீடு தேடி வருகிறான்:)

தலைமுடியெல்லாம் கலைஞ்சி, யாரோ காவலன் -ன்னு நினைச்சிட்டாளாம் பணிப் பெண்; கிட்டக்க வந்தப்பறம் தான் கோவலன் -ன்னே தெரியுது!
கண்ணகியைத் தொலைவில் இருந்தே பாக்குறான் = ஆள் பாதி, ஆடை பாதி, பாதியாகி நிக்குறா இவ!

கோவலன் கிட்டக்க வரான்; அவன் வாசனை அவளுக்குத் தெரியும்!
அவனைப் பார்க்க ஆசை!
ரொம்ம்ம்ம்ப ஆசை… ஆனா படக்க்க்க் -ன்னு தலை குனிகிறாள்!
* குனிய வேண்டியது அவன்! இவ எதுக்குக் குனியணும்?
* அவன் குனிந்து விடப் போறானே -ன்னு இவ குனியுறா!

அப்பா கையில் iPhone; தெரியாம கீழே போட்டுட்டாரு; நாம் குனிவதில்லையா?
நாம குனிந்து விட்டதால், பாத்துப்பா -ன்னு சொல்லி அவரு தலை தடவுவதில்லையா?

* அது போல் கண்ணகி குனிகிறாள்!
* குனிய வேண்டியவன், அவளைத் தடவுகிறான்!
இளங்கோவுக்கே திணறல்; அவங்க என்ன பேசிக்கணும்? வர்ணிக்க முடியல!

கோவலன், உள்ளாற மெல்லியன்… ரொம்ப வெளிக் காட்டிக்காத ஆண்மகன்!
உனக்குத் துன்பம் குடுத்துட்டேனே -ன்னுல்லாம் ஆரம்பிக்கலை! ரெண்டே வரி…
* “ரொம்ப வெட்கமா இருக்கு, கண்ணகி!”
* “கடலாடிச் சேர்த்த பொருளோ? ஒரு உடலாடித் தொலைத்த பொருளோ?

ஆண்மகன் வெட்கமா இருக்கு -ன்னு சொன்னா, ஒரு பொண்ணு என்ன செய்வா?
கண்ணகி சிரிச்சாளாம்! = “நலம் கேழ் முறுவல்”
கணவன் உருகும் போது, மனைவி சிரிக்கலாமா? Is Ilango blabbering bcoz hez not able to describe?:)


நலம் + கேழ் + முறுவல்!
நல்லாப் பாருங்க; குத்திக் காட்டும் முறுவல் அல்ல! எகத்தாள முறுவல் அல்ல!
நலம் கேழ் முறுவல் = அப்படீன்னா என்ன??

நலம்கேழ் முறுவல், நகைமுகம் காட்டிச்
சிலம்புஉள கொண்ம் என

வெட்கமாயிருக்கு -ன்னு சொன்னவன், செல்வத்தை முன்னிட்டு பேச்சை ஆரம்பிக்கறானே!
“ஓ! பணம் போதலை! கேட்க வெட்கப்படுறான் போல…
இந்தா சிலம்பு, ஒழிஞ்சிப் போ!” -ன்னும் பொருள் எடுத்துக்கலாம்:))
ஆனா…”நலங் கேழ் முறுவல்”, அப்படி எடுத்துக்க விடாது!

ஏய் கண்ணகி, ஏன்டி இப்பிடி ஆயிட்ட? – ஒரு வார்த்தை கேட்டானா?

பொதுவா பெண்கள், அன்பான வார்த்தைக்கு ஏங்குவார்கள்!
அதை வச்சியே, அவர்களை வசமாக்கும் ஆண்களும் உண்டு!
But Kannagi? Her understanding of her lover;
She doesn’t even expect his words of comfort

அவள் கோலத்தைக் கண்டு அதிர்ந்து போனவன்; பேச்சு வரலை!
“கடலாடிய செல்வம்… கந்தல் கோலமா ஆயிட்டாளே, வெட்கமா இருக்கு!” – ன்னு சொல்ல வந்தவன்…
“கடலாடிய செல்வம்… வெட்கமா இருக்கு!” -ன்னு வார்த்தை முழுங்கிப் பேசுகிறான்;

ஆனா, அதைப் “புரிஞ்சிக்கிட்டா” கண்ணகி!
“எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” – என்பார் தொல்காப்பியர்;
இவளோ, “சொல்லாத சொல்லும் பொருள் குறித்தனவே” -ன்னு இருக்கா!

Watch Kannagi’s Reaction to Her Beloved:
* நலம் = நலம், நலமறிய ஆவல்!
* கேழ் = வண்ணம் (கேழில் பரஞ்சோதி, திருவெம்பாவை நினைவு கொள்க)
* முறுவல் = இதழோரமா ஒரு சிரிப்பு
* நகை முகம் காட்டி = அவன் முகம் கிட்டத் தன் முகம் காட்டுறா
* சிலம்பு உள; கொண்ம் = சிலம்பு இருக்கு; கொள்வோம்!


ஆணோ/பெண்ணோ = கம்பீரம் அழகு!
வெட்கமா இருக்கு -ன்னு சொன்னதால்…
= சிலம்பு இருக்கு -ன்னு எதிர்ச்சொல் சொல்கிறாள்; கம்பீரம் ஊட்ட; பேச்சு அவ்ளோ தான்!

* நலம் முறுவல் = அவன் நலத்தை முறுவலாலேயே விசாரித்து விடுகிறாள்;
* கேழ் முறுவல் = வண்ண வண்ண முறுவல்கள்; புன்னகைக்கு எப்படிப் பலப்பல வண்ணம்?

அதிகாலை இருள் கவிந்து கிடக்கும்! பார்த்து இருக்கீங்களா?
வானில் சூரியன் வரணும்-ன்னு கூட இல்ல, அதுக்கும் முன்னாடியே…
ஒரு துளிச் சூரியன் பட்டவுடன்… அத்தனை இருளும் ஓடீரும்!
வெளிச்சம் குறைவு தான், ஆனா பலப்பல வண்ணம் (கேழ்) தெரியும்; பார்த்து இருக்கீங்களா?

* Ilango Style = ஒரே வரிக்குள் அடக்குகிறார் = “நலம்-கேழ்-முறுவல்
* அவள் அவனை நோக்கிய வண்ண வண்ண விசாரிப்புகள்

நாள் என் செய்யும்? வினை தான் என் செய்யும்?
எனை நாடி வந்த கோள் என் செய்யும்?

முருகா, உன் “நலம் கேழ் முறுவல்“, எனக்கு என் செய்யும்?
= எதுவும் பேசா விடினும், எல்லாம் செய்யும்!  கண்ணகி மனசே எனக்கு என்றும் அருள்!

dosa 27/365

Advertisements
Comments
8 Responses to “பிரிந்தவர் கூடினால்? = நலம் கேழ் முறுவல்!”
 1. அன்பின் கேயாரெஸ் – கோவலன் ஒன்றும் செய்ய இயலாத நிலையில் கண்ணகியிடம் வெட்கத்துடன் வரும் போது – கண்ணகி சிலம்பு உள்ளதென உரைத்தல் எல்லாப் பிரச்னைக்கும் முடிவாக – கோவலனுக்கு கண்ணகி கூறும் தைரியம். * //கடலாடிச் சேர்த்த பொருளோ? ஒரு உடலாடித் தொலைத்த பொருளோ// அருமையான சொற்றொடர் – நன்று – நல்வாழ்த்துகள் கேயாரெஸ் – நட்புடன் சீனா

  Like

 2. மன்னித்து ஏற்கிறது பெண் மனசு, அன்றும் இன்றும் என்றும்! நான் பெண்ணாக இருந்தும் எனக்கும் இது புரியாத புதிர்.

  என் உறவினர் பெண்ணை, இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகு அவன் கணவன் அவளை விட்டு தன் காரியதரிசியுடன் குடும்பம் நடத்தச் செல்கிறான். ஓராண்டு இல்லை ஈராண்டுகள் இல்லை. இருபது ஆண்டுகள்! குழந்தைகளை தன் பெற்றோர் உதவியுடன் வளர்க்கிறாள். மகன் வேலைக்குச் செல்ல ஆரம்பிக்கிறான். பிரிந்த கணவன் மனைவியை தேடி வருகிறான். காரியதரிசி என்னவானாள் என்று தெரியவில்லை. தந்தைக்கு எண்பது வயது. ஏற்றுக் கொள்ள சொல்கிறார். பிள்ளைகளுக்கு திருமணம் செய்ய மண மேடையில் இருவரும் சேர்ந்து நின்று செய்து கொடுக்க வேண்டும் என்று மற்றுமொரு காரணம் சொல்கிறார். ஆனால் அவளுக்கு இவ்வளவு கூட சொல்லியிருக்க வேண்டாம், without batting an eyelid she accepted him. கொஞ்சம் கூட கோபம் இல்லை. நான் அவளை சமீபத்தில் சந்தித்தேன். கணவனின் உறவில் வந்த பெண்ணுக்கு தன் மகனை மணம் முடித்து கொடுத்திருக்கிறாள். என்னிடம் அவள் கணவனைப் பற்றி நல்ல வார்த்தைகள் சொன்னாள் :-)

  இது நம் கலாச்சாரத்தால் வந்த ஒரு விளைவா? அவன் அவளை வீட்டுப் போயிருந்த பொழுதில், அவள் போகவில்லை வேறு ஒரு ஆடவன் பின்னால் (இரண்டு குழந்தைகளுடன் எவன் ஏற்றுக் கொள்வான், அது வேறு விஷயம்). ஆனால் அந்த எண்ணம் துளியும் வராமல் இரு குழந்தைகளையும் கண்ணென வளர்த்து உள்ளாள்.

  கண்ணகி கதைக்கு வருவோம் :-) கணவன் வந்தவுடன் அவனை சமாதானப் படுத்தவே அவள் மனம் விழைகிறது. அவனை முறுவலுடன் வரவேற்கிறாள். அவன் கூனிக் குறுகக் கூடாது. நிமிர்ந்து ஆண் மகனாக இருக்க வேண்டும் என்பதற்கு ஆவன செய்கிறாள்.

  பெண்ணுக்கு பேச்சு வேண்டாம். ஒரே பார்வையால் வெறுப்பையும் உமிழ முடியும், வரவேற்பையும் நல்க முடியும். Kannagi with just one look makes him feel at home removing his fears and shame. Hence the saying, behind every successful man lies a woman :-)

  amas32

  Like

  • //என்னிடம் அவள் கணவனைப் பற்றி நல்ல வார்த்தைகள் சொன்னாள் :-)//

   Hats off to your friend; Really wish to shake hands with her!
   She shd not do it for father’s advice or society or kids!
   * If she has grudges & complaints, but still accepts him = பெண்ணடிமைத்தனம்!
   * But if she really accepts him out of “love” = பெண்ணுயர்வுத்தனம்!

   //இது நம் கலாச்சாரத்தால் வந்த ஒரு விளைவா?//
   May be!
   Culture has both good & bad!
   In the case of women, more bad, than good!

   //அவள் போகவில்லை வேறு ஒரு ஆடவன் பின்னால்//

   This can be appreciated, but SHD NOT be eulogized!
   Repeated eulogy in literature & culture, will make as if, such behaviour is “expected” out of women! = Big No!
   சங்க இலக்கியம், இப்படிச் செய்யவே செய்யாது;
   It will equally tell that women became இல்பரத்தை, after he dumped her! It will talk abt male பரத்தன்!
   பின்னாளில், நீதி நூல் காலத்தில் தான், இப்படி women-codification வந்துருச்சி:(

   கற்பு = வள்ளுவர் கருத்தே, சில இடங்களில் எனக்குப் பிடிக்காது:) அதையும் மறைக்காமச் சொல்லுவேன்:)

   Like

   • Yes, agree with you. But she sincerely did not think of remarrying or divorcing him. I was specifically mentioning her behaviour. But that does sound that is an exalted behaviour. Secondly I have seen cases where even if a girl wants to remarry after having kids it is very difficult to find a decent guy willing to marry her. That is the stark truth.

    amas32

    Like

    • Rex Arul says:

     @amas32: Vanakkam and thanks for sharing an interesting personal story. Your friend is a rare person for our changing times. I respect her.

     /:she sincerely did not think of remarrying or divorcing him:/

     அந்தக்காலம் போல் இந்தக் காலம் இல்லையேம்மா. அன்று மனிதர்கள் தங்கள் மனதின் வழி நின்று, பலவற்றையும் நினைந்து முடிவெடுத்தனர். ஆதலால், விவாகரத்து தான் என்று யாரும் தொட்ட 90க்கும் குதித்துவிடவில்லை.

     அனால் இன்றைய நிலை என்ன? எதற்கெடுத்தாலும் வழக்கு, கோர்ட், விவாகரத்து என்று வாழ்க்கையை கற்பழித்துக்கொண்டு இருக்கிறது சில “உரிமை” கோஷக் கூட்டங்கள்.

     அதாவது, விவாகரத்து தேவையில்லை என்ற நிலையை ஒருவர் எடுத்தாலும், மற்றொருவர் அந்த நிலையை எடுத்தால், அதை இவரால் தடுக்க முடியாது. சட்டம் அதை அனுமதிக்காது. In other words, one can delay, but can’t prevent a விவாகரத்து, if the other party pushes ahead. இதை “no-fault” விவாகரத்து என்று சொல்லுவார்கள். ஆக, மனதை விட இவை எல்லாம், சட்டம், உரிமை, திருமணம் என்பதெல்லாம் ஒரு சாதாரண contract என்று கொச்சைபடுத்தப்பட்டு வருகிறது என்பதே உண்மை.

     இம்முறை விவாகாரத்து தான் அண்மையில் இந்தியாவில், இந்து திருமண சட்டம் மற்றும் சிறப்பு திருமண சட்ட சீர்திருத்த மசோதாவில் சேர்த்திருக்கின்றனர். 2010லேயே நான் இச்சட்ட மசோதாவின் மாற்றங்களை சாடினேன். அமெரிக்காவில், இம்மாதிரியான சுலபமான சட்டங்களால் பாழ்படும் குடும்ப உறவுமுறைகளை கண்டு தெளிந்தவன் என்ற முறையில்.

     இதை ஏன் சொல்கின்றேன் என்றால், விவாகரத்து வாங்கிய ஆண் அல்லது பெண்னை நீங்கள் சந்திக்கும்போது, அதில் 10ல் ஒருத்தன் / ஒருத்தியாவது, அதை விரும்பி போய் வாங்கியிருக்கமாட்டார். வேறு வழியில்லாமல், சட்டம் திணிக்கும், “விவாகரத்து கோருவது ‘அவரின்’ உரிமை. அவரை உன்னை விரும்ப சொல்லி வற்புறுத்த முடியாது. ஆக, விவாகரத்தை ஏற்றுக்கொண்டு, வேறு யாரையாவது தேடிச் செல்” என்ற சூழ்நிலைக் கைதியாக அவர் இருந்திருக்கலாம் என்பதை மட்டும் நன்கு அறிக :-)

     அடிக்கடி நான் இதனை மிக publicஆக சாட பல அனுபவ ரீதியான காரணங்களே மிகுதி. It takes two to a tango என்பதெல்லாம் மாறி வரும் தற்காலத்துக்கு 100% பொருந்திவர வேண்டும் என்றில்லை.

     ” நான் அவன் இல்லை” & “நான் அவள் இல்லை” ஆணகள், பெண்களிடம் சிக்கி சின்னாபின்னமான ஒருவனை, ஒருத்தியை, “ஆ, இவ(ன்)(ள்) விவாகரத்து, விரும்பி வாங்கியவ(ன்)(ள்)” என்று முடிவுக்கு அவ்வளவு சுலபமாக வர முடியாத காலமாகி விட்டது. Many men and women are getting caught as victims under such cleverly scheming, conniving narcissists, who can use Law to systematically plunder the innocent lives of other men, women, and children. Modern laws have only facilitated that with cleverly-couched liberal mores. 

     Please read this letter I wrote in The Hindu: 
     http://www.thehindu.com/opinion/letters/article462192.ece

     ஆக என் கருத்து என்னவென்றால், மனதை விட 
     1. சட்டங்களும், 
     2. பெருகி வரும் வழக்குத் தேக்க நிலையும், 
     3. ஒருத்தனோடே வாழ்வது / ஒருத்தியோடே வாழ்வது பயங்கர bore (??) என்னும் புதுமை புரட்சியும், 
     4. “விவாகரத்து கோருவது அவர் உரிமை & வீ காண்ட் மேக் தட் பர்சன் லவ் யூ இஃப் ஷீ ஆர் ஹீ டஸ் நாட் வாண்ட் டு பி வித் யூ” என்னும் சட்டப் புரட்சியும், 
     5. மனது சம்பந்தப்பட்ட வாழ்க்கைமுறைகளை வெறும், காண்டிராக்ட்/சட்டம்/உரிமை என்று பார்க்கும் வழக்கங்களாலும், 
     6. சரி வர ஒழுக்க வளர்ப்பு இல்லாமையாலும், 
     7. ஒவ்வொரு முறையும் வேறொருவ(னை)(ளை) கைப்பிடித்தால் நியூ opportunities & new vistas என்று instant gratification induced loose moralsஆலும்
     8. உறவினர்களின் தவறான தூண்டுதலாலும்,

     இன்னும் பல காரணங்களாலும், தானே விரும்பாத விவாகரத்தை வேறு வழியில்லாமல் ஏற்றுக்கொண்டு சூழ்நிலைக்கைதிகளாக பலர் இன்னும் “சிறிய சுருக்கத்து வேண்டும் உயர்வு” என்று நடமாடி வருகின்றார்கள். 

     சட்ட மசோதாவுக்கு பிறகு ஒரு 10-15 ஆண்டுகளில், நான் ஆணித்தரமாக இன்று இங்கே பதிவிடும் இப்பின்னூட்டத்தை படிக்கும் எவரும் நினைவுபடுத்திக்கொள்வார்கள்.

     ஏனென்றால், எனக்குத் தெரிந்த சில உண்மை முகங்களின் பின்னால் உள்ள இருட்டு, சோக நிழல்களையே இங்கு பின்னூட்டமாக பதிய வைத்துள்ளேன்.

     :-)

     Like

 3. psankar says:

  edhedho ezudha ninaiththaalum, inge ennal ezudha mudindhadhu “:-)” mattume. solliththaan puriya vendumaa !?

  Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: