அவர் பொய் வழங்கலரே!

காதல் = “தெய்வீகக் காதல்” ஆவது எப்போது?

சில ஆண்கள்: “அட, நீங்க வேற! சாத்தானின் காதல் ஆகாம இருந்தாச் சரி” -ன்னு முனகலாம்:)
சில பெண்கள்: “காதலிக்கும் போது நல்லாத் தான் வழிஞ்சாரு; ஆனா கண்ணாலம் -ன்னு ஆனதுக்கு அப்பறம் தான் அவரின் உண்மையான உருவமே தெரிய வந்துச்சி” -ன்னு முனகலாம்:)

இவை அத்தனைக்கும் காரணம் = “எதிர்பார்ப்பு”!
ஆனா, மனுசன் -ன்னா எதிர்பார்ப்பு இல்லாம எப்படிய்யா இருக்குறது?

உம்ம்ம்…Very True!…ஆனா…
* என் எதிர்பார்ப்பே = “அவன் தான்” -ன்னு ஆக்கிக்கிட்டா?
* என் எதிர்பார்ப்பே = “அவன் முக உல்லாசம்” -ன்னு ஆக்கிக்கிட்டா?

இங்கே தான் காதல் -> தெய்வீகக் காதல் ஆகிறது!

அவன், கார் காலத்துக்குள் வந்துடறேன் -ன்னு சொல்லிட்டுப் போனான்; ஆனா வரலை!
அவள் அவனை எதிர்பாக்குறா! எதிர்பார்ப்பு இல்லாம இல்ல!
ஆனா… அந்த எதிர்பார்ப்பு காரணமாய், அவனிடம் நொந்துக்கலை! குறை பட்டுக்கலை!

அவன் சொன்னபடி வராததால், “இது கார்காலமே இல்லை; இது இயற்கையின் மாற்றம்” ன்னு அப்படியே Plateஐ மாத்திட்டா:) “நம்பிக்கை”!
என்ன ஆனாலும்… “அவனே” ங்கிற நம்பிக்கை!
காதல் -> தெய்வீகக் காதல் ஆகிறது!
வாங்க குறுந்தொகைக்குள் போவோம்!


வண்டு படத் ததைந்த, கொடி இணர் இடை இடுபு,
பொன் செய், புனை இழை, கட்டிய மகளிர்
கதுப்பின் தோன்றும் புதுப் பூங் கொன்றைக்
கானம், ”கார்” எனக் கூறினும்,
யானோ தேறேன்; அவர் பொய் வழங்கலரே

திணை: முல்லை
துறை: பருவம் தேராமை
கவிஞர்: ஓதலாந்தையார்
பாடல்: குறுந்தொகை 21


டபராவில் காபி:

முல்லைத் திணை = தமிழின் முதல் திணை!
பலரும் = குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ன்னு நினைச்சிக்கிட்டு இருக்காங்க! அல்ல!
தொல்காப்பியர் காட்டுவது = முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல்! ஏன்?

முல்லைக்குத் தெய்வம் = திருமால்!
அதான் முதலில் வச்சிட்டாரு -ன்னு சில சமயவாதிகள் சொல்லலாம்! தவறு!
எதுக்கெடுத்தாலும், தமிழைச் சமயமாவே பாக்கக் கூடாது! தொல்தமிழில் சைவம்/வைணவம்-ன்னு அமைப்பு ரீதியான மதங்களே கிடையாது! இனக்குழு இயற்கை வழிபாடே!

காரணம் அதுவல்ல!
“தெய்வீகக் காதல்” = அதுக்குத் தான் முல்லையை முதலில் வச்சாரு!
* முல்லை = (காத்து) இருத்தலும், இருத்தல் நிமித்தமும்
* குறிஞ்சி = புணர்தலும், புணர்தல் நிமித்தமும்
ஒரு ஏக்கமான காத்திருப்புக்குப் பின் புணர்தல் = அதன் இன்பம் தெரியும் தானே?:)

கருப்பொருளைப் பாருங்க!
* முல்லை = மாலை; குறிஞ்சி = யாமம் (இரவு)
* முல்லை = கார் காலம் (மழை)! குறிஞ்சி = கூதிர் காலம் (குளிர்)

மாலைக்கு அப்பறம் தானே இரவு? மழைக்காலம் அப்பறம் தானே குளிர்க்காலம்?
Itz a Natural Sequence! மொத்த சங்கத் தமிழும் = இயற்கையே! இதில் “புராணங்கள்” இல்லை!

ஓதல் (ஓதலூர்) + ஆதன் + தந்தையார் = ஓதலாந்தையார்;
இவரு பாடியது அத்தனையும் பாலைத் திணையே! இது ஒன்னே ஒன்னு மட்டுமே முல்லை!
பல பெருங்கவிஞர்களும், கபிலர் உட்பட…
ஒரு முல்லைத் திணையாச்சும் பாடீறணும் என்கிற வேட்கையைக் காணலாம்!


காபி உறிஞ்சல்:

வண்டு படத் ததைந்த கொடி இணர் இடையிடுபு,
பொன் செய் புனை இழை கட்டிய மகளிர்

வண்டு படத் ததைந்த = வண்டு வந்து உட்காரவென்றெ seat போட்டு விரிந்ந்ந்திருக்கும்..
அடா அடா…ஆரம்பமே அசத்தல்:)

இணர் = பூங்கொத்து;
கொடி இணர் – இடை இடுபு = பூங்கொத்து இடையிடையே கட்டிய,
பொன் செய் இழை = பொன் இழையால் ஆன தலை அணி!

பொன்னு வைக்கிற இடத்துல பூ வச்சிருக்காங்களா?:))
சடையலங்காரம் = அதான் பூவும் + பொன்னும் சேர்த்துக் கட்டித் தலையில் சூடியிருக்காங்க!

கதுப்பின் தோன்றும், புதுப் பூங் கொன்றைக்

என்ன பூ? = குஷ்பூ ன்னு சொன்னா ஒதைப்பேன்:)
கொன்றைப் பூ = சிவபெருமானுக்கு உகந்த பூ! (கொன்றை வேந்தன்)
எங்க அண்ணா பல்கலையில், ஒரு பெரிய கொன்றை மரம் இருக்கும்;
அதுல, சரம் சரமா, சடை சடையாத் தொங்கும்!
அதைப் பாக்கும் போதெல்லாம எனக்குச் சிவபெருமான் சடை போலவே தோனும்!

கொன்றைப் பூவில் குளித்த மஞ்சள்… ன்னு பாட்டு ஞாபகம் வருதா?
அப்போ தான் பருவ காலம் தொடங்கி இருக்கு போல! அதான் “புதுப்பூங்” கொன்றை -ன்னு சொல்லுறாரு!

கதுப்பு = கூந்தல்! All Girlz Glittering with Flowers except our Girl:(

கானம், ”கார்” எனக் கூறினும்,
யானோ தேறேன்; அவர் பொய் வழங்கலரே

காடெல்லாம் கொன்றைப்பூ பூத்துக் குலுங்குது!
வந்து விட்டது கார்காலம், கார்காலம் -ன்னு இன்பமாப் பறை அறிவிக்குது!
ஆனா யானோ தேறேன் = நான் நம்ப மாட்டேன்!
அவர் பொய் வழங்கலரே = அவரு பொய் சொல்ல மாட்டாரு!!

இயற்கை பொய்க்கும்; ஆனா அவர் பொய்யார்!
அவரு என்னைக்காச்சும் என்னைப் பாக்க வருவாரு!
அவரு வரும் நேரமே கார்காலம்! = அதுவே எனக்கு எதிர்காலம்!

dosa 26/365

Advertisements
Comments
6 Responses to “அவர் பொய் வழங்கலரே!”
 1. அன்பின் கேயாரெஸ் – காதல் தெய்வீகக் காதல் ஆனது அருமை. – என்ன் ஆனாலும் அவனே – நினைத்தவள் அவள் – காதல் உடனடியாக தெய்வீகம் என்ற அடைமொழியுடன் தெய்வீகக் காதலாக மாறியது. குறிஞ்சி முல்லை என்ற வரிசை மாறியதேன் – முல்லை குறிஞ்சியென் தொல்காப்பியத்தில். காத்திருந்து புணர்ந்தால் அது தனி இன்பமாம் – ஆதலால் தான் முல்லை முதலிலும் குறிஞ்சி அடுத்தும் வருகிறாதாம் .. கேயேரெஸ் – சிந்தனை அருமை

  என்ன பூ ? கேள்விக்குப் பதில் சொல்ல நான் தயாரா இல்ல – ஒதைப்பீங்களோ

  அவர் வரும் காலமே கார்காலமாம் – அப்பத்தானே குறிஞ்சி அடுத்து வர இயலும் – இன்பம் த்ய்க்க முடியும்,.

  நல்வாழ்த்துகள் கேயாரெஸ்
  நட்புடன் சீனா

  Like

  • நன்றி சீனா ஐயா! அம்மா நலமா?
   ஒரே பின்னூட்ட மழையாப் பொழிஞ்சி இருக்கீங்க போல!:)
   நண்பன் திருமணம் முடிஞ்சி, இப்பத் தான் ஊருக்கு வந்து ஒவ்வொன்னாப் பாக்குறேன்:)

   Like

  • // காத்திருந்து புணர்ந்தால் அது தனி இன்பமாம் –
   ஆதலால் தான் முல்லை முதலிலும் குறிஞ்சி அடுத்தும் வருகிறாதாம்
   கேயேரெஸ் – சிந்தனை அருமை//

   Haiyo, That aint my chinthanai
   Itz Tholkaapiyar Chinthanai
   Your Wishes shd goto him:)

   Like

 2. Where do you get such lovely pictures? :-)

  amas32

  Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: