சொல் சொல் சொல் என்னுயிரே!

“சொல்” என்ற தமிழ்ச் சொல்!
அதே “சொல்” = பெயர்ச் சொல்லாவும் வரும்; வினைச் சொல்லாவும் வரும்! (Noun & Verb)
இது எம்மொழிக்கும் உள்ள அழகு! செம்மொழிக்கு இன்னும் அழகு!
Can u guess, some other words like this?:) = வெட்டு, குத்து… No violence please:)

இன்றைய பாடல் = “சொல்” என மடங்கி வரும் திருக்குறள்!
“சொல்” என்ற சொல் = திருக்குறளில் மிக அதிகமாக வரும் சொல் = 82 times!

சொல்லுக சொல்லிற் பயனுடைய – சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்
 
(இன்னா சொல்லாமை: 200)

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் – அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து
 
(சொல் வன்மை: 645)


காபி உறிஞ்சல்:

சொற்களில், பயன் தரும் சொற்களைச் சொல்ல வேண்டும்!
சொற்களில், பயன் தராச் சொற்களைச் சொல்லக் கூடாது!

யாருக்குப் பயன்? = நமக்கு மட்டுமா?
அப்படீன்னா பொய் கூடச் சொல்லலாமா? நமக்குப் பயன் தருதே! அட, வள்ளுவரே சொல்லிட்டாருப்பா, பயன் தரும் சொல்லையே சொல்லணும்-ன்னு, சொல்லீருவோம், என்ன சொல்றீங்க? :))
“பயன்” = 4 ;  அறம், பொருள், இன்பம், வீடு என்ற பயன்(களைத்) தரும் சொற்கள்!

சில சொற்களால் சிலர் கோச்சிப்பாங்க; அவங்க பிடிமானம் அப்படி;
உண்மை சுடும்! நயமா இருக்காது… ஆனா, சொல்லுக!
“நயனில சொல்லினும் சொல்லுக; சான்றோர் பயனில சொல்லாமை நன்று”!

————————

சொல்லுக சொல்லை! பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து

Valluvar is cholling a Management Concept = Self Critical Evaluation!

நம்மிடமே பல சொற்கள் இருக்கலாம்! அவற்றை நாமே மட்டம் தட்டிப் பார்த்து, தேர்ந்து வைத்துக் கொள்ள வேண்டும்!
நாமே மட்டம் தட்டி வைத்து விட்டதால், அவையில், பிறர் மட்டம் தட்டிவிட முடியாது பாருங்க:) – பிறிதோர் சொல், அச்சொல்லை, வெல்லும் சொல்-இன்மை அறிந்து;

————————

பின்வரு நிலை அணி:
* ஒரே சொல், திரும்பத் திரும்ப வந்தா = சொல் பின்வரு நிலையணி
* ஒரே பொருள், திரும்பத் திரும்ப வந்தா = பொருள் பின்வரு நிலையணி

மேற்கண்ட பாக்களில்…
“சொல்” என்ற சொல், திரும்பத் திரும்ப வருது! = 5 times in each kuRaL!
அப்படி வந்தாலும், ஒரே பொருளிலேயே வருது!
சொல்லு-பொருளு, ரெண்டுமே மாறாம, திரும்பத் திரும்ப வந்தா = சொற்பொருள் பின்வரு நிலையணி

சொல்லுக சொல்லிற் பயனுடைய – சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்

இந்தக் குறட்பாக்களை, இன்னிக்கி ஏன் தேர்ந்தெடுத்தேன் ன்னு பாக்குறீங்களா?:)
Today is 25th day = dosa 25/365

ஒரே சொல், பெயர்ச் சொல்லாவும் வரும்; வினைச் சொல்லாவும் வரும்! (Noun & Verb)
= அடுக்கு, கலை, காய்…..
= Rest of the Game, u continue:)

Advertisements
Comments
8 Responses to “சொல் சொல் சொல் என்னுயிரே!”
 1. cheenakay says:

  ஆமா நான் போட்ட மறுமொழி – எதையோ அமுக்கினதுல – அழிஞ்சிடிசு – இப்ப என்ன செய்யறது …….. ம்ம்ம்ம்ம்ம்

  சொல் சொல் சொல் என்னுயிரே ! சொல் என்ற தமிழ்ச் சொல் பெயர்ச்சொல்லாகவும் – வினைச் சொல்லாகவும் வந்து செம்மொழிக்கு மெருகூட்டும் சொல் – குற்ளீல் 82 இடங்களில் வரும் இச்சொல்லினைப் பற்றிய பதிவு.

  சொல் – பொருள் – சொற்பொருள் பின்வரும் நிலையணி – ஆகா ஆகா -அருமை. பயனில் நன்மைப் பயன் – தீமைப் பயன் – புரிந்து பயனுள்ள சொற்களைப் பயன் படுத்த வெண்டும்

  ஆமா – குறளை இன்று எடுத்ததன் காரணம் புரியவில்லையே – அதென்ன 25/365 தோசா

  நல்வாழ்த்துகள்
  நட்புடன் சீனா

  Like

 2. எனக்கும் புரியவில்லை, இருபத்திஐந்தாம் நாளுக்கும் இந்த குரளுக்கும் என்ன தொடர்பு? :-) Me one tube light, please explain :-)

  படி, நாடு, கட்டு, திட்டு, போன்ற சொற்கள் பெயர்ச் சொல்லாவும் வரும், வினைச் சொல்லாவும் வரும் என்று தோன்றின. சரியா? :-)

  உண்மை சுடும், ஆனாலும் அதுவே நமக்கு நன்மை பயக்கும். அதனால் ஒருவர் கோபமாக நமக்கு அறிவுரை சொன்னாலும் அதில் உள்ள நல்லதையே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

  “சொல்லுக சொல்லை! பிறிதோர்சொல் அச்சொல்லை
  வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து” என்கிறார் திருவள்ளுவர்

  நாமே சொல்வதற்கு முன் வார்த்தைகளை edit பண்ணி பின் சொல்ல வேண்டும். சொல்லி விட்டு நாமும் ஐயோ சொல்லிவிட்டோமே என்று வருத்தப்பட்டு பிறரையும் வருந்த விடக் கூடாது, அல்லது தவறாக சொல்லிவிட்டு அவமானமும் படக் கூடாது. வடிவேலு, Be Careful என்று சொல்லிவிட்டு எதிராளி யாரைப் பார்த்து சொல்கிறாய் என்று மிரட்டும்போழுது, உடனே என்னையே தாம்பா சொல்லிக்கிறேன் என்று ஜகா வாங்குவது போல, நாம் சொல்வதற்கு முன்பே சாக்கிரதையாக இருந்துவிட வேண்டும் :-)

  amas32

  Like

  • //படி, நாடு, கட்டு, திட்டு//

   கட்டு, திட்டு = சரிம்மா!
   படி = பெயர்சொல்லில் படி அளத்தல், படி எடுத்தல் ன்னு வரும்; வினைச் சொல்லில் படித்தல் ன்னு வரும்!:)
   படி-ப்பு ன்னு விகுதி சேர்க்கணும், பெயர்ச்சொல்லுக்கு!

   ஒரே சொல் = பெயர்/வினை ரெண்டிலும் ஒரே பொருள் வருமாறு இருத்தல் = very special words:)
   கட்டு, திட்டு is a nice example!

   Like

  • //சாக்கிரதையாக இருந்துவிட வேண்டும்//

   அம்மா,
   இந்தக் “கிரந்தம் தவிர்” உங்க விருப்பத்தின் பேரில் தானே?:)
   ஏன் கேக்குறேன்-ன்னா, நான் “கிரந்தம் தவிர்”-ன்னு சொல்வது: “கருத்து அளவில்” மட்டுமே!
   மற்றபடி, உங்களுக்கு எது இயல்போ, அப்படியே இருக்கவே வேண்டுகிறேன்; dosaவுக்காக மாற்றி எழுதணும் -ன்னு ஒரு கட்டாயமும் இல்லை:)
   Everyone shd feel at home, irrespective of any “views”; Even I mix it sometimes:)) Itz just an effort!

   Like

 3. rAguC says:

  பயனுள்ளதை சொல்லுகிறேன்! பயன் பெறுங்கள்! அதை உணர்த்தவே இதை இருபத்தி ஐந்தாவது பாவாக எடுத்தாண்டிருக்கிறார் என்று எண்ணுகிறேன். சரியா முருக?

  Like

  • What is the significance to 25? plis to explain :-)

   amas32

   Like

  • எப்படி ரகு, நீ மட்டும், என்னைய சரியாவே புரிஞ்சிக்கிற?:)))
   You are right in that thinking pattern!

   * சொல்லுக சொல்லிற் பயனுடைய = அதான் சங்கப் பாக்களை, அப்படியே மூல வரியாவே, ரெண்டு ரெண்டாக் குடுப்பது
   * சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல் = உரைகளில் இருந்து ரொம்பக் குடுப்பதில்லை; சில-பல உரைகள் சமயம் சார்ந்தே எழுதப்படுகின்றன:))

   Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: