அற விலை பகர்வோர்!

இன்று காணப் போவது = மணிமேகலை!
தமிழின் முதற் காப்பியங்களுள் = 2ஆம் காப்பியம்; இரட்டைக் காப்பியம்!

சிலப்பதிகாரம் கதையைச் சொல்லு-ன்னா சொல்லீருவோம்!
ஆனா, மணிமேகலை கதையைச் சொல்லு-ன்னா…?

முழுக்கத் தெரியாது; விட்டு விட்டுத் தான் சொல்வோம் அல்லவா?:)
அறவணன், ஆதிரை, ஆபுத்திரன், தீவதிலகை, காயசண்டிகை = இவங்கெல்லாம் யாரு?:) இனிமேலாச்சும் படிப்போமா?

தமிழின் முதல் இரு காப்பியங்களுமே = பெரும் புரட்சி!
* சிலப்பதிகாரம் = சாதாரணக் குடிமக்களே கதாநாயகர்கள்!
* மணிமேகலை = “Illegitimate Child” கதாநாயகி!

வாங்க இன்றைய பாட்டுக்குள் நுழைவோம்!


ஆற்றுநர்க்(கு) அளிப்போர் அறவிலை பகர்வோர்;
ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர்;
மேற்றே உலகின் மெய்நெறி வாழ்க்கை!
மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க்(கு) எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே!

மணிமேகலை: பாத்திரம் பெற்ற காதை (வரிகள்: 92-96)
கவிஞர்: சீத்தலைச் சாத்தனார்

சூழல்:

மணிபல்லவத் தீவு! அதில் தனித்து விடப்படுகிறாள் மணிமேகலை!
அங்கே புத்த பீடிகை! பீடிகை கண்டு பிறப்பு உணர்கிறாள்!
மணிமேகலா தெய்வம் தோன்றி, அவளுக்கு மூன்று அதிசய மந்திரங்களைக் கற்றுத் தருகிறது;

ஆனா முற்பிறப்பு அறிவதும், மந்திரம் பெறுவதுமா அவ நோக்கம்?
வெறும் கோயில் கோயிலாப் போயி, பாட்டு பாடுவதோடு, அவ மனசு முடிஞ்சீறலை;
இல்லாரின் சிரிப்பில் அல்லவோ இறைவனைக் காண நினைக்கிறாள்?

தீவதிலகை, அவள் முன்னே தோன்றி, “அமுதசுரபி” பாத்திரம் பற்றிச் சொல்கிறது!
பசி தீர்க்கணும் -ன்னு பசியா இருக்கிறாள்:))

வைகாசி விசாகம் அன்னிக்கு, அது, மணி கைக்கு வருகிறது!
மணி, புத்தரைப் போற்றிப் பாடுகிறாள் – “மாரனை வெல்லும் வீர நின்னடி”
அப்போது தான் இந்த அழியாப் புகழ் பெற்ற வரிகள் வருகின்றன!


காபி உறிஞ்சல்:

ஆற்றுநர்க்(கு) அளிப்போர் அறவிலை பகர்வோர்;
ஆரம்பமே நெத்தியடி! = “அறத்தை விலை பகர்வோர்

தங்க ரதம், வெள்ளி வாகனம், 10 Days Relay Homam, 100 குடம் பாலாபிஷேகம்
= இவ்வளவும் பண்ணிட்டு, அதெல்லாம் “ஒலக க்ஷேமத்தை” முன்னிட்டாம்:) அவ்வளவும் தன் பிடித்தங்கள்!

அதை முருகன் மேல் ஏற்றி,  தங்க ரதம் சுத்த வச்சி,
= முருகனுக்குக் கெட்ட பேரு வாங்கித் தருவது மட்டுமே, இவர்கள் செய்யும் ஆன்மீக “ஒதவி”!

Murugan is Crying; He wants to earn a Good Name, It seems!.. So,

* அழுக்கேறிய பழனிப் படிக்கட்டுகளைக் கழுவி,
* அங்கு அழுக்கேறிய ஏழைக்கும் துடைச்சி விட்டு,
* புதுத் துணி கட்டிவிடச் சொல்லுறான் முருகன்!

இப்படி மட்டும் முருகன் சொல்லீட்டா?
போய்யா, முருகனாச்சு குருகனாச்சு… அதே “சரவண பவன்” வாய் மணக்கும்:)

* என் பிடித்தங்களுக்கு முருகன்! முருகன் பிடித்தங்களுக்கு நான்???
* Dirty Damn Hypocrisy = அறவிலை பகர்வோர்!

திருப்பதி உண்டியல்-ல்ல கொட்டோ கொட்டோ-ன்னு கொட்டினா, பாவம் போயீருமா?
ஒன்னும் போவாது!:)
நாளைக்கி பெருமாள் விசாரிக்கும் போது, “ஏய், அப்ப ஒரு லட்சம் போட்டேனே, மறந்து போயிருச்சா? நன்றி கெட்ட திருமாலே!” -ன்னு Deal பேச முடியாது:))

எந்தவொரு ஆழ்வாரும் நாயன்மாரும், உண்டியல்-ல்ல காசு போட்டதில்லை என்பதை நினைவில் வைக்க!:)
* ஆற்றுநர்க்கு அளிப்போர் = இருப்பதற்கே அளிப்பவர்கள்…
* அறவிலை பகர்வோர் = அறத்தை விலை பேசுகிற சாதி!


ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர்;
மேற்றே உலகின் மெய்நெறி வாழ்க்கை!

ஆற்றும் மக்கள் x ஆற்றா மக்கள்

பசியே இல்லாதவன், மொட்டை அடிச்சிக்கிறவன், Road-ல சும்மா போறவனையெல்லாம் இழுத்து உட்கார வச்சி,

“அன்னதானம்” ங்கிற பேரில், ’ஜ’ம்பம் அடிப்பதில் அல்ல மெய்நெறி!

= இவர்கள் ஆற்றும் மக்கள்!
= ஆற்றா மக்கள்! பசி ஆற்ற முடியாத மக்கள்! இதுவே மெய் நெறி!

மாக்கள் = அஃறிணை அல்ல! மாக்கள் = உயிர்கள்/மக்கள்:)
வள்ளுவர், சும்மா ஒரு இடத்தில் திட்டுறாரு…செவியிற் சுவையுணரா வாயுணர்வின் – மாக்கள் அவியினும் வாழினும் என்? உடனே அந்தத் திட்டில் இருந்து தப்பிக்க, மாக்கள் -ன்னாலே அஃறிணை -ன்னு மாத்தீட்டோம்!:)

மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க்(கு) எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே

மண் திணி ஞாலம் = மண்ணையே மீண்டும் மீண்டும் திணிக்கும் உலகம்!
அப்படீன்னா?
மண்ணில் இருந்து உணவு பிறக்கும்; அதையே உண்டு நாமும் பிறக்கிறோம்! மீண்டும் மண்ணுக்கே போகிறோம்! Cycle!
சாம்பலில் இருந்து நம்மை உருவாக்கி, நம்மையும் சாம்பலாக்கி = இப்படி மண் திணி ஞாலம்!

இப்படியாப்பட்ட மண்ணில்…
உணவு கொடுத்தோர் = உயிர் கொடுத்தோரே!

உயிரைக் கொடுப்பது யார்?
= தந்தையின் விந்து? தாயின் கரு? இறைவன் அருள்?
= அது சும்மா ஒரு முறை உயிர் கொடுப்பு;  ஆனா பசி?
= ஏனோ ஒங்களுக்குப் பிடிக்காதவனாப் போயிட்டான்… அவன், உங்க முன் வந்து நின்னு, “பசிக்குது”-ன்னா? குடுப்பீங்களா? = உயிர் கொடுத்தோரே!!

dosa 24/365

Advertisements
Comments
6 Responses to “அற விலை பகர்வோர்!”
 1. மணிபல்லவத் தீவு! மணிமேகலை! தீவதிலகை! அமுதசுரபி! அனைத்துப் பெயர்களும் எவ்வளவு அழகு! :-) இந்தப் பெயர்களுக்கு ஒரு மயக்கும் தன்மையுள்ளது. ஏனோ வேறு உலகத்துக்கு என்னை அழைத்துச் செல்கிறது.

  பசியே வாழ்வின் உந்துசக்தி. பசிக்காதவன் செயல் படுவானா? தன் பசி தீர்க்கவும், குடும்பத்தின் பசி தீர்க்கவுமே ஒருவன் உழைக்கிறான். தேவைக்கு மேல் உழைத்து பொருள் ஈட்டுவது, அநியாய வழியில் சென்று கொள்ளை அடிப்பது போன்றவை இதில் சேர்த்தி இல்லை.

  ஆனால் ஒரு வாய் சோற்றுக்கு வழியில்லாமல் இருப்பவன் என்ன செய்வான்.பஞ்சம் தலை விரித்தாடும் பகுதிகள் இன்றும் உள்ளனவே. எத்தியோப்பியாவில் மண்ணை பிசைந்து வில்லைகளாக்ப் போட்டு விற்கும் நிலைமையும் அதற்கும் மக்கள் பறக்கும் அவல நிலையையும் தொலைக் காட்சியில் பார்க்கிறோம். அதை உண்டு பின் வயிற்று வலியால் துடித்து மாந்டும் போகிறார்கள்.

  ஈர நெஞ்சம் உடைய யாரால் இந்த நிலைமையைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியும்?வரலாற்றைப் பார்க்கும் பொழுது நம் நாட்டிலும் பல முறை பஞ்சம் வந்திருக்கிறது. அப்பொழுது எந்த அரசனும் ஒரு அமுதசுரபிக்காக என்கியிருப்பான்.

  என் மகனை கோவிலுக்கு அழைத்துச் செல்வதே பிரம்ம பிரயத்தனம். அப்படியே அழைத்துச் சென்றாலும் உண்டியலில் பணம் போட மாட்டான். நான் பணம் கொடுத்தாலும் போட மாட்டான். அந்தப் பணத்திற்கு வெளியில் பிச்சை எடுப்பவர்களுக்கு உணவு பாக்கெட் வாங்கிக் கொடுக்கச் செய்வான். உண்டியலிலும் போடு, வெளியிலும் வாங்கித் தரலாம் என்றால் கேட்க மாட்டான். சாமிக்கு லஞ்சம் கொடுக்கறியா என்று கேட்பான்.

  //உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே//
  நாம் பசியால் வாடும் பொழுது ஒரு வாய் சோறு கிடைத்து நெஞ்சு நனையும் பொழுது தான் இந்த வரியின் தாக்கத்தை உண்மையாக உணர முடியும். அதனால் தான் எழ்மை நிலையில் இருந்து முன்னுக்கு வந்தவர்கள் எல்லோரும் மற்றவர்கள் குறை தீர்க்க பெரும்பாலும் முற்படுவார்கள். தாய் தந்தையால் ஒரு முறை உயிர் பெற்றோம். தினம் தினம் உயிர் பெறுவது நாம் உண்ணும உணவினால் மட்டுமே. அதை மனம் உணர்ந்தால் நம்மால் இயன்ற அளவு இல்லாதவருக்கு உணவு அளித்து உதவுவோம். அது நம் இயல்பாகவே மாறிவிடும்.

  இரக்கமே உருவான பெண் மணிமேகலை. அவள் பாடுவதாக வரும் இப்பாடல் வரிகள் அருமை. நன்றி KRS

  amas32

  Like

  • //மணிபல்லவத் தீவு! மணிமேகலை! தீவதிலகை! அமுதசுரபி! அனைத்துப் பெயர்களும் எவ்வளவு அழகு! :-) //

   Yes!:)

   //என் மகனை கோவிலுக்கு அழைத்துச் செல்வதே பிரம்ம பிரயத்தனம்//

   Good Guy:)

   //அப்படியே அழைத்துச் சென்றாலும் உண்டியலில் பணம் போட மாட்டான்.//

   Very Good Guy:))

   //சாமிக்கு லஞ்சம் கொடுக்கறியா என்று கேட்பான்//

   Very Very Good Guy!
   Now, I really like your son!:)

   Like

 2. cheenakay says:

  அன்பின் கேயாரெஸ் – இரண்டாம் காப்பியமான இரட்டைக் காப்பியம் ப்ற்றிய பதிவு – முழுவதும் நம்க்குத் தெரியாத மணிமேக்லை பற்றிய பதிவு – சிலப்பதிகாரத்திற்கும் மணிமேகலைக்கும் உள்ள வேறுபாடு – கதை நாயகர் – கதை நாயகி பற்றியது. கதா நாயகியினைத் தவறான வழியில் பிறந்தவர் என அறிமுகப் படுத்துவது தவறல்லவா ……. கோவலன் மணிமேகலை உறவு அக்கால கட்டத்தில் அங்கீகரிக்கப்ப் பட்டதொன்றல்லவா ……இன்றும் ஒழுக்கத்தில் சிறந்தவர் கண்ணகியா மாதவியா எனப் பட்டி மன்றங்கள் நடை பெறுகின்றனவே !

  பாத்திரம் பெற்ற காதை – பள்ளிகளில் இன்றும் பயிற்றுவிக்கப் படுவது உண்டு

  மணிபல்லவத் தீவில் பிறப்பின் இரகசியமும் மந்திரங்க்ளும் அறிகிறாள்.

  வைகாசி விசாகம் அன்று பெற்ற அமுத சுரபி தான் அவ்ளை இன்றும் நம்க்கு நினைவுறுத்துகிறது,.தானத்திலேயே சிறந்த தான் அன்ன தானம் – உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே !

  சிறப்பான பதிவு – நல்வாழ்த்துக்ள் கேயாரெஸ் – நட்புடன் சீனா

  Like

  • //கதா நாயகியினைத் தவறான வழியில் பிறந்தவர் என அறிமுகப் படுத்துவது தவறல்லவா//

   ஆமாம் சீனா சார்!
   அதான் கதை நாயகியாகத் துணிந்து வைக்கிறது தமிழ்!

   //கோவலன் மணிமேகலை உறவு அக்கால கட்டத்தில் அங்கீகரிக்கப்ப் பட்டதொன்றல்லவா//

   கோவலன் – மாதவி உறவு = சமூக அங்கீகாரம் பெற்றதல்ல!

   கற்புள்ள இல்-பரத்தையும் உண்டு! பல நாடும் நயப்புப் பரத்தையும் உண்டு!
   ஆண் பரத்தனும் உண்டு, பெண் பரத்தையும் உண்டு!
   தமிழ்ச் சமூகம், இதனை அங்கீகாரம் செய்யவுமில்லை! ஒரேயடியா ஒதுக்கித் தூற்றவும் இல்லை!
   அவரவர் மனச்சாட்சிக்கு விட்டுவிட்டது!

   அதான் சங்கத் தமிழ்…
   தேவரடியார் -ன்னு, இறைவன் பேரைச் சொல்லி, ஒரு குலத்தையே வாழையடி வாழையா உருவாக்கலை!
   No Institutionalization!

   Like

 3. rAguC says:

  //ஆற்றுநர்க்(கு) அளிப்போர் அறவிலை பகர்வோர்;//
  ஆற்ற முடியும் மக்களுக்கு “அளிப்போர்” அதாவது பிச்சை / தானம் / உதவி செய்வோர். யார் இந்த ஆற்ற முடிந்தவர்கள்? கை கால் முழு சுகத்துடன் இருந்தும் உழைக்க விருப்பற்ற சோம்பேறிகள் கூட ஆற்றுநர்-கள் தான் அவர்களுக்கு செய்வதென்பது, எளிதில் செய்யக்கூடிய வாய்ப்புள்ள செயல். எப்படி ? எல்லா கோயில் வாசலிலும், தெருவிலும் பிச்சை எடுப்பதில் பாதி பேர் இவர்கள் தான், இவர்களுக்கு எதாவது உதவி செய்துவிட்டு / உணவு அளித்துவிட்டு பெரிதாக நன்மை செய்வதை எண்ணிக் கொள்பவர்கள் உண்மையில் தாங்கள் செய்த தானத்திற்கு நிச்சியம் பலன் கிடைக்கும், செய்த தர்மம் தலை காக்கும் என்று எண்ணமுடைய “அறத்தை விலை பேசுபவர்கள்” தானே?
  //ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர்;//
  //மேற்றே உலகின் மெய்நெறி வாழ்க்கை!//
  ஆற்ற முடியாத மக்கள் யார் ? எந்த உதவியையும் யாரிடமும் கேட்க கூச்சப்பட்டுக்கொண்டு / கேட்க கூடிய சூழ்நிலையில் இல்லாத / அத்தகைய சூழலை சாபமாக எண்ணி வாழ்ந்து கொண்டிருப்போர் / இயற்கையால் கைவிடப்பட்ட “மாற்றுத் திறனாளிகள்” – இப்படி பலர் உண்டு. இவர்களின் பசியை களைய வேண்டும். அதாவது உணவு போட வேண்டும்? அப்படியா சொல்லியிருக்கிறாள் ? பசியை களைய வேண்டும். அது பசி களைய தேவையான உதவியாய் கூட இருக்கலாம். அவர்களுக்கு ஒரு தொழில் செய்யும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கலாம் / அல்லது அவர்களுக்கு ஒரு வேலை வாங்கித் தரலாம். அவர்கள் பசியை அவர்களே களைந்து கொள்ளும் படி செய்வது தானே நிரந்தர உதவியாக இருக்கும். அதுதானே மெய்நெறி என்று இருக்கும்? என்ன முருகா? சரியா? நான் சொல்லுவது?
  //மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க்(கு) எல்லாம்//
  மண்ணை தின்று வாழும் உலகம், மாபெரும் அறிவியல் தத்துவம்! “எதை நீ எடுத்துக்கொண்டாயோ ,அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது” – மண்ணில் இருந்து விளைவதை, தின்பதை, இறுதியாக மண்ணே தின்று கொள்ளும்.
  //உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே!//
  உணவை கொடுத்தவன் – உயிரை கொடுத்தவன். தாயும் தந்தையும் சேர்ந்து தானே நமக்கு உயிர் கொடுக்கிறார்கள்? எப்படி உணவை கொடுப்பதன் மூலம்.ஆக நமக்கு உணவிடும் ஒவ்வொருவனும் தாய் தந்தைக்கு சமமானவர்களே. அன்னம் வைத்த வீட்டில் கன்னம் வைக்க- திருடன் கூட யோசிப்பானே ? அதுதான் உணவின் மீதான மரியாதை.

  -ரகு

  Like

  • Perfect Summary Ragu! நீ சொன்னது போல்,
   * ஆற்றும் மக்கள் = பிச்சையே தொழிலாக வைப்பவர்களும் கூடத் தான்!
   * ஆற்றா மக்கள் = அதான் அந்த வீட்டுவேலைச் சிறுமியின் படம் போட்டிருந்தேன்!
   முதலமைச்சர்-கோயில் அன்னதானத் திட்டத்தில், பரட்டைச் சாமியார்களுக்குக் சாப்பாடு கிடைத்து விடும்; வெத்தலை போட வேற இடம் தேடுவாங்க!:)
   ஆனா, அந்த வேலைக்காரச் சிறுமி, கோயிலுக்குக் கூட வரமுடியாதே!:(

   //அது பசி களைய தேவையான உதவியாய் கூட இருக்கலாம்.
   அவர்கள் பசியை அவர்களே களைந்து கொள்ளும் படி செய்வது//

   மிகவும் உண்மை!
   அதான் உண்டி என்ற சொல்! உள்+தி = உண்டி
   உள்வதற்காக (வாழ்வதற்காக) கொள்வதால் = உண்டி!

   Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: