அகலிகை “கற்பு” உள்ளவளா?

அகலிகை” =  இலக்கிய அழகியல்!

நம்முள் இறங்கி,  நம்மையே திகைக்க வைக்கும் கதாபாத்திரம்!
வால்மீகி-கம்பன்: இருவரும் 180°  வேறுபடும் கதாபாத்திரம்!

* வால்மீகி-அகலிகை: “வா இந்திரா” -ன்னு அவனை விளித்தே கூடினாள்!
* கம்பன்-அகலிகை: “நம் கணவனா இப்படி அன்பா இருக்கான்?” -ன்னு இன்ப-ஐயத்தில் கூடினாள்!

என்னது? விளித்துக் கூடினாளா? = அய்யோ! சாஸ்திரக்காராள் என்னை அடிக்க வராதீங்கோ:) பால காண்டத்தில், வால்மீகி மகரிஷி அருளியதையே சொல்லுறேன்!  நீங்களே சுலோகத்தைப் பாருங்கள்!

அகலிகை சொல்கிறாள்:
சுர சிரேஷ்டா, கச்ச சீக்கிரம்…, இதப் பிரபோ
ஆத்மானாம், மாம்ச, தேவேசா! சர்வதா  ரக்ஷ, கெளதமாத்!

(இதமானவனே, தேவர்கள் தலைவா,  சீக்கிரம் கூடு!
பின்பு… கெளதமருக்குத் தெரியாமல் என்னையும் உன்னையும் காப்பாற்றிக் கொள்!)

சிலருக்கு, இது திகைப்பாய் இருக்கலாம்! என்னை மன்னிக்க! ஆனா, இதுவே வால்மீகி!

நமக்கு ஒன்னு பிடிச்சிருக்கு என்பது வேற; ஆனா உண்மை=தரவு, வேற!
* இரண்டும் ஒன்றுபட்டால் = நல்லதே!
* ஆனா, வேறுபட்டால்? = அவ் வேறுபாட்டை மதிக்கத் தெரியணும்!
வெறும் கருத்துக்காக வன்மம் கொள்ளக் கூடாது! அதுவே #மனிதம்

அப்படீன்னா… அகலிகை “கெட்டவளா”? = அல்ல!
அகலிகை பற்றி, ஆழ்ந்து நோக்கலாமா? கூடவே வாங்க!


அகலிகை யார்?

* அ + ஹல்யா = மாசு அற்றவள்!
* அஹல்யா = “உழப்படாத நிலம்” என்று Literalஆகப் பொருள் கொள்வோரும் உளர்:)

தேவ ஆடல் குமாரி, ஊர்வசியின் ஆணவத்தை அடக்க,  பிரம்மன் நீரிலிருந்து உருவாக்கிய அற்புதப் பெண்= அகலிகை!
அவளை அடையப் பலரும் விழைகிறார்கள்!
அதில் முன்னணியில் இருப்பவன் = இந்திரன்!

“தெய்வங்கள் ஓடோடி வந்து, வேல் ஏந்தி-சக்கரம் ஏந்திக் காப்பாற்றுமே?” – அதே அமரர் தலைவன் – நற்குணங்களே உருவான இந்திரன் தான்!:))
(குறிப்பு: இவை “புராணக்”  கதைகளே; தமிழ்த் தொன்மத்து முருகனோ-திருமாலோ அப்படி அல்லர்; இந்திரனை அவர்கள் காப்பாற்றவும் இல்லை)

நடக்கிறது சுயம்வரப் போட்டி;
யார் மூவுலகமும் முதலில் சுற்றி வருகிறார்களோ, அவர்களுக்கே = அகலிகை!

இந்திரன் மாயம் செய்து, வெற்றி பெற நினைக்கிறான்;
கெளதம முனி என்பவர், சுரபி (எ) தேவலோகப் பசு… அது சினை ஈனும் போது, சுற்றி வந்து, வென்று விடுகிறார்!

கர்ப்பிணிப் பசுவை வலம் வருதல் = உலகை வலம் வருதலுக்குச் சமானம் -ன்னு “வேதத்தில்” இருக்காம்;
வேதப் பிதாவான பிரம்மனே,  அதை மீறலாமா? = அகலிகை, கெளதமருக்கே!

இந்திரன் “கறுவுகிறான்”
* மனசுக்குள் வன்மம் வளர்ந்தா என்ன ஆகும்? = சமயங் கிடைக்கும் போதெல்லாம் குத்தத் தோனும்;
* இந்திரன், அகலிகையை, வார்த்தையாலேயே குத்தி எடுக்கிறான் = ரிஷியுடன் இன்பமாய் வாழும் “வாழாவெட்டி”  என்று தேவலோக சபைகளில் பேசி மகிழ்கிறான்:(


அகலிகை = Someone lucky to have you?
Yes, கெளதம முனி lucky to have you!

இல்லறம் நடத்தலாம்-ல்ல? = “புணர்”ஸ்காரங்களில் ஈடுபடாமல், புனஸ்காரங்களில் ஈடுபடுகிறார் முனிவர்;
அதுக்கு எதுக்குச் சுயம்வரத்துக்குப் போகணும்?
= பெண் உதவியுடன், வேத சம்ரஷணம் செய்யவாம்!:(

* இவளோ ஏங்கி ஏங்கி…..
* பசியிலும், கிசியிலும்…..

இதை மோப்பம் பிடித்து விட்ட இந்திரன்…
ஒருநாள்,  சேவலாய்க் கூவி, விடியும் முன்பே, கெளதமரை வெளியேற்றுகிறான்;
கெளதமராய் உருவங் கொண்டு, அவளை நெருங்குகிறான்!

* சுஸ் சமாஹிதே, சு மத்யமே = வழவழ தொடை, வழுக்கும் இடை…
* அஹம் து, சங்கமம் இச்சாமி = உன்னைக் கூடத் துடிக்கிறேன் டீ…

ஒரு நாளும், இப்படியான பேச்சை… “இன்ப அன்பை” அவள் அறியாள்:(
ஒரு வேளை, ஏதோ இன்ப இலக்கியம் படிச்சதால், தன் புருசன் மாறிட்டானோ?
கெட்டியான தேன்கூட்டிலே தீப்பொறி பட்டால்?
தேனீக்கள் பறந்து விட… சொட் சொட் என்று அவளுக்குச் சொட்டுகிறது!

* தன் புருசனா இப்படி? = ஐயம் எழுகிறது!
* கணநேரம் தான் = என்ன முடிவெடுப்பாள் அகலிகை??
* இங்கே தான் கம்பனும்-வால்மீகியும் வேறு-மாறு படறாங்க!


வால்மீகி:
அவன் உடல் பகுதிகளால் உணர்ந்து விடுகிறாள்= இவன் இந்திரனே!
But Lust has No Shame! = “சீக்கிரம் தேவராஜா!  கெளதமர் வந்துறப் போறாரு” என்கிறாள்!

கம்பன்:
தன் கணவன் ஒருநாளும் இப்படி அன்பு காட்ட மாட்டானே! = ஐய-இன்பம்!
But True Love, has Lasting Lust = ஐயனோடு குளிக்கிறாள், களிக்கிறாள்!

கம்பன் – வால்மீகி வேறுபாடு புரிந்ததா?

* வால்மீகி= “உடல் உணர்ச்சி”
* கம்பன்= “உள்ள உணர்ச்சியால் உடல் உணர்ச்சி”

பாலைவனச் சோலையில், ஒரு நீர் ஊற்று பொங்கினால்?
காதற்செடியிலே  காமத்துப்பால்!

பின்பு நடந்தவை, உங்களுக்கே தெரியும்!
* முக்காலமும் உணர்ந்த முனிவன், அதிகாலை மட்டும் உணரலை போலும்! ச்சே விடியலையே -ன்னு திரும்பி வர…
* நிலைமை கண்டு… அவள் மேல் ஆங்காரம்; ஆனா “பூஜா பதவி”யுள்ள இந்திரன் மேல்?

= சும்மா ஒப்புக்கு ஒரு சாபம்; “உடலெங்கும் யோனி”; அதுக்கு Immediate பரிகாரமும் குடுத்து விட்டான்;
= அதைக் கூட, “உடலெங்கும் கண்” என்று நைசாக மாற்றி விட்டார்கள்; இந்திரன் அல்லவா! யாக பலன் குடுப்பவனாச்சே!

ஆனா அவளை?
* ஏற்கனவே உணர்விலே கல்லாய் இருந்தவளை, உடலாலும் கல் ஆக்கினான், முனி!
* தான் மட்டும், வேதப் படிப்பை வைத்துக் கொண்டு, சகலரும் மதிக்க உலா வந்தான் கெளதம முனி!

வாங்க, கம்பனிடம் செல்வோம்!


புக்கு அவளோடும், காமப் –  புது மண மதுவின் தேறல்
ஒக்க உண்டு இருத்தலோடும் –  உணர்ந்தனள்; உணர்ந்த பின்னும்
தக்கது அன்று என்ன ஓராள் –  தாழ்ந்தனள் இருப்ப; தாழா
முக்கணான் அனைய ஆற்றல் –  முனிவனும் முடுகி வந்தான்… (76)

கை வண்ணம் அங்குக் கண்டேன்
கால் வண்ணம் இங்குக் கண்டேன் (82)

அஞ்சன வண்ணத்தான் தன் –  அடித்துகள் கதுவா முன்னம்
வஞ்சிபோல் இடையாள் முன்னை –  வண்ணத்தள் ஆகி நின்றாள்;
நெஞ்சினால் பிழைப்பு இலாளை –  நீ அழைத்திடுக!  என்ன,
கஞ்சமா மலரோன் அன்ன – முனிவனும் கருத்துள் கொண்டான் (85)

பால காண்டம் – அகலிகைப் படலம்


காபி உறிஞ்சல்:

1. காமப் புதுமண மதுவின் தேறல் = என்னவொரு உவமை!
* தேறல் (ஊறல்) = பழைய மது = அவ உடம்பு
* புது மணம் = புதிய மணம் = அவ உணர்வு
முருகா!  இதுல இருக்குற அந்தரங்கத்தை என்னால வெளிய சொல்ல முடியலையே!:(

2. ஒக்க உண்டு இருத்தலோடும் “உணர்ந்தனள்” = உணர்ந்து விட்டாள்!
* என்ன-ன்னு “உணர்ந்தாள்”?
* அதைக் கம்பன் வாய்விட்டுச் சொல்லலை! ஆனா உணர்ந்துட்டா, உணர்ந்துட்டா
*  “ஒக்க உண்டு” = இருவருமே ஒருசேர ஆசை வைத்தல் = தனக்குப் “புதுசு” ன்னு உணர்ந்துட்டா

3. உணர்ந்த பின்னும், “தக்கது அன்று” என்ன ஓராள்;
= உணர்ச்சியில், ஆராய்ச்சி ஏலுமா?  சந்தியா காலத்தில் பண்ணலாமா?  தக்கதோ?
= இப்படியெல்லாம் ஓராள்! (ஓர்தல்=ஆய்தல்)

4. தாழ்ந்தனள் + இருப்ப = படுத்தனள் + அமர்ந்தனள்
Is Kamban talking about a “position”? :)

5. தாழா முனிவனும் முடுகி வந்தான்
= இவள் இன்று “தாழ்ந்தாள்”;  இவன் என்னிக்கித் தான் “தாழ்ந்து” இருக்கான்? = “தாழா” முனிவன் வந்தான்;

6. முக்கணான் அனைய ஆற்றல்
= கம்பன், இங்கே எதுக்கு ஈசனைக் காட்டுறான்-ன்னு தெரியல!  ஒரு வேளை, உமையன்னையிடம் அடிக்கடிக் கோபித்துக் கொள்வதாலோ?
= கம்பனின் இந்தவொரு உவமை மட்டும் எனக்குப் பிடிக்கலை! நஞ்சுண்ட கருணையுள்ளம் ஈசன் எங்கே? இந்த பாழாப்போன கெளதமன் எங்கே? வேணாம்! I forgive u kamba!


பிரபலமான வரிகள் என்பதால்,  2 lines மட்டும் கொடுத்துள்ளேன்!
இவை இராகவனைப் புகழ வந்தவை; ஆனால் இந்தப் பதிவில், அகலிகையே நம் குறிக்கோள்!

* கை வண்ணம் அங்குக் கண்டேன்= உன் கை வண்ணம், தாடகை அழிப்பிலே கண்டேன்!
* கால் வண்ணம் இங்குக் கண்டேன்= உன் கால் வண்ணம், அகலிகை வாழ்விலே கண்டேன்!
——————————–

இராகவனை, யாரும் எதுவும் சொல்லீறக் கூடாது என்பதில் கம்பன் எப்பமே உசாரு:)
அதான், காலால் அவளைத் “தொட்டான்” ன்னு கூடச் சொல்லலை!
“தொடுதலே” இல்லாமல்,  அவன் பாத தூசியே,  பெண் (எ) கல்லைப் புரட்டி விட்டது:)

அஞ்சன வண்ணத்தான், “தன் அடித் துகள்” கதுவா முன்னம்…
வஞ்சி போல் இடையாள், முன்னை வண்ணத்தள் ஆகி நின்றாள்;

வால்மீகியோ, “கல்” ஆனாள் -ன்னு கூடச் சொல்லலை! யார் கண்ணிலும் படாது வாழ்வாள் என்பதே சாபம்!
பாழடைந்த குடிலில், யார் கண்ணிலும் படாத மறை வாழ்வு!
உணவே இல்லை; வெறும் காற்றின் அணுவை மூச்சாக்கி வாழ்ந்தாள்;
பின்பு, இராகவன் குடிலின் உள்ளே நுழைய,  அவள் மீண்டாள்!
——————————–

நெஞ்சினால் பிழைப்பு இலாளை”! = இது தான் முக்கியமான வரி;
அகலிகை = மனத்தால் மாசு அற்றவள்! நெஞ்சினால் பிழை இலாள்;

நீ அழைத்திடுக என்ன; முனிவனும் கருத்துள் கொண்டான்
* இதைக் கம்பன் மட்டுமே காட்டுகிறான்; முனிவனையே திருத்துகிறான்!
* டேய் முனிவா, இப்பவாச்சும் அவளைப் புரிஞ்சுக்கோடா, வாய் நிறைய அவளை அழைத்துக் கொள்!

நம்மில் யார் தான் சினிமாப் போஸ்டர்களை ரசிப்பதில்லை?
சூர்யா-ஆர்யா, நவ்தீப்-ரவி = கண்களை மூடிக்கொள்ள வேணுமா பெண்கள்?
அப்படிப் பார்த்தால், உலகில் ஒருவருக்குமே கற்பில்லாமல் போய் விடுமே?
மகேஷ்பாபு  = மன ஒக்கடு, மன அத்தடு, மன தூக்குடு:)))

*  அங்கோர் பார்வையிலா = கற்பு?
* “அவனே” என்று இருப்பதுவே = கற்பு!

* கற்பு = என்றுமே உடல் சம்பந்தப்பட்டது அல்ல!
* கற்பு = என்றுமே உள்ளம் சம்பந்தப்பட்டது!! = “நெஞ்சினால் பிழை இலாள்”

dosa 23/365 – kamban 3/52

Advertisements
Comments
21 Responses to “அகலிகை “கற்பு” உள்ளவளா?”
 1. Sethu says:

  முக்கணான் அனைய ஆற்றல்—-

  இன்னும் விடியவில்லை..நம்மல யாரோ ஏமாத்திட்டானுவடோய்ன்னு சிவன் மாதிரி (எரிக்கிற) கோபத்தோட வந்தார்ன்னும் இர்க்கலாம்…(இந்திரன் உள்ள இருக்கிறது சர்ப்ரைஸா இல்லாமக் கூட இருக்கலாம். பயப்புள்ளைக்கு அகலிகை மேல ஒரு கண்ணு இருக்கிறது தெரியாமலா போகும் முக்காலமும் உணர்ந்த முனிவனுக்கு??)

  இல்ல சிவனைப்போல எரிக்கும் திறன் கொண்ட முனிவர்ங்கிற உவமையாக்கூட இருக்கலாம். அகலிகைக்கு என்ன ஆகப்போறதுங்கிற மேட்டர இந்த வரியக்கொண்டு சொல்லிட்டானோ கம்பன்? எரிக்கல…ஆனா கல்லாக்கிட்டானே பாவி பய!!!

  Like

  • //சிவன் மாதிரி (எரிக்கிற) கோபத்தோட வந்தார்ன்னும் இர்க்கலாம்//

   Nice Thought! I didnt think in this angle;
   Even though many movies show, Siva Peruman as “angry & fiery”, I always see him as “manly & compassionate”
   Itz only movies & some thala puraNams, focus him as if, he always fights & sends Umai Annai to Earth; But hez a romantic lover and yogic person, at the same time:)

   //முக்காலமும் உணர்ந்த முனிவனுக்கு//

   இது ஏதோ ஒரு Rhymingஆ பிரபலம் ஆயிருச்சி:)
   இவ்ளோ படிச்ச முனிவனுக்கு, அகலிகை பிழை இலாதாள் -ன்னு தெரியலையே:(
   முக்காலமும் உணர்ந்தவன் இறைவன் ஒருவனே!
   இது போன்ற முனிவர்களோ, சாமியார்களோ அல்ல, என்பது என் தனிப்பட்ட கருத்து! (Imho)

   Like

 2. Sethu says:

  அஞ்சன வண்ணத்தான் தன், அடித் துகள் கதுவா முன்னம்
  வஞ்சிபோல் இடையாள் முன்னை, வண்ணத்தள் ஆகி நின்றாள்;

  reincarnationஅ இவ்வளவு செக்ஸியா (முடியல) எப்படித் தான் express பண்ண முடிஞ்சிதோ

  Like

  • அதான் கம்பன்!:)
   வஞ்சிபோல் இடையாள் முன்னை-வண்ணத்தள் ஆகி நின்றாள்!
   முன்னை-வண்ணம் = Past Colorful Life! How sweet!:)

   அது என்ன வஞ்சி போல் இடையாள்?
   வஞ்சி -ன்னாலே பெண் தானே? பெண் போல் இடையா? Can u guess?:)

   Like

 3. Santa says:

  அன்பு இரவி, தாழ்ந்தனள் என்பது தன் கற்பு நிலையில் தாழ்ந்ததா? அல்லது படுத்தா?

  Like

  • அதை நீங்க (வாசகர்) தான் முடிவு செய்யணும், சந்தோஷ்:)
   he he…chummaa:)
   கற்பில் “தாழ்”ந்தவள்- ன்னா, அடுத்த பாட்டிலேயே, கம்பன், “நெஞ்சினால் பிழை இலாதாள்” -ன்னு சொல்ல மாட்டான் அல்லவா?
   எனவே கற்பில், தாழ்ந்தவள் அல்லள்!

   Like

 4. ஒக்க உண்டு – என்ன பிரமாதமான பிரயோகம்.
  ‘இருவரும் சமமாக அனுபவிக்க வேண்டிய போகம்’ என்பதை எவ்வளவு அழகாக சொல்கிறார்.

  Like

 5. //தாழ்ந்தனள் + இருப்ப // மனம் நெகிழ்ந்து, அதனால் உடல் நெகிழ்ந்து, தழைந்து போகிறாள். அதாவது விட்டுக் கொடுக்கிறாள்.

  கணவனின் துணையோடு தானே காமனை வென்றாக வேண்டும்? ஆனால் இங்கே கௌதம முனிவர் “முனி ஸ்ரேஷ்டராக” இருந்து என்ன பயன்? ஒரு மனைவிக்குக் கொடுக்க வேண்டியதை கொடுக்கத் தெரிந்ததா? தன் தேவைகள் நிறைவேறினால் போதுமானதாக நினைத்த ஒரு சுயநலவாதி.

  வில்லன் இந்திரன். அவனும் ஒரு ஆண் மகன்+சுயநலவாதி. பெண்ணின் இயல்பு குணத்தைப் பயன் படுத்தி அவளை வசப்படுத்தி தன் இச்சையை தீர்த்துக் கொண்டான்.

  Both are technically at fault. But the man gets just a slap on the wrist while the woman is condemned for almost eternity. The judgement is passed and the sentence given by none other than the one who was the root cause for the crime! Manu Dharmam!

  ஆனால் பெண்ணாக இதை சொல்கிறேன். அகலிகை தெரிந்தே தவறு செய்து இருக்கக் கூடாது. ஆண் தவறுவது வாடிக்கை. மன்னித்து விட்டுவிடலாம் என்று சொல்லவில்லை. அது அவன் இயற் குணம். பெண்ணின் பெருமை அவள் புனிதத் தன்மையில் தான் ஓங்கி நிற்கிறது. சீதையும் நளாயினியும் எதனால் பேசப்படுகிறார்கள்? அவர்கள் பொறுமையையும் கற்பு நெறியையும் பேணியதாலே. அன்னை சாரதா தேவி இன்றைய காலக் கட்டத்தில் நம்மிடையே வாழ்ந்த ஒரு மாசறு தங்கம். சராசரி பெண் தான். கணவனின் மனநிலை அறிந்து தன் வைராக்கியத்தாலும், சேவையாலும் அனைவரும் வணங்கும் நிலையைப் பெற்றார்.

  கணவன் மனைவி வேலை நிமித்தமாக வேறு வேறு ஊர்களில் பல காலம் பிரிந்து வாழும் சூழ்நிலை ஏற்படும் இக்காலத்தில் கணவன் மனைவி இருவரும் தவறு செய்யும் வாய்ப்பு உண்டாகிறது. ஒரு கணவன் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக் கொண்டான் என்று தெரியும் பொழுது எனக்கு உண்டாகும் கோபம், அதே ஒரு மனைவி தவறு இழைக்கிறாள் என்று தெரியும் பொழுது என் மனது வேதனை தான் அடைகிறது.

  amas32

  Like

  • cheenakay says:

   அன்பின் கேயாரெஸ் – படித்தேன் – குழம்புகிறேன் – கவுதமருக்கு அகலிகை பூஜை புன்ஸ்காரங்களில் தான் உதவுகிறார். புண(ர்)ஸ்காரங்களீல் உதவ வில்லை – இல்லை இல்லை – இவருக்குத் தேவைப்படவில்லை.இந்திரன் கவுதமர் வடிவினில் வந்து அழைத்ததும் – தேவை வந்து விட்டதோ என நினைத்து உடன் படுகிறார். வால்மீகீக்கும் கமபனுக்கும் நிறைய வேறுபாடுண்டு. நல்லதொரு ஆய்வுக் கட்டுரை – அருமையான மறுமொழிகள் – குழப்பம் எதுவென்றால் – கவுதமர் அகலிகையினைக் கல்லாக மாற்றுவத் ஏன் ? அவருக்குத் தெரியாதா – அகலிகை பற்றி – இந்திரனின் தவறென அறியமாட்டாரா ? இந்திரனைச் சபித்தாரா ? கைவண்ணம் – கால் வண்ணம் – நல்லதொரு விளக்கம் – நல்வாழ்த்துகள் கேயாரெஸ் – நட்புடன் சீனா

   Like

   • //குழப்பம் எதுவென்றால் – கவுதமர் அகலிகையினைக் கல்லாக மாற்றுவத் ஏன் ? அவருக்குத் தெரியாதா – அகலிகை பற்றி
    இந்திரனின் தவறென அறியமாட்டாரா ? இந்திரனைச் சபித்தாரா ?//

    Too much Male Chauvinism is involved here in this story:(
    Gowthama uses her, only for his aanmeega assistance! He never cares for other ppl sensitivities!
    If he wants only aanmeega ascension, he shd not have married at all in 1st place!

    Valmeegi never uses the word “Stone”!
    He only curses her to be “unseen” by anyone & puts her to “complete isolation”:(

    Gowthama is not முக்காலம் உணர்ந்த முனி!
    If so, he wud have understood அகலிகை! But he didnt!
    * He cursed her severely bcoz = she was பேதை! soft & not fighting back
    * He cud not curse Indran severely! He cursed only lightly bcoz = Indran was head of demi gods; Power!

    Like

    • இந்திரனுக்கு உடம்பெல்லாம் கண் -ன்னு சபித்தாரே தவிர…
     அந்தச் சாபத்தால், அவனுக்கு யாதொரு துன்பமும் இல்ல!
     வழக்கம் போல் “தேவராஜா” ன்னு இருந்து கொண்டு, போகங்களைத் தான் அனுபவிச்சான்!
     ஹோமங்களில் வேறு வகையான “ஆஹூதி” குடுக்க ஏற்பாடு செஞ்சி, பலமூட்டி, அவனைத் துன்பத்தில் சிக்காமல் உதவிவிட்டது;

     ஆனால் அகலிகையோ = பேதை!
     அவளுக்கு ஏது ஆஹூதி?

     யாருக்கும் உருத் தெரியாமல், அன்ன-ஆகாரமின்றி, காற்றையே குடித்து, உணர்வுகளைக் கொன்று,
     தூசோடு தூசாக (கல் போல்), இரு-ன்னு சாபம்!
     அதை ஏற்றுக் கொண்டு, அப்படியே இருக்கிறாள் பேதை! போடா -ன்னு போகத் தெரியல:((

     இதை நம்மாளுங்க கல்+பு = கற்பு -ன்னு உடான்ஸ் பண்ணி,
     கல்லு போல பொண்ணுங்க இருக்கணும்!
     இரும்பு வளையும், கல்லு வளையாது, உடைஞ்சிரும்! எதுனா ஆச்சுன்னா கல்லு போல உடைஞ்சிறணும் = அதான் கற்பு -ன்னு கதை பண்ணிட்டானுங்க:(((

     Like

  • //ஒரு கணவன் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக் கொண்டான் என்று தெரியும் பொழுது எனக்கு உண்டாகும் கோபம்,//

   this kobam is good

   //அதே ஒரு மனைவி தவறு இழைக்கிறாள் என்று தெரியும் பொழுது என் மனது வேதனை தான் அடைகிறது//

   this distress is not good:))

   I can understand your hallowed feelings ma!
   I dont say all girlz also shd go astray!
   All I am saying is: Condemnation & Morals = shd be unbiased, man or woman!
   The more we spotlight morals on women & make them “பூஜிக்கத் தகுந்த”, such manly crimes get away with simple punishments, like Indra:(

   Like

 6. சொ.வினைதீர்த்தான் says:

  * இவளோ ஏங்கி ஏங்கி…..
  * பசியிலும், கிசியிலும்…..
  கிசி என்ற சொல்லாட்சியை கி.ராஜநாராயணின் ஒரு கட்டுரையில் வெகு நாட்களுக்கு முன் படித்தேன். இடுப்புக்கு மேலே மட்டும் பசியெனும் நெருப்பு எரிந்து கொண்டிருக்கவில்லை. கிசி என்னும் நெருப்பில் வேகுதல், சாம்புதல் கொடுமையானது.

  அடுத்து குறும்பான இரசிக்கத்தக்க பார்வை:
  தாழ்ந்தனள் + இருப்ப = படுத்தனள் + அமர்ந்தனள்
  Is Kamban talking about a “position”?..

  படத்தில் பொசிசன் சொன்னவர் பாலச்சந்தர். மன்மத லீலையில் ஒரு காட்சியில் மேலே மின்விசிறி மட்டும் சுற்றிக்கொண்டிருக்கும். கமல் குரல் “உஷாவா”. பெண்குரல் “இல்லை. மாலா” கமல் குரல் “ நான் மின்விசிறி பெயரைக் கேட்டேன்.”

  தாழா முனிவனும் முடுகி வந்தான்
  = இவள் இன்று “தாழ்ந்தாள்”; இவன் என்னிக்கித் தான் “தாழ்ந்து” இருக்கான்? = “தாழா” முனிவன்!
  தாழா முனிவன் சொற்றொடர் கூடா முனிவனைக் குறிக்கிறது என்ற குறிப்பு சிறப்பு.
  ஊடல் கூடலில் முக்கண்ணான் தாழ்ந்து உமையின் பாதத்தில் பிறை குத்திய வடு இருந்ததாம்!

  அன்புடன்
  சொ.வினைதீர்த்தான்.

  Like

  • ஆமாம் சொ.வி!
   கி.ரா-வின் அழகான சொல்லாட்சி = கிசி!
   என் தோழனும் அடிக்கடிச் சொல்லுவான்! எனக்கு ரொம்பப் பிடிச்ச சொல்!

   * வயிற்றில் நெருப்பு = பசி
   * உள்ளத்தில் நெருப்பு = கிசி
   இரண்டுக்கும் புறம், அகத்தில் போக வேண்டும்! பசியாற, கிசியாற
   ——————

   //அடுத்து குறும்பான இரசிக்கத்தக்க பார்வை:
   தாழ்ந்தனள் + இருப்ப = படுத்தனள் + அமர்ந்தனள்
   Is Kamban talking about a “position”?..//
   இப்படிச் சொன்னதுக்கு, என்னைய அடிப்பாங்களோ? -ன்னு பயந்தேன்! நல்ல வேளை புகழறீங்க:)

   //படத்தில் பொசிசன் சொன்னவர் பாலச்சந்தர்//
   he he; enjoyed the usha fan & mala fans:)

   //கூடலில் முக்கண்ணான் தாழ்ந்து உமையின் பாதத்தில் பிறை குத்திய வடு இருந்ததாம்!//
   haiyo!
   I liked this!
   நெஞ்சில் போய் குத்திருச்சி, ஈசனின் பிறை குத்திய வடு!

   Like

   • kantha murugan says:

    I’m in mumbai! Here, people r saying Kousalya cursed Indra that ” un udambu mulukka yonith thuvaarangal aahak kaatchiyalikkak kadavadhu!!

    Like

    • Kousalya? nopes! u mean Ahalya?
     Gautama only, curses indra with 1000 yonis, but commutes this to a more graceful 1000 eyes, as Brahma pleads to forgive Indra who is the Chief of Devas!

     However, Valmiki stops by saying, “the 1000 yoni-ed Indra lost his manhood, but regained after a Goat sacrifice”
     gautamena evam uktasya,
     sahasra akshaya, vrishaNau, tat kshaNaatth

     Itz the other puranas who talk abt 1000 yonis & 1000 eyes, in detail:)

     Like

 7. santhilal says:

  indran-always a sexual illegal character.??

  Like

  • sexual = yes
   illegal = no

   bcoz, hez the chief of devas and hence the guy who accepts “avirpaagam” in homam/yaagam;
   so, hez potrayed as a “desireful” guy than “illegal” guy; Only asuras are “illegal”:)

   jayanthan = son of indra
   he took crow’s form to pluck sita’s breasts; but he was “mildly” punished; they also wrote, murugan came to rescue this jayanthan guy from the prison of asuras

   But, my tamizh murugan is above all such puranic bluffs:) Hez a nadukal entity of sanga tamizh heritage; thatz all:)

   Like

 8. Tamil Nenjan says:

  அகலிகைக்கு ஊடலின் போது தெரிந்தாலும் கணவண் உரு என்பதால் பரவாயில்லை என்று தெரிந்தே தவறு செய்தவள் அகலிகை.

  Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: