வெள்ளாங் குருகின் புள்ள செத்து போச்:)

சுவையான நூல் = ஐங்குறுநூறு!

குறுந்தொகையே ரொம்பச் சிறுசு -ன்னு சொல்லிச் சொல்லிப் பழக்கம் அல்லவா? ஆனா உண்மை அதுவல்ல!:)
* குறுந்தொகை = 4-9 lines
* ஐங்குறுநூறு = 3-6 lines

இப்போ சொல்லுங்க, எது உண்மையான “குறுந்” தொகை?:)
ஒன்றையே பரக்கப் பேசினால், இப்படித் தான் ஆகும்! இன்னொரு உண்மை மங்கிவிடும்; நாம் அப்படிச் செய்யக் கூடாது!


திணை: நெய்தல்
துறை: மகப் பேறுக்கு உரிய காலத்தை வீணாக்குறியே -ன்னு தோழி சொல்லுறா; அது கேட்டு தலைவி கோவப்படுறா :)

கவிஞர்: அம்மூவனார்
பாடல்: ஐங்குறுநூறு 155

வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தென,
காணிய சென்ற, மட நடை நாரை
பதைப்ப, ததைந்த, நெய்தல் கழிய
ஓதமொடு பெயரும் துறைவற்குப்
பைஞ் சாய்ப் பாவை, ஈன்றனென், யானே!


டபராவில் காபி:

* வெள்ளாங் குருகின் புள்ள செத்து போச்! சொல்ல வந்துருச்சாம் நாரை!
* சரி தான் போடீ!
* நீரிலே, நெய்தல் பூ அசைஞ்சி அசைஞ்சி,  நெருங்குது; ஆனா விலகுது!
* கடலில் கலம் செலுத்தும் இவன்!
* இவனுக்கு, நான் பஞ்சு அடைச்ச பொம்மையைப் பெத்துக் குடுக்குறேன் போதுமா? 

ஏதாச்சும் புரிஞ்சுதா?:))
இது கும்பலாய் வரும் 10 பாடல்கள் = வெள்ளாங் குருகுப் பத்து
இந்தப் பாட்டு, நடுவால இருப்பது!
முதல் பாட்டைப் படிச்சா, “சூழல்” புரிஞ்சீரும்:)


சூழல் (துறை):

தலைவனுக்கு வேற ஒரு இடத்திலயும் சகவாசம் வந்துருச்சி:)
தலைவி, அவனுக்கு “வாயில் மறுக்கிறாள்” = அதாங்க, வூட்டுக்குள்ள வுட மாட்டேங்குறா:)
இதான் சாக்கு-ன்னு,  அவன் அங்கேயே போயீட்டான்!

தோழி: “என்னடி, இவ்ளோ ரோசக் காரியா இருக்கியே;
அவன் பண்ணது தப்பு தான்; அதுக்காகப் பேச்சு வார்த்தைக்கே கதவடைச்சா அப்பறம் எப்படியாம்?

ஒனக்கு மாதவிலக்குத் தள்ளிப் போக வேணாமா?
குழந்தை பெற்றுக் கொள்ளும் பருவம் இதான்டி; அப்பறம் பாரு, அவன் இங்கேயே தான் கிடக்கணும்”….. ன்னு அறிவுரை மழை:)

“எப்படீ நல்ல சேதி சொல்லப் போற?”-ன்னு தோழி கேக்க..
= ஆங், பொம்மைக் குழந்தை பெத்துக் குடுக்குறேன் போடீ-ன்னு, நம்ம ரோசக்காரத் தலைவி, பாய ஆரம்பிச்சிட்டா:)


காபி உறிஞ்சுதுல்:

1)  வெள்ளாங் குருகின் பிள்ளை செத்துப் போச்
* வெள்ளாங் குருகு = பரத்தை
* நாரை = தலைவன்
* வெள்ளாங் குருகின் பிள்ளை = அவங்க “மறை வாழ்வு”

இனிமே எனக்கு “அந்தப்” பழக்கமெல்லாம் இல்ல-ன்னு சொல்றான்-ல்ல? அதான் இந்தக் “குத்தல்” = வெள்ளாங் குருகின் பிள்ளை (மறைவாழ்வு) செத்துப் போச்சாம்டீ:)))

2) நாரை வேற – குருகு வேற!
என்ன வேறுபாடு? ன்னு சொல்றீங்களா யாராச்சும்?
திருநாரையூர் – திருக்குருகூர் -ன்னு ஊரே இருக்கு!

நாரை

குருகு

3) வெள்ளாங் குருகு:

குருகு = குட்டை!  ரொம்பப் பறக்காது!
ஆனா, சுலபத்துல பிடிபடாது!

ஆற்றங் கரைப் புதர்களில் பொத்திப் பொத்தி வாழும்!
குரலை வச்சியோ, மீன் பிடிக்கும் போதோ, பார்த்தாத் தான் உண்டு!
= “மறை-பறவை”! அது போலவாம் இந்தப் பரத்தை:)

4) மனைவியோடு அவன் மீண்டும் வந்து ஒட்டுவதை
= நெய்தல் பூ, கிட்டக்க மிதந்து வராப்புல வந்து, அப்பறமா விலகிப் போவதற்குக் காட்டுறாரு பாருங்க!

5) Soft Toy 2000 yrs back?:) = பஞ்சுப்  பாவை ஈன்றனென் யானே!
(பஞ்சுப் பாவை=பஞ்சுப் பொம்மை)
இவ்வளவும் அஞ்சே வரில! அதான் “சங்கத் தமிழின் காட்சிப்படுத்தல்”


6) Did anyone note? = திணை மயக்கம்!
Wish Ragavan explains this thiNai mayakkam!
பாட்டு = நெய்தல் ன்னு போட்டிருக்கு;
ஆனா, பரத்தை, நாரை -ன்னு… ஒரே மருதத் திணையால்ல வருது?:)

நெய்தல் அம்மூவனார் & மருதம் ஓரம்போகியார் = உயிர் நண்பர்கள்; அதான் போல, ஒருத்தரு ஏரியாவுக்குள் ஒருத்தர் கலந்து கட்டி அடிக்குறாங்க:)

7) “எப்போ நல்ல சேதி சொல்லப் போறீங்க?”
கண்ணாலமான மூனே மாசத்துல, வெவரங்கெட்டுக் கேப்பாய்ங்க சிலரு;
அவிங்களுக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க, இந்தப் பாட்டைப் படிச்சிட்டு?:)))

dosa 20/365

Advertisements
Comments
7 Responses to “வெள்ளாங் குருகின் புள்ள செத்து போச்:)”
 1. வெள்ளாங் குருகின் பிள்ளை // அருமையான வரி

  Like

 2. rAguC says:

  அதென்ன வெள்ளாங்குருகு? வெள்ளை+குருகு? அப்போ நாரை என்று அடுத்த வரி வரும்பொழுது ஏதோ லிங்க் இருக்கனுமே? நீங்க சொல்ற விளக்கம் ஓட்டலையே ? + வெள்ளாங்குருகு = வெள்ளைக் குருகுன்னா? கருங்குருகு , செங்குருகு எல்லாம் இருக்கா?

  Like

  • முதலில், குருகு = Palindrome!

   வெள்ளாங்குருகு = வெள் +ஆம் + குருகு = வெள்ளை அழகிய குருகு
   செங்குருகு, கருங்குருகு, மஞ்சாங்குருகும் உண்டு!
   கிராமங்களில், அதுவும் ஆத்தோரப் புதர்களில் தான் பாக்க முடியும்! ஒளிஞ்சிக்கும்! சுளுவுல அகப்படாது;

   //அப்போ நாரை என்று அடுத்த வரி வரும்பொழுது ஏதோ லிங்க் இருக்கனுமே? நீங்க சொல்ற விளக்கம் ஓட்டலையே //
   :))

   வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தென,
   காணிய சென்ற, மட நடை நாரை

   First, see the 2nd line! * மட நடை நாரை = மடையன் போல நடக்கறான் = தலைவன் (அவ வீட்டுக்கும்-இவ வீட்டுக்குமாய்)
   * வெள்ளாங் குருகு = கண்ணுல அகப்படாத தளுக்கி = பரத்தை:)
   * பிள்ளை = கள்ள உறவு
   பரத்தையின் பிள்ளை செத்தென = இனி, பரத்தையின் கள்ள உறவு செத்துப் போச்சி!

   ஒரு பரத்தை, எதைத் தன் பிள்ளையா நினைச்சிச் சீராட்டுவா?= கள்ள உறவைத் தானே?
   அதுக்கு எதுவும் வந்துருக் கூடாது-ன்னு பார்த்துப் பார்த்து ஆரம்பக் கட்டம்!
   ஆனா அதுவே… வளர வளர, விலகி விலகிச் சுயமாப் போயீரும்!
   அதான் வெள்ளாங் குருகின் பிள்ளை = கள்ள உறவு;

   * குருகு = அவ்ளோ சுலபமாப் பாக்க முடியாது; புதருக்குப் போகணும்:)
   * நாரை = வெளியில் தைரியமாத் திரியும், நீங்களும் பார்க்கலாம்
   நாரைக்கு வெட்டவெளியும் அத்துப்படி, நீரில் மறைவான புதரும் அத்துப்படி:)
   அங்கேயும் ஆடிட்டு, வெளியிலும் ஒன்னுமே நடவாதது போல் திரிவான் = நாரை (என்னும்) புருசன்:))

   Like

 3. எக்கச்சக்க உள்ளர்த்தம் பொதிந்த பாடலாக உள்ளதே! ஐந்து வரிகளில் ஒரு கள்ளக் காதல் கதையும் ஒரு நல்ல திருமண உறவின் சிக்கல்களும் சொல்லப்பட்டு விடுகின்றனவே!

  பரத்தையோடு தொடர்பு வைத்திருப்பவனை நம்பி எப்படி இவள் துணிந்து பிள்ளை பெற்றுக் கொள்ள முடியும்? நம்மூரில் ஒரு முட்டாள்தனமான எண்ணம் உண்டு. அது என்னவென்றால் குழந்தை பிறந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்பது தான். அது எப்படிசரியாகும்? இன்னும் சிக்கல் தான் பெருகும்! ஆனால் ஏதோ ஒரு சமயத்தில் கணவன் பிள்ளை பாசத்தால் வீட்டோடு இருக்க முடிவு செய்யலாம். அந்த நம்பிக்கையில் செய்யும் தவறு தான் இந்த முடிவு.

  கோபத்தில் அவள் தோழிக்கு சொல்லும் பதில் அழகு. அன்றே பஞ்சுப் பொம்மை இருந்திருக்கிறது.

  ஆனால் தோழியின் கவலை பெண்ணின் பிள்ளை பெறும் பருவத்தைப் பற்றியது. The biological clock is ticking for her friend. The man is worry free in that area!

  //பதைப்ப, ததைந்த, நெய்தல் கழிய// ஊசலாடும் மனத்தை எப்படி அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறார் கவிஞர்!

  என்ன மாதிரி கற்பனை நயம்! உண்மையிலேயே சான்சே இல்லை! :-))

  amas32

  Like

  • ஆமாம்-மா.. மிக்க ஆழமான பாட்டு!

   //நம்மூரில் ஒரு முட்டாள்தனமான எண்ணம் உண்டு. அது என்னவென்றால் குழந்தை பிறந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்பது தான்//
   yessu:) if he needs a new arrival to correct himself, hez too selfish
   he shd realize, an already existing human heart is weeping for him!

   //The biological clock is ticking for her friend. The man is worry free in that area!//
   இதை நான் யோசிச்சிப் பார்க்கவே இல்ல! நன்றி-ம்மா இதைத் தொட்டதுக்கு!
   ஆமாம், ஒரு பெண்ணுக்குத் தான் எத்தனை இயற்கை மட்டுகள்?
   அதனால், அவ பண்ணாத தப்புக்கும், அவளே பொறுப்பேற்க வேண்டியிருக்கு!
   Adjust பண்றவனைத் தான் உலகம் ஒவ்வொரு முறையும் adjust பண்ணச் சொல்லும்:(

   //பதைப்ப, ததைந்த, நெய்தல் கழிய//
   அப்படியே ஒரு பூ மிதந்து வாரப்போலவே இல்ல?

   Like

 4. Thirumaran J says:

  பார்க் கல்லூரி- திருப்பூர்
  (தன்னாட்சி)
  ஐயா,
  மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனமும் எங்கள் கல்லூரியும் இணைந்து 10 நாள் ‘திணைமயக்கம் காட்டும் வாழ்வியல் நெறி’ என்னும் பொருண்மையிலான தேசியப் பயிலரங்கம் எதிர் வரும் 10.02.2014 முதல் 19.02.2014 வரை நடைபெற உள்ளது. இப்பயிலரங்கத்தில் ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் பட்ட ஆய்வாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இப்பயிலரங்கில் தாங்கள் ஒரு தலைப்பில் ஆய்வு அறிஞராக கலந்து கொண்டு உரையாற்றுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
  மேலும் தகவல்களுக்கு பின்வரும் எண்களில் தொடர்பு கொள்ளவும்.
  முனைவர் செ.திருமாறன், முதல்வர் – 95666 56601 , 98422 93054
  முனைவர் மு.சாமி சுந்தரம், துறைத் தலைவர் – 95666 56617 , 9965148965

  Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: