மதுரை Mega Mall

மதுரை -ன்னாலே தமிழ்நாட்டுக்குத் தனி “கிக்” தான்:)
= அது மதுரைப் பெண்களா, மதுரை இட்லியா, மதுரை மல்லியா, மதுரை அருவாளா – யாம் அறியோம்:)
= எதுவானாலும், மதுரை = “பெரும் பெயர்”
= தமிழ்நாட்டுத் தலைநகர் ஆகும் அத்தனை தகுதியும் மதுரைக்கு உண்டு!

சங்க இலக்கியத்தில் – திருச்சித் தொகை, கோவைக் காஞ்சி -ன்னு ஒரு நூலும் இல்லை:))
* ஒரு நகரத்தின் மேல்  = மதுரைக் காஞ்சி
* ஒரு தெய்வத்தின் மேல்  = திரு முருகாற்றுப் படை
* ஒரு குடியின் மேல்  = பதிற்றுப் பத்து (சேரர்கள்)

சங்க கால மதுரை எப்படி இருந்திச்சி?
* பேரங்காடி (Mall)
* உணவு மன்றம் (Food Court)
* இரவு வாழ்க்கை (Night Life)

சும்மா தூள் தான் போங்க!:)
பாட்டைப் பார்க்கலாமா? Letz go into the Mall = மதுரைக் காஞ்சி!


சேறு நாற்றமும், பலவின் சுளையும்,
வேறுபடக் கவினிய, தே மாங் கனியும்,
பல்வேறு உருவில், காயும் பழனும்,
கொண்டல் வளர்ப்பக், கொடி விடுபு கவினி (527-530)

மென்பிணி அவிழ்ந்த, குறுமுறி அடகும்,
அமிர்தி இயன்று அன்ன தீஞ்சேற்றுக் கடிகையும்,
புகழ்படப் பண்ணிய பேர் ஊன் சோறும்,
இன்சோறு தருநர், பல்வயின் நுகர (531-535)

வால் இதை எடுத்த, வளி தரு வங்கம்,
பல் வேறு பண்டம்,  இழிதரும் பட்டினத்து
ஒல்லென் இமிழ் இசை மான, கல்லென
அல்அங்காடி, அழி தரு கம்பலை (536-544)

புத்தேள் உலகம் கவினிக் காண்வர
மிக்குப் புகழ் எய்திய பெரும்பெயர் மதுரை (698-699)

நூல்: மதுரைக் காஞ்சி
கவிஞர்: மாங்குடி மருதனார்
மன்னன்: (தலையாலங்கானத்துச் செரு வென்ற) பாண்டியன் நெடுஞ்செழியன்


காபி உறிஞ்சல்:

சேறு நாற்றமும், பலவின் சுளையும்,
வேறுபடக் கவினிய தே மாங் கனியும்

சேறு = தேன், நாற்றம் = வாசனை;
இன்னிக்கி, நாற்றம் -ன்னாலே, துர் நாற்றம் -ன்னு ஆக்கிட்டாய்ங்க;
ஆனா நுறு நாற்றம், துர்-நாற்றம் -ன்னு உண்டல்லவா?
நாற்றம் = Plain Smell;  (Food Smell, Good Smell)

பல்வேறு உருவில், காயும் பழனும்,
கொண்டல் வளர்ப்பக்,  கொடி விடுபு கவினி,
மென்பிணி அவிழ்ந்த, குறுமுறி அடகும்

பலப்பல உருவங்களில் காய்கறி & பழங்கள் – பலாச்சுளை & மாம்பழம் உட்பட
கொண்டல் = மழை-மேகம்; கீழ்த் திசைக் காற்றுக்குக் கொண்டல்-ன்னு பேரு;
மழையில் நனைந்த.. சுருள் சுருளா இலை – கீரை! அடகு = வெற்றிலை; அடைப்பக்காரன் -ன்னும் சொல்றோம் ல்ல?

அமிர்தி இயன்று அன்ன, தீஞ்சேற்றுக் கடிகையும்
புகழ்படப் பண்ணிய, பேர் ஊன் சோறும்

அமுதம் போல் சுவையான, சேற்றுக் கடிகை = இனிப்புக் குழம்பு
நல்லாப் பண்ணிய ஊன் சோறு = சங்க காலப் பிரியாணி? :)
ஊ”ண்” = உணவு,
ஊ”ன்” = இறைச்சி;

ஊன் ஊண் = இறைச்சிச் சோறு!

 இன்சோறு தருநர், பல்வயின் நுகர

இனிய சோறு தரும் கடைகள்; அங்கே பல மக்களும், பல விதமாக உண்ணும் காட்சி…
பாண்டியன் நெடுஞ்செழியன் காலம் = 100 CE; அப்பவே வீட்டுல திங்காம, ஓட்டல் சாப்பாடு போல:))

வால் இதை எடுத்த, வளி தரு வங்கம்,
பல் வேறு பண்டம், இழிதரும் பட்டினத்து

வால்=பாய்மரம்; வங்கம்=கப்பல்;
“வங்கக்” கடல் கடைந்த மாதவனை கேசவனை -ன்னு கோதை சொல்லுவா-ல்ல?
கப்பல்களில், பல் வேறு பண்டங்களைக் கொள்முதல் செய்து, மதுரைக்கு அனுப்புகிறார்கள்; அதை இங்கே மதுரை அங்காடியில் விற்கிறார்கள்

ஒல்லென் இமிழ் இசை மான, கல்லென
அல்அங்காடி, அழி தரு கம்பலை

இசை பரவுது அங்காடியில்! (இன்றைய Mall களில் உள்ளது போலவே)
* “ஒல்” இமிழ் இசை = மெல்லிய இசை
* “கல்” -ன்னு மக்கள் கூச்சலும் பரவுகிறது!

அல் அங்காடி = Night Mall;
அல் = இரவு (அல்லும் பகலும்); கம்பலை = கூச்சல்;
(கண்ணீரும் கம்பலையும் = அழுவது கண்ணீர்; சத்தம் போட்டு அரற்றுவது கம்பலை!)
பாருங்க ஒல்லென, கல்லென, அல்லங்காடி -ன்னு ஓசையோடு படம் பிடிக்கிறார் கவிஞர்

புத்தேள் உலகம், கவினிக் காண்வர
மிக்குப் புகழ் எய்திய பெரும்பெயர் மதுரை

தே = தெய்வம் (தே+ஆரம்=தெய்வத்துக்கு ஆரம்)
புத்தேள் = புதுமை நிறைந்த தெய்வம்
அந்தத் தெய்வ உலகமே, அழகு -ன்னா என்ன?-ன்னு காண வரும் ஊர் = மதுரை

“பெரும்பெயர்” = மூன்று தமிழ்த் தொன்மங்களுக்கே இச்சிறப்பு உண்டு:

* திருமால் = முதுபெரும் மரபின் பெரும்பெயர் முதல்வ
* முருகன் = அரும்பெறல் மரபின் பெரும்பெயர் முருக
* மதுரை = மிக்குபுகழ் எய்தும் பெரும்பெயர் மதுரை

பெரும் பெயர் மதுரை! பெரும் பெயர் மதுரை!!

dosa 19/365

Advertisements
Comments
9 Responses to “மதுரை Mega Mall”
 1. ஒரு இடத்தின் மற்றும் இனத்தின் பண்பும், கலாச்சாரமும் அவர்கள் உண்ணும் உணவின் மூலம் சரியாக அறிந்து கொள்ளலாம். இந்தப் பாடலில் குறிக்கப்பட்டிருக்கும் சுவை மிகுந்த உணவைப் பார்க்கும் பொழுது நாகரிக வளர்ச்சி தெரிகிறது.

  மேலும் அந்த காலத்தில் வெளியில் சாப்பிட ஒரு ஓட்டல் அல்ல ஒரு Food courtடே இருந்திருக்கிறது.

  நாகரீக வளர்ச்சிக்கு அடுத்த அளவுகோல் வணிகம்! வெளி நாடுகளில் இருந்து பொருள்களைத் தருவித்து மதுரை அங்காடியில் விற்கப்பட்ட பலதரப்பட்ட பண்டங்கள் அதற்கு ஒரு எடுத்துக் காட்டாக உள்ளது. அங்காடியில் உள்ள கூட்டமும் சத்தமும் நாட்டின் வளமையை காட்டுகிறது.

  //ஒல்லென் இமிழ் இசை மான, கல்லென
  அல்அங்காடி, அழி தரு கம்பலை//

  இந்த இரு வரிகள் கலை நயத்துடன் அங்காடி சத்தத்தை நம் காதில் ஒலிக்க வைக்கிறது. அக்காலத்திலேயே சன்னமாக ஒலிக்கும் elevator music இருந்திருக்கிறது :-)

  //அந்தத் தெய்வ உலகமே, அழகு -ன்னா என்ன?-ன்னு காண வரும் ஊர் = மதுரை//
  God’s own country may be Kerala, but looks like God’s own city is Madurai! :-)

  amas32

  Like

  • //ஒரு இடத்தின் மற்றும் இனத்தின் பண்பும், கலாச்சாரமும் அவர்கள் உண்ணும் உணவின் மூலம் சரியாக அறிந்து கொள்ளலாம்//

   Fantastic! Well said!
   If u land in a new country…, Buildings, Aiports, Hotels everything looks the same! No problems!
   New faces, New Ppl also…, u can manage with common language!
   But when பசி வயித்தைக் கிள்ளும் போது, u really get to know & appreciate that culture:) = Food!
   I really felt this in Amsterdam & Brazil!

   //God’s own country may be Kerala, but looks like God’s own city is Madurai! :-)//

   YES YES YES!

   Like

 2. rAguC says:

  பொன்னியின் செல்வன் படிக்கும் போது, முதல் முதலாக தஞ்சை கோட்டை உள்புரத்து நகர் பற்றி வரும் விவரணை படிக்கையில் நிகழ்ந்த அதே கற்பனை மதுரை பற்றி படிக்கும் போதும் நிகழ்ந்து. அருமையான விளக்கச்செயுள்.

  கலாச்சாரம் என்பது உணவில் பிரதிபலிக்கும், உடையில் அல்ல. உடை என்பது. நம்மவர்கள் ரசம் தாயி சோறு உண்ணும் போது, நன்கு பிடந்து உண்ணுவார்கள், கையெல்லாம் ஒட்டிக்கொள்ளும், தற்காலத்தில் அது அநாகரிகமாக பார்க்கப்படுகிறது. ஆனால் அவ்வாறு நன்கு பிசைந்து உண்ணும் போது செரிமானம் விரைவாக ஏற்பட்டு உடல் நலத்துடன் இருக்கும். நாம் எப்போதும் நாகரிகம் என்ற புறத்தோலை உடுத்த வேண்டி அகத்தை அழுக்காக்கி-வீணாக்கி கொண்டிருக்கிறோம்.

  // இழிதரும் பட்டினத்து//

  அதென்ன இழிதரும்? இழிவான பொருள்களை கொண்டிருக்கும் பட்டினமா?

  Like

  • Perfect Comparison! பொன்னியின் செல்வன், தஞ்சை உள்ளாலைக் கோட்டைச் சுவர்:)
   * உடை = பண்பாட்டின் அங்கம் தான்… But looks can be deceptive & same
   * உணவு = Not looks, but real feeling of touch, taste & smell! Thatz why:)

   //அதென்ன இழிதரும்? இழிவான பொருள்களை கொண்டிருக்கும் பட்டினமா?//
   அய்யய்யோ!:)

   இழிதல் = இறங்குதல் / மூழ்குதல்!
   நான் முருகனிடத்திலேயே இழிந்து கொண்டு இருக்கேன்!:) இதுல ஒரு “இழிவும்” இல்லை:))
   இந்தப் பாட்டில்.. பல் வேறு பண்டம் இழிதரும் பட்டினத்து = இறக்குமதியான பொருளையெல்லாம், அங்காடியில் “இறக்கிக்கிட்டு” இருக்காங்க!

   அதே போல் முருகாற்றுப்படையில்…
   இழும் என இழிதரும் அருவி.. பழமுதிர் சோலை

   Like

 3. அன்பின் கேயாரெஸ் – அருமையான பதிவு – மதுரையைப் பற்றிய பதிவு – கிக் எதுனாலே – மதுரை பெண்களாலா – மல்லியாலா – இட்லியாலா – நிச்சயம் அருவாளால இல்ல – பெரும்பெயர் பெற்ற மதுரை – மிக மிக இரசித்தேன் – மதுரை வாசியாகிய நான். நல்வாழ்த்துகள் கேயாரெஸ் – நட்புடன் சீனா

  Like

 4. uma chelvan says:

  அருமையான பதிவு, சில பதிவுகளை பகிர்ந்து கொள்ள உங்க அனுமதி வேண்டும். சில ஏற்கனவே பகிர்ந்து விட்டேன் உங்களது அனுமதி இல்லாமல் …..எப்படி அனுமதி வாங்குவது என்று தெரியாமல் ..மன்னிக்கவும்.

  Like

 5. Eddy Dharmanand says:

  மதுரைக்கு இனிய தமிழ்ப் பெயர் திருஆலவாய் என்று படித்தேன்.

  Like

  • அய்யோ.. அது இனிய தமிழ்ப் பெயர் அல்ல; சம்ஸ்கிருத சொருகல்!
   ஆலவாய் = ஹால வாய்
   ஹாலம்-ன்னா பாம்பு; ஹாலஹல விஷம்= பாம்பின் கொடு நஞ்சு

   ஹாலவாய் = ஆலவாய்-ன்னு கிரந்தம் தவிர்த்து எழுதினாலேயே, இனிய தமிழ் ஆகி விடுமா என்ன?
   ஹாலம் ஆகிய பாம்பு, தன் வாயைச் சுற்றி வாலால் வட்டமிட்டு, எல்லை அமைத்த ஊர் என்பது பொய்யான சிவ புராணக் கதை! இப்படியெல்லாம் ஓர் ஊர் உருவாகாது!

   இனி, விழிப்புடன் இருங்கள்; பொய்யான புராணக் கதை என்றாலே, அதில் தமிழ் இல்லை! எ. தெளிவு கொள்க; வாழி, நன்றி!

   Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: