கணையாழி = சீதைக்கா? பரதனுக்கா??

வெள்ளிக்கிழமை! #Dosa365 அல்ல! #kamban52 :)
கம்பன், வால்மீகியிடம்  “கருத்து மாறுபடும்” இடங்களில் = இன்றைய பதிவு மிகவும் முக்கியமானது!

* என்னாது? கணையாழி = பரதனுக்கா?
* அவன் – அவள் அந்தரங்கம் = கணையாழி; அது எப்படி பரதன் கைக்கு வரும்?
* வால்மீகியில் இல்லை! கம்பனில் உண்டு!  = Why this “Glitch”?:)


புரிந்து கொள்ளாமை ஒன்னு;
புரிந்து கொள்ள “மறுத்தல்” வேற ஒன்னு!
நெருங்கியவர்களே மறுத்தால்? = அதை விடப் பெரும் நரகம், வேற ஒன்னு இல்ல:((

பரதன், அந்த “நரகத்தில்” வீழ்ந்தவன்!
= ஊழல் அமைச்சர்களைக் கூடச், சிறையில் சென்று பார்க்கும் நண்பர்கள் உண்டு!
= உழலும் உள்ளத்தை, ஏறெடுத்தும் பார்க்க மறுக்கும் உறவுகளும் உண்டு!

மாதா, பிதா, குரு, தெய்வம் = எல்லாருமே பரதனை  மறுதலித்தார்கள்!

* தாய் = கைகேயி; தன் பிறந்த வீடு பகையின்றி இருக்க, பிள்ளை மீது “அடித்தாள்”
* தந்தை = தசரதன்; ஈமக் கடன் கூடச் செய்யக் கூடாது -ன்னு “அடித்தார்”
* குரு = வசிட்டர்; வாருங்கள் மன்னவா -ன்னு, அவன் குத்தலாய் “அடித்தார்”

* வளர்ப்புத் தாய் = கோசலை; “போதும் உன் Drama” -ன்னே சொல்ல முனைந்தாள்
* உடன் பிறந்தவன் = இலக்குவன்; அதோ பரதன் -ன்னு கொல்லவும் முனைந்தான்
* உடன் பிறப்பாகச் சொல்லிய = குகன்; அவனும் முதலில் குதிக்கவே முனைந்தான்

துக்க நேரத்தில் கூட, அது “தன்னோட ஆசை  தான்” -ன்னு கைகேயி, சொல்லவே இல்லியே = மூச்!
இவ்வளவும் பட்ட பரதன்  = அந்த மனசின் நிலை என்ன?


போய்யா! மனசாவது, குணசாவது?:)

* பரதன் “மனசை” = வால்மீகி அவ்வளவா உணரலை;
* பரதன் “மனசை” = ஆழ்வார்கள்” உணர்ந்து கொண்டார்கள்;
அதான் அவனுக்கு மட்டும் = பரத நம்பி + பரத ஆழ்வான்

ஒரே ஆளே…
* ஆழ்வார் + ஆசார்யர் -என்னும் சிறப்பு…
பரதனுக்கே கொடுத்தார்கள்!


* ஒருவருடன், கூடவே இருந்து அன்பு செலுத்துவது, சிறப்பு தான்;
ஆனா அது சிறப்போ? = இலக்குவன்!
* எங்கோ ஒரு மூலையில்… “அவன் இட்ட வழக்காய்”,
அவனுக்காகவே வாழ்வது = பரதன்!

இந்த மனசு, அவ்ளோ லேசில் வந்துறாது;
“பரதன் மனசு” எனக்கு வரணும் -ன்னு, ஆழ்வார் ஏங்குகிறார்..
சில சமயம் கதையையே மாற்றி…
இராமன் “அடகு” வச்சிட்டுப் போனான், பரதனுக்கு = “வான் பணயம்” -ன்னு எழுதுகிறார்..

முடியொன்றி மூவுல கங்களும்…
உன், படியில் குணத்துப் பரத நம்பி… பாடிப் பற, பாடிப் பற

ஆழ்வார்கள் வழி வந்த கம்பனும், “துணிந்து” வால்மீகியில் மாற்றம் செய்கிறான்!

* இராகவன்-சீதையின் அந்தரங்கம் = கணையாழி..
* அவ முலைமேல், கண்ணீரால் கழுவப்பட்ட = கணையாழி..
* அதைப் பரத நம்பியின் கையில் தந்து விடுகிறான் கம்பன்!

கதையின் கடைசியில் பரதனிடம் வந்து, பரதனிடமே தங்கி விடுகிறது கணையாழி…

(குறிப்பு: கம்பன், ஆழ்வார்கள் வழி வந்தவன் -ன்னு சொன்னேன் அல்லவா? Only with that Inspiration…
* கம்ப இராமாயணம் = நம்மாழ்வாரைப் பாடித் துவங்குறான் கம்பன் = சடகோபர் அந்தாதி;
* நள வெண்பா புகழேந்தியும் = நம்மாழ்வாரைப் பாடியே துவங்குகிறார்)

இன்றும் பரதனுக்கான ஆலயம் = சென்னை – திருவல்லிக்கேணியிலும்,  திருமூழிக்களத்திலும் உண்டு!


சரி, வாங்க… நாம கம்பனைப் பார்க்கலாம்!

சூழல்: முன்பு, சீதையிடம் காட்டியது போலவே, பரதனிடமும் கணையாழி காட்டுகிறான், அனுமன்!
இராகவன் வந்து விடுவான், உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம் என்று சொல்ல…
பரத நம்பியின் நிலை!

அழும், நகும்; அனுமனை – ஆழிக் கைகளால்
தொழும், எழும்;  துள்ளும் – வெங் களி துளக்கலால்
விழும், அழிந்து ஏங்கும் – வீங்கும், வேர்க்கும்; அக்
குழு வொடும் குனிக்கும் – தன் தடக்கை கொட்டும் ஆல்

வேதியர் தமைத் தொழும் – வேந்தரைத் தொழும்;
தாதியர் தமைத் தொழும் – தன்னைத் தான் தொழும்;
ஏதும் ஒன்று உணர்குறாது – இருக்கும், நிற்கும் ஆல்;
காதல் என்று அதுவும் ஓர் – கள்ளில் தோற்றிற்றே!

யுத்த காண்டம்: மீட்சிப் படலம்: 91 & 94


காபி உறிஞ்சல்:

1) பாட்டுக்கு விளக்கமே தேவையில்லை; சுவை மட்டும் பார்ப்போமா?
* அழும் நகும் = முரண் தொடை * தொழும் எழும் = முரண் தொடை
* துள்ளும் விழும் = முரண் தொடை * இருக்கும் நிற்கும் = முரண் தொடை

2)  “தன்னைத் தான் தொழும்” = பரதன், தன்னைத் தானே கும்பிட்டுக் கிட்டானாம்!
கண்ணாடி முன்னாடி நின்னு, ஒங்கள நீங்களே கும்புடுங்க பார்ப்போம்:))
அப்பாடா, ஒனக்கும் வாழ்க்கை கிடைச்சிருச்சி ரவி-ன்னு feelings வரும் போது தான், இந்த உணர்ச்சி புரியும்!

3) “அனுமனைத் தொழும் எழும்”  = அனுமன் என்னும் பாத்திரத்தை, முதலில் “தொழுவது”  பரதன்  தானோ?
* அனுமன் பல பேரைத் தொழுது இருக்கான் = பணிவு
* ஆனா, இலக்குவன், அனுமனைத் தொழுது உள்ளானா? = தெரியாது

4) தாதியரையெல்லாம் தொழுதா, Girlz பயந்துற மாட்டாங்களா?:)
நம்ம Boss, வலிய வந்து Good Morning, Good Morning -ன்னு வழிஞ்சா என்ன அர்த்தம்?:)

5) “குழுவொடு குனிக்கும்” = குனித்தல் -ன்னா வளைத்தல்!
குனித்த புருவமும் – தேவாரம் ஞாபகம் வருதா?:)
Bharatha & Team = வளைந்து கை-கொட்டுறாக! Merry Go Round!

6) “கள்ளில் தோன்றிற்றே” = கள்ளு குடிச்சாப் போல இருக்கானாம் பரதன்:)
Hey Bharatha – Malibu? Cheers da!:)

7) முக்கியமான கேள்வி:
பரதன் உயர் திணை அல்லவா? அழுவான்-நகுவான் -ன்னு தானே சொல்லணும்?
அழும்-நகும் -ன்னு அஃறிணை ஏனோ? #இன்னிக்கி மாட்டினான்டா கம்பன்:)

dosa 16/365 kamban 3/52

Advertisements
Comments
14 Responses to “கணையாழி = சீதைக்கா? பரதனுக்கா??”
 1. மகாபாரதத்தில் கர்ணன் எப்படி துரியோதனன் அணியில் இருந்தாலும் எல்லோருடைய அபிமானத்தையும் பெற்றானோ,எ தே அபிமானத்தை பெற முழுத்தகுதியும் உடைய பாத்திரம் பரதன். ஆனால் ஆசிரியரே அவனை கைவிட்டு விட்டார், அவன் மனக்குமுறலை எங்குமே வெளிக்காட்டவில்லை. ஆனால் கம்பர் அவரை கைவிடவில்லை என்பது பேராறுதல்.

  அழும் நகும் — கம்பன் மாடிகிட்டானா? முருகா? நீ எங்களுக்கு தூண்டில் போட்டு பாக்குறியா? இதோ நானே வந்து அந்த முள்ளை கடிக்கிறேன், சரியா கடிக்கிறேனா என சொல்லு?

  பரதனின் மனதில் கொண்டாடும் ஆனந்தத்தை இந்த வரிகளில் வெளிப்படுத்திகிறார் கம்பர், அது எப்படி இருக்கு, பரதன் ஒரு குழந்தை போல நடந்து கொள்கிறான், எந்த இலக்கும் இல்லாமல் குதிக்கிறான்…. மொத்தத்தில மிகச்சிறந்த பேரானந்தத்தில் இருக்கான்.. துள்ளி திரியிறான் …அதுக்காக குரங்கா? இல்லை இல்லை … குழந்தை …. குழந்தையை அழும் – எழும் – துள்ளும் – நகும் இப்படி உயர்வு நவிர்ச்சி கொடுக்கவா முடியும்? அப்படி கொடுத்த அவன் மனதை-மன மகிழ்வை எப்படி வெளிக்காட்டுவதாம் ? அதான் அப்படி சொல்றார் கம்பர் …

  சரியா முருகா?

  -rAguC

  Like

 2. amas32 says:

  பரதனிடம் பவித்திரமான கணையாழி கடைசியில் வந்து சேர்வதும் பரதனின் தவத்திற்கு கிடைத்த ஒரு பரிசு என்று கொள்ளலாம். பரதன் குதித்து மகிழ்வதை கம்பன் எழுத்தில் காண்பது ஆனந்தத்தைத் தருகிறது.

  Bharathan is an unsung hero. இராம கதையில் அவரைப் பற்றி இன்னும் நிறைய சொல்லியிருக்கலாம்.

  நான் இன்னும் என் குழந்தைகளைப் பற்றி பேசும் பொழுது (இருபதுகளில் இருக்கிறார்கள்) சில சமயம் அது, இது என்று பேசுவேன். மிகுந்த பாசத்தின் வெளிப்பாடு அது :-)
  அதைத் தான் கம்பன் காட்டியிருக்கிறார் :-) இது ரகு சொன்னதில் இருந்து சிறிது வேறுபட்ட கோணம் என்று நினைக்கிறேன் :-)

  amas32

  Like

  • //Bharathan is an unsung hero//

   Yes!
   பரதன், நளன்… இவர்கள் எல்லாம் இராமனை விடக் கொள்ளத்தக்கவர்கள்!
   தன் கொள்கைக்காக/ வீம்புக்காக, மனைவி/காதலைக் காயப்படுத்தாது… தன்னையே ஒப்படைத்து விடுபவர்கள்!
   ஆனால் “ஒப்படைப்பவர்களை” உலகம் Hero எனக் கொள்வதில்லை!:(

   Like

  • //(இருபதுகளில் இருக்கிறார்கள்) சில சமயம் அது, இது என்று பேசுவேன்//
   Is the Reverse true?:))

   Like

   • amas32 says:

    Are you asking if they refer to me like that? No I don’t think so :-) என் கணவரிடம் என் மகள் கூறியதை சொல்லும் பொழுது அது சொல்லித்து என்பேன் :-)

    amas32

    Like

 3. psankar says:

  Okay. Tell the answer. Why agrinai for barathan ? :)

  Like

  • அதான் அமாஸ் அம்மாவும், ரகுவும் சொல்லியிருக்காங்களே!
   அதை விடப் பெருசா நான் என்ன சொல்லிடப் போறேன்?
   இலக்கியம்=ஒளிச் சிதறல் போல் உணர்ச்சிச் சிதறல்:)

   Like

 4. அன்பின் கேயாரெஸ் – அமாஸ் – ரகு – அனைவருமே கம்பனையும் வால்மீகியையும் இராமாயனத்தையும் கரைச்சுக் குடிச்சுட்டு எழுதறீங்க – நாங்க எல்லாம் மேலாகப் பாத்துட்டு எழுதறோம். நல்லாவே இருக்கு விளக்கங்கள் – தொடர்க – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

  Like

 5. devarajan97 says:

  >>> அழும், நகும்……..<<<

  கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்
  கண்ணநீர் கைகளால் இறைக்கும்*
  சங்கு சக்கரங்கள் என்று கைகூப்பும்
  தாமரைக்கண் என்றே தளரும்*
  எங்ஙனே தரிக்கேன் உன்னைவிட்டு? என்னும்
  இருநிலம் கைதுழாவிருக்கும்*

  செங்கயல் பாய்நீர்த் திருவரங்கத்தாய்!
  இவள் திறத்து என் செய்கின்றாயே?

  Like

Trackbacks
Check out what others are saying...
 1. […] தரும் அளவுக்கு நெருக்கம்! காண்க இப்பதிவு! * ஒருவருடன், கூடவே இருந்து அன்பு, […]

  LikeLeave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: