திருச்செந்தூர், 2000 yrs old!

வாங்க, இன்னிக்கி திருச்செந்தூர் போவலாம்:)
முருகன் அங்கிட்டு இருப்பது எல்லாருக்கும் தெரியும்! ஆனா, அவனைச் சுவைப்பது ஒருபுறம் இருக்கட்டும்!
திருச்செந்தூர் புட்டு அமுதும், கருப்பட்டியும், பனங்கிழங்கும் சுவையோ சுவை!:)

கடல் சுவை, அலைச் சுவை, மணல் சுவை = இன்னும் என்னென்னமோ சுவை!
அவன் மேனிச் சுவை? = அது என் அந்தரங்கம்:)
அவன் மேல பட்ட பாலை, எத்தினி நாள் Fridge-இல் வச்சிருந்து, தடவித் தடவிக் குடிச்சேன் -ன்னு எனக்கே தெரியாது:)

காதல் கிறுக்குல நான் ஒளறத் தொடங்கும் முன், பதிவுக்குள் போயீருவோம்… வாங்க!:)


திருச்செந்தூர் கோயிலு எத்தினி நாளா இருக்குது -ன்னு நினைக்கறீங்க?
சொன்னா, வியப்படைவீர்கள்… > 2000 years!

முதற் சங்க காலம் = இனக்குழு வழிபாடே மிகுந்து இருந்த காலம்;
இயற்கை வழிபாடே! (நடுகல், கந்து, அணை);
வேலன் வெறியாடல், குரவைக் கூத்து = இப்படித் தான்! சோறு, ஆட்டுக்கிடா, மீன் படையலும் உண்டு:)

* இந்த இனக்குழுச் சமூகம்   -> அரசு / பேரரசு சமூகமா மாறத் துவங்கிய போது…
* இனக்குழுத் தொன்மங்கள் -> பெருந் தெய்வ வடிவமாகி, ஆலயம் கண்டனர்!

குறிஞ்சி/முல்லை நில மக்கள், பெயரத் துவங்கிய போது… தங்கள் தொன்மங்களையும் உடன் எடுத்தே சென்றனர்!
குறிஞ்சி முருகன், நெய்தலுக்கும் வந்து விட்டான் = கடலோரத் திருச்செந்தூர்!

முல்லை (எ) காட்டைத் திருத்தி, நாடாக்கிய போது, மருத நில வேந்தன்(ர்) தோன்றினார்கள்! அவர்கள் எடுப்பித்த கோட்டங்கள் சில! சிலவே சில!!

அதில் ஒன்றே = திருச்செந்தூர் ஆலயம் (செந்தில்)
சேந்தன் + இல் = செந்தில்
(விளக்கம்: இப்பதிவில் காண்க! வாரியார் பொழிவும் கேட்கவும்)

ஆலயம் -ன்னா, ஏதோ இன்னிக்கி இருக்குறாப் போல… கோபுரம், கொடிமரம், மூலஸ்தானம், தேவஸ்தானம், தங்கத் தேர் -ன்னு எல்லாம் நினைச்சிறாதீக:))
மிகவும் எளிமையான குடில், மக்கள் வழிபடும் கோட்டம் = அதுக்குள்ளாற சேயோன் > 2000 yrs back!

இன்று, மாந்த்ரீகம்-தாந்த்ரீகம் என்று மலையாளப் போத்திகளிடம் வழிபாட்டுரிமை சென்று விட்டாலும்…
மேல் சட்டையைக் கழட்டிட்டுத் தான் உள்ளே செல்லணும் என்றாலும் (என்னளவில் bit shy… சால்வையால் மறைத்துக் கொள்வதே வாடிக்கை)
…முன்னாளில், எளிய வழிபாடே இச் செந்திற் கோட்டத்தில்!


சிலப்பதிகாரம் சில பழமையான தலங்களைக் காட்டும்!
= அரங்கம், வேங்கடம், குமரி, செந்தூர், செங்கோடு, ஏரகம் (இன்னிக்கி சாமிமலை)

சிலம்புக்குச் சற்று முன்னாடியுள்ள திருமுருகாற்றுப்படை (300 CE – 400 CE)
= செந்தூரை மிக அழகாக வர்ணிக்கின்றது!

பத்துப்பாட்டு நூல்களுள், முன்னரே தோன்றிய நூல்கள் பல இருப்பினும்…
இதுவே முதல் நூலாக வைக்கப்பட்டு உள்ளது! நக்கீரர் பாடியது!

சங்கத் தமிழில் இரண்டே மரபுகளுக்குத் தான், “தனி நூல்” அமைஞ்சிருக்கு; முல்லையின் திருமாலுக்குக் கூட இப்படி அமையலை!

* முருக மரபு = திருமுருகாற்றுப்படை
* சேரர் மரபு = பதிற்றுப் பத்து

ஆறு = வழி! ஆற்றுப்படை = வழிப்படுத்துவது!
இந்த மன்னன் கிட்ட, இந்த வழியாப் போனா, இந்தப் பரிசில் பெறலாம் -ன்னு வழிப்படுத்துதல்!
* நாடாளும் மன்னனைப் பாடுவது = இதர ஆற்றுப்படை நூல்கள்!
* மனசாளும் மன்னனைப் பாடுவது = திரு முருகாற்றுப்படை நூல்!

இதுல மொத்தம் ஆறு இடங்கள் வருவதால்…
“ஆற்றுப்படை” என்பதே… மக்கள் மருவி மருவி…”ஆறுபடை”வீடு -ன்னு ஆயிருச்சி!:)  வாங்க, பாட்டுக்குள் செல்வோம்!


அந்தரப் பல்லியம் கறங்க, திண் காழ்
வயிர் எழுந்து இசைப்ப, வால் வளை ஞரல,
உரம் தலைக்கொண்ட உரும் இடி முரசமொடு
பல் பொறி மஞ்ஞை வெல் கொடி அகவ,

விசும்பு ஆறு ஆக விரைசெலல் முன்னி,
உலகம் புகழ்ந்த ஓங்கு உயர் விழுச் சீர்
அலைவாய்ச் சேறலும் நிலைஇய பண்பே! அதாஅன்று

பாடல்: திருமுருகாற்றுப்படை (வரிகள்: 119-125)
கவிஞர்: நக்கீரர்
திணை: பாடாண்
துறை: ஆற்றுப்படை


காபி உறிஞ்சல்:

அந்தரப் பல்லியம் கறங்க, திண் காழ்
வயிர் எழுந்து இசைப்ப, வால் வளை ஞரல,

பல்லியம் = பல் + இயம் = Orchestra
* இயம் = இயம்புதல்
* பல் இயம் = பலவும் இயம்புதல்
(ஏழில் இயம்ப, இயம்பும் வெண் சங்கும்-ன்னு மணிவாசகர் திருவெம்பாவை)

Orchestra = கூட்டியம்-ன்னு இப்போ சொல்றாங்க!
ஆனா பல்லியம்-ன்னு இதுக்கு சங்கச் சொல்லே இருக்கு பாத்தீங்களா?

பல்லியம், இன்னியம், முழவியம்-ன்னு தமிழிசைக் கூறுகள்!
இன்னிக்கி இசையில் “Jugalbandhi”-ன்னு சொல்லிக்கறோம்! ஆனா “பல்லியம்” தெரியல! இசைக்கு மொழி ஏது?-ன்னு சொல்லிச் சொல்லியே, தமிழிசையை Museumக்கு அனுப்பி விட்டோம்!:(

கறங்க – இசைப்ப – ஞரல = எல்லாமே ஒலிச் சொற்கள்! என்னா-ன்னு சொல்லுங்க பார்ப்போம்:)
Ilayaraja Musical Orchestra is going on in Tiruchendur!:))
* காழ் வயிரம் இசைப்ப = கொம்பு ஊத
* வால் வளை ஞரல = சங்கம் (சங்கு) முழங்க

உரம் தலைக்கொண்ட, உரும் இடி முரசமொடு
பல் பொறி மஞ்ஞை,  வெல் கொடி அகவ,

உரம் (Strong) கொண்ட முரசு, இடி இடி-ன்னு இடிக்க..
* பல் பொறி மஞ்ஞை = பல பொறிகள் வட்ட வட்டமா வண்ணம் காட்டும் மயில் தோகை!
(மஞ்ஞை = மயில்)
* வெல் கொடி அகவ = அவன் மயில் கொடி காற்றில் பறந்து, மயில் அகவுது…

சேவல் கொடி தானே? எப்படி மயில் கொடி-ன்னு நீங்க கேட்கலாம்!:)
ஆதியில் மயிலே!
மயில் = குறிஞ்சிப் பறவை; அவன் = குறிஞ்சித் தலைவன்!
எல்லாமே ஒன்னோடு ஒன்னு இயைந்த இயற்கைக் கருப்பொருள்! தமிழ்த் தொன்மம்!

வெல் = ஆதி நீடல் = வேல் ஆனது!
வெல் கொடி! = வெற்றி தரும் கொடி!

விசும்பு ஆறு ஆக, விரைசெலல் முன்னி,
உலகம் புகழ்ந்த, ஓங்கு உயர் விழுச் சீர்

விசும்பு = வானம்; வான் வழியாகப் பறக்கிறான்!
ஓங்கு + உயர் + விழு + சீர் = முருகன்!
எத்தனை அடைமொழி போடுறாரு பாருங்க:) ஒங்கு-உயர் = one set! விழு-சீர் = one set!:)

* ஓங்கு உயரம் = உயரம் மிக்க உயரம்! அப்படீன்னா?
* விழுச் சீர் = புகழ் மிக்க புகழ்!  How I can explain honey?:)

எத்தனையோ ஆலயங்கள் இருக்க, கையில் மலர் ஏந்தும் ஒரே முருகன் = செந்தூர் முருகன்!
கண் விழியும், கூர் மூக்கும், குளிர் இதழும் = ஐயோ! வந்தென் நெஞ்சம் நிறைந்ததுவே!

அலைவாய்ச் சேறலும் நிலைஇய பண்பே! அதாஅன்று

அலை வாய்ச் சேறல் = அது என்ன சே”ற”ல்? சேரல் = சேர்ந்து!
நக்கீரர்-க்கு ரற வராதா?:) ஆனா, ஐயன் வள்ளுவனும் பெண்வழிச் சேறல் -ன்னு தான் சொல்லுறாரு! Gosh! Can someone explain this?:)

* வாய் = நுழைவிடம்
* அலைவாய் = அலைகள் வந்து வந்து அலைக்குதாம் அவனை!

திருச்சீர் அலைவாய்
= அலைகள், வந்து வந்து வாய் அலைக்கும் திருச்செந்தில் மணவாளா!
= பட்டேன் படாத துயரம்… என் மரணம் இங்கே அமையட்டும்!
= செந்தூர்க் காதலன் கருவறையில், பிரிவின்றிப், படியாய்க் கிடந்து, உன் பவள வாய் காண்பேனே!
= செந்தூர் முருகா சேர்த்துக்கொள்!

dosa 15/365

Advertisements
Comments
7 Responses to “திருச்செந்தூர், 2000 yrs old!”
 1. amas32 says:

  பல்லியம் பற்றி நீங்க முன்பே ஒரு முறை குறிப்பிட்டு இருந்தீங்க. ரொம்ப அழகான வார்த்தை Orchestraவுக்கு.

  //பல் பொறி மஞ்ஞை வெல் கொடி அகவ,// இந்த வரியை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் போலத் தோன்றுகிறது. ஏன் என்று தெரியவில்லை.

  //* ஓங்கு உயரம்//
  ஓங்கி உலகளந்த என்று ஆண்டாள் பாடுவது போல உள்ளது. அதே பாடலில் ஓங்கு பெரும் செந்நெல் என்றும் வரும். ஆனால் அது ஓங்கி பருத்து வளரும் என்ற பொருளில் வருகிறது. ஆனால் இங்கே இரண்டு சொல்லுமே உயரத்தை குறிக்கின்றது. உயரத்தில் மிகுந்த உயரம் அவன், அழகில் அழகே அவன். புகழில் புகழே அவன். கீதையில் கண்ணன் ஒவ்வொரு பொருளிலும், செயலிலும், அவனே உயர்ந்தவன் என்று கூறுவது போல உள்ளது.

  //அலை வாய்ச் சேறல்// மிகுதியாக ஓரிடத்தில் சேருவதால் செறாகிவிடுகிறதோ?

  amas32

  Like

  • //பல் பொறி மஞ்ஞை வெல் கொடி அகவ,// இந்த வரியை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் போலத் தோன்றுகிறது. ஏன் என்று தெரியவில்லை.

   :)
   same pinch! thatz why put in bold & underline

   //* ஓங்கு உயரம்
   ஓங்கி உலகளந்த என்று ஆண்டாள் பாடுவது போல உள்ளது//

   Itz your statement ma; Not mine!
   Let “ppl” read it carefully.. before pouncing & smashing – எதுக்குடா முருகன் பாட்டுல, ஆண்டாள ஊடால கொண்டாற?:(

   Like

  • //உயரத்தில் உயரம் அவன், அழகில் அழகே அவன். புகழில் புகழே அவன்//

   Very Nice ma!
   I am just into my own “fantasy” at this line:)

   Like

 2. //பட்டேன் படாத துயரம்… என் மரணம் இங்கே அமையட்டும்!
  = செந்தூர்க் காதலன் கருவறையில், பிரிவின்றிப், படியாய்க் கிடந்து, உன் பவள வாய் காண்பேனே!
  = செந்தூர் முருகா சேர்த்துக்கொள்! //

  அதிகம் உணர்ச்சி வசப்படுகிறாய் முருகா! துன்பங்கள் / இழப்புகள் தீண்டாத மனிதர்கள் ஏது? உமக்கு நாம் சொல்லவேண்டியது ஏதுமில்லை. இருப்பு ஏதோ ஒரு பொறுப்புக்காகவே இருப்பு வைக்கப்பட்டிருக்கிறது.

  -rAguC

  Like

 3. அன்பின் கேயாரெஸ் – திருசசெந்தூரானைப் பார்க்கிறோமோ இல்லையோ – கருப்பட்டி பனங்கிழங்குக்க்காக்வே போகிறோமென நினைக்கிறேன். மேனிச் சுவை – அந்தரங்கம் ……. ம்ம்ம்ம்ம்ம் – 2000 ஆண்டுகட்கு முன்னர் தோன்றிய தல வரலாறு – சட்டை போடக் கூடாதென்றால் ஷால் போடலாமா? முதல் நூலான திருமுருகாற்றுப்படையினை வைத்து எழுதப்பட்ட இப்பதிவு நன்று. அலைவாய்ச் சேறலும் – ஏன் கேயாரெஸ் ஒரு ஆய்வு செய்து வல்லினமா இடையினமானு சொல்லக் கூடாது – கூகுள்லே தேடினா எல்லாமே வல்லினம் தான் வருது. நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

  Like

  • //சட்டை போடக் கூடாதென்றால் ஷால் போடலாமா?//

   மேலே துண்டு போத்திக்க விடுறாங்க சீனா சார்
   எனக்குக் கொஞ்சம் கூச்சம் அதிகம்! :)
   அதுவும் அவன் தனியா இருந்தாப் பரவாயில்லை, ஆனா அத்தனை பேரு முன்னாடி, எனக்குக் கொஞ்சம் கடினம் தான்:))

   Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: