Truth = வாய்மை, மெய்ம்மை, உண்மை

அன்பர்களுக்கு,  ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்!
Eid Mubarak (Ramzan) – “உண்மை வள்ளல்” நபிகள் வகுத்த பெருநாள்! இந்த நாளிலே “உண்மை” பற்றிய சங்கப் பாடல்!

இன்னும் #Dosa-வில் நம் தலைவன்,  ஐயனைப் பார்க்கலீன்னா எப்படி?:)
வள்ளுவன் = நெஞ்சை அள்ளுவன்!

வாய்மை எனப்படுவது யாதெனின் – யாதொன்றும்
தீமை இலாத சொலல்
(அறம்: வாய்மை: 291)

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் – அப்பொருள்
மெய்ப் பொருள் காண்பது அறிவு
(பொருள்: அறிவுடைமை: 423)

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்
உண்மை அறிவே மிகும்
(அறம்: ஊழ்: 373)

அது என்ன வாய்-மை? மெய்-ம்மை? உண்-மை? = மூனும் ஒன்னு தானே?
ஆங்கிலத்தில் ஒரே சொல்லு = Truth!
ஏன்யா, தமிழில் மட்டும், ஒரு சொல்லுக்கு இத்தினி சொல்லு போட்டு மக்களைக் கொழப்பறீங்க?
Why can’t u be simple like English? This Ta-Mil is so hard yaar!:))

* வாயால் சொல்வது = வாய்மை
* உடம்பால் (மெய்யால்) நடந்து காட்டுவது = மெய்ம்மை
* உள்ளத்தாலும் இருப்பது = உண்மை


காபி உறிஞ்சல்:

1) வாய்-மை

வாய்மை எனப்படுவது யாது? = தீமை இல்லாத சொலல்!
சொலல் -ன்னா வாயாலே தானே சொல்ல முடியும்? அதான் “வாய்”மை!

யாருக்கு? = நமக்குத் தீமை வராத சொலல்! அதானே?
he he;  நம்மளைப் பத்தி நல்லாத் தெரியும் வள்ளுவருக்கு:)
அதான் “யாது ஒன்றும்”  -தீமை வராத -ன்னு சொன்னாரு!  பிறர்க்கு+நமக்கு = “யாது ஒன்றும்” தீமை வராத சொலல்!
————————————

2) மெய்-ம்மை

ஒருவர் “வாய்”மையே சொன்னாலும்…
எப்பொருள், யார்யார் “வாய்”க் கேட்பினும்…

அவர்கள், “மெய்யாலும்”  அப்படி நடந்து காட்டுறாங்களா?
இல்லை வெறும் வாய்-அளவில் தானா?
உதட்டளவுக் கொள்கையா? உயிரளவுக் கொள்கையா?
மெய் = உடல்; உடலாலும் நடந்து காட்டுவது! அந்த  “மெய்ப்”- பொருளைக் காண்பது அறிவு!
————————————

3) உண்-மை

இப்படி, வாயாலும் &  மெய்யாலும் இருக்கலாம்!  அவையெல்லாம் புறம் = வெளி உலகக் கட்டுப்பாடுகள்!
ஆனா,  அகம்??
நம்ம உள்ளத்துக்கு நம்மளைப் பத்தி நல்லாத் தெரியும்:)) = உள்+மை =உண்மை

எவ்ளோ தான் நுண்ணிய நூல் பல படிச்சி இருந்தாலும்,
அவரு “உண்மை” அறிவே = உள்ளத்து அறிவே மிஞ்சும்!  மற்றவை ஊருக்கு முன், புற வேடங்களே!

அதான்…
பொய்ம்மையும் “வாய்”மை இடத்த
-ன்னு சொன்னாரு!
பொய்ம்மையும் “உண்”மை இடத்த
-ன்னு சொல்லலை பாருங்க!

புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின், வாயால் பொய் சொல்லலாம்;  Exception;
ஆனா அதை உள்ளம் அறியும்-ல்ல?:)
பொய்ம்மையும் ‘உண்’மை இடத்த கிடையாது!  Just ‘வாய்’மை இடத்த!:)

Ta-Mil, டுமீல் -ன்னு Twitter-இல் இளக்காரம்: “Tamil grammar too complex ஓய்! English simple, அதான் முன்னேறுது; டுமீலன்ஸ் நம்மள “முன்னேறவே” விட மாட்டானுங்கோ”:)
* ஆங்கிலத்தில் ஒரே சொல்லு = Truth!
* தமிழ் -ல்ல மட்டும் ஏன் இப்படி இருக்கு? = வாய்மை, மெய்ம்மை, உண்மை!
இப்போ புரிஞ்சுதா? அதான் = “திருக்”-குறள்!:)

dosa 12/365

Comments
15 Responses to “Truth = வாய்மை, மெய்ம்மை, உண்மை”
  1. rajandr says:

    எனக்கென்னவோ மெய்பொருள் literally உடலைக்குறிக்கும் சொல்லாக தெரியவில்லை. particularly இந்த குறளுக்கு மு.வா/மு.கா உரை இக்குறளுக்கு என்ன என்பதை பார்த்தீர்களா

    Like

    • //மு.வா//
      அவர் மு.வ -ங்க:) மு.வரதராசனார்

      ஒரு உரையில் அத்தனை நுட்பங்களையும் கொண்டு வந்துவிட முடியாது; மேலோட்டமான பொருளே சொல்லவியலும்!
      அதில் ஆழங்கால் படும் பிற இலக்கியப் பயன்பாடுகளில் தான் முழுப் பொருளும் தெறிக்கும்!

      “மெய்-வாய்” என்பதை வைத்தே, மணக்குடவர் உரையும் உள்ளது:
      (உயர்ந்த பொருள் இழிந்தார் வாயினும், இழிந்த பொருள் உயர்ந்தார் வாயினும், உறுதிப்பொருள் பகைவர் வாயினும், கெடுபொருள் நட்டார் வாயினும், ஒரோவழிக் கேட்கப்படுதலான், ‘எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்’ என்றார். அடுக்கு, பன்மைபற்றி வந்தது. ‘வாய்’ என்பது அவர் அப்பொருளின்கண் பயிலாமை உணர்த்தி நின்றது. மெய்யாதல், நடத்தை நிலைபெறுதல். சொல்வாரது சொல் இயல்பு நோக்காது, நின்ற பயன் நோக்கிக் கொள்ளுதல் ஒழிதல் செய்வது அறிவு என்பதாம்)

      Like

  2. rajandr says:

    விளக்கதிற்கு நன்றி. 

    Like

  3. amas32 says:

    ஆங்கிலத்தில் truth என்கிற ஒரே சொல்லுக்கு தமிழில் எவ்வளவு நுண்ணிய பொருள் மாற்றங்களை உணர்த்தும் சொற்கள் இருக்கின்றன! தமிழின் வளமைக்கு இதுவும் ஒரு சான்று.

    வாய்மையை கடைபிடித்தால் அது மெய்ம்மைக்கு வழி கோலும். அதன் பின் உண்மையே நம் வாழ்வாகும். இவை அனைத்தையும் நம் வாழ்வில் கடைப் பிடிப்பது ஒரு மகா பெரிய வேள்வி தான். பெரிய மகான்களும் யோகிகலுமே இப்படி இருக்க முடியும் என்று நினைக்காமல் நாமும் சிறு முயற்சிகள் (baby steps) எடுத்து மேய் வழிச் சாலையில் செல்ல வேண்டும். வாழ்க்கை முறையை மாற்றாமல் இருந்தால் நாம் படித்தும், பார்த்தும், உணரும் அத்தனை செயல்களுமே அர்த்தமற்றதாகிவிடுகிறது.

    amas32

    Like

    • இந்த உணர்வுபூர்வமான புரிதல் தான் இன்றைய சமுதாயத்துக்கு தேவையானதொன்று. /: பெரிய மகான்களும் யோகிகலுமே இப்படி இருக்க முடியும் என்று நினைக்காமல் நாமும் சிறு முயற்சிகள் (baby steps) எடுத்து மேய் வழிச் சாலையில் செல்ல வேண்டும்:/

      இதனாலேயே தான், “அவனை பேச சொல்லு, நான் அப்ப உண்மையை பேசறேன்” அப்படின்னு இல்லாமல், உண்மை, அறம், நல்லது, இதெல்லாம், நம்மிடம் இருந்து ஊற்றாக எழும்பவேண்டும் அப்படீன்னு பெரியவா சொல்லிட்டு போய்ட்டாங்க. அது வெறும் அறிவுரை அல்ல. It is not idealism, it’s sheer pragmatism at its very core! காந்திஜியின் “நீயே, நீ விரும்பும் மாற்றமாய் இரு” ன்னு சொல்லியிருப்பாரா?

      Like

    • //தமிழின் வளமைக்கு இதுவும் ஒரு சான்று//
      ஆமாம்-ம்மா; இன்னும் நிறைய வரும், #dosa365-இல்:)

      //வாய்மை-மெய்ம்மை-உண்மை=baby steps//
      Liked it:)

      Like

  4. Rex Arul says:

    அருமையான பதிவு. இப்படி நான் சொல்லி ஆரம்பிக்க வேண்டிய அவசியமே இல்லை என்பதை முதலில் நான் சொல்லிக்கொண்டு ஆரம்பிக்க விரும்புகின்றேன். திருமுருகன் அருளால், அனைத்து பதிவுகளுமே @kryesன் அருமையான விளக்கங்களோடும், படங்களோடும், this is a #365Project that will be permanently etched in the minds of the Tamil community, as #365paa and other literary projects were. So, @kryes and other friends, who comment regularly, a big kudos to all of you.

    நேரா விஷயத்துக்கு வருவோம்.

    /:ஆங்கிலத்தில் ஒரே சொல்லு = Truth!:/

    இதனை முழுவதுமாக ஏற்றுக்கொள்ள கடினமாக உள்ளது, முருகா. “Truth” என்பது பிரபலம் என்றாலும் “Verity” என்றொரு அருமையான சொல் ஆங்கிலத்தில் உள்ளது. அதன் பொருளும் “truth” எனப்படும் வாய்மை/மெய்மை/உண்மை தான். அது நேராக இலத்தீனிலிருந்து வருகிறது — veritas (in Latin). அந்த “truth” என்னும் வார்த்தை கூட “troth” என்னும் வார்த்தையிலிருந்து மருவி இருக்கலாம் என்று எனக்கு தோன்றுகிறது. சற்று ஆராய வேண்டும். அதென்ன “troth”? Remember, “beTROTHal” எனப்படும் நிச்சயதார்த்தம்? இவ எனக்கு, நான் அவளுக்கு, இதுக்கு எல்லாரும் சாட்சின்னு advance booking ஊரறிய நடக்குது பாருங்க, அதான் அந்த “troth” ங்கற வார்த்தைக்கு மூலம். அதன் பொருள் “faithfulness” or “fidelity” அல்லது நமபகத்தன்மை என்று பொருள்படும்.ஆங்கிலத்தில், இன்றைய “truth” க்கு முன்னாடி “troth”ன்னு தான் சொல்லிட்டு இருந்தாக. வாய்மைக்கும் அதுவே. பின்னர், “truth” அதிகம் பிரபலம் ஆனாலும் கூட “troth” இன்னும் dictionaryஇல் இருந்து போகவே இல்லை. அதிகம் உபயோகிப்பது கிடையாது, சில சட்டம் அறிந்த சட்டாம்பிள்ளகளும், ஆங்கிலச் சொற்விரும்பிகளும் தவிர :-) மேலும் “exactitude” என்னும் வார்த்தையும் கூட “மெய்மை” / “சரியானது” / “உண்மை” என்னும் பொருள்படும் சொல்லாக ஆங்கிலத்தில் உள்ளது.

    எனவே, ஆங்கிலத்தில் “Truth” மட்டும் என்பதை முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால், வாயால், உடலால், உள்ளத்தால் “வாய்மை”, மெய்மை, உண்மை என்ற பாகுபாடு இல்லை என்று நீங்கள் கூற விழைந்தால், அது சரியாகவே இருக்கின்றது என்று நினைக்கின்றேன்.

    Now the gears should change to Law. வாய்மைக்கு சொல் மூலமாகவும், எழுத்து மூலமாகவும் கூறப்படும் உண்மைக்கு ஆங்கிலத்தில் வேற்றுமை இல்லை. ஆனால், பொய்மை என்னும் அவதூறுக்கு அந்த distinction உண்டு. எப்படி என்று கேட்கின்றீர்களா? இப்படி: அதாவது, ஒருவரைப் பற்றி அவதூறு, எழுத்து மூலம் (email, blog, newspaper, twitter, etc.) அளிக்கப்பட்டால், அந்த அவதூறு எனப்படும் பொய்மைக்கு ஆங்கிலத்தில் libel என்று பெயர். அதே அவதூறை, வாய்வழியாக (தீப்பொறி பறக்க கக்கினால்) கூறினால், அதற்கு ஆங்கிலத்தில் slander என்று பெயர். இந்திய சட்டப்படி, இ.பி.கோ 499 & 500 சட்டப் பிரிவுகளின்படி சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கலாம். அமெரிக்காவிலும் அவதூறுக்கு தண்டனை உண்டு, ஆனால், இங்கு பேச்சுரிமை அதிகம் என்பதால், அவ்வளவு எளிதில் இந்தியா போன்று வாய்க்கு பூட்டு போடுவது சுலபம் அல்ல. So, we covered “slander” and “libel” which is opposite of உண்மை. OK?

    /:பிறர்க்கு+நமக்கு = “யாது ஒன்றும்” தீமை வராத சொலல்!:/

    இந்த பிறர்க்கு என்னும் உண்மையையே பலரும் மறந்து, “தமக்கு” தீமை தராத விடத்து சொல்லப்படும் பொய்மையே, உண்மை என்று ஒரு நிலை எடுக்கப்படும் போது தான், அவர்கள் பக்கா narcissistஆக வலம் வருகின்றார்கள். உண்மை என்னும் போதே, சிறு வயதில் நாம் பார்த்த திரைப்படங்களில் நீதிமன்ற scenes தான் ஞாபகத்துக்கு வரும். அதில், “சத்தியாமாக நான் சொல்வதெல்லாம் உண்மை, உண்மையைத்தவிர வேறில்லை” என்று சொல்வதாகவும், தீயவர் ஒரு நமுட்டு சிரிப்பு சிரித்து, பொய்யையே மெய்யாக சொல்லிவிட்டு தாம் என்னமோ பெரிய மேதாவி என்று காட்டிக்கொள்வார்கள், இல்லையா? அதில் பாருங்கள்…அந்த பொய்யை சொல்பவன், தனக்கு அது பயன் தரும் என்று நம்புவதால், அதையே மெய் என்று சொல்கின்றான். Narcissistic Personality Disorder (NPD) கேஸ்கள் பலரும் இவ்வகையை சார்ந்தவர்களே. இவர்கள் எல்லாரும் அக்கம் பக்கத்தில், ஏன், உங்கள் அரசியல்வாதி, அலுவலக மேலதிகாரி, என்று எல்லா இடத்திலும் உள்ளவர்கள் தான். ஆக, எனக்கு நன்மை பயக்கும் என்று நான் நம்பும் அனைத்தும் வாய்மையே, மற்றதெல்லாம் பொய்மையே என்று அவர்கள் துணியும்போது, வில்லியம் ஷேக்ஸ்பியர் எழதிய மாக்பெத்தில் ஒரு வசனம், “fair is foul, foul is fair” என்று வரும். அதாவது, நல்லவர்களின் வாய்மை, கயவர்களின் பொய்மை; கயவர்களின் வாய்மை, நல்லவர்களுக்கு பொய்மை. ஆனால், scandalous conduct ல் சிக்கி சின்னாபின்னமாகும் எல்லா பெரிய மனிதர்களையும் பாருங்கள்! அவர்கள் தவறை செய்யும் போது, “அடப் போடா., நான் மட்டுமா தப்பு செய்யறேன். மாட்டினா பாத்துக்கலாம்” என்று தைரியமாக தப்பு செய்றான். அன்னாடம் காவடி தூக்கற நம்மள மாதிரி ஆட்கள், ஆகா உண்மைக்கு காலமே இல்லை. பொய்மை அல்லவா வென்று விடுகிறது, அதுவல்லவா தேரில் ஏறி போகின்றது, என்று ஏக்கப்பெருமூச்சு விடுகின்றனர்.

    இல்லை நண்பர்களே. நம்பணும். உண்மைக்கு வலிமை அதிகம் உண்டு. அனால் அது கடவுள் மாதிரி — It is pertinent to recall that in the New Testament, Jesus says “I am the Truth” and at another place He will say “the Truth will set you free”. இசுலாத்திலும் கூட “Infinite Justice” என்னும் பொருள் பட அந்த எல்லாம் வல்ல அல்லாஹ் தான் உண்மையின் வடிவமாக கருதப்படுகின்றார். இந்து மதத்தில் கூட “மறைபொருள்” மற்றும் “மெய்ப்பொருள்” என்னும் பொருள் பட கடவுளையே தான் நாம் கூறுகின்றோம். ஆக, எல்லா மதங்களுமே, மனிதனின் குறையில் நிறையான உண்மையை காண முடியாது என்று உணர்ந்த படியால், கடவுளையே உண்மையின் கடைசி summit ஆக காட்டுகின்றன. ஆக, “அரசன் அன்று கொள்வான், தெய்வம் நின்று கொல்லும்” என்று தமிழில் கூறுகின்றோம் அல்லவா? அது வாய்மை Vs. பொய்மைக்கும் பொருந்தும். எப்படி என்று கேட்கின்றீர்களா?

    இப்படி: South Carolina Former Governor Mark Sanford பற்றி யாராவது பேசுகின்றார்களா? Former Presidential Candidate and North Carolina Senator John Edwards நிலை என்னவாயிற்று என்று பார்த்தீர்கள் அல்லவா? குற்றவியல் வழக்கில் கைதாகி, தனது வைப்பாட்டிக்கு தேர்தல் நிதியிலிருந்து செலவு செய்தார் என்பது தான் குற்றம் என்றாலும் அதையும் தாண்டி, அதை மறைத்து பொய் சொன்னது தான் அவரை பாதாளத்தில் தள்ளியது. இதைப் பற்றி கூறும் போது, Former President Bill Clinton பற்றி நினைக்காமல் இருக்க முடியுமா? அவர் மோனிகா லூவின்ஸ்கியுடன் வெள்ளை மாளிகையில் கொட்டம் அடித்தது அவரை மாட்டிவிடவில்லை; அதை மறைத்து பொய் சொன்னதில் (perjury) தான் impeachment வரை சென்றது. More than the offense, it is the perjury to cover-up an offense that becomes a major offense by itself. இந்தியாவில், அதுவும் உச்ச நீதிமன்ற வக்கீல் chambersல் டாக்டர் அபிஷேக் மனு சிங்வி ஒரு பெண் வழக்கறிஞர் உடன் நடத்திய ஜல்சாவை, YouTube, Facebook என்று எல்லா இடங்களிலும் நாறி, அவர் காங்கிரஸ் கட்சி செய்திதொடர்பாளர் பதவியில் இருந்தே தள்ளி இருக்க வேண்டிய நிலை வந்ததா இல்லையா? இத்துணைக்கும் அவர் டில்லி உயர் நீதிமன்ற தடை ஆணை எல்லாம் வாங்கிப் பார்த்தார். ஆனால், இருட்டில் நடத்தில களியாட்டங்கள் எல்லாம் வெளிச்சத்துக்கு வந்தே தீர வேண்டும் என்பதைத் தான் இவை அனைத்தும் காட்டுகின்றன.

    அதாவது, வள்ளுவர் கூறியது போல “நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்து ஊக்கின் உயிர்க்கு இருதியாகி விடும்”னு. அதாவது, உண்மை சொல்வதெல்லாம் வேஸ்ட். பொய் தான் பேஸ்ட் என்று சொல்லிக்கொண்டு, ஊரையும், குடும்பங்களையும் கெடுத்துவிட்டு, “தமிழ்”, “சட்டம்” என்றெல்லாம் சத்தம் போட்டு தனது “பொய்களை” மறைத்துக்கொண்டு உண்மை பேசுவது போல காட்டிக்கொண்டு திரியும் சில பேர் கூட உண்மை மேடையேறும் காலம் வரும்போது, சான்போர்டுகள், எட்வர்ட்ஸ்கள், கிளிண்டன்கள், சிங்விகள் சந்தித்த நிலையை சந்தித்து தான் ஆகவேண்டும். இதுவே இயற்கை நியதி.

    ஆக, வாய்மை மேடை ஏற காலம் தாழ்த்துவதே, பொய்மை கயவர்களை உச்சத்துக்கு கொண்டுபோய் வைக்க வேண்டும் என்று தான் போலும். அப்ப தானே, விழுந்தா, அடி, பரம அடியாக இருக்கும்? இது ஆண்டவன் விதித்த இயற்கை விதி போலும் – To me, this seems to be in accordance to Natural Law.

    ஆக, இதன் உண்மை புரிந்துகொண்டவர்கள், குழந்தைகளுக்கு உண்மையின் மேன்மையைப் பற்றியும், பொய்மையின் வெற்றி நடை தற்காலிகமானதே என்பதையும் கூறி, Socrates கூறியது போல, “நீ எதுவாக மற்றவர்கள் உன்னை மதிக்க வேண்டும் என்று விரும்புகின்றாயோ, அதன் படியே நீ நடந்துகொள்” என்பதை எல்லாம் கூறியும், வழி நடத்தி வந்தால், சமூகத்தில் குற்றங்களும் குறையும்.

    நீதிமன்றங்களில் வழக்கு பளுவும் குறையும்.

    இந்திய உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் வந்த ஒரு வழக்கில், எப்படி பொய்மை (perjury) இந்திய வழக்கு முறையையே கேலிக்கூத்து ஆக்கிக் கொண்டிருக்கிறது என்றும், அதைத் தடுக்க, மேலை நாடுகள் போல, “பொய்மைக்கு” அதிக தண்டனை கொடுக்கவேண்டியது அவசியம் ஆகிறது, எனவே நாடாளுமன்றம் தக்க விதிகளை இயற்ற வேண்டும் என்று கூறியதை இங்கு பதிக்க விரும்புகின்றேன்.

    நீளம் அதிகமாகிவிட்டது. That wasn’t my plan. பொறுத்துக்கொள்ளவும். நன்றி. :-)

    Like

    • என்னடா சிறிய குறளா போச்சே, இதுக்கு என்ன விளக்கம் கொடுக்கும் முடியும்னு மேல படிச்சா எனக்கு @kryes ஆச்சர்ய விளக்கம் தந்திருந்தார். அப்புடியே கீழே கமெண்ட்டுக்கு வந்தா நீங்க தந்த விளக்கம் பத்து அப்புடியே மலைச்சு போயிட்டேன்.

      //ஆக, வாய்மை மேடை ஏற காலம் தாழ்த்துவதே, பொய்மை கயவர்களை உச்சத்துக்கு கொண்டுபோய் வைக்க வேண்டும் என்று தான் போலும். அப்ப தானே, விழுந்தா, அடி, பரம அடியாக இருக்கும்? இது ஆண்டவன் விதித்த இயற்கை விதி போலும் – To me, this seems to be in accordance to Natural Law.//

      எத்தனை சத்தியமான வார்த்தைகள். இதை படிக்கும் பொது கருணாநிதி முகம் தான் நினைவில் வந்தது.

      -விளக்கங்களுக்கு நன்றிகள் ரெக்ஸ்அருள்

      Like

      • Rex Arul says:

        ஹி..ஹி.. மிக்க நன்றி, ரகு அவர்களே… :-)))

        Like

      • //என்னடா சிறிய குறளா போச்சே//

        atom சிறிசு தான், ஆனா atom bomb?:)
        அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
        குறுகத் தெறித்த குறள்!

        அந்த அணுசக்தியைத் தான் Rex விரித்துள்ளார்:)

        Like

    • kalakkals of Rex:)

      //திருமுருகன் அருளால், அனைத்து பதிவுகளுமே//
      Dank U; அதான் உண்மையே!:) உள்+மை, என்னுள்+மை:))

      Like

    • உங்கள் ஆங்கில விளக்கங்களுக்கு நன்றி Rex!
      Troth-Betrothal அருமை!

      நான் சொல்ல வந்தது: ஆங்கிலத்தில் இப்படி வாய்,மெய், உள்ளம் வச்சி Truth இல்லை என்பது தான்!:)

      எந்தவொரு மொழியிலும் பல சொற்கள் ஒன்றைக் குறிக்கும்! Truth = Verity, Exactitude எல்லாம் ஓக்கே தான்!
      ஆனா இவையெல்லாம் மக்களிடையே அதிகம் புழங்கும் சொற்கள் இல்லை!
      தமிழில், “வாய்”மையே வெல்லும், “மெய்”யாலுமே அப்படியே, உண்மை நிலை -ன்னு மக்களிடையே இயல்பாவே இருக்கு-ன்னு சொல்ல வந்தேன்:)
      ————-

      //இந்த பிறர்க்கு என்னும் உண்மையையே பலரும் மறந்து,
      “தமக்கு” தீமை தராத விடத்து சொல்லப்படும் பொய்மையே, உண்மை என்று ஒரு நிலை எடுக்கப்படும் போது தான்,
      அவர்கள் பக்கா narcissistஆக வலம் வருகின்றார்கள்//

      Sooperu:)
      ————-

      //It is pertinent to recall that in the New Testament, Jesus says “I am the Truth”//

      இயேசுநாதப் பெருமான் சொன்னது அழகிலும் அழகு! = நானே சத்தியம்!
      “சத்திய சொரூபம்” என்பது இதைத் தான்!

      சொரூபம் = உண்மைக்கு எப்படிய்யா வடிவம் எப்படிக் குடுக்க முடியும்?
      உண்மையை வரை -ன்னா ஓவியன் என்னத்த வரைவான்?
      அதான், உண்மைக்கு = கடவுளையே வடிவம் ஆக்கி விட்டார்கள்! கடவுளின் வடிவத்தை என்ன-ன்னு சொல்ல முடியும்?:)

      எதையும் கடந்து நிற்கும் கடவுளால் கூட, உண்மையைக் கடந்து நிற்க முடியவில்லை:)
      = சத்திய சொரூபம்! (மெய்ப்பொருள்)
      இறைவனுக்கே = திருமெய்யன் ன்னு பேரு; இன்னும் திருமெய்யம் -ன்னு ஊரில் காணலாம்!

      “முலையாளா ஒருநாள் உன் அகலத்தால் ஆளாயே?
      “திருமெய்ய” – மலையாளா! நீயாள வளையாள மாட்டோமே”
      -ன்னு ஆழ்வார் மெய்க்கே-திரு சேர்த்துப் பாடுவாரு:)

      கரவாகிய கல்வியுளார் கடைசென்று, இரவா வகை “மெய்ப்பொருள்” ஈகுவையோ -ன்னு அருணகிரி கேட்பதும் இஃதே!
      அதான் தெய்வம் நின்று கொல்லும் என்பது போல், உண்மையும் நின்று கொல்கிறது!

      Like

    • I am totally disagreeing with Rex on one point…
      //வாய்மை மேடை ஏற காலம் தாழ்த்துவதே, பொய்மை கயவர்களை உச்சத்துக்கு கொண்டுபோய் வைக்க வேண்டும் என்று தான் போலும்.
      அப்ப தானே, விழுந்தா, அடி, பரம அடியாக இருக்கும்//

      அதென்ன “விழுந்தா”? விழுந்து-ன்னு சொல்லுங்க:)
      அப்ப தானே, “விழுந்து”, அடி, பரம அடியாக இருக்கும்:))

      தன் நெஞ்சுக்கு நீதி என்று எழுதுபவர்கள், பிறர் நெஞ்சுக்கு என்ன எழுதினார்கள்?
      பிறர் நெஞ்சம் என்ற ஒன்றும் உலகில் இருக்குல்ல? அதை நொறுக்கிக் கிட்டே இருந்தா?

      யாரையும் கீழே பிடித்துத் தள்ள வேண்டும் என்று இறைவனுக்கு ஆசையில்லை!
      பேராசை என்னும் உச்சியில் ஆடினால், என்ன ஆகுமோ, அதுவே ஆகும்!
      குணம் என்னும் குன்றேறி நின்றார் ஆடுவதில்லை!

      Like

  5. amas32 says:

    KRS one more Q. வாய்மை, மெய்ம்மை, உண்மை பற்றிச் சொல்லியிருக்கிறீர்கள். பேருண்மை என்று ஒன்றும் உள்ளதே. வேதம் அல்லது வாழ்க்கை தத்துவம் பேருண்மை என்று கொள்ளலாமா?

    amas32

    Like

    • தமிழில் பேருண்மை-ன்னு இல்லைம்மா! உண்மையே = பேருண்மை!:)
      உண்மை = கடவுள் -ன்னு சொல்லீட்டாப் பிறகு, அதுக்கு மேல பெருசு ஏது?:)

      ஆனா, வடமொழியில் = மகா வாக்கியம் ன்னு சொல்லும் வழக்கம் உண்டு!
      வேதங்களில் வரும்! சத்யம் ஞானம் அனந்தம் பிரம்மம் = மகாவாக்கியம்

      Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)