இனியது கேட்கின்!

சங்க காலத்தில் = ஆசிரியப்பா (prosaic),  கலிப்பா (musical) தான் அதிகம்!
சங்கம் மருவிய காலத்தில் = வெண்பா பிரபலமாயிருச்சி!
நீதி சொல்ல,  நச் -ன்னு  நாலே வரி:)
திருக்குறளும், வெண்பா தான் = இன்னும் நச்!  ரெண்டே வரி:)

* இன்னா 40 = வாழ்வில் இனிமை இல்லாத -ன்னு -ve தொனியில் சொல்லும்
* இனியவை 40 = வாழ்வில் இனிமை -ன்னு +ve தொனியில் சொல்லும்

ரெண்டும், சோடியான நூல்கள் போல இருக்கு-ல்ல?
ஆனா எழுதியது வேற வேற கவிஞர்கள்!
இனியவை 40 எழுதிய கவிஞர் = பூதம். சேந்தனார்;

 

வாங்க பார்க்கலாம்,  “இனிது இனிது” -ன்னு வரிக்கு வரி வரும்! = “இனியது” கேட்கின் – ன்னு எங்க பழைய வலைப்பூ ஒன்னு;
#365paa #dosa365 க்கெல்லாம் முன்னாடியே, அப்பப்போ பாக்களைத் தந்த “பழைய பூ” = ஆனா, வாசம் இன்னும் இருக்கு;


நட்டார்ப் புறங்கூறான் வாழ்தல் நனி-இனிதே;
பட்டாங்கு பேணிப் பணிந்தொழுகல் முன்-இனிதே;
முட்டு-இல் பெரும்பொருள் ஆக்கியக்கால், மற்றுஅது
தக்குழி ஈதல் இனிது

நன்றிப் பயன்தூக்கி வாழ்தல் நனி-இனிதே
மன்றக் கொடும்பாடு உரையாத மாண்பு-இனிதே
அன்று-அறிவார் யாரென்று அடைக்கலம் வௌவாத
நன்றியின் நன்கு-இனியது இல்

இனியவை நாற்பது: பாடல்கள் 19 & 30


காபி உறிஞ்சல்:

1)
* நட்பு கொண்டவர்களைப், பொதுவிலோ/ மறைவிலோ… புறங் கூறாம வாழணும் = இனிது
* பட்டாங்கு என்னும் நீதி நூல்களில் சொன்னதை மதிச்சி வாழணும் = இனிது
* செல்வம் சேரும் போது.. அடைச்சி வைக்காம,  தக்கவை -க்குக் கொடுத்து வாழணும் = இனிது

2) தக்குழி = தக்க + உழி
உழி = இடம்/ பாத்திரம்;  சிறுகச் சிறுகச் சேர்க்கும் இடம்;
காசை உழி-ல வைடா -ன்னு இன்னிக்கும் கிராமத்தில் சொல்வாங்க!

மேற் கூரையின் முகட்டிலோ, சாமி மாடத்திலோ.. ஒரு பானை (அ) பாத்திரம் இருக்கும்! அதுல சில்லறைக் காசு, சேமிப்புக் காசைப் போட்டு வைப்பது வழக்கம்!
எப்பவாச்சும் ஆபத்துக் காலத்தில், அந்த “உழிக் காசு” தான் கை குடுக்கும்:)
உற்று “உழி” உதவியும், உறு பொருள் கொடுத்தும் -ன்னு பாட்டு ஞாபகம் வருதா?

அற்றார் அழிபசி தீர்த்தல் – அஃதொருவன்
பெற்றான் பொருள் வைப்பு “உழி
” – குறள்

கிராமங்களில், எவ்வளவு இயல்பா, செந்தமிழ்ச் சொற்களைப் புழங்குறாங்க பாருங்க!
We only became very decent:)
உண்டி-யைக் கூட, கிரந்தம் கலந்து, Hundial ன்னு எழுதி வைப்போம்:)) நாலெழுத்து படிச்சி இருக்கோம்-ல்ல?

அதே போல, பட்டாங்கு = பட்டு + ஆங்கு;
நாம் பட்டதில் இருந்து அனுபவங்களை, ஆங்கு எழுதி வைப்பது;
நாளடைவில் Moral Book/Code Book என்று ஆகி விட்டது;

3)
* நன்றியுணர்வு; பிறரால் நாம் அடைஞ்ச பயன் என்ன-ன்னு அப்பப்ப எண்ணிப் பார்க்கணும் = இனிது
* பொது மன்றத்திலே,  கொண்டவர்களைக் கொடும்பாடு சொல்லாம வாழணும் = இனிது
* நம்மை நம்பி அடைக்கலம் குடுத்த பொருளை, யாருக்குத் தெரியப் போகுது-ன்னு வெளவாம இருக்கணும் =இனிது

4) கொடும்பாடு = புறம் பேசுதல்; இழித்தல்
பொதுவிலே கொண்டவரைக் கொடும்பாடு செய்யாமை -ன்னு சொல்வது… என்னமோ செய்யுது…

 

dosa 11/365

Advertisements
Comments
3 Responses to “இனியது கேட்கின்!”
 1. amas32 says:

  இந்தப் பாடலில் புறம் பேசுதல் தவறு என்று இரு முறை வருகிறது.

  //நட்டார்ப் புறங்கூறான் வாழ்தல் நனி-இனிதே;//

  //மன்றக் கொடும்பாடு உரையாத மாண்பு-//

  ஒருவர் இல்லாத சமயத்தில், அவர் குறைகளை மற்றவர்களிடம் சொல்வதை நாம் எத்தனையோ முறை செய்திருப்போம். அதுவும் நண்பர்கள்/உறவினர்கள் கூடும் பொழுது கதை பேச ஒருவரின் குறைகளே சிறந்த டாபிக்! காழ்ப்பு உணர்ச்சியுடன் பேசுவோம் என்று சொல்ல முடியாது. ஆனால் அவர் நடத்தை ஏன் அப்படி உள்ளது என்பதை எல்லாம் சிந்திக்காமல் அவரைப் பற்றிக் குறை கூற ஒரு அவை கிடைத்ததே என்று பேச ஆரம்பித்து விடுவோம். இந்த குணத்தை வென்றாலே நாம் பாதி நல்லவர்கள் ஆகிவிடுவோம் :-)

  //தக்குழி ஈதல் இனிது//
  அமெரிக்காவில் வீடுகளில் ஒரு கோப்பையில், ஒரு சென்ட், பத்து சென்ட், கால் வெள்ளி, நாணயங்களை போட்டு வைப்பது இன்னும் வழக்கமாகத் தான் உள்ளது. துணிதுவைக்க இயந்திரத்தைப் பயன் படுத்த, சாலை பயன்பாடு கட்டணத்தைச் செலுத்த இந்த நாணயங்கள் அங்கே தேவையாக உள்ளது. அதனால் அதனை சேமிக்கும் பழக்கம் உள்ளது.

  விமான நிலையங்கள், பெரிய கடைகள் போன்ற இடங்களிலும் இந்த மாதிரி சேமிப்பு பெட்டகங்கள் உள்ளன. அதில் நாம் நம்மிடம் உள்ள உதிரி சில்லறைகள்,மற்றும் ரூபாய் நோட்டுக்களை போட கவனம் ஈர்க்கப் படுகிறது.

  இன்றும் நடுத்தரக் குடும்பங்களில் அங்கங்கு பணமும் சில்லறையும் போட்டு வைப்பது வழக்கமாகத் தான் உள்ளது. ஒரு அவசரத்துக்கு, சமையல் எரிவாய்வு அளிக்கும் ஆள் வந்து கதவை தட்டும் பொழுது அங்கு இங்கு பீராய்ந்து கொடுப்பது அனைவரும் இன்றும் செய்து கொண்டிருப்பது தான்.

  இந்த மாதிரி நெறிகளை கற்றுத் தரும் பாடல்களை பள்ளியில் கட்டாய மனன செய்யுளாக வைத்தால் இளமையிலேயே நன்னெறி குழந்தைகள் மனதில் வேரூன்றும் :-)

  Like

  • //நண்பர்கள்/உறவினர்கள் கூடும் பொழுது கதை பேச ஒருவரின் குறைகளே சிறந்த டாபிக்//
   என்னாவொரு வில்லத்தனம்:)

   //நட்டார்ப் புறங்கூறான் வாழ்தல் நனி-இனிதே;
   மன்றக் கொடும்பாடு உரையாத மாண்பு-//
   Both are slightly different;
   ஒன்று பின்னால் பேசுவது; இன்னொன்று பொது மன்றத்திலே அவதூறு கூறுவது

   //துணிதுவைக்க இயந்திரத்தைப் பயன் படுத்த, சாலை பயன்பாடு கட்டணத்தைச் செலுத்த//
   Perfect Observation:) Memories dont fade:)

   Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: