ஓடிப் போ தோழீ! ஒழிக ஊரே!

அவனோடு-அவ “ஓடிப் போயிட்டா”
ஏன் யாருமே, அவளோட-அவன் ஓடிப் போயிட்டான் -ன்னு சொல்லுறதில்லை?:))

– அலைபாயுதே போன்ற படங்களில் காட்டப்பட்டாலும்…
– இன்று நேற்றுப் பழக்கமல்ல!  சங்கத்தமிழ் பழக்கம்:)
– அதுனால எல்லாரும் ஓடிப்போங்க, தப்பொன்னும் இல்லை:)

ஓடிப் போதலின் இலக்கியப் பெயர் = “உடன்போக்கு
இந்தப் பாட்டில், அப்படிச் செய்யுமாறு, தோழியே ஆலோசனை சொல்லுறா;
ஏன்? அம்மா அப்பா கிட்ட காதலைச் சொன்னா என்னவாம்? பார்ப்போமா?


சிலரும் பலரும், கடைக்கண் நோக்கி
மூக்கின் உச்சிச், சுட்டுவிரல் சேர்த்தி
மறுகின் பெண்டிர் அம்பல் தூற்றச்
சிறுகோல் வலந்தனள் அன்னை; அலைப்ப

அலந்தனென்; வாழி தோழி! கானல்
புதுமலர் தீண்டிய, பூநாறு குரூஉச் சுவல்
கடுமா பூண்ட நெடுந்தேர் கடைஇ
நடுநாள் வரூஉம்; இயல்தேர்க் கொண்கனொடு

செலவு, அயர்ந் திசினால் யானே
அலர் சுமந்து ஒழிக, இவ் அழுங்கல் ஊரே!

திணை: நெய்தல்
துறை: தோழி, தலைவியை உடன்போக்குக்கு வலித்தது (ஓடிப்போ ன்னு சொல்லியது)
கவிஞர்: உலோச்சனார்
பாடல்: நற்றிணை 149


காபி உறிஞ்சல்:

சிலரும் பலரும், கடைக்கண் நோக்கி
மூக்கின் உச்சிச்,  சுட்டுவிரல் சேர்த்தி

சிலரும் பலரும்? = பாட்டில், எடுத்தவுடனேயே முரண் தொடை:))
சிலர்-ல ஆரம்பிச்சி, இப்போ பலர்-ல வந்து நிக்குது; கடைக் கண்ணாலேயே “உம் உம்” -ன்னு பேசிக்குறாங்க:)

மூக்கின் உச்சி, சுட்டு விரல் சேர்த்தி
= மூக்கு மேல விரலை வச்சி,  “தெரியுமாடீ சேதி”? -ன்னு கதை போல பேசுறாளுங்க:) யாரு?
= மறுகின் பெண்டிர்; (பொறாமையால்) உள்ளுக்குள்ளேயே மறுகுற பொம்பளைங்க:))

மறுகின் பெண்டிர், அம்பல் தூற்றச்
சிறுகோல் வலந்தனள் அன்னை; அலைப்ப

சிலரும் = அம்பல்; பலரும் = அலர்
* சின்ன வட்டத்தில் கிசுகிசுக்கப்பட்டா = அம்பல் (கிசுகிசு)
* ஊரு முழுக்க உன் பேச்சு -ன்னா = அலர் (வதந்தி)

ஊரு முழுக்கப் பேசினாலும்,  சில பொம்பளைங்க மட்டும்,  ஒங்கம்மா காதுபடப் பேசிட்டாங்க…
ஒங்கம்மா  = சிறுகோல் வலந்தனள் அன்னை;  சிறு கோல் சுழற்றி அடிச்சாங்க!  ஆ! முருகா!

அலந்தனென்; வாழி தோழி; கானல்
புதுமலர் தீண்டிய, பூநாறு குரூஉச் சுவல்

அலந்தனென் = துன்பத்தால், ரொம்ப அலந்து போயிட்டேன் (அலண்டு போச்சி -ன்னு இன்றும் பேச்சு வழக்கு)
கானல் = உப்பங்கழி; அது பக்கமா புதுப் பூக்கள் பூத்து இருக்கு;
அங்கே குதிரை கட்டப்பட்டு இருக்கு;  சுவல் = பிடரி மயிர் மேல், பூவாசம்!

கடுமா பூண்ட, நெடுந்தேர் கடைஇ
நடுநாள் வரூஉம், இயல் தேர்க்

அந்தக் குதிரையைத் தேரில் கட்டி..
நடுநாள் = நள்ளிரவு வரும்போது,
ஒரு நாளுக்கு இரண்டு நடு = நள்ளிரவு, நண்பகல்

கொண்கனொடு – செலவு, அயர்ந்திசினால் யானே;
அலர் சுமந்து ஒழிக, இவ் அழுங்கல் ஊரே!

உன் கொண்கன் = கொண்டவனோடு,  செலவு = சென்று விடு!
நான் அயர்ந்து விடுகிறேன் (வெளியில் சொல்லாது விடுகின்றேன்)
இந்தூரு = அழுங்கல் ஊரு;  அழுவட்டும்!
அலர் சுமந்து ஒழிக = Rumor பேசிப் பேசியே, ஒழியட்டும் இந்த ஊரு!


டபராவில் காபி:

* காதலிச்சா என்பதற்காக ஒரு அம்மா, பெத்த பெண்ணை அடிக்கலாமா? அதுவும் கோல் கொண்டு? அதுவும் தோழிகள் பார்க்க?
* பொண்ணுங்க ஓடிப் போறதுக்கு முதல் காரணமே = காதலன் அல்ல!  பெற்றோர் தான்!  என்ன சொல்றீக?:)

dosa 10/365

Advertisements
Comments
9 Responses to “ஓடிப் போ தோழீ! ஒழிக ஊரே!”
 1. amas32 says:

  //* பொண்ணுங்க ஓடிப் போறதுக்கு முதல் காரணமே = காதலன் அல்ல! பெற்றோர் தான்! என்ன சொல்றீக?:)//
  முற்றிலும் உண்மை. பெற்றோர் சம்மதித்தால் அவர்கள் சம்மதத்தோடு திருமணம் நிகழும். இல்லாவிட்டால் ஓடிப் போய் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டிய சூழல் உருவாகிறது. காதலில் தீவிரமாக இருப்பவர்களுக்கு வேறு வழி கிடையாது.

  என் அனுபவத்தில் இரண்டு நிகழ்ச்சிகளை அருகில் இருந்து பார்த்துள்ளேன். இரண்டிலும் பெண்ணும் பிள்ளையும் பெற்றோர் சம்மதத்தை கேட்டனர். கிடைக்கவில்லை. பலமுறை மன்றாடிப் பார்த்தனர், சாதி, படிப்பு, அந்தஸ்து எல்லாம் தடையாக நின்றன. இரு சோடிகளுமே ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டனர். ஒரு சோடி ஓடிப் போய் திருமணம் செய்தது இருபத்தியெட்டு வருடங்களுக்கு முன், என் தோழி. இன்னொரு சோடி இரண்டு வருடங்களுக்கு முன். அது இன்னொரு தோழியின் மகள்.

  இரண்டு பெற்றோர்களுமே பெண்ணிடம் கடுமையாக நடந்து கொண்டனர். என் தோழி வேலைக்கு அனுப்பபடாமல் அறையில் பூட்டிவைக்கப் பட்டாள். திரைப் படங்களில் வருவது போல தப்பித்து வெளியே வந்து வடபழனி கோவிலில் திருமணம் செய்து கொண்டாள்.

  என் தோழியின் மகளை அவள் தாய் உடலால் துன்புறுத்தவில்லை ஆனால் மனதால் செய்தாள். அவள் தான் விருப்பபட்டவனை மணந்தால் தன்னை உயிரோடு பார்க்க முடியாது எண்டு மிரட்டி இருந்தாள். ஆனாலும் என் தோழியின் மகள் இரவு அலுவலகத்தில் வேலை என்று சொல்லி வீட்டிற்கு வராமல் மறு நாள் திருமணம் முடிந்து வீட்டிற்கு தகவல் கொடுத்தாள்.

  சங்க காலத்தில் இருந்து இந்நாள் வரை காலம் மாறவில்லை.

  காதலுக்காக அந்த இரு பெண்களும் பட்ட பாடு நான் அறிவேன்.

  amas32

  Like

  • என் சொந்தாக்காரப் பெண்ணொருத்தி, அவளுக்கு சாதியோ அந்தஸ்த்தோ கூட தடையாய் இருக்கவில்லை, அவள் காதலித்துவிட்டால் என்பது தான் தடையாய் இருந்தது. இருந்தாலும் அவளும் உடன் போகினால், குறை பிரசவத்தில் குழந்தை, இன்னும் பெற்றோர் சம்மதம் கிட்டாமல் மனதில் புழுங்கி சாகிறாள். பெண்கள் மீது இந்த சமூகம்(தமிழில் என்ன முருகா?) கட்டவிழ்த்து விடும் இம்மாதிரியான மென் வன்முறைகள் தீரவே தீராது! இத்தகைய மென்வன்முறைகள் பெண்களாலே பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் தான் காலத்துக்கும் பெண்களுக்கு துன்பம் தரக்கூடியது

   Like

   • சமூகம் /குடி = தமிழ்ச் சொல்லு தான் ரகு:)
    குடிப்பிறத்தல் = சாதி அல்ல!:)
    தூத்துக்குடி, இளையான்குடி, மன்னார்குடி, எட்டுக்குடி -ன்னு எத்தனை குடிகள், தமிழ் நிலத்தில்! அதெல்லாம் சாதியா?:)

    //அவள் காதலித்துவிட்டாள் என்பது தான் தடையாய் இருந்தது//

    நகர்ப் புறங்களில் இவ்வளவு ஒவ்வாமை இல்லை! பெற்றோர்களிடம் “எதிர்பார்ப்புகள்” இருந்தாலும், சரிசெய்து கொண்டு விடுகிறார்கள்;
    ஊர்ப் புறங்களில் கொஞ்சம் மாறணும்!
    பெற்றோர்கள், தங்கள் அன்புக்குப் “பிரதியாய்” = பிள்ளைகளின் மணவாழ்க்கை என்று “எதிர்பார்த்தலை” கடந்து வரணும்; புரிதலே முக்கியம்!

    பெற்றவர்களின் “சமூக அந்தஸ்து” = பிள்ளைகளின் திருமணத்தில் இல்லை!
    சமூகம் அப்படி ஆக்கி விட்டது:(
    பெற்றவர்களின் “அந்தஸ்து” = பிள்ளைகளைப் புரிந்து கொண்டு செலுத்தும் “மாறா அன்பில்” மட்டுமே!

    //குறை பிரசவத்தில் குழந்தை, இன்னும் பெற்றோர் சம்மதம் கிட்டாமல் மனதில் புழுங்கி சாகிறாள்//
    இவளுக்கு என் முருகன் துணை இருக்கக் கடவது!

    Like

   • பெற்றவர்களின் “அந்தஸ்து” = பிள்ளைகளைப் புரிந்து கொண்டு செலுத்தும் “மாறா அன்பில்” மட்டுமே!

    அது தாய்மையோ, காதலோ, நட்போ..
    ஆருயிர்த் தோழமையோ…
    அன்பு = மாறாது!
    எனக்கு மாறுதா? எத்தனைத் தலைக்குனிவிலும் மாறாது!

    பெற்றவர்களுக்கு “அந்தஸ்தை” விட “மனசு” வரவேண்டும்!

    Like

    • amas32 says:

     மனசு தான் முக்கியம் KRS. ஏதோ காரணங்களால் அந்த பறந்த மனம் வருவதில்லை. அவளின் மகளின் திருமணத்தை நடத்திக் கொடுக்குமாறு என் தோழியிடம் நான் எவ்வளவோ முறை பேசிப் பார்த்தேன். நடக்கவில்லை. கொஞ்சம் விட்டுக் கொடுத்திருந்தால் இன்னும் மகிழ்ச்சி பெருகியிருக்கும் :-)

     amas32

     Like

  • You are a gentleman (gentlewoman) ma:)

   இப்பல்லாம், பிள்ளைகள், பெற்றவர்களிடம் காதலைச் சொல்லப் பயப்படுவதில்லை!
   Atleast they try one attempt to tell them, and win them into their effort circle!
   Parents should come out of their “social status” stigma & try to help their own children!

   சில நல்ல பெற்றோர்கள், பிள்ளைகள் வயதுக்கு வரும் போதே, வீட்டில் காதல் பற்றி இயல்பாகப் பேசி, ஒரு நல்ல சூழலை உருவாக்குகிறார்கள்!
   இப்படியான பிள்ளைகள் “ஓடிப்” போவதில்லை! “ஓடி” வருகின்றனர்!
   அம்மா-அப்பாவின் கால்களைத் தேடி “ஒடி” வருகின்றனர் என்பதே உண்மை!

   Like

 2. ச்சும்மா ஒன்னும் ஓடிப்போக சொல்லல, இந்த தொழி! எதுனால ஒடனும்னு காரணம் சொல்றா? ஊர் முழுக்க உன்னை பத்தி இப்படி தப்பு தப்பா பேசுறாங்க, நீர்ல கல்லெறிஞ்சா எப்படி முடிவிலியா வட்ட அலை எழுமோ அது போல இந்த பொறாமை பிடிச்ச ஊர் பெண்களின் பேச்சு நிற்காமல் தொடர்ந்து கொண்டே இருக்கும்,

  அதுனால இவுங்க “பெர்மிசனுக்காக” நீ காத்து இருக்கிறது “வேஸ்ட்” சோ நீ ஓடி போயிரு! இங்க உள்ளதை நான் பாத்துக்குறேன்-ன்னு சொல்றா!

  Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: