முள்ளியிலும் பால்!

திருக்குறள் = Tweet என்றால், குறுந்தொகை = Twitshorter:) 4-8 Lines!

உணர்ச்சியின் ஊற்று அவ்ளோ தானே இருக்க முடியும்? கலவி எவ்ளோ நேரம் வேணுமானாலும் நிகழலாம்! ஆனால் இன்பத் துளிகள் அவ்வளவே= 4-8 lines:)
குறுந்தொகை & அதன் கவிஞர்கள் = வர்ணனை குறைவு, உணர்ச்சிக் கூர்மை!

London வாழ் நண்பர் @kans4u, சங்க இலக்கியத்தில் முற்பிறவிக் கதைகள் உண்டா? எனக் கேட்டிருந்தார்; இப்பாடல் “பிற்பிறவிக்” கதை!

அணில் பல் அன்ன, கொங்கு முதிர் முண்டகத்து
மணிக் கேழ் அன்ன, மா நீர்ச் சேர்ப்ப!
இம்மை மாறி, மறுமை ஆயினும்
நீ ஆகியர் என் கணவனை;
யான் ஆகியர் நின் நெஞ்சு நேர்பவளே!

திணை: நெய்தல்
துறை: பரத்தையை நீங்கி வரும் தலைவன்; அவனிடம் அவள் ஆற்றாமை
கவிஞர்: அம்மூவனார்
பாடல்: 49


டபராவில் காபி:

* கருநீல மணியின் வெளிர் வண்ணம் போல், நீர் படர்ந்து இருக்கும் கடல்!
* ஏய் கடலின் தலைவா…
* இந்தப் பிறவி போய், அடுத்த பிறவி வாய்த்தாலும்,
* நீயே என் கணவன், நானே உன் நெஞ்சுக்கு-நேர்பவள்!

காபி உறிஞ்சல்:

1) உங்க வீட்டுக்குள்ள அணில் ஓடி வந்திருக்கா?

அணிலின் “கொறிப் பல்லை” யாராச்சும் பார்த்து இருக்கீங்களா? ஆனா இந்தக் கவிஞர் நுட்பமாக் கவனிச்சி இருக்காரு! அதான் முள்ளிச் செடிக்கு உவமையாச் சொல்லுறாரு!

அணில் = கொறிக்கும் விலங்கு;  கடினமான கொட்டையைக் கூட இடுக்குல வச்சிக் கொறிச்சீரும்;
அதே போல் ரெண்டு ரெண்டா இடுக்கு (முள்) உள்ள, முள்ளிச் செடி…


2) சரீ, அதை எதுக்குய்யா இங்கிட்டுச் சொல்லணும்? “முள்ளியைக்” காட்டும் நோக்கம் என்ன?

முள்ளியிலும் பால், கள்ளியிலும் பால்…

நிலத்தின் சிறப்பே = “நெய்தல்” பூ தான்;
ஆனா “முள்ளி” தான் அவனுக்குப் பிடிச்சி இருக்கு!
அதான், தானும் “முள்ளி” ஆகி விட மாட்டோமா? -ன்னு ஏங்குறா!

என்னவொரு ஆழமான அகச் சான்று, இந்தக் கருப்பொருளில்? #சங்கத்தமிழ்டா !

கொங்கு முதிர் முள்ளி -ன்னு சொல்லுறாரு பாருங்க!  கொங்கு = தேன்; முதிர் = தளும்புதாம்!
பொதுவா, பூவில், ரொம்பத்  தளும்பாது; வண்டு உறிஞ்சித் தான் குடிக்கணும்!
ஆனா முள்ளியில், உறிஞ்சணும் -ன்னு அவசியமே இல்லாதபடி, “தளும்புது” = இப்போ புரியுதா பரத்தையின் தளும்பல்?:)
———————————–

3) அடுத்த பிறவியில், “நீ ஆகியர் என் கணவனை”-ன்னு சொன்னவ…
“நான் ஆகியர் உன் மனைவி”-ன்னு சொல்லலாம்-ல்ல? அதென்ன “நெஞ்சு நேர்பவளே”?

இப்பவும் அவ மனைவி தான்! ஆனா அவனோட நெஞ்சம் தான் வேற எங்கோ “முள்ளி”யிடம் போய் விட்டதே:(

ஒரு பெண்ணுக்கு இன்பம் எதிலே? = அவன் உடலா? அவன் உள்ளமா??
* நீயே என் கணவன் ன்னு சொல்லி = கற்பு
* நானே உன் “நெஞ்சு நேர்பவள்” ன்னு சொல்லி = களவு
கற்பு + களவு = இரண்டும் இருப்பதே பேரின்பம்!

“அவனே” -ங்கிற எண்ணம் எவ்ளோ இருந்தா…
“பரத்தையாப் பிறந்தாக் கூடப் பரவாயில்லை; ஆனா உன் நெஞ்சு நேரணும் நான்”…..
– ன்னு நினைச்சிருப்பா? முருகா:(

4) தமிழ்ச் சினிமாவில், “அடுத்த பிறவி” sentiment உள்ள பாடல்கள் உண்டு! பட்டியல் போடுங்க பார்ப்போம்:)

5) சேர்ப்பன் = கடற்கரை வாழ் மக்கள்! இன்னிக்கி Sherpa என்றால் வேற மக்கள்;

dosa 8/365

Comments
17 Responses to “முள்ளியிலும் பால்!”
  1. சொ.வினைதீர்த்தான் says:

    தங்கள் பதிவுகளைத் தொடர்ந்து படித்து வருகிறேன்.பருகப் பருகச் சுவை.
    முள்ளி படம் காணக் கொடுத்திருப்பது சிறப்பு.
    அன்புடன்
    சொ.வினைதீர்த்தான்.

    Like

    • நன்றி வினைதீர்த்தான்
      வினைதீர்த்தான் என்ற இறைப்பெயர், அழகு! குறிப்பிட்டு யாரையேனும் குறிக்கிறதா?

      முள்ளி படம் = தேடினேன்; எனக்கும் ரொம்ப பிடிச்சிப் போச்சி
      சென்னைக் கடற்கரை ஓரத்துலயே கூட முள்ளிச் செடி காணலாம்!

      Like

  2. கேட்டதை கொடுப்பவனே. . .கண்ணா கண்ணா, DOCHA வின் நாயகனே கண்ணா கண்ணா. . .!

    Like

  3. amas32 says:

    மறு பிறவியிலும், நீயே என் கணவனாக வரவேண்டும் அல்லது நீயே என் மனைவியாக வரவேண்டும் என்று உணர்ச்சிவசப்பட்டு சொல்வதெல்லாம் சரிதான். ஆனால் என் சந்தேகம், மறு பிறவியில் எல்லாம் மறந்த நிலையில் எதை உணரப் போகிறோம்? இந்தப் பிறவியிலேயே நல்ல வாழ்க்கை அமைய வேண்டும். A life with no regrets is the best life ever :-)

    ஆனால் இப்பிறவியில் நிறைவேறாத ஆழ் மன ஏக்கங்கள், பூர்த்தியாகும் ஒரு தருணம் அடுத்தப் பிறவியில் உண்டு என்ற நம்பிக்கை, இந்தப் பிறவியின் துன்பச் சூழலை சற்றே குறைக்கும் அருமருந்து தான்.

    அதே போல ஆழ்ந்த அன்புடைய தம்பதியினரும் அடுத்தப் பிறவியிலும் இந்த சொந்தம் தொடர வேண்டும் என்று நினைப்பது இந்தப் பிறவி உறவின் நெருக்கத்தை அதிகப்படுத்தும் காரணி ஆகிறது!

    // கரு நீல மணியின் வெளிர் வண்ணம் போல், நீர் படர்ந்து இருக்கும் கடல்!// பெண்களால் இந்த உவமையின் அழகை அதிகமாக உணர முடியும் :-) நீலக் கடலும் வெள்ளை நுரையும் கலந்த அந்த அழகை இந்த ஒரு வரி மணி மணியாக விளக்கி விடுகிறது:-)

    amas32

    Like

    • //இந்தப் பிறவியிலேயே நல்ல வாழ்க்கை அமைய வேண்டும். A life with no regrets is the best life ever :-)//
      Fantastic ma! One line says it all:)

      //ஆனால் என் சந்தேகம், மறு பிறவியில் எல்லாம் மறந்த நிலையில் எதை உணரப் போகிறோம்?//
      You cant prove மறுபிறவி scientifically
      But itz in peoples’ emotions! It works:) Motivational Medicine!
      இவள்: மோட்சம் வேணுமாடீ?
      கோதை: வேணாம்! எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு… அதுவே போதும்!:)

      Like

  4. //இம்மை மாறி, மறுமை ஆயினும்
    நீ ஆகியர் என் கணவனை;
    யான் ஆகியர் நின் நெஞ்சு நேர்பவளே!//

    பரத்தையை நீங்கி வரும் தலைவன்! எதற்க்காக ஒருத்தன் பரத்தையை நீங்கி மனைவியிடம் வருவான் ? உடல் சுகத்துக்கா? இல்லை, மனச்சுகம் வேண்டி. அதாவது செல்வத்தை பரத்தையிடம் இழந்துவிடுகிறான், அதன் பின்பு பரத்தைக்கு அவனிடம் என்ன வேலை? ஒருவேளை அவனை இகழ்ந்து மனதை காயப்படுத்திவிடுகிறாள் என்று வைத்துக்கொள்ளுங்கள், அப்போது அவன் அவளை நீங்கி மனைவியிடம் வருகிறான், இது மனைவிக்கு தெரிகிறது. அந்த மாதரசி, அவன் உள்ளத்தில் நம்பிக்கையை விதைக்கிறாள், எப்படி ? இந்த பிறவி போனாலும் சரி(ஏற்கனவே பாதி போய்டுச்சு,நீ என்னை விட்டு போய்ட்ட,ஆனா நான் உன்ன விடல) அடுத்த பிறவி வந்தாலும், (அப்போ உன்கிட்ட செல்வம் இருந்தாலும்,இல்லாவிட்டாலும்) நீயே என் கணவன். நானே உன் நெஞ்சு நேர்பவள்(அதாவது இந்த பிறவில என்னை விட்டு பிரிந்து எவளுக்கோ உன் மனசில இடம் கொடுத்த, அதை என்னால தாங்க முடில, அடுத்த பிறவில அந்த தவற செஞ்சிடாதே)

    என்ன சரியா முருகா?

    Like

    • amas32 says:

      நல்லா புரிகிற மாதிரி எழுதியிருக்கீங்க ரகு :-)

      amas32

      Like

      • சொ.வினைதீர்த்தான் says:

        மறு பிறவியில் எல்லாம் மறந்த நிலையில் எதை உணரப் போகிறோம்?

        ஆனால் இப்பிறவியில் நிறைவேறாத ஆழ் மன ஏக்கங்கள், பூர்த்தியாகும் ஒரு தருணம் அடுத்தப் பிறவியில் உண்டு என்ற நம்பிக்கை, இந்தப் பிறவியின் துன்பச் சூழலை சற்றே குறைக்கும் அருமருந்து தான்.

        அதே போல ஆழ்ந்த அன்புடைய தம்பதியினரும் அடுத்தப் பிறவியிலும் இந்த சொந்தம் தொடர வேண்டும் என்று நினைப்பது இந்தப் பிறவி உறவின் நெருக்கத்தை அதிகப்படுத்தும் காரணி ஆகிறது!

        மிகச் சிறப்பான கருத்துக்கள்.

        சொ.வினைதீர்த்தான்.

        Like

    • நீ சொன்னாச் சரியில்லாம இருக்குமா ரகு?:)
      //இந்த பிறவி போனாலும் சரி (ஏற்கனவே பாதி போய்டுச்சு)// – I am trying to hide my tears, after reading this line!

      Like

    • //செல்வத்தை பரத்தையிடம் இழந்துவிடுகிறான், அதன் பின்பு பரத்தைக்கு அவனிடம் என்ன வேலை?
      ஒருவேளை அவனை இகழ்ந்து மனதை காயப்படுத்திவிடுகிறாள் என்று வைத்துக்கொள்ளுங்கள்//

      பரத்தை பற்றி மட்டும் சில சொற்கள், ரகு!
      சங்கத் தமிழ், “பரத்தையை” இழிவாகப் பேசியதில்லை! தவறு = தலைவன் மீதே!

      அவன் ஒரு பரத்தையிடம் சென்றால், இவள் ஒரு பரத்தையிடம் செல்ல வேண்டியது தானே?
      ஆண் பரத்தைகள் சங்க காலத்தில் இல்லையா? இருந்தார்கள் = பரத்தன்!
      ஆண்கள் அப்படி-இப்படித் தான் இருப்பாங்க! பெண்கள் தான் புலம்பிக்கிட்டோ/ adjust பண்ணிக்கிட்டோ போகணும்-ன்னா சொல்லுது சங்கத்தமிழ்???
      —–

      * மருதத் திணை = பரத்தை பற்றிய பெரும் சுரங்கம்
      * மருதன் இளநாகனார், ஓரம் போகியார் = இவங்க ரெண்டு பேரும், சங்கத் தமிழ் வாழ்க்கையில், பலதும் பதிஞ்சி வச்சிருக்காங்க!
      = “ஓரம் போதல்”-ன்னே அதுக்குப் பேரு!

      சங்கத் தமிழ், “ஒழுக்கம்” என்பதை ஒரு தலையின் மேல் மட்டும் ஏற்றி வைக்கலை!
      கடவுளின் பேரால், பரம்பரை பரம்பரையாய் “தேவதாசி” ஆக்கி, எதையும் Institutionalize செய்யவில்லை!
      சங்கத் தமிழ், இந்த “மனப் போக்கை”, மனப் போக்காய் மட்டுமே பார்த்தது!
      எந்தத் தீர்வையும் திணிக்காமல், அவரவர் தீர்வுக்கு உதவி செய்தது!

      பெண், மனம் வெறுத்துப் போய், பரத்தையாய்ப் போன கதைகள் உண்டு!
      பரத்தை, அதீத காதலால், குலப்பெண்ணாய் மாறின கதை உண்டு!
      —–

      சங்கத் தமிழில் பரத்தையர் நிலையும் இது தான்!
      * இற்பரத்தை = அவனுக்கே!…-ன்னு வாழ்ந்த கற்புள்ள இற்-பரத்தைகளும் உண்டு!
      * நயப்புப் பரத்தை = அவனைப் போலவே சுதந்திரமாய்த் துணிந்து விட்ட நயப்புப்-பரத்தைகளும் உண்டு!

      ஆனா, No Institutionalization!
      பரத்தையிலும், அவனே! -ன்னு இருந்த இற்பரத்தை = பரத்தையின் “கற்பு”!
      இது கவிஞர்களைத் திகைக்க வைத்துள்ளது!

      Like

      • சொ.வினைதீர்த்தான் says:

        பாடலில் பரத்தையைப் பிரிந்து தலைவியிடம் தலைவன் வந்தபோது தலைவி கூறியது என்ற குறிப்பு எந்தச் சொல்லால் உணர்த்தப்படுகிறது.
        தொகுத்தவர்கள் கொடுத்த விளக்கமா?
        அன்புடன்
        சொ.வினைதீர்த்தான்.

        Like

        • சுவடிகளிலேயே இது உண்டு!
          திணை, துறை, கவிஞர் போன்ற குறிப்புக்கள்!

          ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு சூழல்; இந்தப் பாடலின் துறை = பரத்தையிற் பிரிதல், நீங்கியவழிப் பள்ளி
          சங்க காலக் கவிஞர்களே, இப்படியான Meter-இல் எழுதிக் குறித்தும் வைப்பது, அந்நாள் மரபு போலும்

          Like

  5. அடுத்த பிறவியினைப் பற்ரிக் கூட சங்க இலகியங்கள் பேசி இருக்கின்றன. நன்று நன்று – நல்வாழ்த்துகள் கேயாரெஸ் – நட்புடன் சீனா

    Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)