சங்கத் தமிழில் Emergency Mgmt!

அட, இன்னும் “Dosa”வில்,  புறநானூறு என்னும் Gentlemanஐப் பார்க்கவே இல்லீயே! இன்னிக்கிப் பாத்துருவோம்:)

* அகம் = internal
* புறம் = external

அக நானூறு = காதல் பத்தி பேசும்; புற நானூறு = உலகச் சேதி -ல்லாம் பேசும்!
சங்க இலக்கியத்திலேயே, புற நானூறு தான் over crowded, 150+ புலவர்கள்; அரசியல் பேசுதுல்ல?:)


Definition: Emergency Mgmt (EM) is a

1) strategic management process
2) used to protect critical assets/ services
3) from hazard risks that can cause disasters or catastrophes
4) and to ensure resiliency of the organization

5) BCP (Business Continuity Planning) is a part of this Process and
6) Backup is a tool employed in EM, with defined Risk Measurements!

என்னடா, சங்கத்தமிழ்-ல சம்பந்தமே இல்லாம ரவி உளறுகிறான் -ன்னு பாக்குறீங்களா?:)
Or, Oppice-இல் Market Risk Presentation எழுதும் போது, Window மாத்தி எழுதிட்டானோ? ன்னு எண்ணமா?:)
அல்ல!

2000 ஆண்டுகளுக்கு முன்பே, நெருக்கடி மேலாண்மை (Emergency Mgmt)
= சங்க கால மன்னர்களின் ஆட்சி முறை!
மன்னர்கள் மட்டுமல்ல; மக்களின் வாழ்விலும் எளிய EM கருவிகள் இருந்தன;
Stepney Tyre இருந்துச்சி-ன்னா பாத்துக்கோங்களேன்:)


அச்சு = Axle

Stepney Tyre = சேம அச்சு!

எருதே இளைய; நுகம் உணராவே
சகடம் பண்டம் பெரிது பெய்தன்றே
அவல் இழியினும், மிசை ஏறினும்,
அவண் அது அறியுநர் யார்? என, உமணர்

கீழ் மரத்து யாத்த, சேம அச்சு அன்ன,
இசை விளங்கு கவி கை நெடியோய்! திங்கள்
நாள் நிறை மதியத்து அனையை; இருள்
யாவணதோ, நின் நிழல் வாழ்வோர்க்கே?

திணை: பாடாண்
துறை: இயன்மொழி
கவிஞர்: ஒளவையார் – அதியமானின் மகன், பொகுட்டு எழினியைப் பாடியது
பாடல்: புறநானூறு 102


டபராவில் காபி:

* சில சமயம், காளைகள் நுகத்தில்  சரியாப் பூட்டப்படுவதில்லை = Operational Error
* சில சமயம், பண்டங்கள் மிகுதியா வண்டியில் ஏத்துறாங்க = Nonconformance to Specification
* வழியெல்லாம் பள்ளம் மேடு = Process Variables
* எப்போ, வண்டி புட்டுக்கும் ன்னு தெரியாதே! = Event of Default/ Disaster

* அதுக்குத் தான் இந்த உப்பு வணிகர்கள் (உமணர்),
கீழ் மரத்தில், இன்னோரு அச்சு: “சேம அச்சு” வச்சி, வண்டி கட்டுறாங்க!
*  மன்னா, நீயும் அதே போல, முன் கூட்டியே யோசித்து,
எதிர்பாரா இடர் வரும் முன்பே, உன் மக்களைக் காப்பாத்துறியே, வாழ்க!


காபி உறிஞ்சல்:

1) அதியமான் – ஒளவை நட்பு, யாவரும் அறிந்ததே! அவன் தந்த நெல்லிக் கனி மட்டும் உண்ணலை,  அவன் தரும் கள்ளையே குடித்தவர் நம் ஒளவையார்!
அவன் மகன் “பொகுட்டு எழினி”யைத் தான், இந்தப் பாடலில் பாடுறாரு! பல தலைமுறைகளைப் பார்த்து இருக்காரு போல!

2) சங்க கால ஒளவை வேறு!  விநாயகர் அகவல் பாடிய ஒளவை வேறு!
(சங்க காலத்தில் விநாயகர் எல்லாம் கிடையாது:)))

3) மொத்தம் 6 ஒளவையார்கள்!

* 2nd CE சங்க கால ஒளவை = அதியமான் நண்பர்
* அங்கவை – சங்கவைக்குத் திருமணம் செய்து வைத்த ஒளவை = இது கதை! அப்படியொரு ஒளவையே இல்லை! கபிலரே அந்தப் பாடுபட்டவர்
* 9th CE = விநாயகர் அகவல் பாடிய ஒளவை (சுந்தரர் – சேரமான் காலத்து ஒளவை)

* 12th CE = ஆத்தி சூடி, கொன்றை வேந்தன் எழுதிய ஒளவை
* 17th CE = பேய் விரட்டிப் பாடிய ஒளவை
* 18th CE = பந்தன் அந்தாதி பாடிய ஒளவை

4) அவல் = கீழே; மிசை = மேலே
(நீர் மிசை மூழ்கினான் -ன்னு சொல்லாதீக; மலை மிசை ஏறினான் -ன்னு சொல்லலாம்)

5) Disaster Recovery, Backup Continuity Plan (BCP)
– All these corporate buzz words today!
– But a simple backup theory = “சேம அச்சு” in Changa Tamizh!

6) திங்கள் நாள் நிறை மதியத்து அனையை;
இருள் யாவணதோ, நின் நிழல் வாழ்வோர்க்கே?

Can someone explain this beautiful உவமை?

dosa 7/365

Advertisements
Comments
10 Responses to “சங்கத் தமிழில் Emergency Mgmt!”
 1. “சேம அச்சு” என்ன அழகு. . .!
  //மதியத்து அனையை// –> அறிவும், ஞானமும் மிகுந்து உடைய. . . .
  //திங்கள் நாள் நிறை//—> ? சரியா பிடி படமட்டேங்குது. . .wild guess–> (1) மாசம் முழுக்க :-)) (2) பௌர்ணமி போன்று மதியத்து அனையை. . .?

  Like

  • ha ha; good & almost correct guess:)
   திங்கள் = நிலவு
   நாள் நிறை மதியம் = முழுநிலவு (பெளர்ணமி)
   Moon is a “backup” battery from Sun – Right?:)
   நிலவு வெளிச்சமும் குடுக்கும், சுட்டும் எரிக்காது; அது போல இந்த மன்னன் இருக்கானாம்!

   இருள் யாவணதோ, நின் நிழல் வாழ்வோர்க்கே?
   = உன் நிழலில் வாழ்பவர்கள் (குடி மக்கள்)
   நிழலில், வெளிச்சம் இருக்கும், அதே சமயம் கொளுத்தாது அல்லவா? அதான்!

   Like

 2. amas32 says:

  என்ன அழகான பாடல்! ஆணின் அறிவு தான் பெண்ணை மயக்கும், அழகோ பணமோ அல்ல :-) ஆதலால் gentleman introductionக்குச் சிறந்த பாடல் தேர்வு :-)

  எல்லாவித சூழ்நிலைகளையும் சமாளிக்க ஆண் மகன் தயாராக இருக்க வேண்டும். இன்று பெண்ணும் அப்படியே. முன்பு பெண்கள் ஆண்களைச் சார்ந்து இருந்தனர். இன்று மாறி வருகிறது காலம். ஆனால் இன்றும் மாறாமல் இருப்பது அரசைச் சார்ந்து இருக்கும் மக்களின் நிலை.

  அதனால் அரசன் மக்களுக்கு எல்லா சூழ்நிலைகளிலேயும் நல்ல முறையில் பாதுகாப்பு அளிக்க தயார் நிலையில் இருக்க வேண்டியது மிக மிக அவசியம்.
  தற்போது நம் குடியரசு ஆட்சி முறையில் அரசாங்கத்திற்கும் அதனை தலைமை பொறுப்பு ஏற்று நடத்தும் ஆட்சியாளருக்கும் இந்த முக்கிய பொறுப்பு உள்ளது.

  ஔவ்வையார் கூறியதை படித்திருப்பார்களா? சந்தேகம் தான்!

  amas32

  Like

  • //ஆணின் அறிவு தான் பெண்ணை மயக்கும், அழகோ பணமோ அல்ல :-)//
   அப்படியா-ம்மா? You sure?:) I also wanna try; அதுக்குத் தான் கேக்குறேன்:))

   Like

 3. எல்லாத்துக்கும் backup அப்பவே யோசிச்சு இருக்காங்க! தமிழ் சுவைக்கச் சுவைக்க எப்பேற்பட்ட ருசி! பகிர்ந்து கொண்ட கண்ணனின் நல்ல மனம் வாழ்க!

  Like

  • //தமிழ் சுவைக்கச் சுவைக்க எப்பேர்பட்ட ருசி//
   உண்மை-க்கா!
   சில ருசிகள் அடங்குவதேயில்லை! உண்ணும் போது மட்டும் ருசி அல்ல;
   உண்ணும் முன்னரும் ஏக்க ருசி; உண்ட பின்னரும் ஏக்க ருசி… இதுவொரு காதல் ருசி:)

   Like

 4. // இருள்
  யாவணதோ, நின் நிழல் வாழ்வோர்க்கே? //

  இருள் இருக்குமா? உன் நிழலில் வாழ்வோர்க்கு? எவ்ளோ சிறப்பா அதோட ஆழ்ந்த பொருள் தரும் வரிகள். நிழல் என்பதே வெளிச்சம் மறைக்கப்படுவதனால் எழும் இருள் தான்? ஆனால் அந்த இருள் சுடாது, அதே நேரம் இருளவும் இருக்காது.. செம…

  உப்பு வண்டி ஏத்துற ஆளுங்க, சக்கரம் உடஞ்சா சரக்கு வீனாப்போயடும் என்பதற்கு இன்னொரு “ஸ்டெப்னி” சக்கரம் வச்சிப்பங்க. அவ்ளோதான் கதை, இதுக்குள்ள எவ்ளோ தத்துவம்.. ஆனா நாம இதெல்லாம் கத்துக்க மாட்டோம் “DALE CARNEGIE ” நிறுவனத்துல ஆயிரக்கணக்குல பணத்தை கட்டினோம்னா “DO NOT PUT ALL YOUR EGGS IN SAME BASKET ” ன்னு வாழை பழத்தை உரிச்சு நசுக்கி வாயில திணிச்சு குடிக்க தண்ணியும் கொடுப்பாங்க … அதை படிச்சிட்டு அறிவிஜீவி ஆகிட்டதா நாமலே நினைச்சிப்போம். நம்ம இலக்கியங்கள்ள சொல்லப்பட்டிருக்கும் சேதிகள் நிறைய இருக்கு, நாம எப்புடி INTERPRET பண்ணிக்கிறோம் என்பதில் தான் எல்லாம் இருக்கு ….

  Like

  • amas32 says:

   //நாம எப்புடி INTERPRET பண்ணிக்கிறோம் என்பதில் தான் எல்லாம் இருக்கு ….// அதற்கு நம் அறிவுத் திறனும் அனுபவமும் தான் கைக்கொடுக்கும்.

   amas32

   Like

  • Cool Comment!
   //நிழல் என்பதே வெளிச்சம் மறைக்கப்படுவதனால் எழும் இருள் தான்?
   ஆனால் அந்த இருள் சுடாது, அதே நேரம் இருளவும் இருக்காது.. செம//
   You have the same pattern as me:)

   Like

 5. அன்பின் கேயாரெஸ் = மேலாண்மை அதுவும் நெருக்கடி மேலாணமை – அக்காலத்திலேயே விளக்கப்பட்டிருக்கிறது. இதனையே

  // உப்பு வண்டி ஏத்துற ஆளுங்க, சக்கரம் உடஞ்சா சரக்கு வீனாப்போயடும் என்பதற்கு இன்னொரு “ஸ்டெப்னி” சக்கரம் வச்சிப்பங்க. அவ்ளோதான் கதை, இதுக்குள்ள எவ்ளோ தத்துவம்.. ஆனா நாம இதெல்லாம் கத்துக்க மாட்டோம் “DALE CARNEGIE ” நிறுவனத்துல ஆயிரக்கணக்குல பணத்தை கட்டினோம்னா “DO NOT PUT ALL YOUR EGGS IN SAME BASKET ” ன்னு வாழை பழத்தை உரிச்சு நசுக்கி வாயில திணிச்சு குடிக்க தண்ணியும் கொடுப்பாங்க … அதை படிச்சிட்டு அறிவிஜீவி ஆகிட்டதா நாமலே நினைச்சிப்போம். நம்ம இலக்கியங்கள்ள சொல்லப்பட்டிருக்கும் சேதிகள் நிறைய இருக்கு, நாம எப்புடி INTERPRET பண்ணிக்கிறோம் என்பதில் தான் எல்லாம் இருக்கு ….// ( ரகுவினிற்கு நன்றி )

  அவ்வையார் அறுவர் …. இது எனக்குப் புதிய செய்தி

  பதிவு நன்ற் நன்று –

  நல்வாழ்த்துகள் கேயாரெஸ் – நல்வாழ்த்துகள் ரகு – நட்புடன் சீனா

  Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: