sollunga or chollunga?

தொல்காப்பியம்
= நம் கைக்குக் கிடைக்கும் தமிழ் நூல்களில், இதுவே மிகப் பழமையான நூல்!

இன்னிக்கி youtube  காணொளிகள் இருக்கு! பல செய்முறை விளக்கங்களைப் பாக்குறோம்;
* “ஜ”ட்டி போடுவது எப்படி?:)
* டை கட்டுவது எப்படி?
* சிக்கன் சமைப்பது எப்படி?

ஆனா, ஒரு video-உம் இல்லாம, 2000+ years back…
தமிழ் எழுத்துக்களை ஒலிப்பது (உச்சரிப்பது)  எப்படி? ; தொல்காப்பியர் சொல்லிக் குடுக்குறாரு!
இன்னிக்கிப் பார்க்கலாமா? ச-வை ஒலிப்பது எப்படி?…  = Sollunga or Chollunga?:)

க கார ங காரம் முதல் நா அண்ணம்
ச கார ஞ காரம் இடை நா அண்ணம்
ட கார ண காரம் நுனி நா அண்ணம்

(நூற்பா: தொல். எழுத்ததிகாரம்: பிறப்பியல் 89-91)


டபராவில் காபி:

தொல்காப்பியர் “cholli” குடுக்கறாரு!:)

எனக்கு, என் தோழன் இராகவன் தான் cholli குடுத்தான்;
அவன் தொல்காப்பியம் எல்லாம் காட்டலை;
ஆனா.. “அதான் தெக்கத்தி வழக்கம்; U better follow it”-ன்னு உத்தரவு:)

அவன் பால் எனக்கு எப்பமே முருகார்ந்த நம்பிக்கை;
அது நாள் வரை, sollunga ன்னு சொல்லிக்கிட்டிருந்த நான்… அவனுக்காக chollunga -வை அப்படியே ஏற்றுக் கொண்டேன்:)

அப்பறம் ரெண்டு வருசம் கழிச்சித் தான்..
தொல்காப்பியம் படிச்ச போது, அதை உறுதி செஞ்சிக்கிட்டேன்; Dank u Ragava!:)


காபி உறிஞ்சல்:

1) நாக்கு = Tongue
அண்ணம் = Palate (Roof of Mouth)

* ககார ஙகாரம் முதல் நா அண்ணம்
கங = அடி நாக்கு,  அடி அண்ணம் தொடப் பிறக்கும்

* சகார ஞகாரம் இடை நா அண்ணம்
சஞ = இடை நாக்கு, இடை அண்ணம் தொடப் பிறக்கும்

டகார ணகாரம் நுனி நா அண்ணம்
டண = நுனி நாக்கு,  நுனி  அண்ணம் தொடப் பிறக்கும்

ஒங்க வாய்க்குள்ளயே செஞ்சிப் பாருங்க!
= middle of  Tongue, should touch, middle of Roof
= cha வருதா? sa வருதா?:)
பக்கத்துல யாரும் இல்லாத போது செய்யுங்க,  பயந்துறப் போறாக:))


2)  இதே போல, ண-ந-ன ஒலிப்புக்கும் சொல்லி இருக்காரு! இன்னொரு நாள் பார்ப்போம்!
You yourself can try= “கண்ணன் கந்தன் பொன்னி”

3) வடமொழி & கிரந்தக் கலப்பால்.. பல தமிழ்ச் சொற்கள், Cha இழந்து, Sa ஆகி விட்டன!
ஸ, ஶ
ஸதாபிஷேகம், ஶரஸ்வதி என்ற ஒலிப்புகள்…
சதாபிஷேகம், சரஸ்வதி  என்று ஆனதால்…
அதே Style-இல்… தமிழ்ச் சொற்களும் Sa சேர்ந்து விட, Cha போயே போச்:(


4) அப்போ, இசை = Ichai -ன்னு சொல்லணுமா? இதுக்குன்னே இருக்கும் சில குசும்பர்கள் கேட்கலாம்:))
= அல்ல!  இசைIsai தான்!

மொழி முதல் &  மெய்யெழுத்தோடு ஒற்றி வரும் “ச” தான் = Cha ன்னு ஒலிக்கும்;
பிற இடங்களில்,  அந்தந்த இடங்களுக்கு ஏற்றவாறு ஒலிக்கும் ஓசை நெகிழ்வு தமிழுக்கு உண்டு;

* cha = வல்-ஒலி = chennai, chedi
* sa = உரசல்-ஒலி = isai, kaasu

ஓசை நெகிழ்வு:
க”ந்தன் – அரங்”க”ன்!
= அதே “க” தான்!  ஆனா எப்படிச் சொல்லுறோம்?
= ka-ந்தன், அரங்-ga-ன் சொல்லுறோம்-ல்ல? இனவெழுத்தின் (கங) ஓசை பெற்று வரும்;

Rule of Thumb:
a) மொழி முதல்= chennai, chokkan, chollunga; (Not sennai, sokkan, sollunga)
b) மொழி இடை, ஒற்றோடு வந்தால் = கூ”ச்ச”மாய் (Not koosa-maai) ; ஒற்று இல்லாமல் = பூசினான் (Not poochinaan)
c) மொழி இறுதி, ஒற்றோடு வந்தால் = இ”ச்சை” (Not ith’sa’i) ; ஒற்று இல்லாமல் = இ”சை” (isai, Not ichai)
d) அயல் மொழிச் சொற்கள் = சப்வே(subway); சந்தேகம்(santhegam)

———————

தரவுகள் தெரியாமல் இருப்பது வேறு;  ஆனால் தெரிந்த பிறகும் ???…
நம் பிடித்தங்களை விடமுடியல மனசுக்கு:) தரவுகளைக் கேலி பண்ணி, கும்மியடிச்சி…
பேசாம, நம்ம பிடித்தத்தையே இலக்கணமா ஆக்கீட்டா என்ன?:))
நானும் ஒரு காலத்தில், “sollunga” ன்னு சொல்லிக்கிட்டு இருந்தவன் தான்;  ஆனா இப்போ?…..

Surely, we can have our own conveniences! But we CANNOT bend Tamizh to our own conveniences;
If so, everybody will bend it to their own wish, & Standardization would be lost:)
———————

ஒடனே சப்வே = Chubway ன்னு கிளம்பீறாதீங்க:)
இவ்விதிகள் தமிழ்ச் சொற்களுக்கு மட்டுமே! (தொல் – நூற்பா); தனித்து நிற்கும் பிறமொழிச் சொல்லு  மேலெல்லாம்,  தமிழ் தன்னோட விதியை ஏற்றாது;
Tamizh is Very Democratic! It has never “imposed” on any other language!!

Silicon;  தமிழில் “ஸி”லிகான் இல்லாததால் = சிலிகான்
எழுத்து வடிவம் இல்லாததால் அப்படி; அதுக்காக ஓசை மாற்றிடக் கூடாது; Chilicon, Chubway அல்ல:))


5) sokkan or chokkan? = cho-க்கன் ன்னு தான் அவரே சொல்லுவாரு!
sennai or chennai? = ch-ன்னை தான் சொல்லுவோம்!
same logic applies to senthil / chenthil? :))

ha ha ha! அதெல்லாம் முடியாது;
se-ந்தில் ன்னே பழகீட்டோம்:) மாத்தக் கடினமா இருக்கு!

பரவாயில்லை; பெயர்ச் சொற்களுக்கு விலக்கு அளித்து விடலாம் (இது என் தனிப்பட்ட கருத்து மட்டுமே)
தனி மனித உரிமைகளைத்,  தமிழ் மதிக்கணும், என்ற கொள்கை உடையவன் நான்;
தனிப்பட்ட பெயர்களின் உரிமை = அந்தந்த நபர்களுக்கே!

வெறும் பெயர்ச் சொற்களால் (ஸ்டாலின், ஐகாரஸ்) மொழியியலுக்குப் பயனில்லை!
ஆனா, பெயர்ச் சொல் அல்லாத சொற்கள்… (தஸ்தாவேஜ் = ஆவணம்; ராஜினாமா = விலகல்)
இவையே மொழிக்கு வளஞ் சேர்ப்பவை; அதில் தான் நம் கவனமும், ஆர்வமும் தேவை!  என்ன cholReenga?:)


சுந்தர மூர்த்தி நாயனார் = “Chundara” Murthy
-ன்னு தான், தமிழ் வளர்க்கும் சைவத் திருமடமும் சொல்கின்றது!  இங்கிட்டுப் போய்ப் பாருங்க:)

chenthil = மிகத் தொன்மை வாய்ந்த தமிழ்ப் பெயர்
* சேந்தன் + இல் = செந்தில்
* சேந்தன் = தமிழ்க் கடவுளான முருகன்;
உயிர்களுக்குச் “செம்மை” செய்வதால் = செந்தன்->சேந்தன் (செம்மை = Goodness)
செம்-சேம் (ஆதி நீடல்); செவ்வடி-சேவடி

Chenthil -க்கு நேரடிப் பொருள் = சேந்தன் அகம்/ Goodness Heart
செந்தன்-சேந்தன் = Goodness; இல் = அகம்/Heart
“Sacred Heart” -ன்னு மரியன்னையைச் சொல்லுறோம்-ல்ல? அதே போல Goodness Heart = Chenthil!
முருக மனசு -ன்னு நினைக்கும் போதே ரொம்ப நல்லா இருக்கு-ல்ல?:)

செந்தில்= அவன் ஊரான செந்தூருக்கும் ஆகி வந்தது;  அதுவும் சேந்தன் இல்லம் தானே?
* “சீர்கெழு செந்தில்” என்பார் இளங்கோ!
* அருணகிரி, ஒரு படி மேலே போய், பெருமாளின் பெரும்பதமே= செந்தில் என்பார்; “பரமபதமான செந்தில்”

என்ன cholReenga?
என்ன Chenthil பாக்குற? வர்ட்டா?:)

dosa 6/365

Comments
23 Responses to “sollunga or chollunga?”
  1. amas32 says:

    cholli cholli paarkkaiyil chenthil endru koopituvathe inimaiyaaka ullathu :-) Loved today’s lesson,thank you :-)

    amas32

    Like

    • Sevappunnu நினச்சேன் ஆனா அது Chevappu.! ஊர்ல தாத்தா பாட்டில்லாம் அப்டித்தான் சொல்லுவாங்க.. “உங்க அம்மா Chinna வயசுல நல்லா chekka Chevelnnu இருப்பான்னு ..கிராமத்துகாரவுங்க எப்போதுமே மொழியை செரியாத்தான் பலுக்குறாங்க..மொழியியல் தெரியாட்டினாலும்… நம்ம படிச்சவங்கதான் பேச்சு பேசிகிட்டு மொழியை ஆரயிறேன் பேர்வழின்னு கொதறி வச்சிடுறாங்க..

      என்னுடைய முன்னாள் “பாஸ்”(மலையாளி) ஒரு முறை தமிழ் மொழி பத்தி கொஞ்சம் குறைபட்டுகிட்டார். உங்க மொழி இடத்துக்கு தகுந்த மாதிரி அதிகம் நெகிழ்வு தன்மை கொண்டிருக்கு, புதுசா கத்துக்கிறவங்களுக்கு சிரமன்னு சொன்னார், உதாரணமா திவ்யராஜன் ல வரும் “தி”யும் திருச்சி-ல வரும் “தி”யும் ஒரே எழுத்து தான் ஆனா மாத்தி மாத்தி பலுக்குறீங்கன்னு சொன்னார்.இதே மத்த திராவிட மொழிகளாகட்டும், வட மொழியாகட்டும் நாலு “த” இருக்கு…. அப்போ எனக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரில.

      Like

      • //கிராமத்துகாரவுங்க எப்போதுமே மொழியை செரியாத்தான் பலுக்குறாங்க//
        Exactly:)
        தொல்காப்பியம் படிக்கலீன்னாலும், வாழையடி வாழையா அது வந்துக்கிட்டுத் தான் இருக்கு!
        நாம தான், Style/ Sanskrit ங்கிற பேருல, தப்புத் தப்பா உள்ள சேத்துக்கறோம்:)

        //முன்னாள் “பாஸ்”(மலையாளி) ஒரு முறை தமிழ் மொழி பத்தி கொஞ்சம் குறைபட்டுகிட்டார்//

        :))
        தமிழ் – ஆங்கிலம் எல்லாம் அதிக நெகிழ்வுத் தன்மை கொண்டவை தான்! Not like Sanskrit – ka, kha, ga, gha, na
        தமிழை அப்படிச் சொல்லும் ஒங்க மேலாளர், ஆங்கிலத்தையும் சிறிது பார்க்கட்டுமே:)
        * object = அப்ஜெக்ட்; object = ஒப்ஜெக்ட்
        * sea = ஸீ ; sea = ஸீ
        இதெல்லாம் என்ன?:) ஆங்கிலம் பிரபலமாகவில்லையா, இல்ல, அது குறையுடய மொழியா?:))
        box = boxes; ox = oxen
        I can tell more & more, both from sound & grammar rules also!:)

        Like

      • மொழி = 100% எழுதி ஒட்டினாற் போல இருக்க முடியாது; இருக்கவும் கூடாது;
        நெகிழ்வு இருக்கணும்; இல்லீன்னா எந்திரம் போல ஆயீரும்!:)

        குழந்தை போலத் தான்..
        முதல்ல அம்மா-அப்பா ன்னு பழகணும்; அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா மொழிச் சாயலை அணுகணும்;
        அப்படி அணுகும் போது “தி”ருச்சி-க்கும் – “தி”வ்யா-க்கும் வேறுபாடு தானே தெரியும்;

        இப்படி இலகுவா இருந்தாத் தான் ஓட முடியும், பந்தயத்தில்!
        அதான் ஆழ்வார், தமிழை, “முந்து தமிழ்” -ன்னாரு!
        ka, kha, ga, gha -ன்னு ஒவ்வொன்னுத்துக்கும் மூட்டை தூக்கிக்கிட்டு அலைஞ்சா.. மூச்சு தள்ளும்!:)

        வேதம் படிச்சா மூச்சு வாங்குதாம்:) ஒரே சிக்கல்- புரியக் கடினமா இருக்காம்! நான் சொல்லலை, ஆழ்வார் சொல்றாரு; திட்டுறது-ன்னா அவரைத் திட்டுங்கோ:))
        தமிழில் திருவாய்மொழி – திராவிட வேதம் படிச்சித் தான் புரியவே புரிஞ்சிச்சாம்
        “செய்யதமிழ் மாலைகள் யாம் தெளிய ஓதி
        தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே”
        ——————————-

        Even software languages have this flexibility;
        You can have SUM function as Sum(a,b) or Sum (a,b,c)
        They call it function overloading; You shd not “hardcode” all functions:)
        I am not a software guy, juz a financials guy; Pardon me if I said something in error:)

        Like

    • Glad u liked it-ma:)
      Esp between lovers or husband-wife, hey chenthil, chollu da -ன்னும் போது கொஞ்சுறாப் போலவே இருக்கு-ல்ல?:)

      Like

      • Amirtha says:

        இரவி, நீங்க KannabiRaana இல்லை GannabiRaana, சும்மா ஒரு சந்தேகம் தன்?

        Like

        • என்ன அமிர்தா, வம்பு பண்றீங்க?:)
          Gunண பிரான் அல்லன்; kaNNaபிரான் தான்:)
          வாழ்வு ஈந்து, வாழ்வுக்குக் கண் ஈந்து நிற்கும் “கண்”ணன் = கண்ணபிரான் = அப்பா திருவேங்கடமுடையான்!

          Like

  2. சரியாச் சொன்னீங்க.

    எனக்குச் சில சந்தேகங்கள்.

    > டகார ணகாரம் நுனி நா அண்ணம்

    நாம் டகார ணகாரங்களை, நுனி நாக்கு சுருண்டு இடை அண்ணத்தைத் தொடுமாறு ஒலிக்கின்றோம். இது தொல்காப்பியத்தின்படி இடிக்கின்றதே. அல்லது, என் புரிதல் தவறா ?

    >அணரி நுனி நா அண்ணம் ஒற்ற
    > றஃகான் னஃகான் ஆயிரண்டும் பிறக்கும்
    > நுனி நா அணரி அண்ணம் வருட
    > ரகார ழகாரம் ஆயிரண்டும் பிறக்கும்

    இந்தத் தொல்-12,13ன் படி ரகாரம் அண்ணம் வருடவும், றகாரம் அண்ணம் ஒற்றவும் பிறக்கவேண்டும். ஆனால், றகாரத்தை நாக்கு அண்ணத்தை வருடுமாறு நாம் இப்போது ஒலித்துக்கொண்டிருக்கிறோம்.

    ?

    Like

    • //நாம் டகார ணகாரங்களை, நுனி நாக்கு சுருண்டு//
      //இது தொல்காப்பியத்தின்படி இடிக்கின்றதே//

      அல்ல! சுருள எல்லாம் கூடாது! சுருள் என்று தொல்காப்பியர் சொல்லலையே!
      இங்கே ரெண்டு நுனி இருக்கு = நாக்கு நுனி, அண்ண நுனி (பல்லுக்குச் சற்று முன்பு)
      அங்கே “பொருந்துவதால்” = டண

      //ஆனால், றகாரத்தை நாக்கு அண்ணத்தை வருடுமாறு நாம் இப்போது ஒலித்துக்கொண்டிருக்கிறோம்//

      அல்ல! இங்கே ஒரே நுனி தான் = நுனி நா
      அண்ணம் “ஒற்றணும்”
      எப்படி? = அணரி + ஒற்றணும்! அணர்தல் = மேல் எழுந்து விரிதல்!
      * றன = கற்றான், மன்னன் = நுனி நா, மேல் எழுந்து, அண்ணத்தில் விரிந்து, “ஓற்றுது” அல்லவா?
      * ழர = அழகு, அரங்கன் = நுனி நா, மேல் எழுந்து, அண்ணத்தில் விரிந்து, “வருடுது” அல்லவா?

      Like

      • ஒருவேளை, என் உச்சரிப்பு தப்போ.

        நான் ட வை, நுனி நாக்குச் சுருண்டு, இடை அண்ணம் ஒற்ற உச்சரிப்பேன். ஆங்கில tea தான் நுனி நா, நுனி அண்ணத்தை பொருந்த வருகிறது.

        அதே போல், நுனி நா, நுனி அண்ணத்தில் பொருந்தினால் ந கரம் தான் வருகின்றது. ண கரம் நாக்குச் சுருண்டால்தான் வருகின்றது.

        Like

  3. இன்னொன்று.

    dosaனா என்ன ? :-)

    Like

  4. ரவி அப்போ நம்ம ப்ளாக் பேரு இனிமே (D)hinam (O)ru (Cha)ngaTamil. . .!அக்கார்டிங் டு அவர் அப்பிரிவேசன் ரூல்ஸ் DOCHA னாக்கும் வரணும்.? என்ன நான் Cholrathu ?

    Like

    • You are absolutely correct, kans:)

      சொக்கன், இந்தத் தளத்துக்கு ஒரு சுவையான பேரை முன்னமே உருவாக்கிக் குடுத்து விட்டதால் = Dosa ன்னே தங்கிப் போச்சு:)
      ஆனால், Changa Tamizh என்ற ஒலிப்பே சரி!

      Like

  5. ரொம்ப நல்லா choல்லிக் குடுக்கறீங்க! ரசிச்சுக் குடிச்சேன் :) நன்றி கண்ணா.

    Like

  6. ranjani135 says:

    // கொஞ்சம் கொஞ்சமா மொழிச் சாயலை அணுகணும்;
    அப்படி அணுகும் போது “தி”ருச்சி-க்கும் – “தி”வ்யா-க்கும் வேறுபாடு தானே தெரியும்;//
    தும்கூரில் ஒரு பள்ளியில் வேலை பார்த்தபோது பள்ளி முதல்வர் ‘தமிழ் மிகவும் முன்னேறிய மொழி, அதனால் எங்கள் மொழிகளைப் போல 4 க, த, இல்லை; தேவையும் இல்லை’ என்றார் ஒருமுறை.
    சரி (chari or sari?)
    பெங்களூரில் இருந்து சென்னை போகும்போது வேலூரில் நுழைந்து charavana பவன் எங்கே? என்று கண்ணில் பட்டவர்களைக் கேட்டேன். என் கணவர் சரியாச் chollu அது saravana பவன் என்றார். எது சரி?
    படிக்க (நகை)ச்சுவையாகவும், சிந்திக்கும்படியும் இருக்கிறது உங்கள் பதிவு!
    இனிமேல் தினமும் dosa சாப்பிட வருவேன்!

    Like

    • //தமிழ் மிகவும் முன்னேறிய மொழி, அதனால் எங்கள் மொழிகளைப் போல 4 க, த, இல்லை; தேவையும் இல்லை’ என்றார்//
      :))
      அனைத்து மொழிகளும் நன்மொழிகளே! ஒவ்வொன்றுக்கும் ஒரு மரபு உளது! தமிழ் மரபு தனி மரபு!

      //charavana பவன் எங்கே?//
      இவ்விதி தமிழ்ச் சொற்களுக்கு மட்டுமே! வடமொழிச் சொற்களுக்கோ, ஆங்கிலத்துக்கோ அல்ல!:)
      எனவே chilicon அல்ல, silicon தான்!
      charavaNa bhava அல்ல, saravaNa bhava தான்:)
      கோரைப்புல்= சரவணம் (வடமொழியில்)

      Like

  7. அன்பின் கேயேரெஸ் – இப்ப எல்லாம் அறிவியல் முன்னேற்றம் – உள்ளாடைகள் உடுத்துவதெப்படி – படக்க்காட்சி. ஆனால் அக்காலத்திலேயே – தொல்காப்பியம் உச்சரிப்புகளைச் சொல்லிக் கொடுத்திருக்கிற்து. நல்லதொரு பதிவு – நல்வாழ்த்துகள் கேயாரெஸ் – நட்புடன் சீனா

    Like

  8. Thenn says:

    Reblogged this on As you Name It and commented:
    Informative…

    Like

  9. iku2e says:

    nalla karuththu..ellam chennaikarange panna velainga..namma aalunga chennai pona odane tamizh cheththu pochchu.

    Like

Trackbacks
Check out what others are saying...
  1. […] சேந்தன் + இல் = செந்தில் (விளக்கம்: இப்பதிவில் காண்க! வாரியார் பொழிவும் […]

    Like



Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)