நற்றிணை: மடையா முருகா!:)

My own Murugan with Shirt-Pant & Vel:)

“Dosa” ஆரம்பிச்சி, தமிழ்க் கடவுளாம் முருகனை இன்னும் இடலையே -ன்னு  ஒரு  மனக்குறை! அதான் “மடையா முருகா” -ன்னு இந்த நற்றிணைப் பாட்டு:)

இப்பிடி இவனைத் திட்டுறது யாரு? = நானாக் கூட இருக்கலாம்! :)
என்னவனைத்  திட்டுவதும், கொஞ்சுவதும், “ங்” ன்னு கடிப்பதும்… Sooo Sweet da:)

டபராவில் காபி:
சூழல்: தலைவன் தலைவியைக் கை விட்டுட்டானா? முன்பு போல் பேசறதில்லை; பார்க்க வருவதில்லை!
அவள், மிகவும் சுருங்கிப் போய்த், தனிமையில் வாடிக் கொண்டு இருக்கா..

ஆனா, அம்மாக்காரிக்கு இவ மனசு புரியலை! தம் பொண்ணு பிச்சி ஆயிட்டாளோ? இவ மேல முருகு எனும் ஆவி இறங்கிருச்சோ? -ன்னு நினைக்குறா!
உடனே, வெறியாடி (எ) பூசாரியைக் கூப்பிட்டு, முருகனுக்குப் பூசை வைக்கிறா = வேலன் வெறியாடல்!

பூசாரியும், ஏதோ குறி சொல்லுறாப் போல, வெறியாடிச் சொல்ல, இதையெல்லாம் பார்க்கும் தோழிக்குக் கோவம் கோவமா வருது!
காதலைப் புரிஞ்சிக்காம, பூசாரி தான் ஆடுறான்-ன்னா…
முருகா, உனக்கு எங்கே போச்சி புத்தி? “மடவை முருகா” = மடப்பயலே முருகா ன்னு திட்டுறா:)


திணை: குறிஞ்சி
துறை: வேலன் வெறி – விலக்கல்
கவிஞர்: பிரமசாரி
பாடல்: நற்றிணை 34

கடவுள் கல்சுனை , அடை இறந்து அவிழ்ந்த
பறியாக் குவளை மலரொடு ,காந்தள்
குருதி ஒண்பூ , உருகெழக் கட்டிப்
பெருவரை அடுக்கப் பொற்பச் சூர் மகள்

அருவி இன்னியத்து ஆடு நாடன்
மார்பு தர வந்த, படர்மலி அருநோய்
நின் அணங்கு அன்மை அறிந்தும் – அண்ணாந்து
கார் நறுங் கடம்பின் கண்ணி சூடி

வேலன் வேண்ட வெறிமனை வந்தோய்
கடவுள் ஆயினும் ஆக
மடவை மன்ற வாழிய முருகே!


வேலன் வெறியாடல்

காபி உறிஞ்சல்:

கடவுள் கற்சுனை, அடை இறந்து அவிழ்ந்த
பறியாக் குவளை மலரொடு  – காந்தள்

இது கடவுள் மலை! அதிலே கல் சுனை!
சுனை = இயற்கையான நீர் ஊற்று;
(சரவணப் பொய்கை) பொய்கை = இயற்கை; குளம் = செயற்கை
அதிலே, அடை இறந்து = அடைச்சிக்கிட்டு இருக்கும் இலைகளை விலக்கி,
மேல் நோக்கி மலர்ந்த = குவளைப் பூ!

குருதி ஒண்பூ, உருகெழக் கட்டிப்
பெருவரை அடுக்கப், பொற்பச் சூர் மகள்

காந்தள் குருதி ஓண் பூ = Blood Red – Flaming Flower;
காந்தள் = முருகனின் பூ;
தமிழ் ஈழத்தின்  தேசிய மலரும் கூட!
இந்தப் பூக்களை ஒன்னாத் தொடுத்து, அந்த மலை நாட்டுப் பெண்..

அருவி இன்னியத்து ஆடு நாடன்
மார்பு தர வந்த, படர்மலி அருநோய்

அருவியில் இன்பமாக் குளித்தாள்; யாரோடு? = குறிஞ்சி நாடனோடு!
அவன் மார்பைப் புணர்ந்ததால், இவளுக்கு (காதல்) நோய்!

நின் அணங்கு அன்மை அறிந்தும் -அண்ணாந்து
கார் நறுங் கடம்பின் கண்ணி சூடி

அணங்கு “அன்மை” அறிந்தும் = ஆவி பிடிக்கவில்லை என அறிந்தும்…
அண்ணாந்துக்கிட்டு, கடம்ப மாலையைத் தலையில் சூடிக்கிட்டு ஆடுறான் பூசாரி…

வேலன் வேண்ட வெறிமனை வந்தோய்
கடவுள் ஆயினும் ஆக
மடவை மன்ற, வாழிய முருகே!

எலே, முருகு என்னும் ஆவியை இறக்க வந்த சாமியாடி!
முருகா… நீ கடவுளே ஆனாலும் ஆகுக!
(உனக்குக் கூடவா இவள் துன்பத்தின் உண்மையான காரணம் தெரியலை?)

மடவை = அறியாதவன்
மன்ற மடவை = நிச்சயமா, நீ மடப்பய தான்:)
வாழிய முருகே = முருகா, நீ நல்லா இருடா, நல்லா இரு!

(இகழ்ச்சிக் குறிப்பு – பிடித்தமானவர்களைத் திட்டுதல்:)

dosa 5/365

Advertisements
Comments
9 Responses to “நற்றிணை: மடையா முருகா!:)”
 1. இந்த நற்றிணைப் பாடலைக் குறுந்தொகை என்று எண்ணி இருந்தேன்; தமிழிணையப் பல்கலையிலும் ஒரு சுட்டியில் அப்படியே திசை மாறிப் போயிருந்தது;

  ஆனால் வாசகர்கள் வாசகர்கள் தான்;
  நம் @Raaga_Suresh சார், பதிவை வெளியிட்ட அடுத்த நிமிடத்திலேயே, இது குறித்துச் சொல்லி உதவினார்; அவருக்குச் சிறப்பு நன்றி:)

  Like

 2. amas32 says:

  உங்கள் teddy bear முருகனைப் பார்த்திருக்கிறேன், வேல் புதிது, வெகு அழகு :-)

  //மடவை மன்ற, வாழிய முருகே!// நல்லா இரு என்று சொல்லில் ஒரு அழுத்தத்தோடு வாழ்த்துவது அதன் எதிர் மறையை தான் குறிக்கும் :-) திரைப்படங்களில் கூட தலைமை வில்லன் அவ்வாறு சொல்லிவிட்டுச் சென்றால் கேட்பவர்கள் உடனே நடுங்குவர். இங்கே முருகனை அப்படித் தான் சொல்கிறாள் இந்தப் பெண்.ஆனால் முருகன் அதற்கெல்லாம் அஞ்சமாட்டான், ஏனென்றால் சொல்வது அவன் மேல் காதல் கொண்டிருக்கும் ஒரு பேதைப் பெண் தானே?

  அதே போல் முட்டாள் என்று முருகனை இங்கே வைவது கூட செல்லமே என்று கொஞ்சுவதற்கு ஈடு என்றே நினைக்கிறேன் :-)

  முருகனை நினைத்தால் பித்தாகாத மனமும் உண்டோ?
  //மார்பு தர வந்த, படர்மலி அருநோய்// இவளோ அவனைத் தழுவி அவன் நினைவால் வாழுகிறாள், அப்போ முழு பைத்தியம் தான். அவன் தான் அவள் நோயைத் தீர்க்கும் அருமருந்து.

  படங்களோடு வரும் உங்கள் பதிவுகள் very glamorous :-) makes reading a joy!

  amas32

  Like

  • Teddy Bear முருகனாவே ஆக்கிட்டீங்களா-ம்மா?:))
   வேல் முன்பே இருந்தது தான்;
   வெளியில் வரும் போது, Backpack-இல் அசங்கி, அவனைக் கீறிடுமோ ன்னு பயம்; அத்தான் வீட்டில் மட்டும்:)

   //படங்களோடு வரும் உங்கள் பதிவுகள் very glamorous :-)//
   Story, Essay, Poem – I like pictures:)

   //அப்போ முழு பைத்தியம் தான். அவன் தான் அவள் நோயைத் தீர்க்கும் அருமருந்து//
   மருந்து அவள் உடலில் சேர்ந்தால் அல்லவோ, நோய் தீரும்!

   Like

 3. //நின் அணங்கு அன்மை அறிந்தும் -அண்ணாந்து
  கார் நறுங் கடம்பின் கண்ணி சூடி//

  சாமியாடிகளின் (எப்போதுக்குமான ) பொய் நடிப்பை தோழி கூற்று வழியாக சொல்கிறாரோ கவிஞர்?

  //வேலன் வேண்ட வெறிமனை வந்தோய்
  கடவுள் ஆயினும் ஆக
  மடவை மன்ற, வாழிய முருகே! //

  இதுல முருகனை திட்டுறது மட்டுமில்லாம தோழி ஒரு வேண்டுகோளும் விடுக்குறா. நீ கடவுள் தானே முருகா? இவளுக்கு இப்படி பேய் பிடிச்சிருக்குன்னு எல்லாரும் நினைக்குறாங்க.. உனக்கு இது தெரியலையா? மடப்பயலே! “இவளுக்கு சீக்கிரம் இந்த துன்பத்தை நீக்கு,அதாவது இவங்கு அம்மா அப்பாவுக்கு புரியவச்சு இவள தலைவன் கூட சேத்து வை”. எல்லாம் புரிஞ்சவனே, அடேய் மடப்பயலே … நீ நல்லாவே இரு… அப்டின்னு தானே தோழி சொல்றா?

  Like

  • //சாமியாடிகளின் (எப்போதுக்குமான ) பொய் நடிப்பை//

   ha ha ha; என்ன இப்பிடிச் சொல்லிட்ட?
   பண்டைத் தமிழில், முருகனுக்கு ஆறு முகம், பன்னிரெண்டு கையெல்லாம் கெடையாது!
   முருகன் ஒரு ஆவி!:)
   குறிப்பாகப் பெண்கள் மேல் எறங்கும் ஆவி:) வேலன் வெறியாடல் என்பதே ஒரு தனி துறை!

   இயற்கை வழிபாடு = நடுகல், கந்து, வேல் தான் முருகன்!
   சங்கத் தமிழில் வேல் வழிபாடு = murugan.org -இல் ஒருத்தன் கட்டுரை:)
   = http://murugan.org/tamil/kannabiran.vel.htm

   //இவளுக்கு சீக்கிரம் இந்த துன்பத்தை நீக்கு,நீ நல்லாவே இரு… அப்டின்னு தானே தோழி சொல்றா//

   Yes, Yes, Yes!
   முத்தமிழால் வைதாரையும் ஆங்கே வாழ வைப்போன்!

   Like

 4. அன்பு மீறும்போது திட்ட மனசே வராது. cheல்லாமா வைய, வாழ்த்த மட்டுமே வரும் :) அழகான, அவன் மீதான உங்கள் அன்பொளிரும் பதிவிற்கு நன்றி.

  Like

  • //அன்பு மீறும்போது திட்ட மனசே வராது. cheல்லாமா வைய//
   அதான் முருகு-அவனை “வையறேன்” போல:) – “வைய”த்து வாழ்வீர்கள்:)

   Like

 5. அன்பின் கேயேரெஸ் –

  // அன்பு மீறும்போது திட்ட மனசே வராது. cheல்லாமா வைய, வாழ்த்த மட்டுமே வரும் // உண்மை உண்மை .

  பதிவு நன்று – நல்வாழ்த்துகள் கேயாரெஸ் – நட்புடன் சீனா

  Like

  • Cheena Sir
   I do this every time to Murugan:)
   திருமால் = அப்பா போல! ஒரு மரியாதை தான் வரும்!
   முருகன் = இவன் தான் காதலன்; கொஞ்சலாம்-இடிக்கலாம்-கடிக்கலாம்:))

   Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: