டேய், தேரா மன்னா!

சிலப்பதிகாரம் = சங்க காலம் அன்று! சங்கம் மருவிய காலம்!
எனக்கு மிகவும்…
பிடிச்ச காப்பியம், பிடிச்ச கவிஞர், பிடிச்ச பொண்ணு = இன்னிக்கி எல்லாமே “பிடிச்ச” தான்:)

ரொம்ப சாதுப் பையனா இருந்த ரவி…
விவாதம் -ன்னு முதன்முதலில் இறங்குனதே… இந்தப் பொண்ணு மேல இருக்கும் பாசத்தால்!:)

நாமம் போட்ட ஆசிரியர் = மதி ஸ்ரீநிவாசன்!
ஒன்னாச் சேரும் கோவலனுக்குக், கண்ணகி சாப்பாடு போடும் காட்சி!

* அமுதம் உண்க அடிகள் ஈங்கு என  = புருசனைப் போய் அடிகள் ன்னு கூப்புடுறாளே; அவன் ஏன் இன்னொருத்தியைத் தேடிக்கிட்டுப் போவ மாட்டான்? -ன்னு அவரு பாடம் நடத்த…
* என் கண்ணுல தண்ணி பொங்க… நான் அவருக்குப் பதில் பாடம் நடத்தினேன்; இந்தப் பாட்டை அப்படியே மனப்பாடமாக் கொட்டி!:) 10th Std! ஒரே Claps!:)


இப்படியாக, என் நெஞ்சை “அள்ளும்” சிலப்பதிகாரம்!

தேரா மன்னா! செப்புவது உடையேன்;

எள் அறு சிறப்பின் இமையவர் வியப்ப,
புள் உறு புன்கண் தீர்த்தோன்; அன்றியும்,
வாயில் கடை மணி நடு நா நடுங்க,
ஆவின் கடை மணி உகு நீர் நெஞ்சு சுட, தான் தன்
அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்

பெரும் பெயர்ப் புகார் என் பதியே; அவ் ஊர்,
ஏசாச் சிறப்பின், இசை விளங்கு பெருங்கொடி
மாசாத்து வாணிகன் மகனை ஆகி,

வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப,
சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து, இங்கு
என் கால் சிலம்பு பகர்தல் வேண்டி, நின்பால்
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி;
கண்ணகி என்பது என் பெயரே’ என-

சிலம்பு: மதுரைக் காண்டம் – வழக்குரை காதை: 50-63

* இவ = கற்பென்னும் புனித பிம்பமோ, பெண்ணடிமையோ அல்ல!
* இவ = மிக்க அன்பு ஊறியவ! அவனைக் “கைப்”பிடிக்கல; “மனமும்” பிடித்துக்கொண்டாள்; அதான்!
தானே விரும்பி ஏற்றுக் கொண்டாள், இப்படியொரு வாழ்வை!:(


டபராவில் காபி:

பெண்ணுரிமை மிக்க இந்தக் காலத்திலேயே… ஒரு பொண்ணு, நாடாளுமன்றத்துள் நுழைஞ்சி,
“தேராப் பிரதமா” ன்னு பேசீற முடியாது; பிச்சிருவாய்ங்க:)
“ஈழம்” ங்கிற தொன்மத்தின் பேரைக் கூட உச்சரிக்காதே -ன்னு இன்னிக்கும் Untouchability இருக்கத் தான் செய்யுது;

ஆனா… ஊரு விட்டு ஊரு வந்து, மதுரையில் அடித்தளமே இல்லாத ஒரு பொண்ணு,
அதிர்ந்து பேசியே அறியாத ஒரு soft பொண்ணு… “தேரா மன்னா” -ங்கிறா…

* எங்க ராசாவைப் பாத்து, மரியாதை இல்லாமப் பேசுறியா, சிறுக்கி?-ன்னு ஒருத்தன் சீறக் காணோம்!
* அதான் தென்னவன் அரசியல்; “தென்னவன் தீதிலன்” ன்னு பிற்பாடு கண்ணகியே சொல்லுறா!

இன்றைய அரசியலுக்கு, இது மூஞ்சியில் அடிச்சாப் போல ஒரு பாடம்!


காபி உறிஞ்சல்:

தேரா மன்னா! செப்புவது உடையேன்;

Excuse me Your Honour! I have a humble request:) = இப்படிப் பேசலை அவ!  தேரா மன்னா…

* எது நீதி – எது அநீதி ன்னு, தேராத மன்னா
* நல்ல நூல்களைப் படித்து, தேர்வில் தேராத மன்னா
* அரசியல் தேர்தலில், தேராத மன்னா
* குற்றவாளியைக் கண்ணால் கண்ட பிறகே, தேர வேணும் என்று, தேராத மன்னா

எள் அறு சிறப்பின் இமையவர் வியப்ப,
புள் உறு புன்கண் தீர்த்தோன்;

எள்ள முடியாத (இகழ முடியாத) சிறப்பு, அமரர்களே வியக்கும் அளவுக்கு..
புள் = பறவை! புறாவின் துன்பத்தைத் தீர்த்தவன்! சிபி அரசன் = சோழன்டா!

அன்றியும், வாயில் கடை மணி , நடு நா நடுங்க,
ஆவின் கடை மணி உகு நீர், நெஞ்சு சுடத்,
தான் தன், அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்

வாசலில், ஆராய்ச்சி மணி நடுநடுங்க, அடிச்சுதாம் ஒரு பசு!
தண்ணி பத்த வைக்குமா? = உள்ளத்தைப் பத்த வைக்கும் = “நெஞ்சு சுட”
தவமிருந்து பெத்த புள்ளை, தேர்ச் சக்கரத்தில் வைத்து, நீதி வழங்கிய எல்லாளன் = சோழன்டா!

பெரும் பெயர்ப் புகார் என் பதியே; அவ் ஊர்,
ஏசாச் சிறப்பின், இசை விளங்கு பெருங்குடி
மாசாத்து வாணிகன் மகனை ஆகி,

என் ஊர் = புகார்; அங்கே தீயவர் புகார்!
அங்கே புகழ் மிக்க பெருங்குடி = மாசாத்துவான் என்ற சான்றோன் மகன்!

வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப,
சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து

வாழ்க்கை வாழ வேண்டி, ஊழ்வினை (விதி) துரத்த…
மன்னா.. உன் நகருக்குள் “புகுந்தோம்”
மதுரைக்கு “வரலை” = “புகுந்தோம்”, அடைக்கலமாய்…

இங்கு, என் கால் சிலம்பு, பகர்தல் வேண்டி,
நின்பால், கொலைக்களப் பட்ட
கோவலன் மனைவி; கண்ணகி என்பது என் பெயரே’ என-

என் காற் சிலம்பு பகர வந்தவன்… பகர வளங்களும் அருள்வாயே!
ஆனா உன்னால் “கொலை” செய்யப்பட்டான்!
அது “தண்டனைக்” களமா? அல்ல!  “கொலைக்” களம் = Killing Fields!
அந்தக் கோவலன் மனைவி = கண்ணகி டா!

குற்றவாளி -ன்னா, முதலில் பேரைக் கேட்கணும், ஊரைக் கேட்கணும், நேராப் பாக்கணும்
ஆனா, நான் சொல்லித் தான், நீ தண்டிச்சவன் பேரே தெரியுது! ச்சீ…தேரா மன்னா! தேரா மன்னா! 

என் அடி வயிற்றில் அறைஞ்சிக் கேக்குறேன்!
 அல்லற் பட்டு, ஆற்றாது, அழுத கண்ணீர் – அன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை! 

dosa 3/365

Advertisements
Comments
9 Responses to “டேய், தேரா மன்னா!”
 1. // தேரா மன்னா! //

  ஒரு அரசனை “புகவந்த” ஒருத்தி இவ்வாறு கேட்க முடியும்னா அது எத்தனை உயரிய ஆட்சியை இருந்திருக்கனும். தப்பு செஞ்சவன் அரசனாவே இருந்தாலும் “யோவ்” போட்டு கூப்பிட இந்த மொழி பேசும் மக்களால் தான் முடியும்.

  //எள் அறு சிறப்பின் இமையவர் வியப்ப,
  புள் உறு புன்கண் தீர்த்தோன்; அன்றியும்,
  வாயில் கடை மணி நடு நா நடுங்க,
  ஆவின் கடை மணி உகு நீர் நெஞ்சு சுட, தான் தன்
  அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன் //

  எது நீதின்னு முதல்ல சொல்லிட்டு, தான் அங்கிருந்து வாறேன், எனக்கு நீ செய்தி அநீதியை பாருன்னு நேராவே “தேரா மன்னனை” பார்த்து குற்றம் சொல்லுறா!

  பெண்ணே உன் பெயர் என்ன? என கேட்டவனுக்கு, நீதின்னா என்ன ? எப்படி நீதி செய்யணும், நீ செய்த அநீதி என்ன? அதனால் எனக்கு நேர்ந்த துன்பம் என்ன ? என சொல்லி அப்புறம் தன் பெயர் சொல்லுறாலே இந்த பெண், இனி அடுத்த கேள்வி கேட்கா முடியுமா? சமாளிக்க முடியுமா? நெஞ்ச புடிச்சிகிட்டு தன் தவறை என்னை செத்திட வேண்டியதுதான்.

  Like

  • //தப்பு செஞ்சவன் அரசனாவே இருந்தாலும் “யோவ்” போட்டு கூப்பிட இந்த மொழி பேசும் மக்களால் தான் முடியும்//

   Thatz it, u got the crux of whole post:)

   //பெண்ணே உன் பெயர் என்ன? என கேட்டவனுக்கு//

   ஆணே, உன் பேர் என்ன? -ன்னு அன்று நேராப் பாத்துக் கேட்டிருந்தான்-ன்னா, இந்த முடிவு வந்திருக்காது…
   அந்தப்புரத்துக்குச் சென்று அவள் கோபம் தணிக்கும் காம-அவசரம்… காதல்-அவலம் ஆகிவிட்டது:(

   Like

 2. amas32 says:

  இந்தப் பாடலில் தோய்ந்திருக்கும் அறச்சீற்றமே மதுரையை எரிக்கும் தணலாயிற்று. கண்ணகியின் மனவலியை எத்தனை சொல் வலிமையோடு சொல்கிறார் இளங்கோவடிகள்!

  அடைக்கலமாய் வந்த ஊரையே எரித்துவிடுகிறது அவள் கூறும் சத்தியம்.

  //பெண்ணுரிமை மிக்க இந்தக் காலத்திலேயே… ஒரு பொண்ணு, நாடாளுமன்றத்துள் நுழைஞ்சி,
  “தேராப் பிரதமா” ன்னு பேசீற முடியாது; பிச்சிருவாய்ங்க:)//

  உண்மைதான், அன்று இருந்த பத்தினித் தன்மையையும், சத்தியப் பாதையையும் இன்று பெண்கள் பேணாததால் அரச சபையில் பொதுவாக இன்று அவர்களால் பேச முடிவதில்லை. ஆனால் இன்றும் நம் நாட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாக படிப்பறிவில்லாத ஒரு கிராமத்துப் பெண்ணும் அநீதிக்கு எதிராக வெகுண்டு எழுகிறாள், அவளே அதில் அழிந்தாலும், அந்தச் சீற்றம் மாற்றத்துக்கு வித்திடுகிறது.

  amas32

  Like

  • //அன்று இருந்த பத்தினித் தன்மையையும், சத்தியப் பாதையையும் இன்று பெண்கள் பேணாததால்//

   ஆகா, என்னம்மா நீங்களே இப்படிச் சொல்லிட்டீங்க:)

   நமக்குத் தெரியாத பெண்கள் எத்தனையோ பேர், நாகரீக உலகிலும், பத்தினித் தன்மை வாய்ந்தவர்களாகவே இருக்குறாங்க!
   பெண்கள் என்ன, எனக்கு ஒரு ஆண் – பத்தினன்.. அவனைக் கூடத் தெரியும்:) தினமுமே பாத்துப்பேன், கண்ணாடியில்:)))

   Like

   • நீர் கண்ணாடி பார்க்கும் போது என் உருவம் எப்படி தெரிகிறது ? (ரகு = இராமன்) #என்னாலையே முடியல

    Like

  • //அங்கொன்றும் இங்கொன்றுமாக படிப்பறிவில்லாத ஒரு கிராமத்துப் பெண்ணும் அநீதிக்கு எதிராக வெகுண்டு எழுகிறாள்//

   அதென்னமோ உண்மை தான்!
   அவ அழிஞ்சாலும், அதனால் ஒரு மாற்றம் விளையத் தான் செய்யுது…

   Like

 3. அன்பின் கேயாரெஸ் – அழகான விளக்கங்களுடன் – டபரா காபி மற்றும் உறிஞ்சும் காபி சூப்பர் காபிய்யா ……. அந்தப்புரத்துக்குச் சென்று அவள் கோபம் தணிக்கும் காம-அவசரம்… காதல்-அவலம் ஆகிவிட்டது: – பதிவும் மறுமொழிகளூம் அருமை – மிக மிக இரசித்தேன் . நன்று. நல்வாழ்த்துகள் கேயாரெஸ் – நட்புடன் சீனா

  Like

 4. அப்பப்ப எட்டி பாக்குறது ஒரு வகைல நல்லதா போச்சு..
  // ஒரு பொண்ணு, நாடாளுமன்றத்துள் நுழைஞ்சி,
  “தேராப் பிரதமா” ன்னு பேசீற முடியாது; பிச்சிருவாய்ங்க //
  நாடளுமன்றத்துல முடியாது.. மித்த எடத்துல சோனியா காந்திலாம் கெட்ட கெட்ட வார்த்தைல திட்டும்!!
  அதுகெடக்கு..
  எங்கண்ணே போனீங்க??

  Like

Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: