கம்பன் போட்ட Maths

என்னாது? “கணிதக் கம்பனா”?
sin2θ + cos2θ தெரியுமா? (a+b+c)3 தெரியுமா? எந்தக் கல்லூரியில், M.Sc. Maths படிச்சான்? -ன்னுல்லாம் கேக்காதீக:) பாட்டுக்குப் போவோம்! How much is 5 + 50 + 1 ?

சூழல்: கிட்கிந்தையின் அரசன் ஆகி விட்டான் சுக்கிரீவன்;
கார்த்திகை மாசம் சீதையின் தேடல் துவங்கலாம்-ன்னு சொல்லிட்டு,  இப்போ காலம் தாழ்த்துகிறான்..
இராகவன், அவனை எச்சரித்து வருமாறு, இலக்குவனை ஏவும் காட்சி!

நன்றி கொன்று, அரு
நட்பினை நார் அறுத்து,
ஒன்றும் மெய்ம்மை சிதைத்து,
உரை பொய்த்து உளார்க்


கொன்று நீக்குதல்
குற்றத்தில் தங்குமோ?
சென்று, மற்று அவன்
சிந்தையைத் தேர்குவாய்!

நஞ்சம் அன்னவரை நலிந்தால், அது
வஞ்சம் அன்று;  மனு வழக்கு ஆதலால்,
அஞ்சில் + அம்பதில் + ஒன்று அறியாதவன்
நெஞ்சில் நின்று நிலாவ; நிறுத்துவாய்

பாடல் 4271 & 4273:  கிட்கிந்தா காண்டம் – கிட்கிந்தைப் படலம்


டபராவில் காபி:

நாம் செய்த நன்றியைச் சுக்கிரீவன் கொன்று விட்டானோ?
நட்பு என்னும் கயிற்றை அறுக்க முனைந்து விட்டானோ?
“மனு தர்மத்தின்” படி, இப்படிப் பட்டவர்களைக் கொன்றாலும், குற்றம் இல்லை!

இலக்குவா, நீ சென்று, அவன் எண்ணம் தான் என்ன? -ன்னு அறிந்து வருவாய்!

இதை “ஐந்தில் + ஐம்பதில் + ஒன்றும்” அறியாதவன் = சுக்கிரீவன்
அவன் நெஞ்சில், என் சொல்லை, நிறுத்தி விட்டு வா…


காபி உறிஞ்சல்:

இதுல என்ன “கணிதம்” இருக்கு? -ன்னு பாக்குறீங்களா? :)
அஞ்சில் + அம்பதில் + ஒன்று = 5+50+1 = இதன் விடை என்ன?

* அஞ்சில் + அம்பதில் + ஒன்று = ஐஞ்சில் வளையாத சுக்கிரீவன், ஐம்பதிலா வளையப் போகிறான்?
ஐந்து வயதிலும் அவன் ஒன்றும் அறியவில்லை, ஐம்பதிலும் ஒன்றும் அறியவில்லை!

* அஞ் + சிலம்பு + அதில் + ஒன்றும்  அறியாதவன்
சிலம்பு = மலை; அடர்ந்த மலையில் வாழும் அவன்(குரங்கு), நட்பின் பண்பு ஒன்றும் அறியாதவன்

* அஞ்சு + இல் + அம்பு + அதில் + ஒன்றும் அறியாதவன்
அச்சம் இல்லா அம்புகள், என்னோட கோதண்ட வில்லின் அம்புகள்; அதில் ஒன்று கூட அறியாதவன்

* அஞ்சிலம் + பதில் + ஒன்றும் அறியாதவன்!
அவனுக்கு அச்சமும் இல்லை (அஞ்சிலம்); எனக்குப் பதில் சொல்லவும் அறியாதவன்!

* அஞ்சில் + அம்பதில் + ஒன்று = 5 + 50 + 1 = 56!
இந்து ஆண்டுகள்“- 60;  பிரபவ, விபவ…
அதில், 56ஆம் ஆண்டு = துந்துபி
முன்பு வாலி கொன்று விட்டுத் தூக்கி எறிந்த, துந்துபி அரக்கனின் எலும்புக் கூடு; அதைக் கால் விரலாலேயே எத்திக் காட்டினேனே சுக்ரீவனுக்கு? அதைக் கூட அறிந்தான் இல்லையோ?

– இப்படி எண்களைப் பிரிச்சிப் பிரிச்சிச் சொல் விளையாடும் கணிதக் கம்பன்!
– கம்பன் கவியே கவி!

Maths பாத்துக்கிட்டே, தமிழை விட்டுறலாமா? :)) அது என்ன நட்பினை “நார் அறுத்தல்”?

பல பூக்களையும் ஒன்னா இணைப்பது நார்; அதை அறுத்துப் போட்டா, மொத்தப் பூக்களும் சிதறி விடும்;
தெய்வீகமான நட்புலயும், வாழ்க்கைப் பூக்களை இணைப்பது அன்பு எனும் நார்;
அவனுக்கு ஒன்னு-ன்னா ஒரு துடிப்பு வரணும்; அது வராத போது, நட்பை “நார் அறுத்தல்” என்று புதிய Phrase உருவாக்கிறான் கம்பன்!

– “கணித் தமிழ்க்” கம்பன்
– கம்பன் கவியே கவி!

dosa 2/365 kamban 1/52

(குறிப்பு:
கம்பன் தமிழ் = “சங்கத் தமிழ்” அன்று!
இந்த வலைப்பூ தினம் ஒரு சங்கத்தமிழ் #dosa365 என்றாலும், கம்பன் மட்டும் விதிவிலக்கு:)
வாரமொருமுறை கம்பன் வருவான் #kamban52

Advertisements
Comments
10 Responses to “கம்பன் போட்ட Maths”
 1. //கொன்று நீக்குதல்
  குற்றத்தில் தங்குமோ?//

  “நன்றி மறப்பது நன்றன்று” – சுக்ரீவனுக்கு சொன்ன கம்பன்
  “நன்றல்லது அன்றே மறப்பது நன்று” – இராமனுக்கு ஏன் சொல்ல மறந்தான்? ஹீரோன்னா இரண்டு கொம்பு முளைசிருக்குமா? கொல்வது குற்றமில்லைன்னு நினைக்க வைக்குமா ?

  //சென்று, மற்று அவன்
  சிந்தையைத் தேர்குவாய்!//

  சுக்ரீவன் அவன் செஞ்ச சத்தியத்தை மறந்து கிடக்குறான், அவனை போய் புத்தி சொல்லி கூட்டிட்டு வான்னு சொல்ற ராமர், இப்படி மிரட்டல் தொனியில இலக்குவன் கிட்டா சொன்னா? இங்க இருந்து போற இலக்குவன் இத விட அதிகமானா மிரட்டல் தொனில தானே சுக்ரீவன்கிட்ட பேசுவான்? அதுமட்டுமில்லாம இராமர் இந்த பிரதி உபகாரத்தை எதிர் பார்த்து தான் அந்த உதவி செய்தார்ன்னா “காலத்தினால் செய்த உதவி” “பிரதி உபகாரத்தினால் சமமாகும்” தானே ?

  Like

  • உண்மையே ரகு:)
   Hero Worship is there and hard to kill:) கம்பனே ஆயினும், நாம தான், நீர் ஒழியப் பால் உண் குருகின் தெரிந்து!:)

   //இலக்குவன் இத விட அதிகமானா மிரட்டல் தொனில தானே சுக்ரீவன்கிட்ட பேசுவான்?//
   yes! அதனால் தான், சுக்ரீவன் முதலில் வெளியே வராமல், தாரை வருகிறாள் பேச! பெண் என்பதால் அமைதியாகும் இலக்குவன், பின்பு அறிவுள்ள அவள் மொழியைத் தேர்கிறான்

   //“காலத்தினால் செய்த உதவி” “பிரதி உபகாரத்தினால் சமமாகும்” தானே?//

   உண்மையே! இராகவன் சுக்ரீவனுக்குப் புரிந்த உதவி – பிரதி உபகாரமே! “தூய நட்பால்” அல்ல!
   அதே போல், வீடணன் இராகவனுக்குப் புரிந்த உதவியும் “நட்பால்” அல்ல! கையறு நிலையால் (சரணாகதி)
   ————

   வீடணன், இலங்கை அரசுரிமை கேட்கவே இல்லை; அண்ணனின் காழ்ப்பால், கையறுநிலை மட்டுமே!
   தன் மனைவி-மக்களைக் கூட இலங்கையில் விட்டுவிட்டு, அவமானத்தால் அழுது கொண்டே தான் வெளியேறுகிறான்..

   இராகவன் தான், அரசுரிமை பெற்றுத் தருவதாக, கடற்கரை நீரிலே சத்தியம் செய்து வைக்கிறான்; எல்லாருமே ஏதோ எதிர்பாக்குற சாதி-ன்னு நினைச்சிட்டான் போல!:)
   அப்போதும், வீடணன் தான் அதன் பொருட்டு வரவில்லை, தன்னளவிலான அறத்துக்குக் கதி இல்லாததால், சரணாகதியே என்று தெளிவாக்குறான்!

   மூன்று புறத் தம்பியருள், “குகனே சிறந்தவன், அன்பில் மிக்கோன்”!
   அதான் விபீஷண-ஆழ்வார் என்று தொண்டர் பட்டம் வீடணனுக்கு! குகப் பெருமாள் என்று இறைவன் பட்டம் குகனுக்கு!

   Like

  • ஆனா, என் மிக்க நண்பர்கள் இராமன் பேரிலேயே அமைகிறார்கள், நான் என்ன செய்ய:))
   நீயும் தான் – “ரகு”:)

   ஆருயிர்த் தோழமையும் “அந்தப்” பேரிலேயே அமைகிறது, முருகா!:)

   Like

   • “ரகுபதி”ன்னா சிவா எனும் பொருளாம், “ரகுபதி ராஜா”வை “சிவராசன்” என “இராமன்” பெயரில் அமைந்த உம்ம இன்னொரு நண்பர் “ராகவன்” அர்த்தம் சொன்னார்!

    ஆக நான் சிவராசன் அவர் இராகவன்! ரெண்டுபேருமே இருக்கோம், நீர் கவலை படாதீரும்!

    Like

 2. amas32 says:

  //நட்பு என்னும் கயிற்றை அறுக்க முனைந்து விட்டானோ?// அந்த நட்பென்னும் கயிறு அறுபடாமல் இருக்கவேண்டும் என்பதை நினைவுப் படுத்தத் தான் friendship band கட்டும் பழக்கம் இன்று உள்ளதோ? பரவாயில்லை, கம்பன் அன்று சொன்னதை இன்றும் நினைவு கூறுகிறோம் :-)

  //அஞ்சில் + அம்பதில் + ஒன்று அறியாதவன்// இதன் விளக்கம் அருமை! கம்பன் பாடலைப் படிக்கும் பொழுது word puzzle, sudoko மாதிரி மூளைக்கு வேலைக் கொடுத்து படிப்பவரின் அறிவையும் சிறிது கூர் தீட்டுகிறார்.

  //கம்பன் கவியே கவி!//

  amas32

  Like

  • haiya…இதை நான் யோசிக்கவே இல்ல, நட்பெனும் கயிறு = Friendship Band:) Dank u ma!

   வாரமொரு கம்பன் வருவான்! – ஒங்களையும் பேச வைப்பான் via podcast:)

   Like

 3. அன்பின் கேயாரெஸ் – பதிவு அருமை – கணிதத்தில் கம்பன் விளையாடுகிறானா ?

  பாடலில் மூன்றாம் வரியில் முக்கியமானது காண வில்லையே – ஏன் ?

  அஞ்சில், ஐம்பதில், ஒன்று அறியாதவன் என்றிருக்க் வேண்டிய வரி இடங்கள் விட்டு இறுதியில் அறியாதவன் என்று மட்டும் இருக்கிறதே ஏன் ?

  காபி உறிஞ்சலில் எத்தனை பொருள்கள் அந்த காணாமல் போன வரிக்கு …..

  பதிவினை விட மறு மொழிகளும் அவற்றிக்கு மறுமறு மொழிகளும் அட்டகாசமாக இருக்கின்றன..

  நல்வாழ்த்துகள் கேயாரெஸ் – நட்புடன் சீனா

  Like

Trackbacks
Check out what others are saying...


Leave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ?:)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: